கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

May 31, 2010

பயர்பாக்ஸ் 4 வடிவமைப்பில் சுறுசுறுப்பு

தொடர்ந்து பல மாதங்களாக, கூகுள் குரோம் பிரவுசர் தன் சந்தையை விரிவு படுத்திக் கொண்டிருக்கிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9ல் புதிய வசதிகளைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் முயற்சித்துக் கொண்டுள்ளது.

எனவே மொஸில்லா தன் பயர்பாக்ஸ் தொகுப்பு 4 ஐ, எந்த விதத்திலாவது படு சூப்பராக அமைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதன் கட்டமைப்பை வடிவமைக்கும் குழுவின் தலைவர் மைக் பெல்ட்ஸ்நர் இது பற்றி அண்மையில் ஒரு பிரசன்டேஷன் அளித்துள்ளார்.

பயர்பாக்ஸ் தொகுப்பு 4 மூன்று இலக்குகளை முதலில் நிறுத்தியுள்ளது. இந்த பிரவுசரின் இணைய தளங்களின் தேடல் வேகம் சூப்பர் பாஸ்ட் ஆக இருக்க வேண்டும். எச்.டி.எம்.எல். 5 மற்றும் பிற தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இந்த பிரவுசரைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்கள் இணைய தேடலைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ள கூடுதல் வசதிகள் தரப்பட வேண்டும்.

அநேகமாக டேப்கள் அட்ரஸ் பாருக்கு மேலாக அமைக்கப்படலாம். ஹோம் பேஜ் பட்டனுக்குப் பதிலாக, ஹோம் டேப் தரப்படலாம்.
பயர்பாக்ஸ் 4 பிரவுசர் சோதனைத் தொகுப்பு வரும் ஜூன் மாத இறுதிக்குள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சரியாக வெளிவரும் நிலையில், வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் இறுதித் தொகுப்பு வெளியாகலாம்.

மொஸில்லா மட்டுமின்றி, தங்கள் பிரவுசர்களைப் புதுப்பித்து புதியனவற்றைக் கொண்டு வர முயற்சிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பல சவால்கள் முன் உள்ளன. முதலாவதாக ஸ்பீட். இந்த பிரிவில் குரோம் மற்றவற்றை முந்திக் கொண்டு தற்போது இயங்குவதுடன், இன்னும் அதனை அதிகப்படுத்தி வருகிறது. எனவே மற்றவர்கள் இதற்கு இணையாகச் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரவுசர்களுக்கும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். திடீரென அதிரடி மாற்றங்களுடன் புதிய பிரவுசர்கள் வந்தால், அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு செயல்பட அவர்கள் தயங்கலாம். மூன்றாவதாக, இப்போது பிரவுசரில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அவை பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மட்டுமின்றி, மொபைல் போன்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். இந்த பிரிவு வேறு வகையான தொழில் நுட்பத்தினையும் சூழ்நிலைகளையும் கொண்டிருப்பதால், நிறுவனங்கள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இணைய அப்ளிகேஷன்களில் தற்போது புதுமையான பல தொழில் நுட்பங்கள் வேகமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகப் புதிய பிரவுசர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

May 27, 2010

i-Padஇற்கு போட்டியாகக் களமிறங்கும் Dell Streak

தொடுதிரை தொழில் நுட்பத்தின் உச்சப் பாவனையை உள்ளடக்கிய i-Pad பல பாதகமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரு வெற்றியை ஈட்டித் தருகிறது. ஆப்பிளின் மற்றக் கணனிகளின் விற்பனையை இப்போது i-Pad விற்பனை விஞ்சிவிட்டது. i-Padஇன் விற்பனை மிக இலகுவாக ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது. i-phone ஒரு மில்லியன் விற்பனையை அடந்த வேகத்திலும் இருமடங்கு வேகத்தில் i-Pad விற்கப்பட்டது. i-Pad வெற்றி மற்ற நிறுவனங்களை அதற்குப் போட்டியாக களமிறங்க வைத்துள்ளது.

Google, HP, ஆகிய நிறுவனங்கள் i-Padஇற்கு போட்டியாக தமது உற்பத்திப் பொருட்களுடன் களமிறங்குகின்றன. அதில் Dell தனது Dell Streak என்னும் கைத்தொலைபேசியை i-Padஇற்கும் i-Phoneஇற்கும் போட்டியாகக் களமிறக்குகிறது. i-Padஐ சட்டைப் பைக்குள் வைக்கமுடியாது. ஆனால் Dell Streakஐ இலகுவாக சட்டைப்பைக்குள் வைக்கலாம். Dell Streak கூகிளின் அன்ரோய்ட் மென்பொருளில் இயங்குகிறது. நாமாகமாற்றிக் கொள்ளக் கூடிய மின்கலங்களைக்(battery) கொண்டது. அது மட்டுமல்ல Dell Streakஇல் சிறப்பு அம்சம் அதன் திரை i-Phone இலும் பெரியது. அத்துடன் இருமடங்கு பெரிதான i-Pad திரையிலும் பார்க்கச் சிறந்த காணொளிகளை வழங்கக்கூடியது. விமர்சகர்கள் Dell Streakஇன் திரையை இப்படி வியக்கின்றனர்.

- வேல்தர்மா

May 25, 2010

செல்போன்களை அதிகம் உபயோகிப்பதால் மூளைப் புற்று நோய் ஏற்படும் அபாயம்

செல்போன்களை அதிகம் உபயோகிப்பதால் மூளைப் புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் லண்டனில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​

ஒரு நாளைக்கு சராசரியாக 30 நிமிடங்கள் செல்போன் பயன்படுத்துவதே அதிகப்படியான உபயோகம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.​ 13 நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளில் 5 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.​ மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.​ ​

இளைஞர்கள் செல்போனை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.​ சராசரியாக ஒரு நாளைக்கு 1 மணி நேரம் அவர்கள் செல்போனில் பேசுவதாகத் தெரியவந்துள்ளது.​ எனினும் இந்த ஆய்வில் 30 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள் யாரும் ஆய்வுக்கு உள்படுத்தப்படவில்லை.

செல்போன்களை இடது செவியில் தான் பெரும்பாலானோர் காதில் வைத்துப் பேசுகின்றனர்.​ இதனால் காதில் பாதிப்பு ஏற்படுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.​ மேலும் செல்போனை வைத்துப் பேசும் பக்கத்தில் மூளையில் கட்டி ஏற்படுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.​ ​

ஆய்வில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மிகவும் குறைவு தான் எனவும் உண்மையான பாதிப்புகள் இன்னும் மிக அதிகம் எனவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.​ ​ செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து செல்போன்களை தயாரிக்கும் நிறுவனங்களே "செல்போன்களை அளவோடு பயன்படுத்த வேண்டும்' என எச்சரிக்கை வாசகங்களை செல்போன்களை பேக்கிங் செய்யும் அட்டைப்பெட்டிகளில் அச்சடித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.​ ​

May 23, 2010

கணினியில் இருந்து பீப் ஒலி

கணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.

அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......

1 , 2 , 3 , முறை- ram அல்லது motherboard

4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்

5 , முறை - ப்ராசசரில் சிக்கல்

6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்

7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும்.

May 21, 2010

கூகிள் குரோம் முதலிடத்தை பிடிக்குமா????

இன்டர்நெட்  தேடலுக்கு அடிப்படையான பிரவுசர்கள் அனைத்தும் இலவசமாகஇன்று கிடைக்கின்றன. இவற்றில் முதல் இடத்தில் இயங்குவது இன்டர்நெட்எக்ஸ்புளோரர் பிரவுசராகும். அடுத்து மொஸில்லாவின் பயர்பாக்ஸ் இடம்பெறுகிறது. ஆனால் இவற்றுக்குப் பின்னால் இருக்கும் குரோம் பிரவுசர், வெகுசீக்கிரம் முதல் இடத்தைப் பிடித்துவிடும் என்று பலரும் கணக்கிடுகின்றனர். இதற்கென அவர்கள் கூறும் காரணங்களைப் பார்க்கலாம்.

காரணங்களைப் பார்க்கும் முன் இன்றைய பிரவுசர் சந்தை நிலை குறித்த சிலதகவல்களைக் காணலாம். சென்ற ஏப்ரல் மாதத்துடன் முடிந்த ஆய்வுக் கணக்கின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், பிரவுசர் வாடிக்கையாளர்களில் 80% பேரைக் கொண்டிருந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஏப்ரல் இறுதியில் 59.95% க்குஇறங்கியுள்ளது. குரோம் பிரவுசர் 6.7% கொண்டுள்ளது. இந்த மாதத்தில்மட்டுமான உயர்வு 0.6% ஆகும். இது மிகப் பெரிய அளவிலான எண்ணிக்கைஇல்லை என்றாலும், இதுவரை குரோம் பெற்ற கூடுதல் வாடிக்கையாளர்களின்எண்ணிக்கையில் இதுவே மிக அதிகமாகும். இதனுடன் ஒப்பிடுகையில், சபாரிமற்றும் பயர்பாக்ஸ் கொண்ட கூடுதல் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். பயர்பாக்ஸ் தற்போது 25% வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஆப்பராமற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்கள் தங்கள் வாடிக்கையாளர்களைஇழந்துள்ளனர். இதனைத் தவிர்த்தவர்கள் பயர்பாக்ஸ் மற்றும் குரோம்பிரவுசருக்கு மாறி உள்ளனர். இதற்கான காரணங்கள் கீழ்க்கண்டவை எனப்பலரும் கருதுகின்றனர்.

வேகம்

கூகுள் தரும் குரோம் பிரவுசர், இன்டர்நெட் தளங்களைக் கொண்டு வருவதில்பேய் வேகத்தைக் கொண்டுள்ளது என்று கூறலாம். ஆப்பிள் சபாரி, ஆப்பரா, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் ஆகிய அனைத்துடன், குரோம்பிரவுசரின் வேகத்தை ஒப்பிட்டுப் பார்த்துப் பலரும் இந்த முடிவிற்குவந்துள்ளனர்.

எளிமை

அடுத்ததாக, குரோம் பிரவுசர் தரும் எளிமையான கட்டமைப்பு. கூகுள் தரும் மற்றஅப்ளிகேஷன்கள் மற்றும் சேவைகளைப் போல, இந்த பிரவுசர் மிக எளிமையானமுறையில் மெனுக்களைக் கொண்டு இயங்குகிறது.மற்ற பிரவுசர்களில்காணப்படும் பலவகையான, குழப்பத்தில் ஆழ்த்தும் மெனுக்கள், குரோம்பிரவுசரில் இல்லை. ஆனால் இதுவே சிலரை குரோம் பிரவுசரிலிருந்து, மீண்டும்மற்ற பழைய பிரவுசர்களுக்குத் தாவ வைத்துள்ளது. இருப்பினும் குறைவான, ஆனால் அடிப்படைத் தேவைகளைத் தரும் வகையில், மெனுக்களைவிரும்புபவர்களும் பலர் உள்ளனர். இந்த வகையில் குரோம் பிரவுசர் பலரின்விருப்ப பிரவுசராக மாறி உள்ளது.

சிறந்த பாதுகாப்பு


இன்டர்நெட் பிரவுசர் பலரின் ஏளனத்திற்கு ஆளாவதற்குக் காரணம், முழுமையான பாதுகாப்பினை வழங்க முடியாததுதான். குரோம் பிரவுசர் வரும்முன்னர், இந்த காரணத்தி னாலேயே, பலர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்பிரவுசரிலிருந்து, மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசருக்குத் தாவினார்கள். ஆனால் குரோம் வந்தவுடன், அது தரும் பாதுகாப்பு அனைவராலும்உறுதிப்படுத்தப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

ஹேக்கர்கள் எந்தவிதத்திலும் உள்ளே நுழைய முடியாத வகையில், குரோம்பிரவுசர் கட்டமைப்பு உள்ளது. ஆனாலும், இன்டர்நெட் சந்தையில், குரோம்பிரவுசரைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 7 சதவீதத்திற்கும் குறைவாகஇருப்பதால், மால்வேர் புரோகிராம்களை அனுப்புபவர்கள், இதன் மீது தங்கள்கவனத்தைத் திருப்பவில்லை என்றும் ஒரு சாரார சொல்லுகின்றனர். அதிகமானஎண்ணிக்கையில் மக்கள் இதனைப் பயன்படுத்த முயற்சிக்கையில், வைரஸ்மற்றும் மால்வேர் களைப் பரப்புபவர்கள், நிச்சயம் குரோம் கட்டமைப்பினையும்உடைப்பார்கள் என்று பலரும் கருதுகின்றனர். இருப்பினும் இன்றைய நிலையில்கூடுதல் பாதுகாப்புள்ளது குரோம் பிரவுசர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பழைய சிஸ்டத்திலும் இயங்கும்

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பழைய தொகுப்புகளிலும், குரோம்பிரவுசர் சிறப்பாக இயங்குகிறது. குறிப்பாக விண்டோஸ் எக்ஸ்பியில் இதுநன்றாக இயங்குகிறது. எனவே இதற்கு மாறும் பழைய கம்ப்யூட்டர் பயனாளர்கள், எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்வதில்லை.

பிரவுசர் சந்தையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம்தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் வேகம் மற்றும் எளிமை என்ற இரு காரணங்களினால், குரோம்தொடர்ந்து தன் பயனாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கி வருகிறது. சிலஆண்டுகளில், குரோம் முதல் இடத்திற்கு உயர்ந்துவிடும் என்றே பலரும்கணிக்கின்றனர். காத்திருந்து பார்க்கலாம்.

தேன்தமிழ்

May 17, 2010

பேஸ்புக்கில் பரவும் புதிய ஸ்பாம் வைரஸ்

இன்று சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பேஸ்புக் பயனாளர்கள் தங்களது முகப்பு பக்கத்தை திறந்தவுடன் அவர்களது நண்பர்கள் ஒரு வீடியோ லிங்கை இணைத்திருப்பதாகவும் இதுதான் உலகத்திலேயே மிகவும் கவர்ச்சியான வீடியோ என்றும் அவர்களது சுவரில் (wall) எழுதப்பட்டிருக்கும். அதாவது “this is without doubt the sexiest video ever! :P :P :P ” என்று இருக்கும்.

இது உண்மையில் ஒரு வீடியோ கிடையாது.பேஸ்புக்கில் தரவேற்ற பட்டிருக்கும் வீடியோ போல் காட்சியளிக்கும் ஒரு இமேஜ் ஆகும். அந்த இமேஜை கிளிக் செய்தால் இன்னொரு தள முகவரிக்கு எடுத்துசெல்லப் படுவீர்கள் . பின்னர் அந்த தளத்தில் உள்ள பிளே பட்டனை அழுத்தினால் , அந்த லிங்க் உங்களுக்கு தெரியாமலேயே உங்களுடைய பேஸ்புக் கணக்கில் ஒரு அப்பிளிகேஷனை நிறுவும்.

பின்னர் உங்கள் நண்பர்களின் பெயரில் உங்களுக்கும் உங்களின் பெயரில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த வீடியோ லிங்கை இணைக்கும்.இது தானியங்கியாகவே சுவர்ப்பதிவுகளை ஏற்படுத்தும். இந்த வீடியோவை தவறுதலாகவோ அல்லது ஆர்வக்கோளாறிலோ கிளிக் செய்திருந்தால் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இடது பக்கத்தில் "Application" என்ற பிரிவு இருக்கும் . அங்கே சென்றால் நீங்கள் பயன்படுத்தும் அப்பிளிகேஷன்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் "Winamp" என்ற பெயரில் உள்ள அப்பிளிகேஷனை நீக்கி விடுங்கள்.

நான் எனது நண்பர்களின் பக்கங்களை பார்த்தபோது எனது பெயரில் பலரின் பக்கங்களில் அப்டேட் செய்யப்பட்டிருந்த்தது. எனவே இத வீடியோ இணைப்பு உங்கள் முகப்பு பக்கத்தில் தோன்றினால் கிளிக் செய்யாதீர்கள் உடனடியாகவே நீக்கி விடுங்கள்!!!

- தேன் தமிழ்

May 15, 2010

மைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத புதுமையான கண்டுபிடிப்பு

நம் எண்ணத்தை உடல் அசைவு மூலம் தெரிவிக்கும் புதியகருவியை மைக்ரோசாப்ட் கண்டுபிடித்துள்ளது. உடல் அசைவை” இஎம்ஜி மசில் சென்ஸார் ” ( EMG muscle sensor) மூலம்மென்பொருளுக்கு இன்புட் ஆக கொடுத்து சாதனை படைத்துள்ளனர்.

எப்படி இது செயல்படுகிறது என்று பார்ப்போம். 

நம் உடலில் EMG சென்ஸார்-ஐ பொருத்தி விடுகின்றனர்.எந்த விரல்களை நாம் தொடுகிறோம் என்பதை நீயூரோ ஸ்கை( NeuroSky ) கண்ட்ரோலர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக கண்டுபிடிக்கிறது. சரியாக நாம்தொட்டுகொண்டிருக்கும் பகுதியின் ஆரம்பம் முதல் முழுவதும்சரியாகதெரியப்படுத்துகிறது.மொபைல் போனை இனிதொட வேண்டாம் நம் விரல்களை தொட்டாலே அது வேலை செய்ய ஆரம்பித்துவிடும். பார்வை இல்லாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தான். இதை வைத்து இன்னும் மைக்ரோசாப்ட் பல வித ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. 

May 8, 2010

கூகுள் குரோம் அப்டேட் பைல் வடிவில் வைரஸ்!!!

குரோம் பிரவுசருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதனால், மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து அனுப்புபவர்கள், குரோம் எக்ஸ்டன்ஷன் என்ற பெயரில் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து மறைமுகமாக அனுப்பத் தொடங்கி உள்ளனர்.

கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு, தானாக ஒரு செய்தி அனுப்பப்படும். அதில் டாகுமெண்ட்ஸ் மற்றும் இமெயில் செய்திகளை கூடுதல் வசதியுடன் பார்க்க, குரோம் எக்ஸ்டன்ஷன் ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அதனைப் பெற இந்த லிங்க்கில் கிளிக் செய்யுமாறும் கூறப்படும். இந்த செய்தியை உண்மை என நம்பி, கிளிக் செய்தால், உடனே நாம் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவோம்.

அந்த தளம் கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன்களைத் தரும் தளம் போலவே தோற்றமளிக்கும். ஆனால் நீங்கள் எதிர்பார்த்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமிற்குப் பதிலாக, வேறு ஒரு புரோகிராம் தானாகக் கம்ப்யூட்டரில் பதியப்படும். இது ஒரு மால்வேர் புரோகிராம். கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு, கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை, பாஸ்வேர்ட், பேங்க் அக்கவுண்ட் எண் போன்றவை, எடுத்து இந்த மால்வேர் புரோகிராமினை பரப்பியவருக்கு அனுப்பி வைக்கும். பின் அவற்றைப் பயன்படுத்தி, நிதி மோசடியில் இதனை அனுப்பியவர்கள் ஈடுபடுவார்கள்.

இந்த மால்வேர் புரோகிராம் வழக்கமான எக்ஸ்டன்ஷன் போலவே தோற்றமளிக்கும். அது உள்ள தளம், முகப்பு போன்றவை அப்படியே நம்மை ஏமாற்றும். உஷாரானவர்களாக இருந்தால், அந்த புரோகிராமின் துணைப் பெயர், எக்ஸ்டன்ஷனுக்கான '.crx' என்று இல்லாமல், '.exe' என்று இருப்பதனைப் பார்க்கலாம்.

இதனை பிட் டிபன்டர் (Bit Defender) Trojan.Agent.20577 எனக் கண்டறிந்துள்ளது. இது பெர்சனல் தகவல்களைத் திருடுவதுடன், கூகுள் மற்றும் யாஹூ இணையப் பக்கங்களுக்கு நம்மைச் செல்லவிடாமல் தடுக்கிறது. குரோம் வெப் பிரவுசரில் எப்போது 'google.[xxx]' அல்லது '[xx].search.yahoo.com' என டைப் செய்தாலும், உடனே 89.149.xxx.xxx என்ற இன்டர்நெட் முகவரிக்கு நாம் தள்ளப்படுவோம். இதன் மூலம் நாம், இந்த திருட்டு புரோகிராமினை எழுதியவர்களின் இணைய தளத்திற்கே எடுத்துச் செல்லப்படுவோம்.

எனவே எக்ஸ்டன்ஷன் எது குறித்துத் தகவல் வந்தாலும், அது நமக்குத் தேவையா என்று ஒரு கணம் சிந்தியுங்கள். பின் அதனைத் தரும் தளம் சரியானதுதானா என்று சோதனை செய்திடவும். பைலின் பெயரை பலமுறை சோதனை செய்து அறியவும். உடனே அதனை அமல்படுத்தாமல், டவுண்லோட் செய்து வைத்து, அல்லது குறித்து வைத்து பின்னர் அது பற்றி முடிவெடுக்கவும். ஏனென்றால், பாதிக்கக் கூடிய எக்ஸ்டன்ஷன் எனில் உடனே இது குறித்த அறிவிப்பு இணையத்தில் கிடைக்கும்.

# 10 லட்சம் ஆப்பிள் ஐபேட் விற்பனை

10 லட்சம் ஐபேட்களை விற்பனை செய்து ஆப்பிள் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை 28 நாட்களி்ல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் முதன்முதலில் தயாரித்த ஐபாட் கருவி, இந்த விற்பனை அளவை எட்ட 74 நாட்கள் தேவைப்பட்டது.

ஆனால் இதில் மூன்றில் ஒரு பங்கு கால அளவுக்குள் 10 லட்சம் ஐபேட்களை விற்றுள்ளது ஆப்பிள் என்கிறார் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

அரை அங்குல தடிமன் மற்றும் 1.5 பவுண்ட் எடை மட்டுமே கொண்ட ஐபேட்களுக்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த கம்ப்யூட்டருக்கான அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் 12 மில்லியன் அளவுக்கு டவுன்லோட் செய்யப்பட்டுள்ளன. 1.5 மில்லியன் இ புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

May 2, 2010

எல்.ஜி.யின் புதிய சாக்லேட்எல்.ஜி.நிறுவனம்

2006 ஆம் ஆண்டில் தன் சாக்லேட் சிரீஸ் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியது. இப்போது மேலும் இரண்டு சாக்லேட் போன்களைக் கொண்டு வந்துள்ளது. அவற்றில் அண்மைக் காலத்தில் வந்தது எல்.ஜி. சாக்லேட் பி 20. சாக்லேட் சிரீஸ் போன்கள் அனைத்துமே ஸ்டைலான வடிவமைப்பு கொண்டவை. கண்ணாடி பளபளப்பு, பியானோ கருப்பு மற்றும் ஸ்லிம்மான வடிவம் என இந்த போனும் அசத்துகிறது. போனின் முன்புறத்தில் இரண்டாவது கேமரா உள்ளது. மற்ற இடம் எல்லாம் சரியான கருப்பில் முதல் பார்வையில் தெரிவதில்லை. 

போன் செயல்படத் தொடங்குகையில் தான் ஸ்கிரீன் வெளிச்சத்தில் கீழே உள்ள பட்டன்கள் தெரிகின்றன. இடது பக்கத்தில் கம்ப்யூட்டருடன் இணைக்க, சார்ஜ் செய்திட மற்றும் ஹெட்செட் இணைக்க ஒரே ஒரு போர்ட் தரப்பட்டுள்ளது. பின்புறம் கேமரா, எல்.இ.டி. பிளாஷ் தரப்பட்டிருப்பதும் உற்று நோக்கினால் மட்டுமே தெரிகிறது. 

இந்த பகுதி முழுவதும் வழுக்கிச் சென்று, பேட்டரி மற்றும் சிம் இடத்தைக் காட்டுகின்றன. மெமரி கார்ட் இடமும் இங்குதான் உள்ளது. போன் ஸ்லைட் ஆகி, கீ பேட் தட்டையாக குரோமியப் பூச்சு வரிகளுக்கிடையே காட்டப்படுகிறது. 

எண்களுக்கு மேலாக அழைப்பு ஏற்க, முடிக்க மற்றும் கிளியர் செய்திட கீகள் தரப்பட்டுள்ளன. கருப்பு வண்ண பின்னணியில் சிகப்பு வண்ணக் கலவையுடன், குரோமிய வரிகள் மிகவும் அழகான, ஸ்டைலான தோற்றத்தினைத் தருகின்றன. 

போனின் மெமரி 60 எம்பி. போனுடன் 2 ஜிபி மெமரி கார்ட் தரப்படுகிறது. அனைத்து கண்ட்ரோல் பட்டன்களையும் மிக எளிதாக இயக்கலாம். இந்த போனின் ஒரு சிறப்பம்சம், பல செயல்பாடுகளை(Multitasking) ஒரே நேரத்தில் மேற்கொள்வதுடன் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாறிக் கொள்வதற்கான வசதியுடன் இருப்பதுதான். 

ஆனால் அப்ளிகேஷன்களை அதிகப்படுத்துகையில், போனின் செயல்பாட்டின் வேகம் சற்று குறைகிறது. கடிகாரம், அலாரம், காலண்டர், ரிமைண்டர், நோட்ஸ்,குயிக் காண்டாக்ட்ஸ், சீதோஷ்ண நிலை அறிவித்தல் ஆகியவற்றிற்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. எம்பி3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ உள்ளன. 

GPRS & EDGE ஆகிய தொழில் நுட்பம் மூலம் நெட்வொர்க் இணைப்பு அருமையாகக் கிடைக்கிறது. 900ட்அட பேட்டரி தரப்பட்டு 5 மணி நேரம் டாக் டைம் கிடைக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் பவர் தாக்குப் பிடிக்கிறது. 

இரண்டு மணி நேரம் பாடல்களைக் கேட்க முடிகிறது. ஜி.பி.ஆர்.எஸ். பயன்பாடு 20 முதல் 30 நிமிடங்கள் வரை கிடைக்கிறது. ஒரு ஸ்டைலான போன் வாங்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு இது ஒரு சரியான போன். விலை ரூ.10,000 எனக் குறிக்கப்பட்டுள்ளத.

 
Lankasritech

May 1, 2010

கணணி செய்தி மீடியா பிளேயரில் சிடியில் எழுதலாம்.

நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறிவிட்டீர்களா? அப்படியானால் இந்த முக்கியமான வசதியைத் தெரிந்து கொள்ளுங்கள். அதில் உள்ள மீடியா பிளேயரில் உங்கள் சிடி மற்றும் டிவிடியில் டேட்டாவினை எழுதலாம். வீடியோ பைல்கள் மற்றும் படங்களையும் இதில் பதியலாம். எப்படி என்று பார்க்கலாமா!
ஆடியோ சிடியாக மாற்றுகையில், ஆடியோ அல்லது வீடியோ பைல்களின் பார்மட் மாற்றப்படுவதில்லை. தரமும் குறைவதில்லை.
முதலில் Start>All Programs>Windows Media Player எனச் செல்லவும். அதன் பின் பிளேயர் லைப்ரேரியில் Burn என்னும் டேப்பை கிளிக் செய்து பின் Date DVD அல்லது CD என்பதில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கவும். இனி காலியாக உள்ள சிடியை உங்கள் கம்ப்யூட்டரின் சிடி ட்ரேயில் போடவும். Auto Play டயலாக் பாக்ஸ் வந்தால் அதனை குளோஸ் செய்திடவும். சிலரின் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட சிடி டிரைவ் இருக்கலாம். இதில் எந்த டிரைவ் என்பதனையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.   அடுத்து எந்த பாடல் பைல்களைப் பதிய வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். எழுதப்பட வேண்டிய பாடல்களை Player Library ல் உள்ள Details pane லிருந்து வலது பக்கம் உள்ள List Pane ல் போடவும். இங்கே நீங்கள் விரும்பும் வகையில் பாடல்களின் வரிசையை மாற்றலாம். 

இந்த லிஸ்ட்டிலிருந்து பாடல்களை நீக்க வேண்டும் என்றால், இதில் ரைட் கிளிக் செய்து Remove என்பதில் கிளிக் செய்திடவும். லிஸ்ட் அமைப்பது முடிந்த பின் Burn கிளிக் செய்து சிடியில் பதிவதைத் தொடங்கி முடிக்கவும்.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo