கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Sep 6, 2011

ஓடியோ கோப்புகளின் மூலம் டிவிட் செய்வதற்கு

உள்ளூர் பிரபலங்கள் முதல் உலக பிரபலங்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் டிவிட்டரில் இனி ஓடியோ டிவிட் செய்யலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

ஓன்லைன் மூலம் உடனுக்கூடன் கீச் கீச் என்று தகவல்களை நம் கூட்டணியில் உள்ள அனைவரிடமும் எளிதாக பகிர்ந்து கொள்ள உதவும் சோசியல் மீடியாவான டிவிட்டரில் ஓடியோ டிவிட் செய்ய ஒரு தளம் உதவுகிறது.இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் கட்டத்திற்குள் என்ன ஓடியோ செய்தி சொல்ல வேண்டுமோ அதை தட்டச்சு செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து மொழி என்பதில் English என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து Go என்ற பொத்தானை சொடுக்கியவுடன் நமக்கு அதே திரையின் அடியில் ஒரு bit.ly Short Url முகவரி கிடைக்கும்.

இதை அப்படியே நம் டிவிட்டரில் கொப்பி செய்து அனுப்பலாம் அல்லது நேரடியாக Share on என்பதில் டிவிட்டர் அல்லது பேஸ்புக் ஐகானை சொடுக்கியும் பகிர்ந்து கொள்ளலாம்.

நாம் உருவாக்கப்பட்ட சுருக்கப்பட்ட முகவரியை சொடுக்கினால் நாம் தட்டச்சு செய்த செய்தியை ஓடியோ கோப்பில் கேட்கலாம். 100 வார்த்தைகளுக்கு மிகாமல் நாம் கொடுக்க வேண்டிய ஓடியோ கோப்பின் செய்தி இருக்க வேண்டும்.

from:-Lankatech

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo