கூகுள் பஸ் -ல் வாயால் பேசி தகவல் அனுப்பும் விநோதம்.
கூகுளின் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சி தான் நாம் இன்று நாம் பயன்படுத்தும் கூகுள் பஸ், இனி இந்த கூகுள் பஸ்-ல் தகவல்களை அனுப்ப நாம் தட்டச்சு (டைப்) செய்ய வேண்டாம். நாம் வாயால் பேசி கூகுள் பஸ்-ல் செய்தி அனுப்பலாம் இதைப்பற்றி தான் இந்த பதிவு. சமீபத்தில் தான் கூகுள் வாய்ஸ் தேடுதல் சோதனை ஒட்டம் வெற்றிகரமாக செட்யல்பட்டது அடுத்து உடனடியாக கூகுள் பஸ்-ல் தகவலை போஸ்ட் செய்யவும் நாம் வாயல் கூறினால் அது செய்தியாக மாற்றம் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது எப்படி கூகுள் பஸ்-ல் தகவல் பேசி அனுப்பப்படுகிறது என்று பார்ப்போம்.
post buzz (அனுப்ப வேண்டிய செய்தி)
போஸ்ட் பஸ் என்று கூறி நாம் பகிர்ந்துகொள்ள வேண்டிய தகவலை சொல்லலாம். இதன் சோதனை வெற்றி பெற்றதும் உடனடியாக இதை கூகுளின் நெக்சஸ் போனில் சேர்த்துவிட்டனர். விரைவில் இந்த சேவை நம் ஜீமெயில் மூலம் தற்போது பயன்படுத்தி வரும் கூகுள் பஸ்-லும் பயன்படுத்தலாம். இனி கூகுள் பஸ்-ல் செய்தி கையால் மட்டுமல்ல வாயால் பேசியும் அனுப்பலாம்.