கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jan 28, 2011

எனது டைரி(Diary) 2010. (தொடர்பதிவு)

ஆமினா அழைப்பை ஏற்று இத் தொடரினை தொடர்கின்றேன்.  தொடர்பதிவிற்கு அழைத்த ஆமினாவிற்கு நன்றிகள். எனக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லை அதனால் 2010 இல் என் மனதில் பதிந்தவைகளை தருகின்றேன்..

எனது  டைரி(Diary) 2010.
 5வருட காத்திருப்பின்(4+வயது குட்டிப்பெண்ணுடன்) பின் இவ்வாண்டே வெளிநாடு வந்தடைய அனுமதி கிடைத்தது. அனுமதி கிடைத்த சந்தோசத்தை  பயம் தடுத்தது. என்னவென யோசிக்கிறிங்களா? முதல் முதல் விமானத்தில் அன்னிய நாட்டுக்கு பயணம் செய்வதை எண்ணிதான் பயம்.  இலங்கையில் இருந்து புறப்பட்டு லண்டனில் அடுத்த விமானம் மாறணும் இலங்கையிலிருந்து நாங்கள்  புறப்பட்ட விமானம் 1 மணித்தியாலம் பிந்திவிட்டதால் லண்டனில் இறங்கி அடுத்த கனடிய விமானத்தில் ஏறுவதற்கு 10 நிமிடங்களே இருந்தன. கனடிய விமானத்தில் கடைசியாக ஏறியது நானும் என் பொண்ணும் ஏறி 5 நிமிடங்களில் விமானம் புறப்பட்டு விட்டது அன்று 10 பேர் விமானத்தை தவறவிட்டதாக கனடா விமான நிலையத்தில் கூறினார்கள். என் பயண அனுபவத்தை மறக்கவே முடியாது. அதைவிட வலி என் உறவுகளை (குடும்பம். நட்பு)பிரிந்து  வந்தது.

கனடாவில் கால் பதித்ததும் யாவும்  புதுசாக  இருந்தது. நான் கனடா வந்து இறங்கிய காலப்பகுதியில் குளிர் இல்லாத காலநிலை. 6ஆம் மாதம் விடுமுறை  காலமும் ஆரம்பம். கனடாவில் பல இடங்கள் சுற்றி பார்த்தேன். நான் சுற்றிய பார்த்த இடங்களை உங்களுக்கும் சுற்றிக்காட்டுகின்றேன். நான் முதலில் சுற்றுலா போன இடம்..

நயாகரா நீர்வீழ்ச்சி( Naigara Falls) 
(Niagara Falls are one of beautifull amazing waterfalls in the world)

நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு இணையத்தில் அலசினேன் விக்கிபீடியாவில் தகவலை பெற்றுக்கொண்டேன். அத்தகவலை உங்களுடன் பகிர்கின்றேன். அதற்கு முன் நயாகரா நீர்வீழ்ச்சி( Naigara Falls)  வீடியோவை பாருங்கள்....


நயாகரா நீர்வீழ்ச்சி( Naigara Falls) At Night.
 
நயாகரா நீர்வீழ்ச்சி அல்லது நயாகரா பேரருவி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது. இது தனியான இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது. சுமார் 85% நீர் கனடாவில் உள்ள ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ அருவி என ஆங்கிலத்தில் வழங்கப்படும் குதிரை இலாட அருவியிலும், மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில் உள்ள அமெரிக்கன் அருவியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாமல் ஒரு சிறிய பிரைடல் வெய்ல் அருவியும் உண்டு. குதிரை இலாட அருவி 792 மீ அகலம் கொண்டது, உயரம் 53 மீ. அதிக உயரமானதாக இல்லாவிடினும் நயகாரா அருவியானது மிகவும் அகலமானது. அமெரிக்கன் அருவி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. நயாகராப் பேரருவியில் ஆறு மில்லியன் கன அடிக்கு (168,000 m³) அதிகமான நீரானது ஒவ்வொரு நிமிடமும் இந்த அருவியினூடு பாய்ந்துசெல்கிறது. உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட இந்த அருவியானது வட அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த அருவியாகவும் இருக்கிறது.( மேலதிகமாக தெரிந்து கொள்ள விக்கிபீடியா செல்லுங்கள்)

 இவ் வீடியோவை கட்டாயம் பாருங்கள் சுற்றி பார்த்தமாதிரி இருக்கும் விளக்கத்துடன் கூடிய வீடியோ இணைப்பு...


குறிப்பு:-2010 டையரியில் பதியாமல் மனதில் பதிந்த ஞாபகங்கள் அதிகம். இன்னும் நிறையவே பார்த்த ரசித்த இடங்கள் இருக்கு. பதிவு நீண்டு கொண்டு போவதால். அடுத்தடுத்து வரும் பதிவுகளில் பகிர்கின்றேன் பார்த்து ரசித்திடுங்கள். அத்துடன் சென்றுவிடாமல் கருத்தையும் கூறிவிட்டு செல்லுங்கள்...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo