கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Nov 17, 2010

வருகிறது @facebook.com மின்னஞ்சல் வசதி!

கூகுளுக்கு அடுத்து உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் தளம் என்ற பெருமை இப்போது பேஸ்புக்குக்கு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 500 மில்லியன் பயனாளர்கள் பேஸ்புக்கிற்கு உள்ளனர்.

இவர்களில் பலர் மணிக்கணக்கில், நாள் கணக்கில் பேஸ்புக்கிலேயே மூழ்கி இருக்கிறார்கள். கம்ப்யூட்டரில்தான் பேஸ்புக் பார்க்க வேண்டும் என்ற கட்டாயமில்லை இப்போது… நிறைய பேர் தங்கள் மொபைலிலேயே பேஸ்புக்கை பயன்படுத்தி, புதிது புதிதாக பெண் நண்பர்களைத் தேடுவதில் குறியாக இருப்பதைப் பார்க்க முடிகிறது!

பேஸ்புக்கின் இந்த அசுர வளர்ச்சி, பல வித இணைய சேவைகளை இலவசமாக அளிக்கும் முதல் நிலை இணைய தளமான, கூகுளுக்கு பெரும் தலைவலியாகிவிட்டது.

பொதுவாக இணைய தளங்களுக்கு கிடைக்கும் விளம்பரங்கள், அந்த தளத்தில் பயனாளர்கள் எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்பதை வைத்தே தரப்படுகின்றன. அப்படிப் பார்த்தால், முதலிடத்தில் உள்ள கூகுளை விட, பேஸ்புக்கில்தான் அதிகமான நேரத்தை பயனாளர்கள் செலவிடுகின்றனர்.

இதனால் பேஸ்புக் மூலம் வருமானம் எக்கச் சக்கமாக குவிந்து கொண்டிருக்கிறது. பேஸ்புக்கும் கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து தங்கள் பக்கம் இழுத்து வருகிறது.

இந்த போட்டியைச் சமாளிக்க பல வழிகளை யோசித்து வருகிறது கூகுள். முதல்கட்டமாக, பேஸ்புக் பயனாளர்கள் கூகுளின் சில சேவைகளை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக ஜிமெயில் தொடர்பு மின்னஞ்சல்களை ஒருமுறைக்குமேல் பேஸ்புக்கில் இறக்கிக் கொள்வதை தடை செய்தது கூகுள். இன்னும் சில மென்பொருள் சேவைகளையும் பேஸ்புக்கில் இருந்தபடியே பயன்படுத்திக் கொள்ளவும் பயனாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இப்போது கூகுளைப் போலவே பேஸ்புக்கும் இமெயில் சேவையில் இறங்கிவிட்டது.

இனி உங்கள் பெயர் @facebook.com என்று ஸ்டைலில் மின்னஞ்சல் முகவரியை பெற்றுக் கொள்ளலாம். இப்போதைய நிலவரப்படி, கூகுள் இமெயில் முகவரி வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பேஸ்புக்கில் உள்ளனர்.

புதிதாக பேஸ்புக் மின்னஞ்சல் வசதி கிடைக்கும் சூழலில், கூகுள் பயனாளர்கள், மின்னஞ்சலுக்காக ஜிமெயிலுக்கு போகவேண்டிய அவசியமே இருக்காது. இதன் மூலம் கூகுளின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது பேஸ்புக்.

அமெரிக்காவில் திங்களன்று துவங்கிய இணையதள கருத்தரங்கில் பங்கேற்ற பேஸ்புக் சிஇஓ ஜூக்கர்பெர்க் பேஸ்புக்கின் இமெயில் சர்வீஸை முறைப்படி அறிவித்தார்.

இதில் இன்னொரு வசதி, பேஸ்புக் மின்னஞ்சலைப் பெற பேஸ்புக் தளத்தில் உங்கள் கணக்குக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லையாம். இது தனி. வெளியிலிருந்தபடி சாட் செய்யலாம், செய்தி அனுப்பலாம், உயர்ந்த தரமான படங்கள் அனுப்பலாம்.

சுருக்கமாக சொன்னால், மெயில் சேவையில் கூகுள், யாஹூ போன்றவை தரும் வசதிகள் அனைத்தையும் பேஸ்புக்கே இனி தரப் போகிறது. மைக்ரோசாப்ட் வேர்டு டாக்குமெண்ட்களை தரவிறக்கம் செய்யாமல் அட்டாச்மெண்ட்களாகவே பார்க்கும் வசதியை பேஸ்புக் தருகிறது.

இந்தத் திட்டங்கள் நடைமுறைக்கு வர இன்னும் ஓரிரு மாதங்கள் பிடிக்கும் என்று தெரிகிறது.

இதற்குள், மேலும் சில புதிய மின்னஞ்சல் வசதிகளைத் தர கூகுள் திட்டமிட்டுள்ளது. அத்துடன் பேஸ்புக் போன்ற பெரிய சமூகத் தளம் ஒன்றையும் அறிமுகப்படுத்த உள்ளது கூகுள். ஏற்கெனவே நான்கு சிறிய சமூக இணையதங்களை வாங்கியுள்ளது கூகுள். இவற்றை களமிறக்கி் பேஸ்புக்குக்கு ஷாக் தரத் திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

சர்வதேச நிலவரப்படி இணைய தரவரிசையில் கூகுள் முதலிடத்திலும், பேஸ்புக் இரண்டாம் இடத்திலும், யுட்யூப் மூன்றாவது இடத்திலும், யாஹூ நான்காவது இடத்திலும் உள்ளன.

Leia mais...

Nov 13, 2010

'ரொக்மெல்ட்' எனும் புதிய சமூக வலைப்பின்னல் தேடுபொறி அறிமுகம்

ரொக்மெல்ட்' எனும் புதிய இணையத்தள தேடுபொறி (பிரவுசர்) இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

சமூக வலைத்தளங்களான பயர்பொக்ஸ் (Firefox) மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Internet explorer) ஆகியவற்றுக்குப் போட்டியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வலைப் பதிவில் புதிய தேடியந்திரத்தை பற்றி 'ரொக்மெல்ட்' நிறுவனம் தெரிவிக்கையில்,

"புதிய பிரவுசர் மூலம் பயனாளிகள், இலவசமாக பூரண திருப்தியுடன் எமது சேவையின் மூலம் இணையத் தேடல்களை மேற்கொள்ள முடியும். மிக இலகுவாக இணையப் பக்கங்களுக்குச் செல்லவும் முடியும்.

இதன் முதலாவது பரீட்சார்த்த இணையப் பக்கத்தை அழைப்பிதல் உள்ளவர்கள் மாத்திரம் இன்று நேரடியாக காணலாம்."

இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Leia mais...

Nov 6, 2010

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு மிக முக்கிய அறிவுரைகள் : ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்

பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார்.

இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது.

'data mining' எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள்  உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் .

இது குற்றவாளிகளுக்குக் கிடைத்துள்ள தங்கத் துகிள் போன்றது.  பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்து விடயங்கள் பற்றி டேவிட்வைட்லெக் குறிப்பிட்டுள்ளார்.

பிறந்த திகதியும் இடமும் 

இது உங்கள் அடையாளங்கள் திருடப்படக்கூடிய மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். உங்களது கடவுச் சொல்லை மீளமைக்கும் இணையத்தளங்களில் இது பொதுவாகக் கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்வி. ஒரு குற்றவாளி இதை மீளமைத்தால் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பிரவேசிப்பது உட்பட எதைவேண்டுமானாலும் செய்யலாம்.

தாயின் கன்னிப் பெயர் 

பல இணையத்தளங்கள் உங்களது தாயின் கன்னிப் பெயரை உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பயன்படுத்துகின்றன. நீங்கள் கற்ற பாடசாலையின் பெயரையும் அவை பொதுவாக பாதுகாப்புக் கேள்வியாகப் கேட்டு பயன்படுத்துகின்றன. எனவே இதையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.

விலாசம்

நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகின்றீர்களா? இது அடையாள மோசடியில் மீண்டும் உங்களைத் தள்ளிவிடும். மோசடியாளர்களும் மற்றவர்களைப் பின் தொடர்பவர்களும் இவற்றைப் பாவிக்க இடமுண்டு.

விடுமுறைகள்

உங்களது விடுமுறைத் திட்ங்களை நீங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவது, உங்கள் வீட்டைக்  கொள்ளையிட வருமாறு நீங்களே கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்றது.

வீட்டிலிருந்து புறப்படும் குறுகிய பயணங்கள் 

இதுவும் நீங்கள் பின் தொடரப்படவும் கொள்ளையிடப்படவும் கூடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் பொருள் கொள்வனவுக்காகச் செல்லும் இடங்கள், நண்பர்களோடு உணவருந்தச் செல்லும் இடங்கள். அதைப்பற்றிய தினம் நேரம் போன்ற விவரங்கள். இது உங்களைப் பின்தொடருபவருக்கு நீங்களே அழைப்பு விடுப்பது போன்றதாகும். பேஸ்புக்கின் மூலம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அச்சுறுத்தியது சம்பந்தமாக ஒரு வழக்கும் அண்மையில் பதிவாகியுள்ளது.

முறையற்ற படங்கள்

பேஸ்புக்கை  பலரும் பார்ப்பதால் இத்தகையப் படங்களைப் போடுவது மோசமானது. அது உங்களைப்பறறிய தவறான ஒரு எண்ணத்தை ஏறபடுத்திவிடும். அதே போல் உங்கள் வீட்டின் மாதிரித் தோற்றத்தைக் காட்டக்கூடிய மற்றும் உங்களிடமிருக்கும் பெறுமதியான பொருள்களைக் காட்டக்கூடிய படங்களையும் போட வேண்டாம்.

ஒப்புதல்கள்

இதுவும் உங்களை வேலையிழக்கச் செய்து உங்கள் எதிர்காலத்தையே பாதித்துவிடக்கூடும்.நீங்கள் மற்றவர்களுடன் வைத்திருக்கின்ற உறவு மற்றும் வெட்கக்கேடான செயல்களை பேஸ்புக்கில் மூலம் ஒத்துக் கொள்வது ஆபத்தானது.  விளம்பரங்கள்:- நீங்கள் பேஸ்புக்கில் போடுகின்ற எல்லாமே உங்களால் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அதில் இருக்கும்.

தொலைபேசி இலக்கம் 

உங்களோடு அவசியம் தொடர்புகொள்ள வேண்டிய நிலைமைகள் தவிர இதைச் செய்ய வேண்டாம். இது 'data mining' திட்டத்தால் பெறப்பட்டு விளம்பரதாரர்களுக்கு வழங்கப்படலாம். மேலும்  "Lost my phone" அல்லது "Need Ur number".போன்ற பேஸ்புக் பக்கங்களையும் பாவிக்க வேண்டாம்.

பிள்ளைகளின் பெயர்கள்

இதுவும் அடையாளத்திருடர்களால் அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களால் பாவிக்கப்படக்கூடும். ஒரு பிள்ளையின் விவரங்களைத் திருடுவது மிகவும் இலேசானது.

பொதுவான முழு அளவிலான விவரங்களை வெளியிட வேண்டாம்

பேஸ்புக்கில் இத்தகைய விவரங்கள் இருப்பதானது எந்த ஒரு தேடுதல் இயந்திரத்தினாலும் பாவிக்கப்படக்கூடியது. பெயரை மட்டும் வழங்கிவிட்டு ஏனைய எல்லாவற்றையும் மறைத்து வைத்திருப்பது மேலானது.

Leia mais...

Nov 3, 2010

விற்பனைக்கு வருகிறது கூகுளின் 'குரோம் நெட்புக்'

கூகுள் நிறுவனம் தனது குரோம் இயங்குதளத்தை (Chrome Operating System) கொண்டியங்கும் நெட்புக் கணனிகள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வருமென தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம் கூகுள் தனது குரோம் இயக்குதளத்தை (Chrome OS) அறிமுகம் செய்திருந்தது.

தற்போது 'இன்வென்டெக் ' எனப்படும் தாய்வான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்தே இதனை உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏஸர் மற்றும் ஹெவ்லட் பெக்கார்ட் நிறுவங்கள் கூகுளின் இவ்வியங்குதளத்தினை கொண்டியங்கும் கணனிகளை உருவாக்கி வருவதுடன் அவை இவ்வருட இறுதியில் சந்தைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கூகுள் தனது சொந்த தயாரிப்பான நெக்ஸஸ் (Nexus) எனும் 'ஸ்மார்ட்' போன்களை விற்பனை செய்திருந்தது. எனினும் இவை சந்தையில் வரவேற்பைப் பெறவில்லை.

இருந்தபோதிலும் கூகுள் தனது அடுத்தமுயற்சியில் இறங்கியுள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo