கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Sep 7, 2011

சொனி அறிமுகப்படுத்தியுள்ள புதுவித டெப்லட்

சந்தையில் டெப்லட் கணனிகளுக்கான கேள்வியை தொழிநுட்ப நிறுவனங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளன.

இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நிறுவனங்கள் பல்வேறு வசதிகளுடன் கூடிய டெப்லட் கணனிகளை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தி வருகின்றன.


அப்பிள், செம்சுங், எச்.பி, பிளக்பெரி என பல்வேறு நிறுவனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

தற்போது அவ்வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது ‘சொனி’.

சொனி நேற்று இரண்டு டெப்லட் கணனிகளை அறிமுகப்படுத்தியது.

டெப்லட் பி மற்றும் டெப்லட் எஸ் என அவை பெயரிடப்பட்டுள்ளன.

இவை இரண்டும் கூகுளின் அண்ட்ரோய்டின் புதிய வேர்ஷனான ‘ஹனிகோம்’ ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை.

இதில் ‘பி’ இன் வடிவம் டெப்லட் சந்தைக்கு புதியது.

இது இரண்டு திரைகளைக் கொண்டுள்ளதுடன் மடித்து வைத்துக் கொள்ள முடிவதனால் எடுத்துச் செல்ல இலகுவாக இருக்குமென சொனி தெரிவிக்கின்றது.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo