உங்கள் தளத்தை வேகமாக செயலாற்ற வைக்க வழிகள்
வரிசையாக பார்ப்போம்
முதலில் ஒரு முக்கியமான விஷயத்தை முடிவு பண்ணிக்குங்க ..உங்க தளம் வேகமா இருக்கனுமா இல்ல அலங்காரமா இருக்கனுமா! என்று.. வேகத்திற்கும் அலங்காரத்திற்கும் என்ன சம்பந்தம்! என்று டென்ஷன் ஆகாதீங்க.
அவசியமில்லாத அழகு கேட்ஜட்களை நிறுவுவதை அறவே தவிர்க்க வேண்டும். இதில் சில அழகோடு வைரசையும் சேர்த்து கொண்டு வந்து விடும் மற்றும் தேவையில்லாத பாப் அப் களும் தோன்றி உங்கள் தளத்துக்கு வருபவர்களை வெறுப்பேற்றும்
உங்கள் டெம்ப்ளேட்டில் மற்ற தளங்களின் நிரழிகள் (ஸ்க்ரிப்ட்) அதிகம் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் (கூகிள் அனலைஸ்டிக்ஸ், தமிழ்மணம் மற்றும் உங்களுக்கு தேவையான திரட்டிகளின் ஒட்டுப்பட்டை நிரழிகள் தவிர) காரணம் நம் தளத்தை திறக்கும் போது அந்த நிரழிகள் அதற்குண்டான வேலையை செய்ய அந்த சர்வரை தொடர்பு கொள்ள நேரம் எடுக்கும்.
இதனால் நம் தளம் திறக்க நேரமாகும், அதனால் திறக்கும் வரை நாம தலைய சொரிஞ்சுட்டு இருக்க வேண்டியது தான். எனவே முடிந்த வரை தேவையில்லாமல் உள்ள மற்ற தள நிரழிகளை நீக்கணும்.
இதுல தேவை இல்லாத நிரழி தேவையான நிரழின்னு எப்படி கண்டு பிடிக்கிறது என்றால் வடிவேல் சொல்ற மாதிரி நீங்க புடுங்குறது எல்லாமே தேவையில்லாதது தான் (அதுக்குன்னு உங்க தளத்து நிரழிய நோண்டிடாதீங்க :-D)
உங்களுக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிற கேட்ஜட் (வாசகர்கள் வருகை, ரீடர், பின் தொடருபவர்கள் போன்றவை) மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் நீக்கி விடுங்கள்.
உங்கள் தளங்களில் சைடு பாரில் அதிக அளவில் படங்களை வைக்க கூடாது
முன் பக்கத்தில் உள்ள இடுகைகளின் எண்ணிக்கையை இரண்டிற்கு மிகாமல் வைத்துக்கொள்வது நல்லது, இதுவும் வேகத்தை குறைக்கம். ஒரு சிலர் சிரிப்பான் வைத்து இருப்பார்கள், இவை எல்லாம் ஒவ்வொரு முறை உங்கள் தளத்தை திறக்கும் போதும் அது தொடர்பான தளத்தை தொடர்பு கொள்ளும் எனவே சில நொடிகள் திறக்க நேரம் எடுக்கும் தமிழிஷ் மற்றும் புதிய திரட்டிகளின் ஒட்டு பட்டை கீழ் பகுதியில் வரும் ஆனால் தமிழ்மணத்தின் கருவி (ஓட்டு) பட்டை மேற்பகுதியில் வரும் இதை அடிப்பகுதியில் மாற்றி வைத்துக்கொள்ளவும். ஒருவேளை தமிழ்மணம் சர்வர் பிரச்சனை என்றாலும் நமது தளம் திறக்க நேரம் எடுக்காது. (இதை எப்படி செய்வது என்ற தொடுப்பு என்னிடம் இல்லை இருப்பவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்)
இதை போன்ற காரணங்களால் உங்கள் தளம் திறக்க யோசனை செய்து கொண்டு இருக்கும், ஒரு சிலர் தளத்தை பார்த்தீர்கள் என்றால் பின்னூட்ட பகுதி வர ரொம்ப நேரம் எடுக்கும், அதற்கெல்லாம் இதை போன்ற காரணங்களே இருக்கும். இதை எளிதாக அறிந்து கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா என்பவர்களுக்கு...உங்கள் தளத்தை திறக்கும் போது உலவியில் ஸ்டேட்டஸ் பாரில் எந்த தளத்தில் அதிக நேரம் நின்று கொண்டு இருக்கிறது என்பதை கவனித்து அது சம்பந்தமாக என்ன உள்ளது என்று கண்டறிந்து நீக்கி விடுங்கள். சுருக்கமாக சொல்வதென்றால் முடிந்த வரை மற்ற தளங்களின் நிரழிகளை தவிருங்கள்.
தளத்தை அழகு படுத்துவதற்காக அதிகளவில் கேட்ஜட்டுகளை சேர்க்காமல் எளிமையான டெம்ப்ளேட்டை நல்ல வண்ணத்துடன் சேர்ப்பதன் மூலம் அழகை எளிதாக கொண்டு வந்து விடலாம்.