ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட் விற்பனை
ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கையடக்க கம்ப்யூட்டரான ஐபேட் நேற்று விற்பனைக்கு வந்தது. ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட்களை விற்று சாதனை படைத்துள்ளது ஆப்பிள்.
மேலும், இந்த கம்ப்யூட்டருக்கு தேவையான மென்பொருள்களை தரவிறக்கம் செய்வதிலும் பெரும் சாதனை நிகழ்ந்துள்ளது.
மேலும், இந்த கம்ப்யூட்டருக்கு தேவையான மென்பொருள்களை தரவிறக்கம் செய்வதிலும் பெரும் சாதனை நிகழ்ந்துள்ளது.
ஒரு மில்லியன் ஐபேட் அப்ளிகேஷன் சாப்ட்வேர் மற்றும் 2,50,000 எலக்ட்ரானிக் புத்தகங்கள் தரவிறக்கம் செய்துள்ளனர் வாடிக்கையாளர்கள்.
ஜூன் மாதத்துக்குள் 8.5 லட்சம் ஐபேட்கள் விற்க வேண்டும் என்பது ஆப்பிள் நிறுவன இலக்கு. ஆனால் இந்த வேகத்தில் ஐபேட்கள் விற்பனை தொடர்ந்தால், விற்பனை அளவு எங்கோ போய்விடும் என்கிறார்கள் எலெக்ட்ரானிக் சந்தை வல்லுநர்கள்.
ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் போன்றவை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது ஐபேட் எனப்படும் கையடக்க கம்ப்யூட்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இது போன்ற கம்ப்யூட்டரை வடிவமைத்து தோல்வி கண்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் பெரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.