கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Oct 6, 2010

புதிய இமேஜ் பார்மெட் : அறிமுகப்படுத்துகிறது கூகுள்

நாம் சில இணையதளங்களுக்கு செல்லும்போது அந்த இணையதளம் நம் கணினியில் லோட் ஆவதற்கு நிறைய நேரம் எடுக்கிறது. அதற்கு காரணம் அந்த இணையப்பக்கங்களில் உள்ள புகைப்படங்கள் லோட் ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமே.

அதாவது குறிப்பிட்ட பக்கங்களில் உள்ள இமேஜ்களின் பைல் சைஸ் என்றழைக்கப்படும் கோப்புகளின் அளவு பெரியதாக இருப்பதே காரணம். இதுபோன்ற சமயங்களில் நாம் எரிச்சலடைந்து அந்த வலைப்பக்கத்தை மூடி விடுகிறோம்,

இதனை கருத்தில் கொண்டு எளிதாக படங்கள் லோட் ஆவதற்கு வசதியாக கூகுள் புது வகையான இமேஜ் பார்மேட்டை அறிமுகப்படுத்துகிறது. அதாவது படங்களுக்கென ஏற்கனவே நாம் பயன்படுத்தும் பலதரப்பட்ட இமேஜ் பார்மேட்களில் ஜேபிஇஜி பார்மெட் தான் இதுவரைக்காலமும் மிக குறைந்த பைல் சைசில் தரமான புகைப்படங்களை வழங்கி வந்தது.

இப்பொழுது அதைவிடவும் மிக மிகக் குறைவான பைல் சைசில் அதே மாறாத தரத்துடன் புதியவகையிலான இமேஜ் பார்மேட்டை வெப்பி என்ற பெயரில் கூகுள் அறிமுகப்படுத்துகிறது. இந்த வெப்பி பார்மேட்டானது ‌ஜேபிஇஜி இமேஜைக் காட்டிலும் சராசரியாக 40% குறைவான பைல் சைசில் கிடைக்கிறதாம்.

இதுகுறித்து கூகுள் உயர் அதிகாரி ரிச்சர்ட் ராபர்ட் கூறுகையில் ” தற்போது இணையத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் இமேஜ் பார்மேட்கள் அனைத்தும் பத்தாண்டுகளுக்கு முன்னர் அன்றைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்க்கப்பட்டவை.

ஆகவே கூகுளின் சில பொறியியலாளர்கள் ஜேபிஇஜி போன்ற அதிவேகமாக லோட் ஆகும் குறைந்த பைல் சைசில் மாறாத தரம் பெற்ற இமேஜ் பார்மேட்டினை உருவாக்க முடிவெடுத்தார்கள். இதன் ஒரு பகுதியாக புதிய இமேஜ் பார்மேட்டின் முன்மாதிரி வெளியிடுகிறோம். ” என்கிறார்.

கூகுள் நிறுவனம் இந்த புதிய வகை இமேஜ் பார்மெட் அனைத்து வகை இணைய உலாவிகளிலும் (இண்டர்நெட் பிரவுசர்) தெரியும் வகையில் உலாவிகளின் தயாரிப்பாளர்களின் ஒத்துழைப்பை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo