கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jan 28, 2011

எனது டைரி(Diary) 2010. (தொடர்பதிவு)

ஆமினா அழைப்பை ஏற்று இத் தொடரினை தொடர்கின்றேன்.  தொடர்பதிவிற்கு அழைத்த ஆமினாவிற்கு நன்றிகள். எனக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லை அதனால் 2010 இல் என் மனதில் பதிந்தவைகளை தருகின்றேன்..

எனது  டைரி(Diary) 2010.
 5வருட காத்திருப்பின்(4+வயது குட்டிப்பெண்ணுடன்) பின் இவ்வாண்டே வெளிநாடு வந்தடைய அனுமதி கிடைத்தது. அனுமதி கிடைத்த சந்தோசத்தை  பயம் தடுத்தது. என்னவென யோசிக்கிறிங்களா? முதல் முதல் விமானத்தில் அன்னிய நாட்டுக்கு பயணம் செய்வதை எண்ணிதான் பயம்.  இலங்கையில் இருந்து புறப்பட்டு லண்டனில் அடுத்த விமானம் மாறணும் இலங்கையிலிருந்து நாங்கள்  புறப்பட்ட விமானம் 1 மணித்தியாலம் பிந்திவிட்டதால் லண்டனில் இறங்கி அடுத்த கனடிய விமானத்தில் ஏறுவதற்கு 10 நிமிடங்களே இருந்தன. கனடிய விமானத்தில் கடைசியாக ஏறியது நானும் என் பொண்ணும் ஏறி 5 நிமிடங்களில் விமானம் புறப்பட்டு விட்டது அன்று 10 பேர் விமானத்தை தவறவிட்டதாக கனடா விமான நிலையத்தில் கூறினார்கள். என் பயண அனுபவத்தை மறக்கவே முடியாது. அதைவிட வலி என் உறவுகளை (குடும்பம். நட்பு)பிரிந்து  வந்தது.

கனடாவில் கால் பதித்ததும் யாவும்  புதுசாக  இருந்தது. நான் கனடா வந்து இறங்கிய காலப்பகுதியில் குளிர் இல்லாத காலநிலை. 6ஆம் மாதம் விடுமுறை  காலமும் ஆரம்பம். கனடாவில் பல இடங்கள் சுற்றி பார்த்தேன். நான் சுற்றிய பார்த்த இடங்களை உங்களுக்கும் சுற்றிக்காட்டுகின்றேன். நான் முதலில் சுற்றுலா போன இடம்..

நயாகரா நீர்வீழ்ச்சி( Naigara Falls) 
(Niagara Falls are one of beautifull amazing waterfalls in the world)

நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு இணையத்தில் அலசினேன் விக்கிபீடியாவில் தகவலை பெற்றுக்கொண்டேன். அத்தகவலை உங்களுடன் பகிர்கின்றேன். அதற்கு முன் நயாகரா நீர்வீழ்ச்சி( Naigara Falls)  வீடியோவை பாருங்கள்....


நயாகரா நீர்வீழ்ச்சி( Naigara Falls) At Night.
 
நயாகரா நீர்வீழ்ச்சி அல்லது நயாகரா பேரருவி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது. இது தனியான இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது. சுமார் 85% நீர் கனடாவில் உள்ள ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ அருவி என ஆங்கிலத்தில் வழங்கப்படும் குதிரை இலாட அருவியிலும், மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில் உள்ள அமெரிக்கன் அருவியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாமல் ஒரு சிறிய பிரைடல் வெய்ல் அருவியும் உண்டு. குதிரை இலாட அருவி 792 மீ அகலம் கொண்டது, உயரம் 53 மீ. அதிக உயரமானதாக இல்லாவிடினும் நயகாரா அருவியானது மிகவும் அகலமானது. அமெரிக்கன் அருவி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. நயாகராப் பேரருவியில் ஆறு மில்லியன் கன அடிக்கு (168,000 m³) அதிகமான நீரானது ஒவ்வொரு நிமிடமும் இந்த அருவியினூடு பாய்ந்துசெல்கிறது. உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட இந்த அருவியானது வட அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த அருவியாகவும் இருக்கிறது.( மேலதிகமாக தெரிந்து கொள்ள விக்கிபீடியா செல்லுங்கள்)

 இவ் வீடியோவை கட்டாயம் பாருங்கள் சுற்றி பார்த்தமாதிரி இருக்கும் விளக்கத்துடன் கூடிய வீடியோ இணைப்பு...


குறிப்பு:-2010 டையரியில் பதியாமல் மனதில் பதிந்த ஞாபகங்கள் அதிகம். இன்னும் நிறையவே பார்த்த ரசித்த இடங்கள் இருக்கு. பதிவு நீண்டு கொண்டு போவதால். அடுத்தடுத்து வரும் பதிவுகளில் பகிர்கின்றேன் பார்த்து ரசித்திடுங்கள். அத்துடன் சென்றுவிடாமல் கருத்தையும் கூறிவிட்டு செல்லுங்கள்...

Leia mais...

Jan 24, 2011

எச்சரிக்கை: அப்டேட் பைலில் மோசமான வைரஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனமானது ஒவ்வொரு மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, தன் தொகுப்புகளின் பிழைகளை நிவர்த்தி செய்திடும், பேட்ச் பைல்களை வெளியிடுகிறது.

இவை அப்டேட் பைல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, பல சைபர் கிரிமினல்கள், வைரஸ்களைப் பரப்புகின்றனர்.சென்ற மாதம், இதனைப் பயன்படுத்தி வைரஸ் ஒன்றினைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் இந்த செயல் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் "ஸ்டீவ் லிப்னர்" (Steve Lipner) பெயரில் ஒரு இமெயில் அனுப்பப்படுகிறது. அதில், கம்ப்யூட்டரை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, உடனடியாக இணைக்கப்பட்டுள்ள KB453396ENU.exe என்ற பைலை இன்ஸ்டால் செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உண்மையிலேயே அந்த பைல் தான் வைரஸ்.

இந்த வைரஸானது, விரைவில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களுக்குப் பரவும் தன்மை உடையது. இதன் மூலம் பாட்நெட் என்று அழைக்கப்படும் மோசமான தன்மை உடைய வைரஸின் ஒரு பகுதியாக இது செயல்படும். பின்னர், அந்த பாட்நெட், இணைய தளங்கள், பெரிய நிறுவனங்களின் சர்வர்களில் பரவி தகவல்களைத் திருடுகின்றது.

பின்னர் இந்த தகவல்கள் அனைத்தும் இந்த வைரஸை எழுதியவர்களால், குற்றவாளிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மின்னஞ்சலை உற்று நோக்கினால், அதில் பல விஷயங்கள் போலி என எளிதாக அறிந்து கொள்ளலாம்.

1.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அப்டேட் பேட்ச் பைல், ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க்கிழமை மட்டும் தான் வெளியிடப்படும்.

2.மெயிலின் வாசகமும், ஒரு பெரிய நிறுவனத்தின் ஸ்டைலில் இருக்காது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்டவனின் வாசகமாக இருக்கும்.

3.மெயிலின் ரிப்ளை முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் என்ற சொல்லில் எழுத்துப் பிழை இருக்கும்.

எனவே இது போன்ற மெயில்களைப் பெறுகையில் கவனமாக இவற்றைப் பார்த்து எச்சரிக்கை கொள்ள வேண்டும்.

TamilCNN

Leia mais...

Jan 21, 2011

எனக்கு பிடித்த 10 பெண்குரல் பாடல்கள் (தொடர்பதிவு)

தோழி ஜெ.ஜெ அழைப்பினை ஏற்று இத்தொடர் பதிவினை பதிவிடுகின்றேன். முதலில் தொடர்பதிவிற்கு அழைத்த தோழி ஜெ.ஜெ க்கு நன்றிகள். தாமதமாக பதிவிடுவதற்கு மன்னிக்கனும் தோழி... பதிவிற்குள் நுழைகிறேன்.. எனக்கு பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்  தெரிவு....

முதலாவது தெரிவாக.

"ப்ரியமான தோழி" படத்தில் இருந்து சித்ரா பாடிய பாடலான காற்றே பூங்காற்றே கவிதை சொல்வாயா... இப்பாடலின் இசை அருமை.  நண்பனுக்கு ஆறுதல்  கூறும் ஒரு  பாடல்.. நிஜத்தில இப்படியான நட்பை காண்பது மிக  அரிது. ஒவ்வொரு வரிகளிலும்  மிக ஆழமான கருத்துள்ளது அதுவே எனக்கு இப்பாடல் பிடிக்க காரணம்.. 

இப்பாடலில் ரொம்ப பிடித்தவரிகள்
நதியென்பது ஓர் நாள் கரையென்பதை சேரும்
எப்போதுமே ஓடும் நதியாகலாம்....
றோஜாச்செடி போலே நீ பூக்கலாம்இங்கே
காற்றோடு போராடும் குணம் வேண்டுமே..
அட உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாதே
ஒரு பறவை மோதி கோபுரம் தான் சாய்ந்திட க் கூடாதே... 
"ஓவியன் கைவலி சித்திரம் ஆகுது
ஒவ்வொரு வலியிலும் சாதனை உள்ளது"
டுத்து வரும் ஒவ்வொரு வரிகளும் ஆழமான  வரிகள்

**********************************************

 இரண்டாவது தெரிவாக..

"மாயி" படத்திலிருந்து  பாடகி சுஜாதா பாடிய பாடலான நிலவே வான்நிலவே வான்நிலவே வார்த்தை..இப்பாடலில் அவளின் ஏக்கம்.... ஏக்கம் நிறைந்த வரிகள்... மிக மிக பிடிக்கும்
இப்பாடலில் பிடித்த வரிகள்.
"கண்களை மூடிக்கொண்டால் வெளிச்சம் இருக்காது...
தீ நடுவில் நீயே நின்றால் தீர்வு கிடைக்காது...
சூரியன் உதிப்பதை நிறுத்திக்கொண்டால்
உலகில் விடிவேது...
சுவாசிக்கும் காற்று வீசிட மறுத்தால்
உயிர்கள் கிடையாது...

***********************************************

 மூன்றாவது தெரிவாக

"நினைத்தேன் வந்தாய்" படத்தில் சித்ரா பாடிய பாடலான  உன்மார்பில் விழிமூடி தூங்குகிறேன் தினமும் கனவில்... எனும் பாடல். மணாளனை நினைத்து கற்பனையில் லயித்திடும் ஒரு பெண்ணின் பாடல். ஒரு பெண்ணின் காதல் கற்பனைகளை அழகாக வெளிப்படுத்தும் அருமையான பாடல்.
இப்பாடலில் என்னை கவர்ந்த வரிகள்
 நெஞ்சம் எதிலும் ஒட்டாமல் 
கண்ணில் கனவும் வற்றாமல்
ஏனிந்த நிலமை புரியவில்லை
இந்த பரவசம் உனக்குள்ளும் இருக்கின்றதா?

***********************************************

நான்காவது தெரிவாக...

"சத்துரியன்" படத்தில் சொர்ணலதா பாடிய மாலையில் யாரோ மனதோடு பேச.....எனும் பாடல். இப்பாடலில் வரும் இயற்கை காட்சிகள் அருமையிலும் அருமை... இயற்கையை ரொம்பவே ரசிப்பேன். 
பிடித்த வரிகள்
"தென்றலே பாட்டெழுது
அதில் நாயகன் பெயரெழுது...
வருவான் காவல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற...
கரைமேல் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து என் கண்ணை பார்க்க.."
காட்சிகளுடன்  பாடல் வரிகளை கேட்கும் போது மனதில் ஒருவகை அமைதி கிடைக்கும்
***********************************************

ஜந்தாவது பாடலாக... 

"என் ஆசைமச்சான்"  படத்தில் சித்தரா பாடிய கருப்பு நிலா நீ தான் கலங்குவதேன்.....எனும் பாடல்.  எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.
 இப்பாடலில் பிடித்த வரிகள்
கறுப்பு நிலா நீதான் கலங்குவதேன் 
துளித்துளியா கண்ணீர் விழுவது ஏன்
சின்ன மானே மாங்குயிலே உன் மனசில என்ன குறை
பெத்த ஆத்தா போலிருப்பேன்
இந்த பூமியில் வாழும் வர...
அடுத்த வரும் வரிகள் ஒவ்வொன்றும் அருமை. தனிமையில் இப்பாடலை  கேட்கும் போது அழுகையே வந்திவிடும்.

***********************************************

 ஆறாவது பாடலாக....
கோபுர தீபம் படத்திலிருந்து என் வாழ்க்கை மன்னவனே உன்னை என்று நான் அடைவேன்.... எனும் பாடல். பாடியவர யாரென தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் கூறுங்களேன். இப்பாடலில் வரும் எல்லா வரிகளும் அருமை..

ரொம்ம பிடித்த வரிகள்.
பொங்கும் கடலுக்கு அணையுண்டு 
உண்மை அன்புக்கு அணையுண்டா..

 ***********************************************

ஏழாவது பாடலாக. 

"காதல் சுகமானது"  படத்திலிருந்து பாடகி சித்ரா பாடிய பாடலான சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்... எனும் பாடல்.
இப்பாடலில் பிடித்தவரிகள் 
"தூண்டிலினை தேடும் 
ஒரு மீன்போல ஆனேன்
துயரங்கள் கூட அட சுகமானது"

 ***********************************************

எட்டாவது பாடலாக..

"ஆட்டோகிராப்" படத்திலிருந்து  பாடகி சித்ரா பாடிய பாடலான ஒவ்வொரு பூக்களுக்குமே.... எனும் பாடல். மறக்கமுடியாத ஓரு பாடல். வாழ்க்கையின் சாதகமான பக்கங்களை சொல்லும் வகையில் ஒவ்வொரு வரிகளும்.
இப்பாடலில் பிடித்த வரிகள் என குறித்துச் கூறமுடியாது..அனைத்தும் ஆறுதல் கூறும் அருமையான வரிகள்..
"அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வியின்றி வரலாறா"

***********************************************

ஒன்பதாவது பாடலாக...
'பூவெல்லாம் உன் வாசம்" படத்திலருந்து  பாடகி சொர்ணலதா பாடிய  திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே...
ஜோதிகா நடிப்பை ரசித்துக்கோண்டே இருக்கலாம்.

***********************************************

பத்தாவது பாடலாக...
கடைசித்தெரிவாக படம், பாடியவர் எதுவுமே தெரியல. பாடல் மட்டும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு... நீங்களும் கேட்டு பாருங்கள். 
குறிப்பு:-இப்பாடல கேட்டு விட்டு போகமல் உங்களுக்கு தெரிந்தால் எந்த படத்தில இப்பாடல் என கூறிச்செல்லுங்கள்.

Leia mais...

Jan 20, 2011

பல நாட்டு தொலைகாட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் கண்டுகளிக்க

பல நாடுகளின் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரே இடத்தில் கண்டு களிக்க யாருக்குதான் ஆசை இல்லை.

அதுவும் இலவசமாக என்றால் கேட்கவும் வேண்டுமா? அத்தகைய ஒரு தளமே இது.

இங்கு சுமார் 1042 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் பார்த்து இரசிக்க முடியும்.

மற்றைய சில தளங்கள் போல இங்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

எந்த நாட்டின், எந்த மொழி அலைவரிசை வேண்டும் என்பதினை தேர்வு செய்து கொள்ளமுடியும்.

இணையதள முகவரி
http://www.tvweb360.com/

VK

Leia mais...

Jan 17, 2011

PDF பைலின் Password இனை சுலபமாக உடைக்க...

உங்களிடம் உள்ள ஒரு PDF file பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். அந்த கோப்புகளை பாஸ்வேர்டு இல்லாமல் திறப்பதற்கு, சிரமப்படவே தேவையில்லை. கீழே காட்டியுள்ள தளத்தின் மூலமாக அந்த கோப்புகளை பாஸ்வேர்டை நீக்கி படிக்கலாம்.

1. PDF Crack : இந்த தளத்தில் 5எம்.பி அளவிலான கோப்புகளை இலவசமாக திறக்க முடியும்.

2. Free My PDF : இந்த தளத்தில்7 எம்.பி அளவிலான கோப்புகளை இலவசமாக திறக்க முடியும்.

Leia mais...

Jan 15, 2011

இணையத்தில் ஆபாச விடயங்களை தேடுபவரா நீங்கள்?

'காமசூத்ரா பாடம்' என்ற தலைப்பில் பவர்பொயிண்ட் கோப்பு ஒன்று தற்போது இணையத்தில் உலாவருகின்றது. ஆவலுடன் அதனை தரவிறக்கம் செய்தால் காத்திருக்கின்றது உங்களுக்கு ஆபத்து.

ஆம், இதனை நீங்கள் தரவிறக்கம் செய்தால் “Troj/Bckdr-RFM” என்ற வைரஸ் உங்கள் கணனிகளில் தானாக தரவிறங்கிக் கொள்ளும்.

நீங்கள் காம சூத்ரா பாடத்தில் இலயித்திருக்கும் போது உங்கள் கணனி தானாக ஆபத்தில் சிக்கியிருக்கும். பின்னர் உங்கள் அடையாளங்கள் மற்றும் இரகசியங்கள் யாரோ ஒரு இணையத்திருடனிடம் சிக்குண்டிருக்கும்.

எனவே இத்தகையவற்றிடம் கவனமாக இருங்கள் ! கண்டவற்றிக்காக பெறுமதி வாய்ந்தவற்றை இழக்க வேண்டாம் !

VK

Leia mais...

Jan 8, 2011

நகைச்சுவைகள்.

 ஆண் எலி:- அன்பே இவ்வளவு கஸ்ரப்பட்டு என் காதலை கூறுகின்றேன்  
I Love You....
பெண் எலி:- என் காதலை உன் நண்பனிடம் கூறிடு ஏனெனில் உன்னைவிட உன் நண்பன் தைரியசாலி...
................................................
பூனை:-இறைவா எனக்கொரு வரம் கொடு
இறைவன்:- என்ன வாரம் வேண்டு வேண்டுமென்று கூறு தருகிறேன்
பூனை:-என் நண்பன் அவன் காதலுக்கு தூது போகும் படி கூறுகின்றான் அவன் நட்பை நிறுத்த ஓரு வரம் கொடு...
இறைவன்:- உதவிதானே கேட்கிறான் 
பூனை:- இல்லை  இறைவா அவன் காதலிக்கும் பெண் என் காதலி......
....................................................
கண்ணே உனக்காக காத்திருந்து காத்திருந்து காலங்கள் கரைந்ததாக தெரியவில்லை.. காதலும் வளர்ந்ததாக தெரியவில்லை 
தாடிமட்டும் வளர்கின்றது....
...................................................

Leia mais...

படித்ததில் பிடித்த சிந்தனைகள்

01.ஊரார் வசைமொழிக்குப் பயந்து வெளிவேடம் தரித்து தர்மத்தைக் கடைப்பிடிப்பவன் தர்மவான் ஆக    மாட்டான். ஒருவரும் இல்லாத வீட்டில் காணப்படும் பொன் முடிப்பை எவனொருவன் எடுத்துக்கொண்டு போக இச்சைப்படமாட்டானோ அவனே தர்மவான். மௌனமாகவும் மறைவாகவும் கடைப்பிடிக்கப்படும் தர்மமே தர்மம். வீண் பெருமையுடன் படாடோபத்துடன் செய்யப்படும் தர்மம் போலிச்செயல்களாகும்.(பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்)

02.வாக்குவாதம் செய்யாதே. உனது மதத்தினிடத்தும் கொள்கையினிடத்தும் உனக்கு எப்படிப் பற்று இருக்கிறதோ அப்படியே மற்றவர்களுடைய மதங்களிலும் கொள்கைகளிலும் அவரவர்களும் பற்று வைக்கும்படியான உரிமையை அவர்களுக்குக் கொடு. வாக்குவாதத்தினால் மட்டும் மற்றொருவனுடைய பிழையை எடுத்துக் காட்ட முடியாது.
  (பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்)
03.ஒப்பிட்டுப் பார்ப்பதை மனம் நடத்திக் கொண்டிருந்தால் அங்கே உண்மையான அன்பு இருக்க முடியாது.(ஜே.கிருஷ்ணமூர்த்தி)
04.உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது.
(ரால்ப் வால்டேர் எமர்ஸன்)
05.பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.(விவேகானந்தர்)
06.பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை. மனநிறைவிலும் உயர்ந்த இன்பமில்லை. ஆசையிலும் பெரிய தீமையில்லை. கருணையிலும் பெரிய அறமில்லை. மன்னித்தலிலும் ஆற்றல்மிக்க கருவியில்லை.(இங்கர்சால்)
07.பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. (விவேகானந்தர்)
08.சிக்கல் எது என்று அறிவது முதல் சிக்கல். அதை அறிந்தாலே பாதி சிக்கல் தீர்ந்துவிடும். (ரட்யார்ட் கிப்ளிங்)
09.உழைப்பானது நம்மைச் சூழும் கவலைகளிலிருந்தும் நம்மை அணுகும் சிறுமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் நம்மைத் தாக்கும் தீய எண்ணங்களிலிருந்தும் விடுதலை அளிக்கும். (கர்னல்)
10.அமைதியிலே இரண்டு வகை உண்டு. ஒன்று விவரம் தெரியாமல் இருக்கிற அமைதி. இன்னொன்று எல்லா விவரங்களையும் தெரிந்திருக்கும் அமைதி.- (அண்ணா)

Leia mais...

Jan 7, 2011

இலவச "Avast Internet Security" ஒரு வருட License உடன்

இந்த Avast Internet Security மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் Instal செய்துவிடுங்கள். உங்களுக்கு கிழ உள்ள அணைத்து வகை பாதுகாப்பை Avast Internet Security வழங்குகிறது.

•    Continuous protection against viruses and spyware
•    Ensures all mails sent and received are clean
•    Keeps you protected from "chat" infections
•    Stops attacks from hijacked websites
•    Lets you safely browse suspicious websites or run unknown applications
•    Blocks hacker attacks, to protect your identity
•    Keeps your mailbox free from spam
•    Allows safe and uninterrupted gaming
•    Compatible with Windows XP, Vista and 7
•    NEW PRODUCT

பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் இந்த மென்பொருளை நிறுவிய பின்பு,1license.avastlic எனும் ஸ்கிரிப்ட்ய் Run செய்யவும். ( 1license.avastlic இது நீங்கள் பதிவிறக்கம் செய்த Folder -ல் உள்ளது ).  இந்த ஸ்கிரிப்ட்ய் Run செய்தவுடன் உங்கள்  Avast Internet Security ஒரு வருட Original Version ஆக மாறிவிடும். கடைசியில் ஒரு முறை உங்கள் கணினியை "Restart" செய்யவும்.

குறிப்பு: நீங்கள் பதிவிறக்கம் செய்த Folder -ல்  Avast Internet Security மற்றும் Avast Anti Virus இரண்டும் உள்ளது.உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

தரவிறக்க சுட்டி

தகவல்

Leia mais...

Jan 4, 2011

எம்.எஸ்.என் ஹொட்மெயிலில் மின்னஞ்சல்கள் மாயம்

பிரபல மின்னஞ்சல் சேவை வழங்குனர்களில் ஒன்றான மைக்ரோசொப்ட்டின் எம்.எஸ்.என் ஹொட்மெயில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்த பல மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக முறைபாடுகள் செய்துள்ளனர்.

பாவனையாளர்கள் பலர் தங்களது இன்பொக்ஸில் காணப்பட்ட மின்னஞ்சல்கள் அனைத்தும் டிலீடட் மெயில்ஸ் அதாவது அழிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் போல்டருக்குள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொலில்நுட்பக் கோளாறா அல்லது விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட நாசகார வேலையா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

எனினும் அந்நிறுவனம் இக்கோளாறை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது.

ஹொட்மெயில் சேவையானது உலகம் முழுவதும் சுமார் 360 மில்லியின் பாவனையாளர்களைக் கொண்டதென்பதுடன் அதிகமான பாவனையாளர்களைக் கொண்ட மின்னஞ்சல் சேவையாகவும் திகழ்கின்றது.

VK

Leia mais...

Jan 2, 2011

2010 தொழில்நுட்ப உலகம்: ஒரு மீள்பார்வை

2010 ஆம் ஆண்டிற்கு விடைகொடுக்கும் தருவாயில் இன்றைய எமது செய்தியானது தொழிநுட்ப உலகில் இவ்வருடத்தில் நிகழ்ந்த முக்கிய சில விடயங்களை நினைவுபடுத்தவுள்ளது.

இவற்றில் அதிகமான செய்திகளை நாம் உங்களுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள போதிலும் அவற்றை மீண்டும் திரும்பிப்பார்ப்போம்.

மொபைல் தொழிநுட்பம் (Mobile Technology)

1) எச்.டி.சி இவோ 4 ஜி

பிரபல எச்.டி.சி நிறுவனம் உலகின் முதலாவது வை-மெக்ஸ் தொழிநுட்பத்துடன் கூடிய இவோ 4 ஜி அதாவது நான்காவது தலைமுறை வலையமைப்பு கையடக்கத்தொலைபேசியினை அறிமுகப்படுத்தியது.

2) அண்ட்ரோயிட் இயக்குதளம்

கூகுளின் அண்ரோயிட் இயக்குதளமானது உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்பிள் கையடக்கத்தொலைபேசிகளின் விற்பனையை முதல் முறையாக அண்ரோயிட் தொலைபேசிகள் முறியடித்தன.

3) அப்பிளின் ஐ-போன் 4 ஜி மற்றும் ஐ-பேட்

அப்பிள் தனது ஐ-போன் வரிசையில் ஐ-போன் 4 ஜி யை அறிமுகப்படுத்தியது. சில நாட்களிலேயே அதன் அண்டனாவில் காணப்பட்ட கோளாறுகள் காரணமாக பெரிதும் விமர்சிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மற்றும் ஐபேட் எனும் சாதனத்தினையும் அறிமுகப்படுத்தியது.

4) கலெக்சி டெப்

கையடக்கத்தொலைபேசி உலகில் இது ஒரு மைல்கல் எனலாம். காரணம் இது ஒரு சிறிய கணனி மற்றும் கைப்பேசியின் இணைப்பாகும். சுமார் 7 அங்குல திரையைக் கொண்டதாகும்.

இவற்றைத்தவிர நொக்கியாவின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட என் 8 (N8), டெல்லின் ஸ்ரைக் (Dell Streak), எல்.ஜியின் ஒப்டிமஸ்(Optimus ), சொனி எரிக்சனின் எக்ஸ்பீரியா(Xperia), விவாஸ்(Vivaz) தொடர் கையடக்கத்தொலைபேசிகள் மோட்டரோல்லாவின் மைல்ஸ்டோன்(Milestone), மைல்ஸ்டோன், ட்ரொயிட்(Droid) பேசிகள் ஆகியன பெரிதும் பேசப்பட்ட வகைகளாகும்.

சமூகவலையமைப்புக்கள் (Social Networking)

1) பேஸ்புக்

பேஸ்புக் தனது 500 மில்லியன் பாவனையாளர் என்ற மைல்கல்லினை எட்டியது இவ்வருடத்திலேயாகும்.

2) டுவிட்டர்

இவ்வருடத்தில் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் 200 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கினை எட்டியது.

3) டயஸ்போரா மற்றும் கூகுள் +1

பேஸ்புக்கிற்கு போட்டியாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட இரண்டு தளங்களும் இதுவரை வெளியாகவில்லை.

எனினும் செய்திகள் வெளியாகிய வண்ணமே உள்ளன.

4) பேஸ்புக் - ஸ்கைப் இணைவு

பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகியன ஒன்றாக இணைந்ததும் இவ்வருடத்திலேயாகும்.

கூகுள்

1) கூகுள் தானியங்கிக் கார்

கூகுள் முதன்முறையாக தனது தானியங்கிக் காரை பரீட்சித்துப் பார்த்து அதில் வெற்றியும் பெற்றது.

2) கூகுளின் 'குரோம் நெட்புக்'

கூகுள் தனது குரோம் இயங்குதளத்தை ( Chrome Operating System ) கொண்டியங்கும் நெட்புக் கணனிகள் தொடர்பான அறிவிப்பை மேற்கொண்டது.

இவற்றைத்தவிர முக்கிய விடயங்களாக,

1) ஈரானை உலுக்கிய ' ஸ்டக்ஸ்னெட்' வைரஸ்

அதி மேம்பட்ட வைரஸாக இது கருதப்படுகின்றது. ஈரானின் அணு உலைகளில் செயற்பட்டு வரும் கணனிகளைத் தாக்கவே இது ஏவப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

2) சீனாவின் அதிவேக சுப்பர் கணனி

டியானி (Tianhe) - 1 A என்ற அதிவேக கணனியை இவ்வருடத்தில் சீனா மீள் அறிமுகம் செய்தது.

இதன் வேகம் 2.507 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 2,507 ட்ரில்லியன் கணிப்புகளை மேற்கொள்ளக்கூடியதாகும்.

3) பிளக்பெரிக்குத் தடை

சவூதி உட்பட சில நாடுகள் பிளக்பெரிக்கு தடை விதிப்பதாக அறிவித்திருந்தன . இதன் சிக்கலான என்கிரிப்ஷன்களே இதற்கான காரணம் எனக் கூறப்பட்டது. எனினும் பின்னர் இத்தடை அறிவிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.

VK

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo