கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Aug 2, 2012

கூகுள் பிளசில் Special Formats-களை உபயோகிப்பதற்கு



ஒரு குறிப்பிட்ட செய்தியை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் போது, அதில் முக்கியமான ஒன்றை Bold ஆக கொடுப்பது வழக்கம். ஏனெனில் அதை பார்த்த உடன் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
ஆனால் கூகுள் பிளஸ் போன்ற சமூக தளங்களில் டெக்ஸ்ட் போர்மட்களை நேரடியாக உபயோகிக்க முடியாது. ஆனால் ஒரு சில ரகசிய குறியீடுகளை உபயோகிப்பதன் மூலம் Bold, Italic மற்றும் Strike through போன்ற ஸ்பெஷல் போர்மட்களை உபயோகிக்க முடியும்.

Bold: போல்டாக வர வேண்டிய வார்த்தைக்கு முன்னும் பின்னும் * குறியை சேர்ப்பதால் அந்த வார்த்தையை போல்டாக மாற்றலாம்.

*கவனிக்கவும்*

கவனிக்கவும்

Italic: Italic ஸ்டைலில் வார்த்தை வரவேண்டுமென்றால் வார்த்தைக்கு முன்னும் பின்னும் _ என்ற குறியை போடவும்.

__வணக்கம்__

வணக்கம்

Strikethrough: Strikethrough இது போன்று உங்களின் எழுத்துருவை மாற்ற வார்த்தைக்கும் முன்னும் பின்னும் - இந்த குறியை இடவும்.

-இது தேவையில்லை-

இது தேவையில்லை

அனைத்தும்: மற்றும் ஒரே வார்த்தையில் இந்த மூன்று எபெக்டும் வர வேண்டுமென்றால் அந்த வார்த்தைக்கு முன்னும் பின்னும் இந்த குறியீடுகளை கொடுக்க வேண்டும். முன்னும் பின்னும் ஒரே வரிசையில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

*_-சோதனை பதிப்பு*-_

சோதனை பதிப்பு

இந்த முறையில் குறீடுகளை உபயோகித்து கூகுள் பிளஸ் தளத்தில் டெக்ஸ்ட் போர்மட்களை உபயோகித்து கொள்ளலாம்.

Lankatech

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo