கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Oct 28, 2010

நவீன வசதிகளுடன் யாஹூ மெயில்

மின்னஞ்சல் சேவைகளில் முன்னோடியான யாஹூ மெயில் சேவையானது பல நவீன வசதிகளுடன் தற்போது வெளிவந்துள்ளது.

2005 ஆம் ஆண்டின் பின்னர் தனது 279 மில்லியன் பாவனையாளர்களுக்காக யாஹூ மேற்கொண்டுள்ள பாரிய மாற்றம் இதுவாகும்.

சமூக வலைப்பின்னல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன் வசதிகளானவை:

அதிவேகமான செயற்பாடு - ஜீ மெயில் மற்றும் ஹொட்மெயில் சேவையினை விடவும் முன்னரை விட இருமடங்கு வேகத்திலும் இயங்குமென யாஹூ உத்தரவாதமளிக்கின்றது.

சமூகவலைப்பின்னல் தொடர்பு - யாஹூ மெயிலில் இருந்தவாறே பேஸ்புக் மற்றும் டுவிடரில் அப்டேடிங் செய்யும் வசதி. மேலதிகமாக உடனடி மேசேஜிங் IM ( Instant messaging ) மற்றும் குறுந்தகவல் வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இன்பொக்ஸில் இருந்தவாறே படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்வையிடல் - இன்பொக்ஸில் இருந்தவாறே பிக்காஸா (Picasa) பிளிக்கர் (Flickr) மற்றும் யூடியூப் (YouTube) இணையத்தளங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்வையிடும் வசதி.

இலகுவாக மின்னஞ்சல்களைத் தேடுதல் - பாவனையாளர் தனக்குத்தேவையான மற்றும் முக்கியமான மின்னஞ்சல்களைத் தேடும் வசதி. திகதி, அனுப்பியவர், கோப்புக்கள் ( Attachment ) ஆகியவற்றின் அடிப்படையில் மின்னஞ்சல்களை தேடிப்பெற முடியும்.

ஸ்பேம்களில் இருந்து பாதுகாப்பு - ஸ்பேம்களில் இருந்து உச்ச பாதுகாப்பு அளிக்கின்றது.

கூகுள், மைக்ரோசொப்ட் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக யாஹூ சற்று பின் தள்ளப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் இத்தகைய மாற்றங்களினூடாக அது இழந்த தன் இடத்தினை தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leia mais...

Oct 24, 2010

கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்

கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.

* ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையல்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.

* டெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.

* டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்…

* எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin)  இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.

 * தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files)

 * இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.

* உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும்.

இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்.

Leia mais...

Oct 21, 2010

கூகுள் தரும் புதிய வசதி - Google Scribe

வாரந்தோறும் ஏதேனும் ஆரவாரமாகச் செய்து, இணையத்தின் மூலம் அனைவரையும் வளைத்துப் போடும் முயற்சிகளில் கூகுள் ஈடுபட்டு வருவதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகையில் கூகுள் லேப்ஸ் மையத்திலிருந்து இன்னொரு வசதி நமக்குக் கிடைத்துள்ளது.

ஆங்கிலத்தில் கடிதம், கட்டுரை என எந்த டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கான சொற்களை எடுத்துக் கொடுத்து உதவுகிறது. இந்த வசதி தரும் சாப்ட்வேர் சாதனத்திற்கு Google Scribe என்று பெயர் கொடுத்துள்ளது.

இந்த வசதி கிடைக்கும் தளம் சொடுக்கி பார்க்கவும்

இந்த வசதியினைப் பெற நாம் முதலில் இணைய இணைப்பில் இந்த தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் நாம் டைப் செய்யத் தொடங்கிய வுடனேயே இந்த சொல் இதுவாக இருக்க வேண்டும் எனப் பல சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. நாம் தொடர்ந்து டைப் செய்திடலாம்;

அல்லது நாம் டைப் செய்திட விரும்பும் சொல் இருப்பின், கர்சரை நகர்த்தாமல், அதன் எதிரே இருக்கும் எண்ணுக்கான கீயை அழுத்தினால் போதும். அந்த சொல் அமைக்கப்படுகிறது. அடுத்து, அடுத்த சொல் டைப் செய்திடுகையில், நீங்கள் அமைக்க இருக்கும் வாக்கியம் என்னவாக இருக்கும் என்று உணர்ந்து, மீண்டும் அடுத்த சொற்களைத் தருகிறது.

இதனால், நமக்கு எழுத்துப் பிழை இல்லாமல் சொற்கள் கிடைக்கின்றன. அடுத்து ஆங்கிலத்தில் நல்ல சரியான சொற்கள் நம் எண்ணத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகின்றன. இதில் அனைத்து பிரிவு களுக்கும் சொற்கள் கிடைக் கின்றன.

அறிவியல் துறையில் நீங்கள் எழுத வேண்டும் என முயற்சித்தாலும், உங்களுடைய பொருளை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ற சொற்கள் பட்டியலிடப்படுகின்றன. இது ஆங்கிலத்தில் எழுத விரும்பும் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தளமாகும்.

Leia mais...

Oct 18, 2010

ஐபோனில் முக அழகை தெரிந்து கொள்ளும் வசதி

ஐபோனில் முக அழகு குறித்து தெரிந்து கொள்ளும் வசதியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஐபோனில் 'அக்ளி மீட்டர்' என்னும் வசதி பொறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இந்த போன் மூலம் எடுக்கப்படும் நபரின் புகைப்படத்தின் தன்மை எத்தகையது என 10த்திற்கு மதிப்பெண் வழங்குகிறது.

பின்னர் அழகான முகம் அல்லது அழகற்ற முகம் குறித்த அதிகபட்ச மதிப்பெண் மெயிலாக அனுப்பப்படுகிறது.

கேமராவை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leia mais...

Oct 10, 2010

புதுப் பொலிவுடன் வெளிவந்துள்ள facebook group

facebook இணைய தளத்தில் அன்றாடம் பல விடயங்களை எமது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றோம். இப்படி நாம் ஒருவிடயத்தை பகிரும் போது அது எமது அனைத்து நண்பர்களும் பார்த்து வந்தார்கள். அந்தப் பகிர்தலில் பல குறைபாடுகள், ப்ரைவசி பிரச்சினைகள் காணப்படுவதாக பலரும் முறைப்பாடுகளை மேற்கொண்டுவந்தார்கள். அதற்கு பதிலழிக்கும் வகையில் இந்த புதிய Groups வெளிவந்துள்ளது.
இப்போது உங்கள் குடும்ப photo வை உங்களது உறவினர்கள் மட்டும் பார்க்கும் வகையில் பகிர்ந்து கொள்ளலாம். இப்போது ஒரு இணைய தள முகவரியினை உங்கள் நெருங்கிய நண்பர்களிடையே மட்டும் பகிரலாம். மேலும் நாங்கள் குழுவாக சேர்ந்து chat ம் பண்ணலாம்.
உங்கள் நண்பர்களிடையே குழுக்களை உருவாக்கி எமது தனிப்பட்ட விடயங்களை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினை இந்த புதிய Groups தந்துள்ளது. பலரும் எதிர்பார்த்த ப்ரைவசி இங்கு அதிகமாகவே காணப்படுகிறது. நான் சொல்வதைவிட நீங்கள் செய்து பார்க்கும் போது இலகுவாக புரியக்கூடியதாக இருக்கும். இப்போதோ உங்கள் நண்பர்களிடையே ஒரு குழுவினை உருவாக்கி பயன்படுத்திப்பாருங்கள்.
குழுவினை அமைக்க



Lanka tech

Leia mais...

Oct 9, 2010

அடுத்தவருட ஆரம்பத்தில் அப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone

அடுத்த வருட ஆரம்பத்தில் அப்பிள் நிறுவனம் Verizon வலையமைப்பில் பயன்படுத்தவல்ல தனது புதிய iPhone 4 ஐ வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கூகிள் நிறுவனத்தின் அன்ட்ரியோட் கைப்பேசிகள் அமெரிக்காவின் கைப்பேசிச் சந்தையை ஆக்கிரமித்துவரும் இவ்வேளையில், அப்பிள் நிறுவனத்தின் அப் புதிய iPhone 4 கைப்பேசி, மீண்டும் கைப்பேசிச் சந்தையை அப்பிள் நிறுவனத்திற்குச் சாதகமாக மாற்றும் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Verizon வலையமைப்பில் தொழிற்படத்தக்கவாறு ஐபோன் பயன்பாட்டிற்கு வரும்பொழுது பெருமளவான அன்ட்ரியோட் பாவனையாளர்கள் ஐபோனைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்று கருத்துக்கணிப்புக்கள் தொரிவிக்கின்றன.

Leia mais...

Oct 6, 2010

புதிய இமேஜ் பார்மெட் : அறிமுகப்படுத்துகிறது கூகுள்

நாம் சில இணையதளங்களுக்கு செல்லும்போது அந்த இணையதளம் நம் கணினியில் லோட் ஆவதற்கு நிறைய நேரம் எடுக்கிறது. அதற்கு காரணம் அந்த இணையப்பக்கங்களில் உள்ள புகைப்படங்கள் லோட் ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமே.

அதாவது குறிப்பிட்ட பக்கங்களில் உள்ள இமேஜ்களின் பைல் சைஸ் என்றழைக்கப்படும் கோப்புகளின் அளவு பெரியதாக இருப்பதே காரணம். இதுபோன்ற சமயங்களில் நாம் எரிச்சலடைந்து அந்த வலைப்பக்கத்தை மூடி விடுகிறோம்,

இதனை கருத்தில் கொண்டு எளிதாக படங்கள் லோட் ஆவதற்கு வசதியாக கூகுள் புது வகையான இமேஜ் பார்மேட்டை அறிமுகப்படுத்துகிறது. அதாவது படங்களுக்கென ஏற்கனவே நாம் பயன்படுத்தும் பலதரப்பட்ட இமேஜ் பார்மேட்களில் ஜேபிஇஜி பார்மெட் தான் இதுவரைக்காலமும் மிக குறைந்த பைல் சைசில் தரமான புகைப்படங்களை வழங்கி வந்தது.

இப்பொழுது அதைவிடவும் மிக மிகக் குறைவான பைல் சைசில் அதே மாறாத தரத்துடன் புதியவகையிலான இமேஜ் பார்மேட்டை வெப்பி என்ற பெயரில் கூகுள் அறிமுகப்படுத்துகிறது. இந்த வெப்பி பார்மேட்டானது ‌ஜேபிஇஜி இமேஜைக் காட்டிலும் சராசரியாக 40% குறைவான பைல் சைசில் கிடைக்கிறதாம்.

இதுகுறித்து கூகுள் உயர் அதிகாரி ரிச்சர்ட் ராபர்ட் கூறுகையில் ” தற்போது இணையத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் இமேஜ் பார்மேட்கள் அனைத்தும் பத்தாண்டுகளுக்கு முன்னர் அன்றைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்க்கப்பட்டவை.

ஆகவே கூகுளின் சில பொறியியலாளர்கள் ஜேபிஇஜி போன்ற அதிவேகமாக லோட் ஆகும் குறைந்த பைல் சைசில் மாறாத தரம் பெற்ற இமேஜ் பார்மேட்டினை உருவாக்க முடிவெடுத்தார்கள். இதன் ஒரு பகுதியாக புதிய இமேஜ் பார்மேட்டின் முன்மாதிரி வெளியிடுகிறோம். ” என்கிறார்.

கூகுள் நிறுவனம் இந்த புதிய வகை இமேஜ் பார்மெட் அனைத்து வகை இணைய உலாவிகளிலும் (இண்டர்நெட் பிரவுசர்) தெரியும் வகையில் உலாவிகளின் தயாரிப்பாளர்களின் ஒத்துழைப்பை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.

Leia mais...

Oct 1, 2010

கணனியில் என்ன நடக்கிறது

உங்கள் கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவீர்கள் எனில் இந்தப் பதிவு உங்களுக்காகவே!

விண்டோஸ் இயங்குதளத்தில் (OS) என்ன நடந்துகொண்டு இருக்கிறது?

என்னென்ன செயல் (Process) கணினியில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது?

ஒவ்வொரு செயலுக்குப் பின்னனியில் இருக்கும் மர்மம் என்ன?

எவ்வளவு நினைவகம் (Memory) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது?

Micro Processorன் உபயோகம் எந்த அளவுக்கு உள்ளது?

எந்தெந்த dll கோப்புகள் தற்சமயம் உபயோகத்தில் உள்ளன?

எந்தெந்த IP முகவரியுடன் உங்கள் கணினி தற்போது இணைப்புடன் உள்ளது?

உங்கள் கணினியுடன் இணைந்துள்ள தொலைவில் உள்ள கணினிகளின் (Remote PC) IP முகவரிகள்?

தற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும் சேவைகளும், நிறுத்தப்பட்ட சேவைகளும் யாவை?

விண்டோஸ் ஆரம்பிக்கும்போது(Startup) எந்தெந்த செயல்களும் சேர்ந்து (Auto-start) ஆரம்பிக்கின்றன?

இயங்குதளத்தின் version, பயனர் பெயர் (User name), நினைவகக் கொள்ளளவு, Processor ஆகிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்வது எப்படி?

இது போன்ற பல வினாக்களுக்கு உரிய விடைகளை அறிய ஒரு இலவச மென்பொருள் இங்கே

What's Running is a product that gives you an inside look into your Windows 2000/XP/2003 system.

Explore processes, services, modules, IP-connections, drivers and much more through a simple to use application. Find out important information such as what modules are involved in a specific process.

Control your system by starting and stopping services and processes. Configure your startup programs easily.

சாதாரணமாக Task Manager காட்டாத பல செய்திகளை இந்த மென்பொருள் காட்டிக் கொடுக்கின்றது. இதனால் ஏதேனும் virus பின்னணியில் இயங்குகின்றதா? Registry மூலம் தானாக இயங்கும் மென்பொருட்கள் எவை? IP தொடர்புகள் எத்தனை உள்ளது? போன்ற பல System தொடர்பான தகவல்களைப் பெறுவதுடன், உங்களால் எளிதில் அவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

இது தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவசம் (Free for non commercial / personal use) ஆகும்.

ஆக மொத்தத்தில் கணினியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய நினைப்பவர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள்!

தரவிறக்க சுட்டி

- ரமணா

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo