கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Aug 3, 2010

மோட்டாரோலாவின் பட்ஜெட் போன்கள்

பல விலை மலிவான மொபைல் போன்கள் வருகையால், தன் மார்க்கட்டினை இழந்து வரும் நிலையில், மோட்டாரோலா நிறுவனம் மீண்டும் தன் இடத்தைப் பிடிக்க, ஐந்து, பட்ஜெட் தொடக்க நிலை மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டாயுவா என்ற பெயரில் இவை வந்துள்ளன.

இவற்றின் விலை ரூ.1,490 முதல் ரூ. 2,890 வரை உள்ளன. இந்த மாடல்கள் WX181, WX260, WX265, WX290 மற்றும் WX295 என்ற எண்களுடன் கிடைக்கின்றன. இவற்றில் மிக மலிவானது WX181 ஆகும். இதன் விலை ரூ. 1,490. இதில் மெமரி ஸ்லாட் இல்லை. WX260 மாடலில் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் தரப்பட்டுள்ளது. 2ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

எப்.எம். ரேடியோ பிளேயர், வண்ணத்திரை உள்ளன. இரண்டு அலை வரிசையில் இயங்கும் இந்த மாடலில் ஜி.பி.ஆர்.எஸ் வசதியும் தரப்பட்டுள்ளது.WX265 மாடல் ஒரு பிளிப் போன் ஆகும். புளுடூத் இணைப்பு உள்ளது. இவற்றில் WX290 ஒரு அட்வான்ஸ்டு மாடல் போனாகும். மாடலில் விஜிஏ கேமரா ஒன்று தரப்பட்டு ள்ளது.

எப்.எம்.ரேடியோ மற்றும் இரண்டு டிஸ்பிளே இந்த போனின் சிறப்பாகும். வேகமாக வளர்ந்து வரும் இந்திய மொபைல் சந்தையில், ஒவ்வொரு நிறுவனமும் தன் பங்கினைக் குறையவிடாமல் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றன. அந்த வகையில் மோட்டாரோலாவின் இந்த மாடல்கள் இந்நிறுவனத்திற்குக் கை கொடுக்குமா என்று காணலாம்.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo