கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

May 17, 2010

பேஸ்புக்கில் பரவும் புதிய ஸ்பாம் வைரஸ்

இன்று சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பேஸ்புக் பயனாளர்கள் தங்களது முகப்பு பக்கத்தை திறந்தவுடன் அவர்களது நண்பர்கள் ஒரு வீடியோ லிங்கை இணைத்திருப்பதாகவும் இதுதான் உலகத்திலேயே மிகவும் கவர்ச்சியான வீடியோ என்றும் அவர்களது சுவரில் (wall) எழுதப்பட்டிருக்கும். அதாவது “this is without doubt the sexiest video ever! :P :P :P ” என்று இருக்கும்.

இது உண்மையில் ஒரு வீடியோ கிடையாது.பேஸ்புக்கில் தரவேற்ற பட்டிருக்கும் வீடியோ போல் காட்சியளிக்கும் ஒரு இமேஜ் ஆகும். அந்த இமேஜை கிளிக் செய்தால் இன்னொரு தள முகவரிக்கு எடுத்துசெல்லப் படுவீர்கள் . பின்னர் அந்த தளத்தில் உள்ள பிளே பட்டனை அழுத்தினால் , அந்த லிங்க் உங்களுக்கு தெரியாமலேயே உங்களுடைய பேஸ்புக் கணக்கில் ஒரு அப்பிளிகேஷனை நிறுவும்.

பின்னர் உங்கள் நண்பர்களின் பெயரில் உங்களுக்கும் உங்களின் பெயரில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த வீடியோ லிங்கை இணைக்கும்.இது தானியங்கியாகவே சுவர்ப்பதிவுகளை ஏற்படுத்தும். இந்த வீடியோவை தவறுதலாகவோ அல்லது ஆர்வக்கோளாறிலோ கிளிக் செய்திருந்தால் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இடது பக்கத்தில் "Application" என்ற பிரிவு இருக்கும் . அங்கே சென்றால் நீங்கள் பயன்படுத்தும் அப்பிளிகேஷன்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் "Winamp" என்ற பெயரில் உள்ள அப்பிளிகேஷனை நீக்கி விடுங்கள்.

நான் எனது நண்பர்களின் பக்கங்களை பார்த்தபோது எனது பெயரில் பலரின் பக்கங்களில் அப்டேட் செய்யப்பட்டிருந்த்தது. எனவே இத வீடியோ இணைப்பு உங்கள் முகப்பு பக்கத்தில் தோன்றினால் கிளிக் செய்யாதீர்கள் உடனடியாகவே நீக்கி விடுங்கள்!!!

- தேன் தமிழ்

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo