கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Aug 4, 2010

அகரவரிசை கீ போர்டுடன் மொபையில் போன் அறிமுகம்

பட்ஜெட் விலையில், குவெர்ட்டி கீ போர்டுடன் கூடிய இரண்டு சிம் மொபைல் போன்கள், இன்றைய நிலையில் மொபைல் சந்தையில் சக்கை போடு போட்டுக் கொண்டுள்ளன. இந்நிலையில் லாவா நிறுவனம், அகர வரிசை கீ போர்டுடனும் தன் லாவா 2 மற்றும் லாவா 5 மாடல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

விரும்புபவர்களுக்கு குவெர்ட்டி கீ போர்டுடனும் இந்த போன்கள் கிடைக்கின்றன. பொதுவாக குவெர்ட்டி கீ போர்டு டைப்ரைட்டிங் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கூடுதல் வசதி அளித்து வருகிறது. மற்றபடி டைப்ரைட்டிங் தெரியாதவர்களுக்கு, அகரவரிசையில் கீ போர்டு இருப்பது, உதவியாய் உள்ளது. இதனை அறிந்த லாவா நிறுவனம், மிகச் சரியாக அகரவரிசை கீ போர்டுடன், மொபைல்களை வடிவமைத்துத் தருகிறது.

இவை இரண்டிலும் 2.2 அங்குல டி.எப்.டி. ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் இரண்டு சிம்களைப் பயன்படுத்தும் வசதி, எப்.எம். ரேடியோ, புளுடூத், மொபைல் ட்ரேக்கர் , எல்.இ.டி. டார்ச் ஆகியன தரப்படுகின்றன. இவற்றில் லாவா பி5 மாடலில், 2 எம்பி திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. இதில் உள்ள மியூசிக் பிளேயர் MP3, MP4, AVI, 3GP, MIDI மற்றும் AMR ஆகிய பார்மட்களை சப்போர்ட் செய்கிறது.

ஆனால் பி2 மாடலில் 1800mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. இதனால் பல நாட்கள் போனை சார்ஜ் செய்திடாமல் பயன்படுத்த முடிகிறது. பி 5 மாடலில் 1400mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது. லாவா பி2 விலை ரூ.3,999 மற்றும் லாவா பி5 ரூ. 4,399 எனக் குறியிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo