கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Mar 29, 2010

கணணி செய்தி கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல்

பொதுவாக விண்டோஸ் இயங்குதளங்களை பயன்படுத்த துவங்கிவிட்டாலே வைரஸ் தாக்கம்,இயங்குதளம் Crash ஆவது போன்ற பிரச்சனைகள் எப்போது எழும் என்றே கூறமுடியாது. “நேற்றிரவு கூட நன்றாக தானே கணினியை இயக்கினேன் ஆனால் இன்று காலையில் கணினி மக்கர் பண்ணுதேன்னு” நம்மில் எத்தனை பேர் புலம்புவோம் அல்லவா?
இதுபோன்று விண்டோஸ் செயலிழந்து மக்கர் பண்ணும் போது தான் இந்த ரீஸ்டோரேஷனின் அவசியம் நமக்கு தெரிய வரும். 

ரீஸ்டோரஷன் என்றால் என்ன? 

கணினி நல்ல நிலையில் இயங்கிக்கொண்டு இருக்கும்போது அதனை பேக்-அப் செய்து இதர பார்ட்டிஷனில் சேமித்து, கணினி மக்கர் செய்யும்போது சேமித்த கணினியின் பேக்-அப்பை கொண்டு கணினியின் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே ரீஸ்டோரேஷன் ஆகும். இன்றைய பதிவில் நாம் அதனை பற்றிதான் விபரமாக அறிந்து கொள்ள இருக்கின்றோம்.
பொதுவாக கணினியை இரண்டு வகையாக பிரிப்போம் ஒன்று Branded மற்றொன்று Assembled இதில் Branded கணினியாக‌ இருந்து அதனை நீங்கள் Genuine OS உடன் வாங்கினால் அந்த கணினி தயாரிப்பாளரே உங்களுக்கு ஒரு ரீஸ்டொரேஷன் cd/dvd யை அளிப்பார் (Dell,Acer,HP etc..). விண்டோஸில் ஏதாவது பிழை ஏற்பட்டு பூட் ஆக மறுக்கும் போது இந்த cd/dvd யை போட்டு ரீஸ்டோரேஷன் செய்துகொண்டு நீங்கள் கணினியை எந்த தேதியில் வாங்கினீர்களோ அந்த தேதியின் நிலமைக்கு கொண்டு வரலாம்.
இதே Branded கணினியை Free DOS ஸாக வாங்கினீர்க்ளேயானால், இந்த ரீஸ்டோரேஷன் சாத்தியம் இல்லை. இந்த சூழ்நிலையில் நாம் தான் ரீஸ்டோரேஷன் உருவாக்க வேண்டும் (IBM,DELL,ACER etc without OS).
அடுத்ததாக Assembled கணினி, இது நமக்கு ஏற்ற கணினியை நாமே தனித்தனியாக வாங்கி சர்வீஸ் Engg மூலமாக உருவாக்குவது ஆகும். இங்கு பிரான்ஸ் நாட்டில் Assembled கணினியின் எண்ணிக்கை மிகக்குறைவே, இங்கு Branded கணினி முறையான OS உரிமம் பெற்றே தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அதிகப்படியான கணினிகள் Assembled கணினிகளே. அவ்வாறு கணினியின் பாகங்களை கடையில் வாங்கும்போது நம்மில் பலரும் விண்டோஸ் தொகுப்பை பணம் செலுத்தி வாங்குவது கிடையாது. எனவே தான் Pirated விண்டோஸ் தொகுப்புகளை உலகில் அதிகமாக பயன்படுத்துவது ஆசியாவில் தான் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகின்றது. என்ன செய்வது மைக்ரோசாப்டின் விண்டோஸ் தொகுப்புகளின் விலை அப்படி. அதே நேரத்தில் பைரேட் செய்து பயன்படுத்துவதும் தவறு. 

இந்த ரீஸ்டோரேஷனால் என்ன பயன்? 

கணினி நல்ல நிலமையில் இயங்கிக்கொண்டிருக்கும் போதே ரீஸ்டோரேஷன் உருவாக்குவதால் சில நன்மைகள் நமக்கு கிட்டும்.
வன்தட்டை (Hard Disk) பார்மேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஆகையால் கணினியின் வந்தட்டிற்க்கு பாதுகாப்பு கிடைக்கின்றது. வன்தட்டை அடிக்கடி பார்மேட் செய்வது நல்லதல்ல. விண்டோஸ் சிடியை தேடி அலைய வேண்டாம். டிரைவர் சிடி இல்லையே என்ற கவலை வேண்டாம். மேலும் நீங்கள் விண்டோஸ் Genuine தொகுப்பு பயன்படுத்தினால் அதனை மைக்ரோசாப்டில் வருடத்திற்கு 4 முறை மட்டுமே இணையத்தில் ஆக்டிவேஷன் செய்ய இயலும். விண்டோஸை புதிதாக நிறுவும் நேரத்தை காட்டிலும் விரைவாக ரீஸ்டோரேஷனை செய்து கணினியை இயக்கி விடலாம். இதுபோன்ற நன்மைகள் இருப்பதால் கணினியை உங்களது தேவையான மென்பொருட்களை நிறுவிய பின் ரீஸ்டோரேஷன் உருவாக்கி அதனை பேக் அப் செய்து பாதுகாப்பாக சேமித்துவைப்பது சாலச்சிறந்தது.
நம்மில் பலரும் இதனை செய்வது கிடையாது. விண்டோஸில் பிழை ஏற்பட்டு கணினி பூட் ஆக மக்கர் பண்ணும் போது உடனே பார்மேட் செய்து விண்டோஸை புதிதாக நிறுவிவிடுவோம். பல சர்வீஸ் Engg களும் பரவலாக இதைத்தான் செய்கிறார்கள். நாங்கள் எங்களின் பல வாடிக்கையாளர்களுக்கு பல கணினிகளை Assembling செய்து தந்திருக்கின்றோம், தந்துகொண்டும் இருக்கிறோம். இவ்வாறு செய்யும் போது கண்டிப்பாக நாங்கள் அவர்களுக்கு ரீஸ்டோரேஷன் செய்து எங்களது தகவலையும் அந்த ரீஸ்டோரேஷன் மென்பொருளிலேயே எடிட் செய்து தந்துவிடுவோம். கணினி மக்கர் செய்யும் போது அவர்களது கணினியில் ரீஸ்டோரேஷன் செய்து 30 நிமிடத்தில் கணினியை இயக்கிவிடுவோம்(Hardware ல் பிழை இல்லாமல் இருந்தால்).
இதுபோல நீங்களும் ரீஸ்டோரேஷன் உருவாக்கிக்கொண்டு ரீஸ்டோரேஷன் செய்ய கற்றுக்கொண்டால் கணினியில் பிழை ஏற்படும் போது எளிமையாக ரீஸ்டோரேஷன் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு ரீஸ்டோரேஷன் உருவாக்க எந்த மென்பொருள் பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைக்கலாம். நாங்கள் எங்களது வாடிக்கையாளருக்கு பயன்படுத்துவது Drive Image XML என்ற இலவச மென்பொருளைத்தான். பொதுவாக ரீஸ்டோரேஷன் செய்யும் மென்பொருள்கள் எல்லாம் விலைகொடுத்து வாங்கும் சூழ்நிலையில் Drive Image XML இன் பயன்பாடு நன்றாக இருக்கின்றது.
இதனை கணினியில் நிறுவி பேக்-அப் செய்யலாம். பேக்-அப் செய்யும் போது அந்த கோப்பின் அளவை குறைக்க Compression ம் வைத்திருக்கின்றனர். இது விண்டோஸ்,விஸ்டா,விண்டோஸ்7 க்கு சப்போர்ட் செய்கின்றது. FAT,FAT16,FAT32,NTFS format களை ஆதரிக்கின்றது. 

Drive Image XML இன் குறைபாடு

இலவசமாக கிடைக்கும் இந்த Drive Image XML இல் உங்களது விண்டோஸ் பூட் ஆகவில்லை என்றால் ரீஸ்டோர் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கின்றது.
அதாவது Drive Image XML அளிக்கும் இலவச plug in ஐ வைத்து நீங்களாக தான் Windows Pre Enviroinment அல்லது Bart Pre Enviroinment துணைக்கொண்டு bootable cd உருவாக்கி தான் உங்களது கணினியை ரீஸ்டோரேஷன் செய்ய இயலும் என்பது சாதாரண கணினி பயனாளர்களுக்கு சாத்தியமில்லை என்பது கொஞ்சம் வருதப்படவேண்டிய விஷயம். 


புதுவை,சென்னை



Leia mais...

Mar 27, 2010

நவீன செல்போன் : இனி மவுன மொழியில் பேசலாம்

பொது இடங்களில் செல்போனில் பேசுபவர்களில் சிலர் உரக்கப்பேசி ஊரைக்கூட்டி விடுவார்கள். அவர்களின் அந்தரங்க தகவல்களை பிறர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்களே என்ற கவலையின்றி சத்தம் போட்டு பேசுவார்கள்.

இப்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண புதிய தொழில்நுட்பத்தை ஜெர்மனியில் உள்ள காரல் ஸ்ரூகி தொழில்நுட்ப நிலையம் கண்டு பிடித்துள்ளது. இதன்படி உங்கள் உதடு அசைவை வைத்தே நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள் என்பதை கண்டுபிடித்து எதிர்முனைக்கு உங்கள் குரலில் தெரிவிக்கும் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரோ மையோகிராபி எனப்படும் தொழில்நுட்பம் மூலம் இது இயங்குகிறது.

முகத்தில் உதடு மற்றும் தாடைப்பகுதியில் பொருத்தப் படும் சென்சார் கருவிகள் உதடு மற்றும் முக அசைவை வார்த்தையாக மொழிமாற்றம் செய்கிறது. இந்தப்பணியை செய்ய சிறப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த வார்த்தைகள் தொலைபேசி இணைப்பு வழியாக எதிர் முனையில் உள்ளவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இது தவிர ஸ்பீக்கர் மூலமும் இந்த பேச்சை கேட்கலாம்.

இந்த நவீன கண்டுபிடிப்பின் மூலம் வாய்பேச இயலாதவர்கள் மற்றும் பக்கவாத நோய் தாக்குதலால் பேச முடியாதவர்கள் பலன் பெறலாம். இவர்களின் உதட்டு அசைவின் மூலம் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

Leia mais...

Mar 26, 2010

கூகிள் குரோம் புதிய பதிப்பு 4 வெளியீடு!

கூகிள் தனது வலை உலாவியான குரோமின் புதிய பதிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. முன்பை விட அதிக பாதுகாப்புகள் மற்றும் சில பிழைகளை நீக்கி சரிசெய்து வெளியிட்டுள்ளது.இப்போதைய தொழில்நுட்பம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளுமாறு உருவாக்கப்பட்டுள்ளது.

பழைய பதிப்புகளை வைத்து உள்ளோர் புதிய பதிப்பை மேம்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். இந்த புதிய பதிப்பில் முன்பை விட வேகம், பாதுகாப்பு, எளிமை போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

Leia mais...

Mar 25, 2010

மனதை படிக்கும் கம்ப்யூட்டர் வடிவமைப்பு


பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள், மனிதர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை படிக்கும் வகையிலான கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளனர். இதுகுறித்து, லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மற்றும் அவரது சகாக்கள் கூறியதாவது,

கம்ப்யூட்டரால், மனிதர்களின் மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம், அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு, அவற்றை அப்படியே வெளிப்படுத்த முடியும். இதற்காக, பத்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களிடம் ஆய்வு நடத்தப் பட்டது. இவர்களுக்கு சில பெண்கள் கடிதங்களை தபால் பெட்டியில் போடுவது, பேப்பர் கப்பில் காபி அருந்துவது போன்ற காட்சிகள் அடங்கிய, சில வினாடிகள் மட்டுமே ஒளிபரப்பாகக் கூடிய படம் காண்பிக்கப்பட்டது.

அதன் பின், அவர்கள் என்ன பார்த்தனர் என்பதை திரும்ப நினைவுப்படுத்தி பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அப்போது ஸ்கேனர் கருவி மூலம் மூளையில் ஏற்படும் ரத்த ஓட்ட மாறுதல்களை வைத்து, அதன் செயல்பாடு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அந்த எலக்ட்ரிக்கல் தகவல்களை, அதற்கென உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் புரோகிராம் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டவர்கள் நினைவு கூர்ந்ததை, 50 சதவீதம் துல்லியமாக வெளிப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Lankasritech

Leia mais...

Mar 24, 2010

மீடியா கோப் (Media Cope)


கம்ப்யூட்டரில் இன்று ஆடியோ, வீடியோ பைல்களைப் பயன்படுத்தாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நாள்தோறும் ஏதேனும் ஒரு ஆடியோ, வீடியோ பைலைப் பயன்படுத்தி வருகிறோம்.

பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கிடைக்கும் விண்டோஸ் மீடியா பிளேயர் தொகுப்பாகும். ஆனல் ஒரு நிலையில் நம் தேவைகள் அதிகமாகி,வேறு மீடியா பிளேயர் உள்ளதா என்று தேட ஆரம்பிப்போம். குறிப்பாக ஆடியோ, வீடியோ பைல்களை எடிட் செய்திடவும், கட் செய்திடவும் நமக்கு புரோகிராம்கள் தேவைப்படும். இந்த செயல்பாடுகளுக்கு நாம் வேறு தர்ட் பார்ட்டி புரோகிராம்களைத்தான் நாட வேண்டியுள்ளது.

அண்மையில் மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளையும் தரக்கூடிய புரோகிராம் ஒன்று இலவசமாகக் கிடைப்பது தெரியவந்தது. அதன் பெயர் மீடியா கோப் (Media Cope).

இந்த புரோகிராமில் மீடியா பைல்கள் குறித்த நம் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். இதில் ஆடியோ/வீடியோ பிளேயர், ஆடியோ/வீடியோ கட்டர் மற்றும் ஆடியோ/வீடியோ கன்வர்டர் ஆகியவை தரப்பட்டுள்ளன. இவற்றுடன் போட்டோக்களை தேவையான பகுதியை கட் செய்து அமைக்கவும், பார்மட் மாற்றவும் மற்றும் அளவினை மாற்றவும் போட்டோ கட்டர் என்ற புரோகிராம் தரப்பட்டுள்ளது. இது மிகவும் பயனுள்ள புரோகிராமாக உள்ளது. இதனைக் கொண்டு நூறு இமேஜ் பைல்களைக் கூட சில நிமிடங்களில் கையாளலாம்.

மேலும் படங்களுடன் இசையை இணைத்து ஒரு மூவி போல அமைத்திட Movie Like Real Time Slide Show Viewer என்னும் புரோகிராம் பிரிவு உதவுகிறது.

மீடியா கோப் புரோகிராம் mp3, wav, aac, wma, flac, m4a, ac3, rmvb, mp4, 3gp, wmv, mov, avi, divx, mpg, flv, mkv மற்றும் vob என அனைத்து பார்மட்களில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோ பைல்களைக் கையாளும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி jpg, bmp, gif, tiff, png, emf and wmf ஆகிய இமேஜ் பார்மட் பைல்களையும் கையாள்கிறது.

இன்னும் போனஸாக, சில இன்டர்நெட் டூல்ஸ்களும் தரப்பட்டுள்ளன. இணைய இமேஜ்களை முழுத் திரையில் காண்பதற்கு Web Image Full Screen Viewer தரப்பட்டுள்ளது. இதன் மூலம் இணைய தளத்தில் காட்டப்படும் எந்த ஒரு இமேஜையும் விரித்து காணலாம்.

Speak Text என்னும் டூல் மூலம் இணைய தளத்தில் உள்ள டெக்ஸ்ட் ஒன்றைப் பேச்சுக் குரலில் கேட்கலாம்.

இதனை இன்ஸ்டால் செய்தவுடன் மிக எளிதாகப் பயன்படுத்தலாம். தொடக்கத்திலிருந்தே ஒரு எக்ஸ்பர்ட் போல இதனைக் கையாளலாம். பிரச்னைகள் இருந்தால் அல்லது தெளிவு தேவைப்பட்டால், ஹெல்ப் பட்டனை அழுத்தினால் பல தலைப்புகளில் தெளிவுரைகள் வழிகாட்டிகளாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான இது போன்ற ஹெல்ப் பைல்கள் ஒரு சில புரோகிராம்களில் மட்டுமே கிடைக்கும்.

இத்தனை பாராட்டுக்கும் இது உரியதுதானா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். புரோகிரமினை இறக்கி, இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பார்த்தால் இது உண்மை எனத் தெரியும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

Karthik

Leia mais...

Mar 22, 2010

கூகுள் பஸ் -ல் வாயால் பேசி தகவல் அனுப்பும் விநோதம்.

கூகுளின் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சி தான் நாம் இன்று நாம் பயன்படுத்தும் கூகுள்  பஸ்,  இனி  இந்த  கூகுள் பஸ்-ல்  தகவல்களை  அனுப்ப  நாம்  தட்டச்சு  (டைப்) செய்ய வேண்டாம்.  நாம் வாயால் பேசி  கூகுள்  பஸ்-ல்  செய்தி அனுப்பலாம் இதைப்பற்றி தான் இந்த பதிவு. சமீபத்தில் தான் கூகுள் வாய்ஸ் தேடுதல் சோதனை ஒட்டம் வெற்றிகரமாக  செட்யல்பட்டது அடுத்து உடனடியாக கூகுள் பஸ்-ல் தகவலை போஸ்ட் செய்யவும் நாம் வாயல் கூறினால் அது செய்தியாக மாற்றம் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது எப்படி கூகுள் பஸ்-ல் தகவல் பேசி அனுப்பப்படுகிறது என்று பார்ப்போம்.

post  buzz  (அனுப்ப வேண்டிய செய்தி)

போஸ்ட் பஸ் என்று கூறி நாம் பகிர்ந்துகொள்ள வேண்டிய தகவலை சொல்லலாம். இதன் சோதனை வெற்றி பெற்றதும் உடனடியாக இதை கூகுளின் நெக்சஸ் போனில் சேர்த்துவிட்டனர். விரைவில் இந்த சேவை நம் ஜீமெயில் மூலம் தற்போது பயன்படுத்தி வரும் கூகுள் பஸ்-லும் பயன்படுத்தலாம். இனி கூகுள் பஸ்-ல் செய்தி கையால் மட்டுமல்ல வாயால் பேசியும் அனுப்பலாம்.

Leia mais...

ஜி-மெயில் : எக்ஸ்ட்ரா டிரைவ்.


நம் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி வேறு ஒரு இடத்தில் நம் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவே நாம் விரும்புவோம். சிடிக்களிலும், மேக்னடிக் டேப்களிலும் பைல்களைப் பதிந்து பாதுகாக்கலாம்.
ஆனால் இவற்றை நாம் செல்லும் இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினம். மேலும் இவையும் நிலையாகப் பல ஆண்டுகளுக்கு இவற்றைக் கொண்டிருக்குமா என்பதுவும் ஐயமே.

ஆன்லைனில் பல தளங்கள், மாதக்கட்டணம் பெற்றுக் கொண்டு நம் பைல்களை ஸ்டோர் செய்து வைக்கின்றன. இதற்கென பல நிலைகளில் கட்டணங்கள் அடங்கிய திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மையும் முழுமையானதாக இல்லை.

இந்த வகையில் இலவசமாக சேவை செய்திடும் சிலதளங்கள், பாதுகாப்பிற்கு அனுப்பப்படும் பைல்களின் அளவு, தன்மை, தளங்களுக்கான இணைப்பு ஆகியவை குறித்து பல வரையறைகளைக் கொண்டுள்ளன. எனவே இவற்றை எந்த அளவிற்கு நம்பிக்கையுடன் நம் பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியும் என்பது கேள்விக் குறியே. ஆனால் நம் அருகிலேயே ஓர் அருமையான ஆன்லைன் சேவிங் தளம் உள்ளது என்பதனை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. அதுதான் ஜிமெயில். உலகில் இயங்கும் இமெயில் சேவைகளில் தலையானதும் மிகச் சிறந்ததுவும் ஜிமெயில் என அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஜிமெயில் ஸ்பாம் மெயில்களைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்படுகிறது. நம் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. 7 ஜிபிக்கும் மேலாக நம் மெயில்கள் மற்றும் இணைப்புகளுக்கு இடம் தருகிறது. இந்த அளவும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளது. நமக்கு ஜிமெயில் தரும் இட வசதியில், மிகக் குறைந்த அளவே நாம் பயன்படுத்துகிறோம். ஜிமெயில் தளம் சென்றவுடன் இந்த செய்தி நமக்குக் காட்டப்படும். எனவே இந்த பயன்படுத்தாத ஜிமெயில் டிரைவ் இடத்தை ஏன் நாம் நம் பைல்களைப் பாதுகாத்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தக் கூடாது.

இந்த வகையில் ஜிமெயில் டிரைவ் என்ற ஒரு வசதியை கூகுள் தருகிறது. ஜிமெயில் டிரைவ் நம் கம்ப்யூட்டரில் உள்ள மை கம்ப்யூட்டரில் ஒரு சிஸ்டம் பார்ட்டிஷனை ஏற்படுத்துகிறது. இதனை நம் விண்டோஸ் எக்ஸ்புளோரருடன் இணைக்கிறது. ஆன்லைனில் கூகுள் தரும் டிரைவ் இடத்தை, நம் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் போலப் பயன்படுத்தும் வசதியினைத் தருகிறது. நம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்ட ஒரு டிரைவ் போல இந்த ஆன்லைன் ஜிமெயில் டிரைவ் இயங்குகிறது. எனவே பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவிலிருந்து ட்ராக் அண்ட் ட்ராப் வசதி மூலம் இந்த ஆன்லைன் டிரைவில் இழுத்துவிட்டு காப்பி செய்திடலாம். இதிலும் சில வரையறைகள் உள்ளன. பைல் ஒன்று 25 எம்பி என்ற அளவிலே தான் இருக்க வேண்டும். இந்த வரையறையைச் சமாளிக்க ஜிமெயில் டிரைவ், பைலைப் பிரித்து அடுக்கி வைத்துக் கொள்கிறது.

புதிய போல்டர்களை உருவாக்குவது, பைல்களை காப்பி, பேஸ்ட் மற்றும் டெலீட் செயல்பாடுகளுக்கு உள்ளாக்குவது போன்றவற்றை ஜிமெயில் டிரைவில் மேற்கொண்டாலும், இதற்கென தனியாக ஒரு டிரைவ் எழுத்து தரப்படுவதில்லை.
மேலும் பைல்களின் பெயர்கள் 40 கேரக்டர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. உங்களிடம் ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், இந்த ஜிமெயில் டிரைவினை எப்படிப் பெறுவது என்று பார்ப்போம்.

முதலில் உள்ள முகவரிக்கு செல்லவும். இந்த இணையப் பக்கத்தில் கீழாக ஸ்குரோல் செய்து செல்லவும். இதில் இரண்டு டவுண்லோட் லிங்க் தரப்பட்டுள்ளது. இதில் ஏதாவது ஒன்றில் கிளிக் செய்து அதனை எளிதாக இயக்கும் வகையில் டெஸ்க் டாப்பில் வைத்துக் கொள்ளவும். அடுத்து gmailfs115.zip இந்த பைலை அன்ஸிப் செய்திடவும். அனைத்து பைல்களையும் எக்ஸ்ட்ராக்ட் செய்து பெற்ற பின்னர் gmailfs115 என்ற போல்டருக்குச் செலல்வும். பின் இதில் உள்ள செட் அப் பைல் மீது டபுள் கிளிக் செய்திடவும். இப்போது பைல் திறக்கும் செயலுக்கான எச்சரிகை வந்தால், அதனைக் கண்டு கொள்ளாமல் கீதண கட்டளை கொடுக்கவும்.

இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் முழுமையாக இன்ஸ்டால் ஆகும். உங்கள் கம்ப்யூட்டரில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். பின் உங்கள் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து பார்த்தால், அங்கே Other என்ற வகையில் புதியதாக டிரைவ் ஒன்று இருப்பதனைப் பார்க்கலாம். பின் GMail Drive என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இங்கே லாக் இன் விண்டோ திறக்கப்படும். இங்கு கிடைக்கும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களுக்கான பீல்டுகளில் உங்கள் ஜிமெயில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தரவும்.இதில் உள்ள ஆட்டோ லாக் இன் டிக் செய்து வைத்தால், அடுத்த முறை இன்டர்நெட் இணைப்பு கிடைத்தவுடன், நீங்கள் தானாகவே லாக் இன் செய்துவிடுவீர்கள்.

லாக் இன் தகவல்களைத் தந்த பின் ஓகே கிளிக் செய்திடும் முன் சில ஆப்ஷன்களை நீங்கள் படித்தறியலாம். More பட்டனை அழுத்தினால் இவை கிடைக்கும். இதில் 'Preserve Filenames' என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து மிக முக்கியமானதான Use Secure HTTP என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் கம்ப்யூட்டருக்கும் ஜிமெயிலுக்கும் உள்ள இணைப்பிற்குப் பாதுகாப்பளிக்கும்.

இறுதியாக Use Draft Folder என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் பைல்களை ட்ராப்ட் போல்டருக்கு அனுப்பும். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸுக்குத் தொல்லை கொடுக்காது.

முக்கியமான அனைத்து செட்டிங்ஸ் மேற்கொண்ட பின், ஜிமெயிலுக்கு இணைப்பை ஏற்படுத்த ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து ஜிமெயில் டிரைவ் காட்டப்படும். இதில் பைல்களை இழுத்துச் சென்று விடலாம். பைல்கள் அனைத்தும் ஜிமெயில் ட்ராப்ட் போல்டரில் விழும். பைல் மாற்ற வேகம் உங்கள் இன்டர்நெட் இணைப்பைப் பொறுத்து இருக்கும்.

 lankasritech

Leia mais...

Mar 21, 2010

கணனியை எப்போதும் மேம்படுத்திய நிலையில் வைத்திருக்க உதவும் குறிப்புக்கள்

கணனியின் இயங்கு தளம் டிவைஸ் டிரைவர்ஸ் மற்றும் மென்பொருட்களை எப்போதும் மேன்படுத்திய நிலையில் வைத்திருப்பது முக்கியமாகும். ஹக்கெர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கவும் இது உதவும். ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது எதைச் செய்வது என்று விழிப்பவர்களுக்கான சில டிப்ஸ்கள்.

1. அப்டேட் ஐ ஆரம்பிக்க முதல் ஒருமுறை கணனியை சுத்தப்படுத்தல் நல்லது அப்டேட் இன் பின்னர் வேகப்படுத்த இது உதவும். தேவையற்ற மென்பொருட்களை முறையாக நீக்கிவிடுதல் இணைய உலாவிகளின் ஹிஸ்டரி ஐ நீக்கிவிடுதல் ஒருமுறை டிஸ்க் கிளீனப் செய்தல் போன்றவை.

2. விண்டோஸ் தானியங்கி மேன்படுத்தல் மென்பொருளை (விண்டோஸ் அப்டேட்) எப்போதும் இயங்கு நிலையில் வைத்திருப்பது முக்கியம். இதை சரிபார்க்க Start - Control panel - Automatic update எனும் ஒழுங்கில் சென்று கிளிக் செய்ததும் திறக்கும் விண்டோவில் Automatic என்பது தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். (விண்டோஸ் பதிவு செய்யப்படாத பதிப்பை ஹக்கிங் செய்து நிறுவி இருப்பவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது)

3. கணனியிலுள்ள ஏனைய மென்பொருட்கள் மேன்படுத்த FileHippo வின் அப்டேட் செக்கர் எனும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம். இந்த மென்பொருள் உங்கள் சிஸ்டத்தை தானாக நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களையும் ஸ்கானிங் செய்து அவற்றின் புதிய பதிப்பின் தகவல்களை தரும்.

4.மேன்படுத்த விரும்பாத மென்பொருட்களை தவிர்க்க ஆப்ஸனும் உண்டு. படத்தில் உள்ளது போன்று மேன்படுத்த வேண்டிவற்றின் விபரங்கள் காட்டப்படும். தேவையானதை தேர்வு செய்து அப்டேட் ஐ நிறுவிக்கொள்ளலாம்.

lankasritech

Leia mais...

Mar 20, 2010

உங்கள் தளத்தை வேகமாக செயலாற்ற வைக்க வழிகள்




வரிசையாக பார்ப்போம்

 முதலில் ஒரு முக்கியமான விஷயத்தை முடிவு பண்ணிக்குங்க ..உங்க தளம் வேகமா இருக்கனுமா இல்ல அலங்காரமா இருக்கனுமா! என்று.. வேகத்திற்கும் அலங்காரத்திற்கும் என்ன சம்பந்தம்! என்று டென்ஷன் ஆகாதீங்க.

அவசியமில்லாத அழகு கேட்ஜட்களை நிறுவுவதை அறவே தவிர்க்க வேண்டும். இதில் சில அழகோடு வைரசையும் சேர்த்து கொண்டு வந்து விடும் மற்றும் தேவையில்லாத பாப் அப் களும் தோன்றி உங்கள் தளத்துக்கு வருபவர்களை வெறுப்பேற்றும்
உங்கள் டெம்ப்ளேட்டில் மற்ற தளங்களின் நிரழிகள் (ஸ்க்ரிப்ட்) அதிகம் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் (கூகிள் அனலைஸ்டிக்ஸ், தமிழ்மணம் மற்றும் உங்களுக்கு தேவையான திரட்டிகளின் ஒட்டுப்பட்டை நிரழிகள் தவிர) காரணம் நம் தளத்தை திறக்கும் போது அந்த நிரழிகள் அதற்குண்டான வேலையை செய்ய அந்த சர்வரை தொடர்பு கொள்ள நேரம் எடுக்கும்.

இதனால் நம் தளம் திறக்க நேரமாகும், அதனால் திறக்கும் வரை நாம தலைய சொரிஞ்சுட்டு இருக்க வேண்டியது தான். எனவே முடிந்த வரை தேவையில்லாமல் உள்ள மற்ற தள நிரழிகளை நீக்கணும்.

இதுல தேவை இல்லாத நிரழி தேவையான நிரழின்னு எப்படி கண்டு பிடிக்கிறது என்றால் வடிவேல் சொல்ற மாதிரி நீங்க புடுங்குறது எல்லாமே தேவையில்லாதது தான் (அதுக்குன்னு உங்க தளத்து நிரழிய நோண்டிடாதீங்க :-D)

உங்களுக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிற கேட்ஜட் (வாசகர்கள் வருகை, ரீடர், பின் தொடருபவர்கள் போன்றவை) மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் நீக்கி விடுங்கள்.
உங்கள் தளங்களில் சைடு பாரில் அதிக அளவில் படங்களை வைக்க கூடாது
முன் பக்கத்தில் உள்ள இடுகைகளின் எண்ணிக்கையை இரண்டிற்கு மிகாமல் வைத்துக்கொள்வது நல்லது, இதுவும் வேகத்தை குறைக்கம். ஒரு சிலர் சிரிப்பான் வைத்து இருப்பார்கள், இவை எல்லாம் ஒவ்வொரு முறை உங்கள் தளத்தை திறக்கும் போதும் அது தொடர்பான தளத்தை தொடர்பு கொள்ளும் எனவே சில நொடிகள் திறக்க நேரம் எடுக்கும் தமிழிஷ் மற்றும் புதிய திரட்டிகளின் ஒட்டு பட்டை கீழ் பகுதியில் வரும் ஆனால் தமிழ்மணத்தின் கருவி (ஓட்டு) பட்டை மேற்பகுதியில் வரும் இதை அடிப்பகுதியில் மாற்றி வைத்துக்கொள்ளவும். ஒருவேளை தமிழ்மணம் சர்வர் பிரச்சனை என்றாலும் நமது தளம் திறக்க நேரம் எடுக்காது. (இதை எப்படி செய்வது என்ற தொடுப்பு என்னிடம் இல்லை இருப்பவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்)
இதை போன்ற காரணங்களால் உங்கள் தளம் திறக்க யோசனை செய்து கொண்டு இருக்கும், ஒரு சிலர் தளத்தை பார்த்தீர்கள் என்றால் பின்னூட்ட பகுதி வர ரொம்ப நேரம் எடுக்கும், அதற்கெல்லாம் இதை போன்ற காரணங்களே இருக்கும். இதை எளிதாக அறிந்து கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா என்பவர்களுக்கு...உங்கள் தளத்தை திறக்கும் போது உலவியில் ஸ்டேட்டஸ் பாரில் எந்த தளத்தில் அதிக நேரம் நின்று கொண்டு இருக்கிறது என்பதை கவனித்து அது சம்பந்தமாக என்ன உள்ளது என்று கண்டறிந்து நீக்கி விடுங்கள். சுருக்கமாக சொல்வதென்றால் முடிந்த வரை மற்ற தளங்களின் நிரழிகளை தவிருங்கள்.

தளத்தை அழகு படுத்துவதற்காக அதிகளவில் கேட்ஜட்டுகளை சேர்க்காமல் எளிமையான டெம்ப்ளேட்டை நல்ல வண்ணத்துடன் சேர்ப்பதன் மூலம் அழகை எளிதாக கொண்டு வந்து விடலாம்.

கிரி Blog

Leia mais...

சோஷியல் நெட்வொர்க்கிங் 2 சிம் போன்


பெரிய மற்றும் சிறிய நகரங்களில் வாழும் இளைஞர்கள் இன்று தங்கள் நண்பர்களுடன் எந்த நேரத்திலும் தகவல்கள், ஆசை, அபிலாஷைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர்.
போகிற போக்கில் இதனை மேற்கொள்ள மொபைல் போனில் இந்த வசதிகள் எந்தக் குறையுமின்றி கிடைக்க வேண்டும் என விரும்புகின்றனர். இவர்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் இலக்குடன் பிளை மொபைல்ஸ் நிறுவனம் Fly LINKZ (E145) என்னும் போனை வடிவமைத்து விற்பனைக்கு தந்துள்ளது.

இந்த போனில் 240 x 400 ரெசல்யூசனுடன் வண்ணத்திரை பளிச் என உள்ளது. 2 எம்பி கேமரா 1600 x 1200 ரெசல்யூசனில் படங்களைத் தருகிறது. போட்டோ ஸ்லைட் �ஷா வசதியும் உண்டு.

மோஷன் சென்சார் கேம்ஸ், வீடியோ மற்றும் ஆடியோ ரெகார்டிங் பிளேயர், வால்யூம் இயக்க மட்டும் கீகள், 3.5 மிமீ ஆடியோ ஜாக்,எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோ மீட்டர், கையில் எழுதினால் புரிந்து இயங்கும் டெக்ஸ்ட் வசதி, 1000 முகவரி கொள்ளும் அட்ரஸ் புக், 2000 எஸ்.எம்.எஸ். கொள்ளும் மெமரி, போட்டோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி, எண்களை அழைக்கவிடாமல் தடுக்கும் வசதி, பல மத விழா காட்டும் காலண்டர், ஸ்டீரியோ புளுடூத், மொபைல் ட்ரேக்கர், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, பெர்சனல் கம்ப்யூட்டர் இணைத்து இயக்கும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன.

சோஷியல் நெட்வொர்க் தளங்களை எளிதாக அணுகவும், இன்ஸ்டண்ட் மெசேஞ்சர்களை இயக்கவும் Nimbuzz அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. Skype, Windows Live Messenger (MSN), GTalk, Yahoo!, AIM, MySpace, ICQ ஆகியவற்றில் இயங்க சப்போர்ட் தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெறப்படும் லைவ் காண்டாக்ட் லிஸ்ட் மூலம் ஆன்லன் மற்றும் ஆப் லைனில் இருப்பவர்கள், பிசியாக உள்ளவர்கள், மெசஞ்சர் விண்டோவில் இருந்து விலகி உள்ளவர்களைக் காட்டுகிறது. Twitter, Facebook, Picasa, Flickr and Google Calendar ஆகியவற்றுடன் எளிதாக இணைப்பு கொள்ள Snaptu தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு லேட்டஸ்ட் ஸ்கோர், ராய்ட்டர்ஸ், பி.பி.சி., நியூ யார்க் டைம்ஸ்,யாஹூ மற்றும் பல தளங்களில் இருந்து அந்த நேரத்திய செய்திகளை அறியலாம். 


lankasritech

Leia mais...

Mar 19, 2010

விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க

புதிதாக ஒரு இயங்கு தளம் அல்லது ஒரு இயங்கு தளத்தின் புதிய பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை.
உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளி வந்த போது அதில் எக்ஸ்பீயிற்கு முன்னைய பதிப்புகளில் இயங்கிய ப்ரோக்ரம்களை இயக்க முடியாமல் போனது. அதன் பிறகு வெளிவந்த விஸ்டா பதிப்பிலும் அதே நிலைமைதான். இவ்வாறே இப்போது வெளி வந்துள்ள விண்டோஸ் செவனிலும் அதே நிலைமை தொடர்கிறது.

ஒரு இயங்கு தளத்தை மேம்படுத்தி அதன் புதிய பதிப்பை வெளியிடும்போது பழைய எப்லிகேசன்களும் இயங்கத் தக்கதாக அதற்கு ஒத்திசையும் வண்ணம் உருவாக்கவே முயற்சிக்கப்படும். இதனை பேக்வர்ட் கம்படிபிலிட்டி (Backward Compatibility) எனப்படும் இருந்தாலும் சில எப்லிகேசன்களை இவ்வாறு இயக்க முடிவதில்லை எனினும் இந்த சிக்கலுக்கு தீர்வாக மைக்ட்ரோஸொப்ட் நிறுவனம் தனது புதிய இயங்கு தளங்களில் பழைய ப்ரோக்ரம்களையும் இயக்கக் கூடிய வசதியை எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் விண்டொஸ் செவன் பதிப்புகளிலும் வழங்கி வருகிறது.

உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீயில் முறையாக இயங்கிய ஒரு ப்ரோக்ரம் விஸ்டாவிற்கு மாறிய பிறகு இயங்க மறுத்தால் அந்த குறிப்பிட்ட ப்ரோக்ரமுக்கு மட்டும் தேவையான செட்டிங்கை மாற்றி இயங்க வைக்கும் வசதி உள்ளது. அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக்குரிய .exe பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் compatibility டேபில் க்ளிக் செய்யுங்கள். அடுத்து Run this program in compatibility mode for என்பதைத் தெரிவு செய்யுங்கள். பின்னர் விண்டோஸின் உரிய பதிப்பைத் தெரிவு செய்து விட்டு ஓகே சொல்லுங்கள்.

அப்படியும் அது இயங்காது போனால் மேலும் சில தெரிவுகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக அதே டயலொக் பொக்ஸில் Run this program as an administrator என்பதைத் தெரிவு செய்து இயக்கிப் பாருங்கள்.

ப்ரோக்ரம்ஸ் லிஸ்டில் உள்ள Program Compatibility Wizard மூலமாகவும் ஒரு ப்ரோக்ரம் இயங்கு தளத்துடன் ஒத்திசைகிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்கலாம்.

சரி, இந்த .exe பைலை எங்கே போய்த் தேடுவது? எங்கும் போக வேண்டாம் . (மை) கம்பியூட்டர் விண்டோவில் C ட்ரைவில் ப்ரோக்ரம் பைல்ஸ் போல்டரைத் திறந்து பாருங்கள். நீங்கள் இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக் குரிய போல்டரும் அங்கு காணப்படும். அந்த போல்டரில் .exe பைலைக் காணலாம் 


lankasritech

Leia mais...

Mar 18, 2010

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

செல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டது. ஆனால் இதே செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள், உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து வருகிறது.

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (ஈடபிள்யூஜி) சமீபத்தில் ஒரு செல்போன் பட்டியலை வெளியிட்டது.

இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு பாதிக்கப்பட்டு மூளைப் புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு செல்போனும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவை வைத்து இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியேஷன் அளவை Specific Absorption Rate எனப்படும் SAR அலகைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.

அந்த லிஸ்ட்:

மோட்டாரோலா ட்ராய்ட் (Motorola Droid)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.50 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.49 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.50 W/kg

ஆப்பிள் ஐபோன் 3 ஜி – ஜிஎஸ்எம் 850 (Apple iPhone 3G S)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.19 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.63 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.52 W/kg

எச்டிசி நெக்ஸஸ் ஒன் (HTC Nexus One)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.39 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.87 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.39 W/kg

பிளாக்பெர்ரி – போல்ட் 9700 (Blackberry Bold 9700)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.55 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.55 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.77 W/kg

சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி (Samsung Instinct HD)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.16 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.16 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.71 W/kg

மோட்டாரோலா க்ளிக் (Motorola Cliq)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.10 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.69 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.10 W/kg

மோட்டாரோலா ப்ரட் (Motorola Brute i680)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.86 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.59 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.86 W/kg

பேண்டக் இம்பாக்ட் (Pantech Impact)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.92 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.72 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.92W/kg

எல்ஜி சாக்லேட் டச் (LG Chocolate Touch)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.46 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.46 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.79W/kg

சாம்ஸங் மிதிக் (Samsung Mythic)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.08 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.67 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.64W/kg
ஜிஎஸ் எம் 1900 மாடல் இது.

மோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே செல்போன் வாங்கும் வாங்கும் முன் அல்லது பயன்படுத்தும் முன் இந்த கதிர்வீச்சு சமாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ளவும்!

lankasritech

Leia mais...

Mar 17, 2010

மிகச்சிறந்த இலவச ஆன்டி-வைரஸ்

பணம் கொடுத்து 'ஆன்டி-வைரஸ்' வாங்க முடியாத வாடிக்கையாளர்கள் தங்களுடைய மென்பொருட்களை பயன்படுத்தியாவது பார்க்கட்டுமே என்ற எண்ணத்தில் வழங்கப்படும் 'ஆன்டி-வைரஸ்' தான்"இலவச ஆன்டி-வைரஸ்".

இந்தவகை மென்பொருட்களில் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டி-வைரஸில் இருப்பதை விட கொஞ்சம் குறைவான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்,சில வாடிக்கையாளர்கள் தங்கள் கணினுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் பணம் கொடுத்தே ஆன்டி-வைரஸை வாங்கிக்கொள்வார்கள்.

ஆனால் என்னதான் பணம் கொடுத்து நாம் கணினியில் ஆன்டி-வைரஸ் போட்டுக் கொண்டாலும் புதுபுது வைரஸ்களின் அட்டகாசம் இன்றைக்கும் தாங்க முடியாததாகத்தான் உள்ளது.

குறிப்பாக நாம் இணையதளங்களில் உலவும்போது கண்டிப்பாக வைரைஸ்களின் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.அவை நாம் இணையதளங்களிருந்து ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது வைரஸும் அதன் கூடவே சேர்ந்து வந்து நம் கணினியில் உட்கார்ந்து கொள்ளும்.

இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் (வந்து கொஞ்ச நாள் ஆன) இலவச Microsoft Security Essentials என்ற மென்பொருள்.

பல கணினி உபயோகிப்பாளர்கள் பயன்படுத்தி பார்த்த வரையில் மிக அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் ஆன்டிவைரசாக Microsoft Security Essentials மென்பொருள் செயல்படுகிறது.குறிப்பாக இணையதளங்களில் நாம் உலவும்போது இந்த ஆண்டிவைரஸ் அதிகபட்ச இணைய பாதுகாப்பை நமக்கு தருகிறது.இந்த இலவச ஆன்டிவைரஸ்' நாம் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டிவைரஸ் தரும் அதிகபட்ச பாதுகாப்பை ஒத்த பாதுகாப்பை நமது கணினுக்கும் வழங்குகிறது.

அது மட்டுமல்லாமல் அதுவே தானாக அடிக்கடி தன்னை புதுப்பித்துக் கொள்வதால் நமது கணினிக்கு நல்ல பாதுகாப்பும் கிடைக்கிறது,இந்த ஆன்டிவைரஸை பயன்படுத்திப் பார்த்த பலபேர் இதன் செயல்திறனை வெகுவாக பாராட்டுகிறார்கள்.


இணையத்தள முகவரி

Leia mais...

Mar 16, 2010

மூன்று சிம்களுடன் இன்டெக்ஸ் மொபைல்

சென்ற வாரம் இன்டெக்ஸ் நிறுவனம் மூன்று மற்றும் இரண்டு சிம்களுடன் இயங்கும் இரண்டு மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இரண்டு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம்.ஏ. என மூன்று சிம்களை இயக்கும் போனாக Intex IN 5030 வெளிவந்துள்ளது. ஒரு ஜி.எஸ்.எம். சிம் இயங்குகையில், சி.டி.எம்.ஏ. சிம் இணைப்பும் இயக்கத்தில் உள்ளது. இரண்டிலும் அழைப்புகள் வந்தால் மாற்றி மாற்றி பேசிக் கொள்ளும் வசதியை இந்த போன் தருகிறது.

ஜாவா இயக்கத்தில் செயல்படும் இந்த போனில் இரண்டு பேட்டரிகள் தரப்பட்டுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால், ஒன்று 4 மணி நேரமும், மற்றொன்று 120 மணி நேரமும் தாக்குப் பிடிக்கின்றன.

Intex IN 4420 மாடல் போன் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்குகிறது. இந்த போனில் வித்தியாசமான ஒரு வசதி உள்ளது. இதன் மூலம் இந்திய கரன்சியில் போலியான ரூபாய் நோட்டுக்களை கண்டறியலாம்.

நெட்வொர்க் இணைப்பில் இருக்கையில் போனை அழைப்பவர் அல்லது அழைக்கப் படுபவர் எந்த ஏரியாவில் உள்ளார் என்று அறியலாம். இரண்டு எல்.இ.டி. டார்ச் லைட் தரப்பட்டுள்ளது. வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, இந்திய திருவிழாக்களையும் விசேஷங்களையும் காட்டும் காலண்டர் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளன.

இதன் பேட்டரி தொடர்ந்து 3.5 மணி நேரம் பயன்படுத்தும் சக்தியைக் கொண்டு ள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 270 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது.

இரண்டு போன்களிலும் எப்.எம். ரேடியோ, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர், புளுடூத், பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைந்த செயலாக்கம், மோடம், வெப்காம் செயல்பாடு, பி.சி. சூட், ஜி.பி.ஆர்.எஸ்., வாப், மொபைல் ட்ரேக்கர், ஆட்டோ கால் ரெகார்டர், கரன்சி கன்வெர்டர், மெமரியை 4ஜிபி வரை அதிகமாக்கும் வசதி ஆகியவை உள்ளன.

lankasritech

Leia mais...

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் நமது உடலின் வெப்பநிலை கூடினாலோ, குறைந்தாலோ உடல் நோய்வாய்ப்படும். நமது இயக்கத்துக்கு ஏற்ப வெப்ப ஆற்றல் வெளிப்படும். மாறுபடவும் செய்யும்.
இப்படி உடல் இயக்கத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை சேகரித்து அந்த ஆற்றலைக் கொண்டு எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க ஒரு கருவி தயாரித்துள்ளது எம்.ஐ.டி. பல்கலைக்கழகம்.

நடப்பது, ஓடுவது என எந்த வேலையில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட அளவில் ஆற்றல் செலவாகிறது. அதில் ஒரு பகுதி வெப்ப ஆற்றலாக வெளியேறுகிறது. இந்த வெப்ப ஆற்றலையும், சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் உள்ள ஆற்றலையும் கிரகித்து மின்ஆற்றலாக சேமிக்கிறது இந்தக் கருவி. இதைக் கொண்டு 2 வாட் மின்சாரத்துக்கும் குறைவான பயன்பாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

செல்போன் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் கருவிகள் மிகக் குறைந்த மின் ஆற்றலில் இயங்கக்கூடியவை. எனவே இந்த கருவியில் சேமிக்கும் மின் ஆற்றலைக் கொண்டு இனி செல்போன்களை சார்ஜ் செய்ய முடியும். சார்ஜரை தேடிக் கொண்டோ, தூக்கிக் கொண்டோ திரிய வேண்டாம். அனைவரும் பயன்படுத்தலாம் இந்த லாபமான கருவியை.

lankasritech

Leia mais...

அதிவேக Opera பிரவுசர் வெளியீடு


விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதில் இதுதான் அதிவேக பிரவுசர் என்ற அடைமொழியுடன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது ஆப்பரா பிரவுசர் பதிப்பு 10.50.  என்ற ஆப்பராவின் தளத்தில் இதனை டவுண்லோட் செய்திடலாம். இதில் தரப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் மற்றும் கிராபிக்ஸ் லைப்ரரி இரண்டும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுமையானவையாகும்.
இதனைப் பயன்படுத்துபவர்கள், எந்த இணைய தளத்திற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதன் வடிவமைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் தற்போது மற்ற பிரவுசர்களில் அமைந்திருக்கும் பிரைவேட் பிரவுசிங் வசதியும் தரப்பட்டுள்ளது. வழக்கமான மெனு பாருக்குப் பதிலாக ரேடியோ பட்டன் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புள்ளியை அழுத்துவதன் மூலம், ஆப்பரா தரும் அனைத்து வசதிகளையும் பார்த்து அறியலாம்.
 புதிய தொழில் நுட்பம் முழுவதையும் இது சப்போர்ட் செய்வதால், கண்களைக் கவரும் வகையில் இணைய தளங்களை அமைப்பவர்கள், இந்த பிரவுசரில் அவை நன்றாகக் காட்டப்படும் என நம்பி அமைக்கலாம். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளின் ஏரோ கிளாஸ் இந்த பிரவுசரில் சப்போர்ட் செய்யப்படுகிறது.
lankasritech

Leia mais...

வீடியோ DVDகளை AutoPlay செய்ய

.சில சமயங்களில் நாம் வீடியோ டிவிடிகளை நமது கணினியின் DVD Drive இல் இட்டபிறகு அதுவாகவே ப்ளேயரை திறக்காமல் இருந்து விடுகிறது. My Computer அல்லது  Computer ஐ  திறந்து பார்க்கையில் VIDEO_TS மற்றும்  AUDIO_TS ஆகிய   கோப்புறைகள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. இந்நிலையில் நாம் ப்ளேயரை திறந்து பிறகு அந்த குறிப்பிட்ட வீடியோ கோப்பை திறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 
 

இது போன்ற வீடியோ டிவிடிகளை ஆட்டோ ப்ளே செய்ய என்ன செய்யலாம்?
My Computer ஐ திறந்து கொள்ளுங்கள். 

உங்களது DVD Drive ஐ வலது க்ளிக் செய்து Properties சென்று கொள்ளுங்கள். 

அங்கு AutoPlay டேபை க்ளிக் செய்யுங்கள்.

Dropdown மெனுவில் DVD Movie என்பதை தேர்வு செய்யுங்கள்.

Select an action to perform என்பதற்கு நேராக உள்ள Radio button ஐ க்ளிக் செய்யுங்கள்.

Play DVD movie using Windows Media Player என்பதை தேர்வு செய்து
OK button ஐ க்ளிக் செய்து விடுங்கள்.


அவ்வளவுதான்.



சூர்யா ௧ண்ணன்blogspot.com

Leia mais...

Mar 9, 2010

புதிய பாட்நெட் வைரஸ்


நெட்விட்னஸ் என்னும் இன்டர்நெட் ஆய்வு நிறுவனம் புதிய வைரஸ் ஒன்று வேகமாக நிறுவனங்கள் மற்றும் சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
“நீபர் பாட்நெட்“ என அழைக்கப்படும் இந்த வைரஸ் இந்த குறிப்பை எழுதும் நாள் வரை 2,500 நிறுவனங்களின் 75,000 கம்ப்யூட்டர்களிலும், சில சோஷியல் நெட்வொர்க் தளங்களில் அக்கவுண்ட் வைத்துள்ளவர்களின் கம்ப்யூட்டர்களிலும் பரவி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தான் பற்றிக் கொண்டுள்ள கம்ப்யூட்டர்களிலிருந்து பாஸ்வேர்ட், யூசர் நேம் உட்பட அனைத்து பெர்சனல் தகவல்களையும் திருடி, இதனைத் தயாரித்து அனுப்பிய ஹேக்கர்களின் கம்ப்யூட்டர்களுக்கு அனுப்பும். பாட்நெட் என்பது இந்த வைரஸ் பரவி உள்ள கம்ப்யூட்டர் நெட்வொர்க்கினைக் குறிப்பிடுகிறது. இந்த நெட்வொர்க்கை ஹேக்கர்கள் தள்ளி உள்ள ஓர் இடத்தில் தங்களின் மையக் கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

இந்த வைரஸ் பரவி வருவது வழக்கமான ஒரு சோதனையின் போது நெட்விட்னஸ் நிறுவனத்தால் கண்டறியப்பட்டது. வழக்கமான மால்வேர் பாதுகாப்பு வழிமுறைகள், சிக்னேச்சர் வரிகள் அடிப்படையிலான கண்டறிதல் ஆகியவை இந்த வைரஸிடம் செல்லுபடியாகாமல், கண்டறிய முடியாமல் உள்ளன.

Lankasritech

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo