கூகிள் குரோம் முதலிடத்தை பிடிக்குமா????
இன்டர்நெட் தேடலுக்கு அடிப்படையான பிரவுசர்கள் அனைத்தும் இலவசமாகஇன்று கிடைக்கின்றன. இவற்றில் முதல் இடத்தில் இயங்குவது இன்டர்நெட்எக்ஸ்புளோரர் பிரவுசராகும். அடுத்து மொஸில்லாவின் பயர்பாக்ஸ் இடம்பெறுகிறது. ஆனால் இவற்றுக்குப் பின்னால் இருக்கும் குரோம் பிரவுசர், வெகுசீக்கிரம் முதல் இடத்தைப் பிடித்துவிடும் என்று பலரும் கணக்கிடுகின்றனர். இதற்கென அவர்கள் கூறும் காரணங்களைப் பார்க்கலாம்.
காரணங்களைப் பார்க்கும் முன் இன்றைய பிரவுசர் சந்தை நிலை குறித்த சிலதகவல்களைக் காணலாம். சென்ற ஏப்ரல் மாதத்துடன் முடிந்த ஆய்வுக் கணக்கின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், பிரவுசர் வாடிக்கையாளர்களில் 80% பேரைக் கொண்டிருந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஏப்ரல் இறுதியில் 59.95% க்குஇறங்கியுள்ளது. குரோம் பிரவுசர் 6.7% கொண்டுள்ளது. இந்த மாதத்தில்மட்டுமான உயர்வு 0.6% ஆகும். இது மிகப் பெரிய அளவிலான எண்ணிக்கைஇல்லை என்றாலும், இதுவரை குரோம் பெற்ற கூடுதல் வாடிக்கையாளர்களின்எண்ணிக்கையில் இதுவே மிக அதிகமாகும். இதனுடன் ஒப்பிடுகையில், சபாரிமற்றும் பயர்பாக்ஸ் கொண்ட கூடுதல் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். பயர்பாக்ஸ் தற்போது 25% வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஆப்பராமற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்கள் தங்கள் வாடிக்கையாளர்களைஇழந்துள்ளனர். இதனைத் தவிர்த்தவர்கள் பயர்பாக்ஸ் மற்றும் குரோம்பிரவுசருக்கு மாறி உள்ளனர். இதற்கான காரணங்கள் கீழ்க்கண்டவை எனப்பலரும் கருதுகின்றனர்.
வேகம்
கூகுள் தரும் குரோம் பிரவுசர், இன்டர்நெட் தளங்களைக் கொண்டு வருவதில்பேய் வேகத்தைக் கொண்டுள்ளது என்று கூறலாம். ஆப்பிள் சபாரி, ஆப்பரா, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் ஆகிய அனைத்துடன், குரோம்பிரவுசரின் வேகத்தை ஒப்பிட்டுப் பார்த்துப் பலரும் இந்த முடிவிற்குவந்துள்ளனர்.
எளிமை
அடுத்ததாக, குரோம் பிரவுசர் தரும் எளிமையான கட்டமைப்பு. கூகுள் தரும் மற்றஅப்ளிகேஷன்கள் மற்றும் சேவைகளைப் போல, இந்த பிரவுசர் மிக எளிமையானமுறையில் மெனுக்களைக் கொண்டு இயங்குகிறது.மற்ற பிரவுசர்களில்காணப்படும் பலவகையான, குழப்பத்தில் ஆழ்த்தும் மெனுக்கள், குரோம்பிரவுசரில் இல்லை. ஆனால் இதுவே சிலரை குரோம் பிரவுசரிலிருந்து, மீண்டும்மற்ற பழைய பிரவுசர்களுக்குத் தாவ வைத்துள்ளது. இருப்பினும் குறைவான, ஆனால் அடிப்படைத் தேவைகளைத் தரும் வகையில், மெனுக்களைவிரும்புபவர்களும் பலர் உள்ளனர். இந்த வகையில் குரோம் பிரவுசர் பலரின்விருப்ப பிரவுசராக மாறி உள்ளது.
சிறந்த பாதுகாப்பு
இன்டர்நெட் பிரவுசர் பலரின் ஏளனத்திற்கு ஆளாவதற்குக் காரணம், முழுமையான பாதுகாப்பினை வழங்க முடியாததுதான். குரோம் பிரவுசர் வரும்முன்னர், இந்த காரணத்தி னாலேயே, பலர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்பிரவுசரிலிருந்து, மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசருக்குத் தாவினார்கள். ஆனால் குரோம் வந்தவுடன், அது தரும் பாதுகாப்பு அனைவராலும்உறுதிப்படுத்தப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
ஹேக்கர்கள் எந்தவிதத்திலும் உள்ளே நுழைய முடியாத வகையில், குரோம்பிரவுசர் கட்டமைப்பு உள்ளது. ஆனாலும், இன்டர்நெட் சந்தையில், குரோம்பிரவுசரைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 7 சதவீதத்திற்கும் குறைவாகஇருப்பதால், மால்வேர் புரோகிராம்களை அனுப்புபவர்கள், இதன் மீது தங்கள்கவனத்தைத் திருப்பவில்லை என்றும் ஒரு சாரார சொல்லுகின்றனர். அதிகமானஎண்ணிக்கையில் மக்கள் இதனைப் பயன்படுத்த முயற்சிக்கையில், வைரஸ்மற்றும் மால்வேர் களைப் பரப்புபவர்கள், நிச்சயம் குரோம் கட்டமைப்பினையும்உடைப்பார்கள் என்று பலரும் கருதுகின்றனர். இருப்பினும் இன்றைய நிலையில்கூடுதல் பாதுகாப்புள்ளது குரோம் பிரவுசர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பழைய சிஸ்டத்திலும் இயங்கும்
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பழைய தொகுப்புகளிலும், குரோம்பிரவுசர் சிறப்பாக இயங்குகிறது. குறிப்பாக விண்டோஸ் எக்ஸ்பியில் இதுநன்றாக இயங்குகிறது. எனவே இதற்கு மாறும் பழைய கம்ப்யூட்டர் பயனாளர்கள், எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்வதில்லை.
பிரவுசர் சந்தையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம்தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் வேகம் மற்றும் எளிமை என்ற இரு காரணங்களினால், குரோம்தொடர்ந்து தன் பயனாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கி வருகிறது. சிலஆண்டுகளில், குரோம் முதல் இடத்திற்கு உயர்ந்துவிடும் என்றே பலரும்கணிக்கின்றனர். காத்திருந்து பார்க்கலாம்.
தேன்தமிழ்