கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Mar 16, 2009

கணினி நுட்ப தகவல்கள்

நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளங்களான Windows XP, Vista போன்றவற்றை
உபயோகிக்கிறோம். ஆனால் எல்லோருமே Linux பற்றிய செய்திகளை அவ்வப்போது
அறிந்துகொண்டிருக்கிறோம். விண்டோஸுக்கும் லினக்ஸுக்கும் இடையே உள்ள
வேற்றுமைகளை இங்கே காணலாம்.

1. Linux என்பது முற்றிலுமாக திறந்தநிலை மூலவரைவு மென்பொருள் (Open
Source). முழுக்க முழுக்க இலவசம். விண்டோஸைப் பணம் கொடுத்து வாங்கிப்
பயன்படுத்த வேண்டும்.ஆனால் இணையத்தில் இருந்து லினக்ஸுக்கான ஐ.எஸ்.ஓ.
கோப்பினை (ISO) இணையிறக்கி (download) அதனை ஒரு CD / DVD யில் பதிவு
செய்து அதன் மூலம் நிறுவிப் பயன்பெறலாம்.

2. லினக்ஸுடன் அதனுடனே ஒருங்கிணைந்தே ஏராளமான இலவசப் பயன்பாடுகளும்
கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக PDF Reader, Web Server, Compilers, IDE
போன்றவை. இதற்காக நாம் தனியாக எதையும் இணையிறக்கவோ, பணம் கொடுத்து
வாங்கவோ தேவையில்லை. உபுண்டு லினக்சுடன் Open Office பயன்பாடும் சேர்ந்தே
வருகிறது. இது மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு சவாலான ஒரு மாற்று மென்பொருள்

3. Virus, Spyware, Adware போன்றவை லினக்ஸ் இயங்குதளத்தைப்
பாதிப்பதில்லை. இதனால் antivirus நிறுவி அதன் மூலம் கணினியின் திறன்
குறையும் சிக்கல் லினக்ஸில் இல்லை/

4. விண்டோஸ் விஸ்ட்டாவோ, எக்ஸ்ப்பியோ பயன்படுத்துவதற்கு 1 முதல் 4 GB
வரையிலான நினைவகம் இருந்தும் அதன் வேகம் பல நேரங்களில் மூச்சுத்திணறும்.
குறைந்த நினைவகம் (RAM), குறைந்த திறன் கொண்ட Processor உடைய கணினியிலும்
Ubuntu லினக்ஸானது மிக வேகமாக இயங்குகிறது.

5. விண்டோஸைக் காட்டிலும் லினக்ஸில் இயங்குதளப் பிரச்சினைகள் வருவது
அரிது. உதாரணமாக நீலத்திரைப் பிழைச் செய்திகள் (Blue screen errors)
விண்டோசில் அடிக்கடி வரும். ஆனால் லினக்சில் இல்லவே இல்லை. இதனால்தான்
வெப்சர்வர்களை (web server) நிறுவுபவர்கள் லினக்சையே விரும்புகிறார்கள்.

6. நீங்கள் Programing கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புவீர்களானால்
உங்களுக்கு லினக்ஸே ஏற்புடையது. லினக்ஸுடன் ஏகப்பட்ட Compilers,
கருவிகளும் இலவசமாகக் கொடுக்கப்படுவதால் அதன் மூலம் நீங்கள் எளிய
முறையில் நிரல்களை எழுதி இயக்கிப் பார்க்கலாம்.C மொழியில் நிரல் எழுதிப்
பார்ப்பதற்கும், அதை ஓட்டிப்பார்ப்பதற்கும் gcc கம்பைளர்
கொடுக்கப்பட்டுள்ளது. லினக்ஸின் vi editor வழியாக நிரலினை எழுதிப்
பார்க்கலாம். python மொழியைக் கற்பதற்கான பைத்தான் IDE நிறுவிப்
பயன்படுத்தலாம்.

7. லினக்ஸுக்கான பகிர்ந்தளிப்பு (distribution) மிக வேகமானது. புதிய
புதிய versions வருடத்திற்கு இரண்டுமுறையாவது வந்துகொண்டிருக்கின்றன.

8. உலகமெங்கும் லினக்ஸிற்கான விசிறிகள் (fans) ஏராளமாக இருக்கின்றனர்.
லினக்ஸ் தொடர்புடைய இணையக் குழுமங்கள் (forum,groups), வலைப்பூக்கள்
எக்கச்சக்கமாக உள்ளன. உங்களுக்கு லினக்ஸ் பற்றி ஏதேனும் சந்தேகம்,
பிரச்சினை ஏற்பட்டால் அதனைத் தீர்த்து வைக்க அவர்கள் எந்த நேரமும்
காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

9. இப்படி இருந்து நீங்கள் இன்னமும் விண்டோஸை விரும்பினீர்கள் என்றால்
அதற்காக ஒரே வன்வட்டில் (hard disk) இரண்டு இயங்குதளங்களை நிறுவிக்கொண்டு
விண்டோஸ் தேவைப்படும்போது அதற்கும், லினக்ஸ் தேவைப்படும்போது இதற்கும்
மாறிமாறிப் பயன்படுத்தும் வழிவகை உண்டு. இதற்கு இரட்டை பூட்டிங்க் (dual
booting) முறை என்று பெயர். மேலும் விண்டோசில் இருந்தபடி அதனுள்ளே
லினக்ஸை நிறுவி அங்கிருந்தபடியே இயக்கிப்பார்க்கும் வழிவகையும் உண்டு.
இதற்கு VMWare / Microsoft Virtual PC போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

இது போல லினக்ஸில் இருந்தபடி விண்டோஸை இயக்குவதற்கு Wine எனப்படும்
emulatorம் உண்டு.

10. புது அனுபவத்திற்காகவே லினக்ஸை நிறுவிப் பயன்படுத்திப்
பார்ப்பவர்களும் உண்டு. பின் அதனுடன் மிகுந்த ஈடுபாடு கொண்டு லினக்ஸ்
விசிறிகளாக மாறியவர்கள் ஏராளம். இது போக லினக்ஸில் கட்டளைகளைக் கொடுத்து
இயக்கும் terminal வசதியும் உண்டு. அதன் மூலம் லினக்சின் முழுத்
திறனையும் நாம் பெறலாம்.

Leia mais...

நட்பு ஒரு சுமையல்ல

அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo