கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Sep 14, 2010

ஐபோன்-4க்கு இலவசம் : ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 4 மொபைல் தொலைபேசியில் பேசும் போது சமிஞ்சைகள் குறைந்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் வருத்தத்தை தெரிவித்துள்ளது. ஐபோன் 4 ஐ வாங்கியிருப்பவர்கள் அனைவருக்கும் இலவசமாக பம்பர் கேஸ் எனப்படும் பாதுகாப்பு கவசத்தை தர ஆப்பிள் நிறுவனம் முன் வந்துள்ளது. ஏற்கனவே இந்த கவசத்தை வாங்கியவர்களுக்கு அதற்கான தொகையை திரும்ப தரவும் அந்நிறுவனம் முன் வந்துள்ளது.

ஐபோன்4 கின் கீழ் இடதுப்புறத்தை கைகளால் இறுக பற்றும் போது சிக்னல்கள் குறைவதாக குற்றச்சாட்டுகள் சரமாரியாக வந்த வண்ணம் உள்ளன. இந்த இடத்தில் தான் ஆண்டனா உள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் முகமாக கலிபோர்னியாவில் கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ், தங்களுடைய தயாரிப்பை நியாயப்படுத்தி பேசினார்.

அத்தோடு இந்த சிக்னல் குறையும் பிரச்சனையானது ஒரு சில ஐபோன்4 பயன்பாட்டாளர்களை மட்டுமே பாதித்துள்ளதாகவும், சந்தையில் இருக்கின்ற எந்த ஒரு ஸ்மார்ட் மொபைல் தொலைபேசியும் இந்த பிரச்சனை இல்லாமல் இல்லை என்றும் கூறினார். கடந்த ஜுன் மாதத்தின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன்4 இதுவரையில் 30 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo