கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Aug 26, 2011

புதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 6 பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு..


அண்மையில் பயர்பொக்ஸ் உலாவியின் 6 வது பதிப்பை வெளியிட்டது மொஸிலா நிறுவனம்.
பயர்பொக்ஸ் 5இல் இருந்த ஆயிரக்கணக்கான குறைகளை சீர் செய்து இப்புதிய பதிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கிறது மொஸிலா நிறுவனம்.
அதிக வேகம், லினக்ஸ் இயங்குதளத்திலும் வேகமாக இயங்குதல் போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும். மேலும் அண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இயங்கக் கூடிய பதிப்பையும் வெளியிட்டப்பட்டுள்ளது. 


எவ்வாறாயினும் பயர்பொக்ஸ் பதிப்புக்களில் பாரிய மேம்படுத்தல்கள் இல்லாத போதும் ஏனைய உலாவிகளுடன் இருக்கும் போட்டித்தன்மையை தக்க வைப்பதற்காகவே மொஸிலா நிறுவனம் இப்பதிப்புக்களை வேகமாக வெளியிடுவதாக கூறப்படுகிறது. 

கூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே தடவையில் தரவிறக்கம் செய்வதற்கு

கூகுள் தளம் வாசகர்களுக்காக சில பயனுள்ள மென்பொருட்களை அளிக்கிறது. இந்த மென்பொருட்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய முடியும்.

இந்த பட்டியலில் கூகுளின் மென்பொருட்கள் மட்டுமின்றி கூகுள் பரிந்துரை செய்யும் சில பயனுள்ள மென்பொருட்களும்(Firefox, Avast, Skype) உள்ளன.

இந்த மென்பொருட்களையும் நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த Packல் 14 இலவச மென்பொருட்கள் உள்ளது. இதில் 6 மென்பொருட்கள் கூகிளின் மென்பொருட்களாகும். இதர மென்பொருட்கள் வேற்று நிறுவனங்களின் மென்பொருட்கள். விண்டோஸ் XP, Vista, 7 ஆகிய இயங்கு தளங்களில் இந்த மென்பொருளை நிறுவலாம்.

இந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கீழே கொடுத்துள்ள லிங்கில் செல்லுங்கள். அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் மென்பொருட்களின் பட்டியல் இருக்கும்.

அதில் உங்களுக்கு தேவையான உங்கள் கணணியில் இல்லாத மென்பொருட்களை டிக் செய்து கொள்ளுங்கள்.

தேவையானதை டிக் செய்து கீழே உள்ள தரவிறக்க பட்டனை அழுத்தினால் போதும் நீங்கள் டிக் செய்த மென்பொருட்கள் உங்கள் கணணியில் தரவிறக்கம் ஆகிவிடும். பின்பு இன்ஸ்டால் செய்து நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்


from:-lankatech

Aug 3, 2011

வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்.

 வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி  அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள்  நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

மென்பொருள் தறவிரக்க முகவரி:  http://www.lightworksbeta.com/

இத்தளத்திற்கு சென்று Download now என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும் , இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை  ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது. வீடியோ எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

1913 தொடக்கம் 2010 வரை வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் (தொகுப்பு06)

 1945 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள்

  • என் மகன்

  • கண்ணம்மா என் காதலி

  • சாலிவாகனன்

  • சௌ சௌ

  • கலிகால மைனர்

  • பள்ளி நாடகம்

  • சூரப்புலி

  • பக்த காளத்தி

  • பர்மா ராணி

  • பரஞ்சோதி

  • மஹா மாயா

  • மானசம்ரக்சணம்

  • மீரா

  • ஸ்ரீவள்ளி

 1946 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள்

  • அர்த்தனாரி

  • ஆரவல்லி சூரவல்லி

  • உதயணன் வாசவதத்தா

  • குமரகுரு

  • குண்டலகேசி

  • சகடயோகம்

  • சுபத்ரா

  • ஸ்ரீ முருகன்

  • ராம் ரஹிம்

  • ருக்மாங்கதன்

  • வைங்கி

  • வால்மீகி

  • வித்யாபதி

  • விஜயலட்சுமி

  • விகடயோகி
  1947 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள் 


  •     ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
  •     ஏகம்பவாணன்
  •     கஞ்சன்
  •     கன்னிகா
  •     கடகம்
  •     கங்கணம்
  •    குண்டலகேசி
  •     சண்பகவல்லி
  •    சித்ரபகாவலி
  •     சுறுசுறுப்பு
  •     சுலாசனா
  •     தன அமராவதி
  •     தாய்நாடு
  •     தியாகி
  •     துளசி ஜலந்தர்
  •     தெய்வ நீதி
  •     நாம் இருவர்
  •     பக்த துளதிதாஸ்
  •     பங்கஜவல்லி
  •     பிரம்மரிஷி விஸ்வாமித்ரா
  •     பைத்தியக்காரன்
  •     பொன்னருவி
  •     மதனமாலா
  •     மகாத்மா உதங்கர்
  •     மலைமங்கை
  •     மிஸ் மாலினி
  •     ராஜகுமாரி
  •     ஸ்ரீ லட்சுமி விஜயம்
  •     விசித்ர வனிதா
  •     வீர வனிதா
  •     வேதாளபுரம்
  •     ஜம்பம்
  •     ருக்மாங்கதன்
  •     ஜீவஜோதி


பேஸ்புக் நண்பர்களின் ஸ்கைப் முகவரியை கண்டறிவதற்கு

 
நாம் பேஸ்புக்கில் பல நண்பர்களுடன் தொடர்பில் இருப்போம். ஆனால் அவர்களில் நாம் விரும்பும் நபரோடு முகம் பார்த்து பேச விரும்பினால் இலகுவாக தொடர்பு கொள்ள ஸ்கைப்பை தான் அனைவரும் விரும்புவோம்.

ஆனால் பேஸ்புக்கில் இருக்கிற அனைவரும் தங்கள் ஸ்கைப் முகவரியை பேஸ்புக் சுயவிபர குறிப்பில் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆகவே அதை எவ்வாறு பெறுவது? இதற்கு ஸ்கைப்பிலே வசதி உள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது ஸ்கைபிலே சென்று contacts ->import contacts ஐ சொடுக்குங்கள். அதன் பின்னர் ஒரு விண்டோ தோன்றும்.

அதில் உங்கள் பேஸ்புக்கின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கொடுத்து import என்பதை அழுத்துங்கள்.

சற்று நேரத்திலே உங்கள் பேஸ்புக் தொடர்பில் உள்ளவர்களது மின்னஞ்சல் முகவரிகளுடன் ஸ்கைப் முகவரியையும் வெளிக்காட்டும்.

Lankatech

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo