கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Dec 23, 2010

ஸ்கைப்பில் எழுந்த திடீர் பிரச்சினை

பிரபல தொடர்பாடல் சேவையான ஸ்கைப்பினுள் நுழையமுடியவில்லையா?

அத்தொழிநுட்ப கோளாறிற்கு முகங்கொடுப்பது நீங்கள் மட்டுமல்ல!
இதனை உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு பாவனையாளர்கள் தற்போது எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக ஸ்கைப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தொழில்நுட்பக் கோளாறு இடம்பெற்றுள்ளதாகவும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அதனை சரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஸ்கைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

VK

Leia mais...

Dec 18, 2010

நம் ஆவணங்களை விரும்பிய வகைக்கு மாற்ற ConvertDoc மென்பொருள்

சில நேரம் நம்மிடம் உள்ள பிடிஎப் ( Pdf ) கோப்புகளை வேர்டு டாகுமெண்ட்டாக ( Word document ) மாற்ற வேண்டியிருக்கும். மேலும் வேர்டு கோப்புகளை பிடிஎப் கோப்புகளாக மாற்ற நினைப்போம். இரண்டும் வெவ்வேறு வகைகளாயினும் நமது குறிப்பிட்ட வசதிகளுக்காக மாற்றுவோம். இதற்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதன் பெயர் ConvertDoc ஆகும்.

இந்த மென்பொருள் பயன்படுத்த எளிமையானது. கணிணியில் பல இடங்களிலிருந்தும் பல வகைகளில் இருக்கும் கோப்புகளை விரைவான வேகத்தில் இது வேண்டிய வகைக்கு மாற்றித் தருகிறது. ( Document converting)

இந்த மென்பொருள் மூலம் Pdf, doc, docx, txt, htm, rtf போன்ற முக்கிய ஆவண வடிவங்களிலிருந்து மேற்கண்ட வகைகளில் ஒன்றினுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

இதில் வேண்டிய கோப்புகளை தேர்வு செய்து விட்டு என்ன வகைக்கு ( Output type) மாற்ற வேண்டும் என்பதையும் எங்கே சேமிக்கப்பட வேண்டும் (Output folder ) என்பதையும் தேர்வு செய்து விட்டு Convert பட்டனை கிளிக் செய்தால் போதும்.

இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளங்குகளில் மட்டுமே செயல்படும்.

தரவிறக்கம் செய்ய

- பொன்மலர்

Leia mais...

Dec 14, 2010

பேஸ்புக் போட்டியாளரின் வருகையை உறுதி செய்யும் முதல் ஆதாரம் ?

ஆரம்பத்தில் 'கூகுள் மீ' என இதன் பெயர் வெளியாகியது பின்னர் 'எமரால்ட் சீ' (Emerald Sea) என தெரிவிக்கப்பட்டது எனினும் தற்போது இதன் பெயர் கூகுள் + 1 (Google +1) என ஓரளவுக்கு ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் உறுதிசெய்யப்படாத தகவலான இதனை ஓரளவு உறுதிசெய்யும் வகையான படமொன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஆம், பிரபல 'டெக்கிரன்ச்' இணையத்தளத்திலேயே இப்படம் வெளியாகியுள்ளது.



இப்படத்தில் நீங்கள் காண்பது போல் இது கூகுள் செய்திகளின் பக்கமாகும். இதில் ஓர் 'டூல்பார்' காணப்படுகின்றது.

இங்கு சிகப்பு நிறத்தினால் குறித்துக்; காட்டப்பட்டுள்ள பகுதியில் 'செயார் பட்டன்' , கூகுள் பாவனையாளர் பெயர் ( Username), 'ஒப்சன் மெனு' போன்றவை காணப்படுகின்றன.


இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் 'Confidential' என குறிப்பிடப்பட்டுள்ள வாசகம். ரகசியமாக வைக்கப்படவேண்டிய செய்தி என்பதிற்கு இது ஓர் சான்றாகும். எனவே இது கட்டுப்பாடுகளை மீறி வெளியாகியுள்ளது எனலாம்.

'டூள்பாரின்' இடது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'லூப்' என்ற வாசகமானது கூகுளின் வார்த்தைப் பிரயோகங்களுக்கு அமைய ' குரூப்' என அர்த்தமாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே மொத்தத்தில் கூகுள் + 1 ஐ பேஸ்புக்கிற்கு போட்டியாக அடுத்தவருட ஆரம்பத்தில் எதிர்பார்க்கலாம் என்பதே அனைவரினதும் கருத்தாகும்.

Leia mais...

Dec 6, 2010

புதிய பல மாற்றகளுடன் பேஸ்புக்

சமூக வலைப்பின்னல் உலகில் தினம் தினம் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்திவரும் பேஸ்புக் தற்போது புரொபைல் பேஜ் வடிவத்தினை மாற்றியமைத்துள்ளதுடன், வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
நமது புதிய பேஸ்புக் புரோஃபைல் பேஜ் வடிவமைப்பானது படிப்படியாகவே மாற்றப்பட்டு வருகின்றது. எனினும் நீங்கள் விரும்பினால் இந்த வசதியினை உடனடியாக பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இதனை உடனடியாக பரிசோதிக்க விரும்பின்,
a. இம் முகவரியில் சென்று உங்கள் கணக்கினுள் நுழையவும்.
b. பின்னர் வலது பக்க மேல் மூலையில் தரப்பட்டுள்ள ' You have the new profile' என்று குறிப்பிடப்பட்டுள்ள பச்சை நிற பட்டனை அழுத்தவும்.
c. இப்போது உங்கள் புரோஃபைல் மாற்றமடைந்திருக்கும்.
தற்போது புதிய வடிவில் தரப்பட்டுள்ள வசதிகள் மற்றும் மாற்றங்கள் பற்றி பார்வையிடுவோம்.

1) முதலாவதாக உங்களைப் பற்றியதொரு சிறிய அறிமுகம் தரப்படும் நீங்கள் எங்கு கல்வி கற்றீர்கள், பிறந்த திகதி, எங்கு வளர்ந்தீர்கள்? தற்போது என்ன செய்கிறீர்கள் என்பது தொடர்பிலானது இந்த அறிமுகம்.
அதற்குக் கீழ் அண்மையில் டெக் செய்யப்பட்ட புகைப்படங்கள் எனினும் இவ்விடயத்தில் உங்கள் 'பிரைவசி' தொடர்பான எல்லைகள் மீறப்படவில்லை காரணம் நீங்கள் அனுமதியளித்தவர்கள் மட்டுமே இப்புகைப்படங்களைப் பார்வையிட முடியும்.

2) மிக இலகுவாக மற்றைய வோல், இன்போ, போடோஸ் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வசதி.

3) தற்போது உங்கள் தொழில் மற்றும் கல்வி என்பன பற்றி அதிகமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியும். மேலும் உங்களுடன் இருந்த நண்பர்களை உள்ளடக்க முடிவதுடன் - உங்கள் அனுபவங்கள், திட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிட முடியும்.

4) உங்களுக்கு பிடித்தமான இசை, வீடியோ, விளையாட்டு, விருப்பங்கள் ஆகியவற்றை 'விஷுவல்' வடிவில் காணமுடியும்.

5) இவற்றில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதுதான் நண்பர்களை அவர்களூடான உங்களின் தொடர்புக்கு ஏற்ப பிரித்துக் கொள்வதாகும். கீழ் காட்டியவாறு அவர்களைப் பிரித்து பட்டியலிட்டுக் கொள்ள முடியும். உறவினர்கள், சிறந்த நண்பர்கள், சக ஊழியர்கள், பாடசாலை நண்பர்கள் போன்றோர் அடிப்படையில் இதனைப் பிரித்துக் கொள்ள முடியும்.

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo