கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Dec 14, 2010

பேஸ்புக் போட்டியாளரின் வருகையை உறுதி செய்யும் முதல் ஆதாரம் ?

ஆரம்பத்தில் 'கூகுள் மீ' என இதன் பெயர் வெளியாகியது பின்னர் 'எமரால்ட் சீ' (Emerald Sea) என தெரிவிக்கப்பட்டது எனினும் தற்போது இதன் பெயர் கூகுள் + 1 (Google +1) என ஓரளவுக்கு ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் உறுதிசெய்யப்படாத தகவலான இதனை ஓரளவு உறுதிசெய்யும் வகையான படமொன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஆம், பிரபல 'டெக்கிரன்ச்' இணையத்தளத்திலேயே இப்படம் வெளியாகியுள்ளது.இப்படத்தில் நீங்கள் காண்பது போல் இது கூகுள் செய்திகளின் பக்கமாகும். இதில் ஓர் 'டூல்பார்' காணப்படுகின்றது.

இங்கு சிகப்பு நிறத்தினால் குறித்துக்; காட்டப்பட்டுள்ள பகுதியில் 'செயார் பட்டன்' , கூகுள் பாவனையாளர் பெயர் ( Username), 'ஒப்சன் மெனு' போன்றவை காணப்படுகின்றன.


இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் 'Confidential' என குறிப்பிடப்பட்டுள்ள வாசகம். ரகசியமாக வைக்கப்படவேண்டிய செய்தி என்பதிற்கு இது ஓர் சான்றாகும். எனவே இது கட்டுப்பாடுகளை மீறி வெளியாகியுள்ளது எனலாம்.

'டூள்பாரின்' இடது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'லூப்' என்ற வாசகமானது கூகுளின் வார்த்தைப் பிரயோகங்களுக்கு அமைய ' குரூப்' என அர்த்தமாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே மொத்தத்தில் கூகுள் + 1 ஐ பேஸ்புக்கிற்கு போட்டியாக அடுத்தவருட ஆரம்பத்தில் எதிர்பார்க்கலாம் என்பதே அனைவரினதும் கருத்தாகும்.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo