கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Aug 12, 2010

கூகுள் அண்ட்ரோயிட்டைத் தாக்கும் புதிய 'ட்ரொஜன்'

கூகுள் அண்ட்ரோயிட் மொபையில் எனப்படுவது கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தின் மூலம் இயங்கும் கையடக்கத் தொலைபேசிகளாகும்.

இக்கையடக்கத் தொலைபேசிகளானது உலகம் பூராகவும் மிகவும் வேகமாக விற்பனையடைந்து வருவதும் போட்டியாளர்களை தனது வேகமான விற்பனை மூலம் அதிர்ச்சியடையச் செய்துவருவதும் நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.

இந்நிலையில் முதல் முறையாக அக் கையடக்கத் தொலைபேசிகளது 'ட்ரொஜன்' எனப்படும் தீங்கு நிரலினால் (மெல்வெயார்) தாக்கப்பட்டுள்ளதாக பிரபல மென்பொருள் பாதுகாப்பு நிறுவனமான கெஸ்பர்ஸ்கை அறிவித்துள்ளது.

இது 'ட்ரொஜன்'- எஸ்எம்எஸ்.அண்ட்ரோயிட் ஒஸ்.பேக்பிளேயர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேற்படி 'ட்ரொஜன்' ஆனது மீடியாபிளேயர் மென்பொருள்போல தோற்றமளிக்கும் ஒரு தீங்கு நிரலாகும். குறுந்தகவல்கள் மூலம் பாவனையாளரின் கையடக்கதொலைபேசியை அடையும் மேற்படி தீங்கு நிரலானது 13 கெபி அளவினைக்கொண்டதாகும்.

பிறகு அதன் பாவனையாளர்கள் அதனை தமது கையடக்கதொலைபேசிகளில் நிறுவும் (இன்ஸ்டால்) படி அறிவுறுத்தப்படுவர்.

அவ்வாறு அதனை நிறுவியதும் பாவனையாளர்கள் அறியாத வண்ணம் இரகசியமாகக் குறிப்பிட்ட பாவனையாளரின் கையடக்கதொலைபேசியிலிருந்து பல்வேறு பாவனையாளர்களுக்கு அது குறுந்தகவல்களை அனுப்பத் தொடங்கும்.

அந்த ஒவ்வொறு குறுந்தகவல்களும் 5 டொலர்கள் வரை நட்டத்தினை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெருந்தொகையை இழக்கநேரிடும். தற்போது இந்த 'ட்ரொஜன்' ரஸ்யாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவ்வகை கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் அவதானமாக இருக்கவேண்டுமென கெஸ்பர்ஸ்கை நிறுவனம் அறிவித்துள்ளது.

VK

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo