கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Oct 6, 2011

கொள்வனவாளர்களை ஏமாற்றிய அப்பிள்: ஐ போன் 4 எஸ் ஈர்ப்பில்லை


இவ்வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியாகக் கருதப்பட்ட அப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 4எஸ் (I phone 4S) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இக் கையடக்கத் தொலைபேசி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டமைக்கு 2 முக்கிய காரணங்களைக் குறிப்பிடலாம்.

சுமார் 1 வருடத்திற்கும் அதிகமான இடைவெளியின் பின்னர் வெளியாகும் ஐ போன் அதன் கையடக்கத்தொலைபேசியென்பதுடன், ஸ்டீவ் ஜொப்ஸ் அப்பிள் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகிய பின்னர் டிம் குக் அப்பதவியை ஏற்றவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட உற்பத்தியென்பதுமாகும்.

எனினும் இவ் எதிர்பார்ப்புகள் இரண்டும் வெற்றியளித்ததா என்பது சற்று சந்தேகத்துக்குரிய கேள்வியாக மாறியுள்ளது.

ஆம், பல எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகிய ஐ போன் 4 எஸ்அப்பிளின் ஐ போன் கையடக்கத் தொலைபேசி வரிசையின் அடுத்த வெளியீடாகும்.

பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் குறிப்பாக புதிய தோற்றத்துடன் முன்னரை விட பெரிய திரையைக் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அனைவரது எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கும் வகையில் ஐ போன் 4 வின் தோற்றத்தினையே ஐ போன் 4 எஸ் கொண்டுள்ளது.

எனினும் அப்பிளின் புதிய ஐ. ஓ .எஸ் 5 இயங்குதளத்தின் மூலம் இது இயங்குகின்றது.

மேலும் 200 இற்கும் அதிகமான புது வசதிகளை இது கொண்டதாக அப்பிள் குறிப்பிடுகின்றது.

அதில் குறிப்பிடக்கூடியவையாக

1.டுவல் கோர் எ 5 சிப் ( ஐ பேட் 2) முன்னையவற்றை விட இருமடங்கு வேகமான செயற்பாடு மற்றும் 7 மடங்கு வேகமான கிரப்பிக்ஸ்.

2. 8 மெகா பிக்ஸல் கெமரா, 1080 HD வீடியோ பதிவு செய்யக்கூடியது.

3. சைரி (siri) எனப்படும் எங்களது குரலை புரிந்து கொண்டு அதற்கேற்ப அழைப்புகளை மேற்கொள்ளும்,குறுந்தகவல்களை அனுப்ப, மற்றைய தகவல்களை வழங்கும் வசதி.

இவற்றில் அப்பிள் பெரிதும் நம்பியிருப்பது சைரி (siri) எனப்படும் வசதியினையே ஆகும். இத்தகைய வசதி ஏற்கனவே அண்ட்ரோயிட் கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள போதிலும் அப்பிள் இத்தொழிநுட்பத்தை நன்கு மேம்படுத்தியுள்ளது.

அதாவது நமக்கு தேவையான விடயங்களை ஞாபகப்படுத்தும், கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இவ்வசதியுள்ளது.

பலவசதிகள் பற்றி அப்பிள் கூறிய போதிலும் அதன் தோற்றம் கொள்வனவாளர்களைப் பெரிதும் ஈர்க்கவில்லையென்றே தோன்றுகின்றது.

மேலும் அப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையானது முதலீட்டாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் புதிய உற்பத்தி மீது நாட்டம் கொள்ளவில்லையென்பதனைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கு மேலும் எதிர்பார்க்கப்பட்ட விடயம் என்னவெனில் ஐ போன் 4 எஸ் இனை அறிமுகப்படுத்திய நபராவார். ஆம் ஸ்டீவ் ஜொப்ஸ் வெளியேறியதன் பின்னர் அப்பதவியை பெற்ற டிம் குக் ஐ போன் 4 எஸ் இனை இம்முறை அறிமுகப்படுத்தினார்.

பொதுவாக ஸ்டீவ் ஜொப்ஸ் அறிமுகப்படுத்தியபோது அப்பிளின் உற்பத்திகளுக்கு அதற்கென தனி எதிர்பார்ப்பு மற்றும் தனியானதொரு கவர்ச்சி காணப்பட்டது. அதற்கு அவரது சந்தைப்படுத்தல் நுணுக்கங்கள் பேச்சுத் திறன் மற்றும் தொழிநுட்ப அறிவாற்றல் என்பவையே காரணமாயின.

எனினும் இம்முறை டிம்குக் மற்றும் அவருடன் இணைந்து ஐ போனை அறிமுகப்படுத்திய அப்பிள் உற்பத்திகளின் உலகளாவிய சந்தைப்படுத்தலுக்கான சிரேஸ்ட உபதலைவர் பிலிப் ஸ்கிலர் ஆகியோர் அந்தளவு தாக்கத்தினை ஏற்படுத்தினரா என்பது சந்தேகமே.

அண்ட்ரோயிட் இயங்குதளத்தின் ஆதிக்கம் சந்தையில் அதிகரித்துவரும் நிலையில் அப்பிள் இத்தகைய உற்பத்தியொன்றினை வெளியிட்டுள்ளது.

எது எவ்வாறெனினும் பொருளொன்றின் வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிப்பது நுகர்வோரே. எனவே அப்பிள் ஐ போன் 4 எஸ் வரவேற்பைப் பெறுகின்றதா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

VK

Leia mais...

Oct 4, 2011

கதிர் வீச்சு அளவினைக் கண்டறியும் கையடக்கத் தொலைபேசி


ஜப்பானிய கையடக்கத்தொலைபேசி ஜாம்பவானான என்.டி.டி. டொகோமோ கதிர்வீச்சு அளவினைக் கண்டறியக்கூடிய கையடக்கத் தொலைபேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

Leia mais...

Sep 8, 2011

கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது என்று தெரிய வேண்டுமா?

 உங்கள் கம்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு கண் வைத்திருங்கள். இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றன. அதில் ஒன்று co2saver என்ற மென்பொருள் கீழே உள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இது மொத்தத்தில் நீங்கள் எவ்வளவு மின் சக்தியினைப் பயன்படுத்துகிறீர்கள், அதிகம் எங்கே செலவாகிறது என்று காட்டி, நம்மைக் குறைவாகப் பயன்படுத்தத்தூண்டும்.


Write By :Pradeep
http://tamilitnews.com/

Leia mais...

Sep 7, 2011

சொனி அறிமுகப்படுத்தியுள்ள புதுவித டெப்லட்

சந்தையில் டெப்லட் கணனிகளுக்கான கேள்வியை தொழிநுட்ப நிறுவனங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளன.

இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நிறுவனங்கள் பல்வேறு வசதிகளுடன் கூடிய டெப்லட் கணனிகளை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

Leia mais...

இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு


கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.

அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.

Leia mais...

பயர்பொக்ஸ் உலாவியில் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்களை கையாள்வதற்கு

பயர்பொக்ஸ் உலாவியில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை நிர்வகிப்பதற்காக புதியதொரு நீட்சி அறிமுகமாகியுள்ளது.

உதாரணத்திற்கு புதிய கடவுச்சொற்களை தருதல் மற்றும் இருக்கும் கடவுச்சொற்களை எடிட் செய்தல், ஒரு கடவுச்சொல் என்ரியை மற்றொரு தளத்திற்கு கொப்பி செய்தல் போன்றவற்றை செய்வதற்கு உதவுகிறது.

Leia mais...

Sep 6, 2011

ஓடியோ கோப்புகளின் மூலம் டிவிட் செய்வதற்கு

உள்ளூர் பிரபலங்கள் முதல் உலக பிரபலங்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் டிவிட்டரில் இனி ஓடியோ டிவிட் செய்யலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

ஓன்லைன் மூலம் உடனுக்கூடன் கீச் கீச் என்று தகவல்களை நம் கூட்டணியில் உள்ள அனைவரிடமும் எளிதாக பகிர்ந்து கொள்ள உதவும் சோசியல் மீடியாவான டிவிட்டரில் ஓடியோ டிவிட் செய்ய ஒரு தளம் உதவுகிறது.

Leia mais...

வைரஸ் தாக்கிய பென்டிரைவில் கோப்புகளை மீட்டெடுப்பதற்கு

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை.

வெவ்வேறான கணணிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் கோப்புகளை பாதிக்கிறது.

இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணணியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த கோப்புகளும் இருக்காது. காலியாக இருக்கும்.

Leia mais...

Aug 26, 2011

புதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 6 பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு..


அண்மையில் பயர்பொக்ஸ் உலாவியின் 6 வது பதிப்பை வெளியிட்டது மொஸிலா நிறுவனம்.
பயர்பொக்ஸ் 5இல் இருந்த ஆயிரக்கணக்கான குறைகளை சீர் செய்து இப்புதிய பதிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கிறது மொஸிலா நிறுவனம்.
அதிக வேகம், லினக்ஸ் இயங்குதளத்திலும் வேகமாக இயங்குதல் போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும். மேலும் அண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இயங்கக் கூடிய பதிப்பையும் வெளியிட்டப்பட்டுள்ளது. 


எவ்வாறாயினும் பயர்பொக்ஸ் பதிப்புக்களில் பாரிய மேம்படுத்தல்கள் இல்லாத போதும் ஏனைய உலாவிகளுடன் இருக்கும் போட்டித்தன்மையை தக்க வைப்பதற்காகவே மொஸிலா நிறுவனம் இப்பதிப்புக்களை வேகமாக வெளியிடுவதாக கூறப்படுகிறது. 

Leia mais...

கூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே தடவையில் தரவிறக்கம் செய்வதற்கு

கூகுள் தளம் வாசகர்களுக்காக சில பயனுள்ள மென்பொருட்களை அளிக்கிறது. இந்த மென்பொருட்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய முடியும்.

இந்த பட்டியலில் கூகுளின் மென்பொருட்கள் மட்டுமின்றி கூகுள் பரிந்துரை செய்யும் சில பயனுள்ள மென்பொருட்களும்(Firefox, Avast, Skype) உள்ளன.

இந்த மென்பொருட்களையும் நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த Packல் 14 இலவச மென்பொருட்கள் உள்ளது. இதில் 6 மென்பொருட்கள் கூகிளின் மென்பொருட்களாகும். இதர மென்பொருட்கள் வேற்று நிறுவனங்களின் மென்பொருட்கள். விண்டோஸ் XP, Vista, 7 ஆகிய இயங்கு தளங்களில் இந்த மென்பொருளை நிறுவலாம்.

இந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கீழே கொடுத்துள்ள லிங்கில் செல்லுங்கள். அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் மென்பொருட்களின் பட்டியல் இருக்கும்.

அதில் உங்களுக்கு தேவையான உங்கள் கணணியில் இல்லாத மென்பொருட்களை டிக் செய்து கொள்ளுங்கள்.

தேவையானதை டிக் செய்து கீழே உள்ள தரவிறக்க பட்டனை அழுத்தினால் போதும் நீங்கள் டிக் செய்த மென்பொருட்கள் உங்கள் கணணியில் தரவிறக்கம் ஆகிவிடும். பின்பு இன்ஸ்டால் செய்து நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்


from:-lankatech

Leia mais...

Aug 3, 2011

வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்.

 வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி  அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள்  நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

மென்பொருள் தறவிரக்க முகவரி:  http://www.lightworksbeta.com/

இத்தளத்திற்கு சென்று Download now என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும் , இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை  ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது. வீடியோ எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Leia mais...

1913 தொடக்கம் 2010 வரை வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் (தொகுப்பு06)

 1945 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள்

 • என் மகன்

 • கண்ணம்மா என் காதலி

 • சாலிவாகனன்

 • சௌ சௌ

 • கலிகால மைனர்

 • பள்ளி நாடகம்

 • சூரப்புலி

 • பக்த காளத்தி

 • பர்மா ராணி

 • பரஞ்சோதி

 • மஹா மாயா

 • மானசம்ரக்சணம்

 • மீரா

 • ஸ்ரீவள்ளி

 1946 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள்

 • அர்த்தனாரி

 • ஆரவல்லி சூரவல்லி

 • உதயணன் வாசவதத்தா

 • குமரகுரு

 • குண்டலகேசி

 • சகடயோகம்

 • சுபத்ரா

 • ஸ்ரீ முருகன்

 • ராம் ரஹிம்

 • ருக்மாங்கதன்

 • வைங்கி

 • வால்மீகி

 • வித்யாபதி

 • விஜயலட்சுமி

 • விகடயோகி
  1947 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள் 


 •     ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
 •     ஏகம்பவாணன்
 •     கஞ்சன்
 •     கன்னிகா
 •     கடகம்
 •     கங்கணம்
 •    குண்டலகேசி
 •     சண்பகவல்லி
 •    சித்ரபகாவலி
 •     சுறுசுறுப்பு
 •     சுலாசனா
 •     தன அமராவதி
 •     தாய்நாடு
 •     தியாகி
 •     துளசி ஜலந்தர்
 •     தெய்வ நீதி
 •     நாம் இருவர்
 •     பக்த துளதிதாஸ்
 •     பங்கஜவல்லி
 •     பிரம்மரிஷி விஸ்வாமித்ரா
 •     பைத்தியக்காரன்
 •     பொன்னருவி
 •     மதனமாலா
 •     மகாத்மா உதங்கர்
 •     மலைமங்கை
 •     மிஸ் மாலினி
 •     ராஜகுமாரி
 •     ஸ்ரீ லட்சுமி விஜயம்
 •     விசித்ர வனிதா
 •     வீர வனிதா
 •     வேதாளபுரம்
 •     ஜம்பம்
 •     ருக்மாங்கதன்
 •     ஜீவஜோதி


Leia mais...

பேஸ்புக் நண்பர்களின் ஸ்கைப் முகவரியை கண்டறிவதற்கு

 
நாம் பேஸ்புக்கில் பல நண்பர்களுடன் தொடர்பில் இருப்போம். ஆனால் அவர்களில் நாம் விரும்பும் நபரோடு முகம் பார்த்து பேச விரும்பினால் இலகுவாக தொடர்பு கொள்ள ஸ்கைப்பை தான் அனைவரும் விரும்புவோம்.

ஆனால் பேஸ்புக்கில் இருக்கிற அனைவரும் தங்கள் ஸ்கைப் முகவரியை பேஸ்புக் சுயவிபர குறிப்பில் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆகவே அதை எவ்வாறு பெறுவது? இதற்கு ஸ்கைப்பிலே வசதி உள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது ஸ்கைபிலே சென்று contacts ->import contacts ஐ சொடுக்குங்கள். அதன் பின்னர் ஒரு விண்டோ தோன்றும்.

அதில் உங்கள் பேஸ்புக்கின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கொடுத்து import என்பதை அழுத்துங்கள்.

சற்று நேரத்திலே உங்கள் பேஸ்புக் தொடர்பில் உள்ளவர்களது மின்னஞ்சல் முகவரிகளுடன் ஸ்கைப் முகவரியையும் வெளிக்காட்டும்.

Lankatech

Leia mais...

May 17, 2011

ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய ஒரு தளம்

ஆடியோ பைல்களை ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளின் உதவியை மட்டுமே நாடி செல்ல வேண்டும். ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இணையத்தில் அதிகமான மென்பொருள்கள் கிடைக்கிறன. மென்பொருள்களின் உதவி இல்லாமல் ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது. நாம் சாதாரணமாக பாடல்களை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் கணினியில் மென்பொருளை நிறுவி அந்த மென்பொருளின் வாயிலாக கன்வெர்ட் செய்வோம். சில நேரங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளானது கிடைக்கபெறாது அதுபோன்ற சூழ்நிலைகளில் நண்பர்களின் உதவியை நாடி செல்ல வேண்டும். ப்ரெளங் மையங்களின் எந்தவித மென்பொருளையும் நிறுவ விடாமல் கணினியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள் அதுபோன்ற கணினிகளில் எவ்வாறு பாடல்களை கன்வெர்ட் செய்வது என்றால் அதற்கு ஒரே வழி ஆன்லைன் மட்டுமே ஆகும். அந்த வகையில் பாடல்களை கன்வெர்ட் செய்ய ஒருதளம் உதவி செய்கிறது.
தளத்திற்கான சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, உங்களுடைய பாடல்கோப்பினை தேர்வு செய்யவும். பின் எந்த பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். அடுத்ததாக மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். கடைசியாக Switch my file என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்களுடைய பாடலானது கன்வெர்ட் செய்யப்பட்டு உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பி வைக்கப்படும்.


http://tamilitnews.com/

Leia mais...

May 14, 2011

யூடியூப் வீடியோக்களை தேவையான போர்மட்டில் தரவிறக்க செய்வதற்கு

 
யூடியூப் இணையதளத்தில் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு ஏகப்பட்ட படங்கள் உள்ளன.

படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவருகிறதோ இல்லையோ இதில் முன்கூட்டியே வெளியிடப்படும். இதில் படங்களைப் பார்ப்பவர்கள் பிடித்திருந்தால் தரவிறக்க வேண்டும் என நினைப்பார்கள்.

சிலர் மென்பொருள்களின் மூலமும், சில இணையதளங்களின் மூலமாகவும் படங்களைத் தரவிறக்கம் செய்வார்கள். இதில் படங்கள் FLV என்ற வடிவத்தில் இருக்கும். இதனால் படங்களைத் தரவிறக்கி மறுபடியும் நமக்குப் பிடித்த வடிவத்திற்கு மாற்றுவோம்.

வேறு எந்த மென்பொருளின் துணையின்றியும் வேறு இணையதளத்திற்குச் செல்லாமலும் பயர்பொக்ஸ் உலவியில் ஒரு நீட்சியைச் சேர்ப்பதன் மூலம் எளிதாக யூடியூப் படங்களைத் தரவிறக்க முடியும். இந்த நீட்சியின் பெயர் Easy Youtube Video Downloader.

இதில் உள்ள சிறப்பு வசதி என்னவென்றால் பார்த்துக் கொண்டிருக்கிற படம் பிடித்திருந்தால் நேரடியாக படத்திற்கு கீழேயே தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பில் வேண்டிய வகையைத் தேர்வு செய்து தரவிறக்கலாம்.

Mp3, Mp4, FLV மற்றும் யூடியூபின் புதிய வசதியான High Definition வகையிலும் தரவிறக்க முடியும். சில படங்கள் HD யில் இல்லாமல் இருக்கும். அவற்றிற்கு கிழே HD என்ற வசதி மட்டும் இருக்காது.

பின்னர் பயர்பொக்ஸ் உலவியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து விட்டு யூடியூப் தளத்திற்குச் சென்று எதாவது ஒரு படத்தைக் கிளிக் செய்து பாருங்கள். வீடியோவிற்குக் கிழே Download as என்ற மெனு புதியதாக இருக்கும். அதில் வேண்டிய வடிவத்தைத் தேர்வு செய்தால் படம் உங்கள் கணணிக்கு எளிதாக தரவிறக்கப்படும்.

குரோம் உலவிக்கும் இந்த நீட்சி தரப்பட்டுள்ளது.

Lankatech

Leia mais...

விரைவில் அறிமுகமாகும் கடதாசி போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட கையடக்கத் தொலைபேசிகடதாசி போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி விஞ்ஞானிகள் சிலர் சாதனை புரிந்துள்ளனர்.

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரொயெல் வெர்டெகல் என்பவர் இதனை இவ்வாரம் நடைபெறவுள்ள கணனிக் கண்காட்சி ஒன்றில் அறிமுகம் செய்யவுள்ளார்.

இக்கையடக்கத்தொலைபேசியானது அரிசோனா பிராந்திய விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடனுமே உருவாக்கப்பட்டுள்ளது.

மெல்லிய பாரங்குறைந்த புகைப்படச் சுருள் போன்ற ஒன்றாலேயே இக் கையடக்கத்தொலைபேசி உருவாக்கப்பட்டுள்ளது.

கடதாசி போல நெகிழ்வுத்தன்மை கொண்டதால் இது 'பேப்பர் போன்' என அழைக்கப்படுகின்றது. இதன் மூலம் அழைப்புக்களை மேற்கொள்ளுதல், இலத்திரனியல் புத்தகங்களை சேமித்தல், பாடல்களை செவிமடுத்தல் போன்ற பல செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியும்.

கடனட்டை ஒன்றினைப்போன்ற மெலிதான இதில் 3.7 அங்குலமான திரையும் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் பலவற்றைக் கொண்ட போதிலும் இதனை உருவாக்க ஏற்பட்ட செலவு 7000 முதல் 10,000 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. virakesari.com

Leia mais...

Apr 30, 2011

1913 தொடக்கம் 2010 வரை வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் (தொகுப்பு05)

1942 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள் 
 1. அல்லி விஜயம்
 2. அனந்தசயனம்
 3. ஆனந்தன்
 4. ஆராய்ச்சி மணி (மனுநீதி சோழன்)
 5. என் மனைவி
 6. கங்காவதார்
 7. கண்ணகி
 8. காலேஜ் குமாரி
 9. கிருஷ்ணபிடாரன்
 10. சம்சாரி
 11. சன்யாசி
 12. சதி சுகன்யா
 13. சிவலிங்க சாட்சி
 14. சோகா மேளர்
 15. தமிழறியும் பெருமாள்
 16. தாசிப்பெண் (ஜோதிமலர்)
 17. கிழட்டு மாப்பிள்ளை
 18. நந்தனார்
 19. நாடகமேடை
 20. பக்த நாரதர்
 21. பஞ்சாமிர்தம்
 22. திருவாழத்தான்
 23. பிருத்விராஜன்
 24. பூகைலாஸ்
 25. மனமாளிகை
 26. மனோன்மணி
 27. மாயஜோதி
 28. ராஜசூயம்

 1943 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள்
 • அக்ஷயம்
 • அருந்ததி
 • அசட்டுப்பிள்ளை
 • உத்தமி
 • காரைக்கால் அம்மையார்
 • குபேர குசேலா
 • சிவகவி
 • ஜோதிமலர்
 • திவான் பகதூர்
 • தேவகன்யா
 • மங்கம்மா சபதம்

1944 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள்

 • தாசி அபரஞ்சி
 • பர்த்ருஹரி
 • பக்த ஹனுமான்
 • பிரபாவதி
 • பூம்பாவை
 • மகாமாயா
 • ராஜ ராஜேஸ்வரி
 • ஜகதலப்பிரதாபன்
 • ஹரிதாஸ்
 • ஹரிச்சந்திரா

Leia mais...

Apr 23, 2011

வகை வகையாய் வைரஸ்கள்

1.ADWARE: கம்ப்யூட்டர் பயன் படுத்துபவரின் அனுமதியின்றி, அவர் அறியாமலேயே, பதியப்படும் ஒரு புரோகிராம். ஒருவரின் இணையத் தேடல்கள் குறித்த தகவல்களை அறிய இந்த புரோகிராம்கள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரின் விருப்பங்களை அறிந்து கொண்டு, விளம்பரங்களைத் தரும். இந்த தொல்லை மட்டுமின்றி, நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டினையும், நமக்குத் தேவை எதுவும் இன்றி எடுத்துக் கொள்ளும். Trackng cookies என்பவையும் இதில் சேரும்.

2. BACKDOOR SANTA: இணையத்தில் கிடைக்கும் புரோகிராமின் பயன்களை விரும்பி, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்துவீர்கள். அப்போது அதே புரோகிராம், உங்களை அறியாமலேயே, உங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடு, நீங்கள் செல்லும் இணைய தளங்கள், நீங்கள் இணையத்தில் வாங்கும் பொருட்கள் போன்ற தகவல்களைத் திரட்டும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம் இந்த வேலையை மேற்கொள்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. Alexa மற்றும் Hotbar போன்றவை இத்தகைய புரோகிராம்களே. உங்களுடைய பிரவுசரின் டூல்பாரில், நீங்கள் எதிர்பார்க்காமல், இந்த டூல்பார்களில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தால், பேக் டோர் சாண்டா உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளதாகப் பொருள். உடனே Add/Remove Programs சென்று அதனை நீக்கவும்.

3. BHO: இதனை விரித்தால் Browser Helper Object என்று கிடைக்கும். நீங்கள் உங்கள் பிரவுசரை விரித்தவுடன் இதுவும் இயங்கும். சில பி.எச்.ஓ.க்கள் நமக்கு உதவுபவை. ஆனால் சில புரோகிராம்கள், நம்மை இணையத்தில் திசை திருப்பி, பாலியல் தளங்களில் கொண்டு சென்றுவிடும். உங்கள் கம்ப்யூட்டரை இது ஹைஜாக் செய்துவிட்டால், கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக இயங்கத் தொடங்கும். சில ட்ரோஜன் வைரஸ்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் வேலையை முடிக்கும்.

4. BLENDED THREAT: கம்ப்யூட்டரில் அதிக பட்ச சேதம் விளைவிக்கும் தாக்குதல். வைரஸ் மற்றும் வோர்ம் இணைந்து செயல்படுவது போல இயங்கும். இது இமெயில் வழியே வைரஸை பரப்பும். Nடிட்ஞீச் என்பது இத்தகைய தாக்குதல் ஆகும். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் புரோகிராமினை வேகமாகப் பரவிவிடும்.

5. BOTNETS: குழுவாக நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை, ஹேக்கர்கள் கைப்பற்றியபின் இவ்வாறு அழைக் கின்றனர். ஹேக்கர்கள் இவற்றைத் தங்கள் இஷ்டப்படி ஆட்டுவிப்பார்கள். அந்த நெட்வொர்க் ஒரு ரோபோ ("robot network")போலச் செயல்படும். இதனால் தான் இதற்கு இந்த பெயர் வந்தது.

6. BROWSER HIJACKER: இந்த புரோகிராம், நாம் பிரவுசர் மூலம் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இந்த புரோகிராமினை அனுப்பியவரின் இணைய தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். மீண்டும் நாம் இயங்கிய தளங்களுக்கு வர முடியாது. அது மட்டுமின்றி, நம் பிரவுசர் செட்டிங்குகளையும் மாற்றிவிடும். நம் ஹோம் பக்கத்தை மாற்றிவிடும். நாமாக அதனை பழையபடி மாற்றினால், மீண்டும் அது செட் செய்திடும் தளத்தினை ஹோம் பேஜாக அமைத்துவிடும்.

7. ADWARE COOKIES:  பொதுவாக குக்கிகள் என்பவை, சில இணைய தளங்களால், நம் கம்ப்யூட்டரில் பதியப்படும் சிறிய பைல்கள். இவை உங்கள் கம்ப்யூட்டர் குறித்த தகவல்களை அந்த இணைய தளத்திற்கு அனுப்புவதற்காக பதியப்படுபவை. ஆனால் சில இணைய தளங்கள் Adware tracking cookies பதிந்துவிடுகின்றன. இவை நீங்கள் இணையத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்த தகவல்களை அவர்களுக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் விளம்பரங்களை அந்த தளங்கள் உங்களுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். Adware Cookies எப்போதும் மோசமானவை என்று கருத முடியாது. ஆனால் நிச்சயம் இவை உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைச் சிறிது மந்தப்படுத்தும்.

8. DIALERS: ஒருவகையான சிறிய சாப்ட்வேர் புரோகிராம். இது நம் அனுமதியின்றி, நம் மோடம் மூலமாக தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் சில இணைய தளங்களுக்கு நம்மை கொண்டு செல்லும். பாலியல் தளங்களுக்குத்தான் பெரும்பாலும் இவை தொடர்பு அளிக்கின்றன. தொலைபேசி வழியாக இன்டர்நெட் இணைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இதனால் தொல்லை ஏற்படும். இந்தியாவில் தொலைபேசி வழி இணைப்பு இருந்த போதும், இந்த வகை தொல்லை இருப்பதாகத் தகவல் இல்லை.

7. GRAYWARE: இது தனிப்பட்ட ஒரு தொல்லை தரும் வைரஸாகத் தெரியவில்லை. பொதுவாக தடை செய்யப்பட வேண்டிய, நம் பணியை நாசம் செய்யக் கூடிய சிறிய புரோகிராம்களை இந்த சொல் கொண்டு அழைக்கலாம். மேலே சொல்லப்பட்ட அட்வேர், டயலர்கள் போன்றவை இந்த பெயரில் அடங்கும்.

8. KEYLOGGERS: நாம் கம்ப்யூட்டர் கீ போர்டில் அழுத்தும் அனைத்து கீகளையும் அப்படியே அவை எந்த கீகள் என்று பதிந்து, இந்த புரோகிராமினைப் பதிந்தவர்களுக்குக் காட்டும். நம் குழந்தைகள் கம்ப்யூட்டரில் என்ன வகை சாப்ட்வேர்களை இயக்குகிறார்கள், எந்த தளங்களுக்குச் செல்கிறார்கள் என்று கண்டறிய, இதனை நாம் பயன்படுத்தலாம். நிறுவனங்களில் தங்கள் ஊழியர்கள், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்த புரோகிராம்கள் பதியப்படுகின்றன. சில கீ லாக்கர்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. சில கட்டணம் செலுத்தினால் மட்டுமே கிடைக்கும்.

9. MALWARE: Malicious Software என்பதன் சுருக்கம். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் அனுமதியின்றி, கம்ப்யூட்டரில் இறங்கி, தீங்கு விளைவிக்கும் அனைத்து புரோகிராம்களும் இதில் அடக்கம்.

10. STALKING HORSE: : இவை பிரபலமான புரோகிராம் களுடன் இணைந்து கம்ப்யூட்டரில் வந்து தங்கும். கூடுதல் வசதிக்காக இது உள்ளது என்று அறிவிக்கப்படும். ஆனால் நம் வேலைகளின் தன்மை குறித்து, புரோகிராம் தந்த நிறுவனத்திற்குத் தகவல் அனுப்பி, பின் விளம்பரங்களை அனுப்பி வைக்கும்.

www.itamil.com 

Leia mais...

Apr 19, 2011

1913 தொடக்கம் 2010 வரை வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் (தொகுப்பு04)

  1940 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள் 


 • அபலை
 • உத்தமபுத்திரன்
 • ஊர்வசி சாகசம்
 • காள மேகம்
 • கிருஷ்ணன் தூது
 • நவீன தெனாலிராமன்
 • சந்திரகுப்த சாணக்யா
 • தறுதலை தங்கவேலு
 • சகுந்தலை
 • சதி மகானந்தா
 • சதி முரளி
 • சத்யவாணி
 • தமிழ் தாய் (மாத்ரூ தர்மம்)
 • தானசூர கர்ணா
 • திலோத்தமா
 • திருமங்கை ஆழ்வார்
 • தேச பக்தி
 • துபான் குயின்
 • நவீன விக்ரமாதித்தன்
 • புத்திமான் பலவான் ஆவான்
 • நீலமலைக் கைதி
 • பக்த தேசா
 • பக்த கோரகும்பர்
 • பக்த துளசிதாஸ்
 • பக்தி (அம்பரீஷன் சரித்திரம்)
 • பரசுராமர்
 • பாக்கியதாரா
 • பால்ய விவாகம்
 • பூலோக ரம்பா
 • மணிமேகலை (பாலசன்யாசி)
 • மீனாட்சி கல்யாணம்
 • மும்மணிகள்
 • இரண்டு அணா
 • பாலபக்தன்
 • டாக்டர்
 • ராஜயோகம்
 • வாயாடி
 • போலி பாஞ்சாலி
 • எஸ்.எஸ்
 • வாமன அவதாரம்
 • விக்ரம ஊர்வசி (ஊர்வசியின் காதல்)
 • விமோசனம்
 • ஜ.சி.எஸ்.மாப்பிள்ளை
 • ஷியாம் சுந்தர்
 • ஷைலக்
 • ஹரிஹரமாயா
 • ஹரிஜன சிங்கம்
 • ஜெயபாரதி
 • ஜெயக்கொடி
  1941 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள் 


 • அசோக்குமார்
 • அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
 • ஆர்யமாலா
 • இழந்த காதல்
 • சுந்திர ஹரி
 • கச்சதேவயானி
 • கதம்பம்
 • காமதேனு
 • கிருஷ்ணகுமார்
 • குமாஸ்தாவின் பெண்
 • கோதையின் காதல்
 • சபாபதி
 • சாந்தா
 • சாவித்திரி
 • சுபத்ரா அர்ஜூனா
 • சூர்யபுத்திரி
 • தர்மவீரன்
 • தயாளன்
 • திருவள்ளுவர்
 • பக்த கௌரி
 • பிரேமபந்தம்
 • மதனகாமராஜன்
 • மந்திரவாதி
 • மணிமாலை
 • அஷ்டாபூதி
 • மைனரின் காதல்
 • அப்பூதி
 • நவீன மார்க்கண்டேயா
 • மானசதேவி
 • ராஜாகோபிசந்
 • ராவண விஜயம்
 • ரிஷ்யசிருங்கர்
 • வனமோகினி
 • வேதவதி (சீதா ஜனனம்)
 • வேணுகானம்

Leia mais...

Apr 18, 2011

1913 தொடக்கம் 2010 வரை வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் (தொகுப்பு03)

  1938 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள் 


 • அனாதைப் பெண்
 • அதிருஷ்ட நட்சத்திரம்
 • என் காதலி
 • முட்டாள் மாப்பிள்ளை
 • ஏசுநாதர்
 • கம்பர் (கல்வியின் வெற்றி)
 • கந்தலீலா
 • கண்ணப்ப நாயனார்
 • குற்றவாளி
 • சுவர்ணலதா
 • சேவாசதனம்
 • தட்சயக்ஞனம்
 • தசாவதாரம்
 • தாயுமானவர்
 • துளசி பிருந்தா
 • துகாரம்
 • தெனாலிராமன்
 • தேசமுன்னேற்றம்
 • நந்தகுமார்
 • பஞ்சாப் கேசரி
 • பாக்ய லீலா
 • பக்த மீரா
 • ஷோக் சுந்தரம்
 • கிராம விஜயம்
 • பக்த நாமதேவர்
 • பூகைலாஸ்
 • போர்வீரன் மனைவி (அசட்டு வீரன் மனைவி)
 • மட சாம்பிராணி
 • மயூரத்துவஜா
 • மாய மாயவன்
 • மெட்ராஸ் சி. ஜ. டி
 • யயாதி (திரைப்படம்)
 • ராஜதுரோகி (தர்மபுரி ரகசியம்)
 • ஸ்ரீ ராமானுஜர்
 • வனராஜ காசன்
 • வாலிபர் சங்கம்
 • விப்ர நாராயணா
 • விஷ்ணு லீலா
 • வீர ஜெகதீஸ்
 • ஜலஜா
  1939 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள்


 • அதிர்ஷ்டம்
 • ஆனந்த ஆஸ்ரமம்
 • கிரத அர்ஜீனா (ஊர்வசி சாகசம்)
 • குமார குலோத்துங்கன்
 • சக்திமாயா
 • சங்கராச்சாரியார்
 • சந்தனத்தேவன்
 • சாந்த சக்குபாய்
 • புலிவேட்டை
 • சிரிக்காதே
 • போலி சாமியார்
 • அடங்காபிடாரி
 • சீதா பஹரணம்
 • சுகுணசரசா
 • சைரந்திரி (கீதகவசம்)
 • சௌபாக்யவதி
 • தியாகபூமி
 • திருநீலகண்டர்
 • பம்பாய் மெயில்
 • பக்த குமணன் (ராஜயோகி)
 • பாரத்கேசரி
 • பாண்டுரங்கன்
 • பிரகலாதா
 • மதுரை வீரன்
 • மலைக்கண்ணன்
 • மன்மத விஜயம்
 • மாணிக்க வாசகர்
 • மாத்ருபூமி
 • மாயா மச்சீந்திரா
 • ரம்பையின் காதல்
 • ராமலிங்க சுவாமிகள்
 • ராமநாம மகிமை (ராம ஆஞ்சநேய யுத்தம்)
 • வீர கர்ஜனை
 • வீர சமணி
 • மெட்ராஸ் எக்ஸ்பிரஸ்
 • ஜமவதனை

Leia mais...

Apr 12, 2011

1913 தொடக்கம் 2010 வரை வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் (தொகுப்பு02)


  1936 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள்

 1. அலிபாதுஷா
 2. இந்திரசபா
 3. இரு சகோதரர்கள்
 4. உஷா கல்யாணம்
 5. கருட கர்வபங்கம்
 6. கிருஷ்ணா அர்ஜுனா
 7. கிருஷ்ண நாரதி
 8. சந்திர ஹாசா
 9. சந்திரகாந்தா
 10. சந்திர மோகன்
 11. சதிலீலாவதி
 12. சத்ய சீலன்
 13. சீமந்தினி
 14. தர்மபத்தினி
 15. தாராச சங்கம்
 16. நளாயினி
 17. நவீன சாரங்தாரா
 18. பக்த குசேலர்
 19. பதிபக்தி
 20. பட்டினத்தார்
 21. பாமா பரிணாயம்
 22. பாதுகா பட்டாபிஷேகம்
 23. பீஷ்மர்
 24. பார்வதி கல்யாணம்
 25. மனோகரா
 26. மகாபாரதம்
 27. மிஸ் கமலா
 28. மீராபாய்
 29. மூன்று முட்டாள்கள்
 30. மெட்ராஸ் மெயில்
 31. ராஜா தேசிங்கு
 32. ருக்மணி கல்யாணம்
 33. லீலாவதி சுலோசனா
 34. வசந்தசேனா
 35. விஸ்வாமித்ரா
 36. வீர அபிமன்யு
  1937 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள்
 1. அம்பிகாபதி
 2. அருணகிரிநாதர்
 3. ஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்)
 4. கவிரத்ன காளிதாஸ்
 5. கிருஷ்ண துலாபாரம்
 6. குட்டி
 7. சதி அகல்யா
 8. சதி அனுசுயா
 9. கௌசல்யா பரிணயம்
 10. சாமுண்டீஸ்வரி
 11. சிந்தாமணி
 12. சுந்தரமூர்த்தி நாயனார்
 13. சேது பந்தனம்
 14. டேஞ்சர் சிக்னல்
 15. தேவ்தாஸ்
 16. நவயுவன் (கீதாசாரம்)
 17. நவீன நிருபமா
 18. பத்மஜோதி
 19. பக்கா ரௌடி (தஞ்சாவூர் ரௌடி)
 20. பக்த அருணகிரி
 21. பக்த புரந்தரதாஸ்
 22. பக்த ஜெயதேவ்
 23. பக்த துளதிதாஸ்
 24. பஸ்மாசூர மோகினி
 25. பாலயோகினி
 26. மின்னல் கொடி
 27. மிஸ் சுந்தரி
 28. மைனர் ராஜாமணி
 29. பாலாமணி
 30. ராஜபக்தி
 31. ராஜமோகன்
 32. ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி
 33. வள்ளாள மகாராஜா
 34. விக்ரமஸ்திரி சாகசம்
 35. விப்ரநாரயணா
 36. விராட பருவம்
 37. ஹரிஜனப்பெண்(லட்சுமி)                                                                                                                                                                                                                                                                                      

Leia mais...

Apr 9, 2011

1913 தொடக்கம் 2010 வரை வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் (தொகுப்பு01)

 1913 ஆண்டு தொடக்கம் 2010 ஆண்டுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களை இங்கு தொடர் பதிவாக தொகுக்கின்றேன்.

1913 ஆம் ஆண்டு வெளிவந்த படம்

1913 ஆம் ஆண்டு  இந்தியாவில் வெளியான முதல் மௌனத் திரைப் படம் ராஜா ஹரிச்சந்திரா. அந்தப் படத்தை தயாரித் வெளியிட்டவர் தாதா சாகிப் பால்கே.
 (தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே
(Dhundiraj Govind Phalke) (ஏப்ரல் 30, 1870 - பிப்ரவரி 16, 1944) இந்திய திரைப்படத் துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.)

1913ஆண்டு தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ' கீதகவசம்' (கீசக வதம் ?) என்றும் கூறப்படுகிறது

1931 ஆம் ஆண்டு  வெளிவந்த படம்

வெளிவந்த தமிழ் திரைப்படம் காளிதாஸ்.இத்திரைப்படம் தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமாகும்.

1932 ஆம் ஆண்டு வெளிவந்த படங்கள்
 1. ராமாயணம்
 2. பாரிஜாத புஷ்பஹாரம்(
 3. சம்பூர்ண ஹரிச்சந்திரா
 4. காலவா
1933 ஆம் ஆண்டு வெளிவந்த படங்கள்
 1.  ஸ்ரீ கிருஷ்ணலீலா
 2. சத்தியவான் சாவித்திரி
 3. நந்தனார்
 4. பிரகலாதா
 5. வள்ளி
 6. வள்ளி திருமணம்
 7. கோவலன்
 1934 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள்
 1. ஸ்ரீ கிருஷ்ணமுராரி
 2. கோவலன்
 3. சக்குபாய்
 4. சதி சுலோச்சனா
 5. சீதா கல்யாணம்
 6. சீதா வனவாசம்
 7. தசாவதாரம்
 8. திரௌபதி வஸ்திராபகரணம்
 9. பவளக்கொடி
 10. பாமா விஜயம்
 11. லவகுசா
 12. ஸ்ரீநிவாச கல்யாணம்
 13. ஸ்ரீ கிருஷ்ண லீலா
 14. சகுந்தலா

 1935ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள்
 1. அதிரூப அமராவதி
 2. அல்லி அர்ஜுனா
 3. குலேபகாவலி
 4. கோபாலகிருஷ்ணா
 5. கௌசல்யா
 6. ஞானசௌந்தரி
 7. சந்திரசேனா
 8. மயில்ராவணன்
 9. சாரங்கதாரா
 10. திருத்தொண்ட நாயனார்
 11. சுபத்ராபரிணயம்
 12. டம்பாச்சாரி
 13. துருவ சரிதம்
 14. தூக்குத் தூக்கி
 15. நல்லதங்காள்
 16. நளதமயந்தி
 17. நவீன சதாரம்
 18. பக்த துருவன்
 19. பக்த நந்தனார் (திரைப்படம், 1935)
 20. பக்த ராம்தாஸ்
 21. மிளகாய் பொடி
 22. பட்டினத்தார்
 23. பூர்ணசந்திரன்
 24. மார்க்கண்டேயா
 25. மாயாபஜார்
 26. மேனகா
 27. மோகினி ருக்மாங்கதா
 28. ராதா கல்யாணம்
 29. ராஜ போஜா
 30. ராஜாம்பாள்
 31. லங்காதகனம்
 32. லலிதாங்கி
 33. ரத்னாவளி
 34. ஹரிச்சந்திரா
இப்பதிவு தொடராக பிதிவிடப்படும்

Leia mais...

பொது அறிவு தகவல்கள்

 • தமிழீழத்தில் அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் என்பவரே முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவராவர். 16.05.1667 - இல் தமது பதினெட்டாவது அகவையில் இதனை வெளியிட்டார். 
 •  யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் அச்சடித்து வெளியான நூல் ' முத்தி வழி ' என்பதாகும். சேர்ச் மிஷனைச் சேர்ந்த யோசேப்பு நைற்று என்ற பாதிரியார் 1820 ஆம் ஆண்டையடுத்து இந்நூலை வெளியிட்டார்.
 • யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் கரணியங்களை ( காரணங்களை ) விளக்கமாக எழுதியவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள். அவ் ஊர்ப்பெயர் அகராதி யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகும். அந் நூல் 1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளது
 • தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த சாகிப் எம். சீனிவாசராவ். 
 • பெண்கள் மாத இதழாக வெளிவந்த முதல் இதழ் ' தமிழ் மகள்' ஆகும். இது 1937 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் ஆசிரியராக திருவாட்டி மங்களம்மாள் மாசிலாமணி அவர்கள் இருந்தார். 
 • அப்புக்காத்து ஐசாக் தம்பையாவின் மனைவியான மங்கள நாயகி என்பவரே முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளராவார். 1914 இல் ' நொறுக்குண்ட உதயம்' என்றும் 1926 இல் ' அரியமலர்' என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார்.
 • தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ' கீதகவசம்'. 1913ஆம் ஆண்டு.    

Leia mais...

Mar 26, 2011

சீனாவின் அடுத்த பரிணாம வளர்ச்சி

ஆசியாவின் வல்லரசான சீனாவின் தலைநகரில் சிறு பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சிக்காக தொழில்நுட்பங்கள் நிறைந்த சிறுவர் தொழி்ல்வாய்ப்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது சிறுவர்கள் விரும்பும் எதிர்கால வேலைகளில் ஈடுபட களம் அமைக்கும் நோக்கமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 80000 ஹெகமீட்டர் சுற்றவு கொண்ட இக் கட்டத்தில் மாதிரி விமானநிலையம், அங்காடி தெரு, தீயணைக்கும் படைப்பிரிவு என 80 வகையான தொழில்துறைக்கான வளங்கள் இங்கு உள்ளன்.

இப்பயிற்சில் ஈடுபடும் ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 30 அமெரிக்க டொலர்கள் அறிவிடப்படுகின்றது.

இத்திட்டத்தினை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விஸ்தரிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனக் குழந்தைகளுக்கு கிடைந்துள்ள இப் பாக்கியம் எம் நாட்டு குழந்தைகளுக்கு எப்போது கிட்டும்? காலம் தான் பதில் சொல்லுமா?

Leia mais...

Mar 4, 2011

Future Technology Watch your day in 2020

குரங்கில் இருந்து மனிதன் பிறந்ததாக மூர்ப்பின் கோட்பாடு தெளிவுபடுத்துகின்றது. அந்த வகையில் அன்று தோன்றிய மனிதன் படிப்படியாக பல பரிமாணங்கள் பெற்று இன்று இயற்கையுடன் விஞ்ஞான ரீதியாக மோதும் அளவுக்கு மாற்றமடைந்துள்ளான்.

இன்றைய உலகில் தொழில்நுட்பம் வளர்ந்தவிட்ட நிலையில் 2020ல் தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றம் கண்டிருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்ததுண்டா?

இந்த வீடியோவை பாருங்கள் 2020ல் இது சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

Leia mais...

Mar 1, 2011

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய..

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.

குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா. இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.இதற்கு

1. முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2. இப்போது www.spypig.com  இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள்.

3. முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்கள்.

4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image (Firefox) & Copy(IE)" சொடுக்கி copy செய்யவும்.

5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.

நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.

Leia mais...

அப்பிள் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு ஐ பேட்

அப்பிள் நிறுவனத்தின் ஐ பேட் கணனிகள் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

அப்பிள் நிறுவனத்தின் தகவல்களுமைய சுமார் 15 மில்லியன் ஐ பேட்கள் உலகம் முழுவதும்ம் விற்பனையாகியுள்ளன. அதனை முன்மாதிரியாகக் கொண்டு பல முன்னணி நிறுவனங்களும் ஐபேட் போன்ற டெப்லட் ரக கணனிகளை வெளியிட்டுள்ளன.

இருந்த போதிலும் இவை ஐ பேட் அளவிற்கு வரவேற்பைப் பெற முடியவில்லை.இந்நிலையில் அப்பிள் இரண்டாவது ஐ பேட் இனை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி சென் பிரான்சிஸ்கோவில் இது அறிமுகப் படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஐ பேட் 1 ஐ விட இதில் பல புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் உருவத்தில் முன்னையதினை விட மெல்லியதாகவும் பாரம் குறைந்ததாகவும் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leia mais...

Feb 25, 2011

உடலால் வடிவமைக்கப்பட்ட அழகிய வடிவங்கள்.

Leia mais...

Feb 17, 2011

பேஸ்புக் பட்டனுடன் எச்.டி.சியின் சா சா மற்றும் சல்சா.

பேஸ்புக் பாவனையை இலகுபடுத்தும் வகையில் பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள் இரண்டினை எச்.டி.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இவை சா சா (Cha Cha) மற்றும் சல்சா (Salsa) என பெயரிடப்பட்டுள்ளன.

மேற்படி கையடக்கத்தொலைபேசிகள் ஊடாக பாவனையாளர்கள் மிக இலகுவாக பேஸ்புக்கினை உபயோகிக்க முடியும். பார்சலோனாவில் நடைபெற்றுவரும் உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்விலேயே இவை காட்சிக்கு வைக்கப்பட்டன.

கடந்த சில வாரங்களாகவே இது தொடர்பிலான வதந்திகள் நிலவி வந்த நிலையிலேயே இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இக்கையடக்கத் தொலைபேசிகள் இரண்டுமே கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை கொண்டவை.

கடந்த இரண்டு வருடங்களாக இவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது. கையடக்கத் தொலைபேசிகளின் ஊடாக பேஸ்புக் பாவிப்போரின் வீதம் தொடர்ச்சியாக அதிகரிப்பதனை கருத்தில் கொண்டே இவை தயாரிக்கப்பட்டுள்ளன.

வரும் நாட்களில் மற்றைய நிறுவனங்களும் இத்தகைய கையடக்கத் தொலைபேசி உற்பத்தியில் இறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.virakesari.lk

Leia mais...

Feb 5, 2011

Microsoft Office 2010-ல் கிளாசிக் மெனுவை உருவாக்க மென்பொருள்

ஆப்பிஸ் தொகுப்பில் சிறப்பு வாய்ந்த தொகுப்பாக கருதப்படுவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடையது. இந்த ஆப்பிஸ் தொகுப்பின் அன்மைய வெளியிடான ஆப்பிஸ் 2010 தொகுப்பானது முந்தைய வெளியீடுகளை விட சிறப்பு வாய்ந்தது ஆகும்.
இதில் புதிய பரிமாணங்கள் இணைக்கப்பட்டுள்ளது. நாம் பழைய ஆப்பிஸ் தொகுப்பில் பணியாற்றும் போது எளிமையாக பணியாற்ற முடியும். இதற்கு உதவியாக மெனுபார்கள் இருக்கும்.
இதனால் நாம் ஆப்பிஸ் தொகுப்பில் பணியாற்றும் நேரத்தினை குறைக்க முடியும். ஆப்பிஸ் 2000, 2003 போன்றவற்றில் மெனுபார்கள் தனித்தனியே இருக்கும். இதனால் புதியவர்களுக்கு ஆப்பிஸ் தொகுப்பில் பணியாற்றுவதில் எந்த வித சிரமமும் ஏற்படாது.
ஆனால் தற்போதைய ஆப்பிஸ் தொகுப்பான எம்.எஸ் - ஆப்பிஸ் 2010-ல் இது போன்ற வசதி எதுவும் இல்லை. இந்த மெனுபாரில் டூல்பாரை இணைக்க ஒரு மென்பொருள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Excel, Word, Powerpoint, Onenote போன்ற டூல்பார்களை ஒகே செய்துவிட்டு, Register பொத்தானை கிளிக் செய்யவும். தற்போது ஆப்பிஸ் தொகுப்பினை ஒப்பன் செய்து பார்த்தால் மெனுக்கள் இருக்கும்.
இந்த மென்பொருளானது Excel, Word, Powerpoint, Onenote போன்றவற்றில் மட்டுமே டூல்பார்களை உருவாக்க முடியும். 
தரவிறக்க சுட்டி

from:-lankatech

Leia mais...

Jan 28, 2011

எனது டைரி(Diary) 2010. (தொடர்பதிவு)

ஆமினா அழைப்பை ஏற்று இத் தொடரினை தொடர்கின்றேன்.  தொடர்பதிவிற்கு அழைத்த ஆமினாவிற்கு நன்றிகள். எனக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லை அதனால் 2010 இல் என் மனதில் பதிந்தவைகளை தருகின்றேன்..

எனது  டைரி(Diary) 2010.
 5வருட காத்திருப்பின்(4+வயது குட்டிப்பெண்ணுடன்) பின் இவ்வாண்டே வெளிநாடு வந்தடைய அனுமதி கிடைத்தது. அனுமதி கிடைத்த சந்தோசத்தை  பயம் தடுத்தது. என்னவென யோசிக்கிறிங்களா? முதல் முதல் விமானத்தில் அன்னிய நாட்டுக்கு பயணம் செய்வதை எண்ணிதான் பயம்.  இலங்கையில் இருந்து புறப்பட்டு லண்டனில் அடுத்த விமானம் மாறணும் இலங்கையிலிருந்து நாங்கள்  புறப்பட்ட விமானம் 1 மணித்தியாலம் பிந்திவிட்டதால் லண்டனில் இறங்கி அடுத்த கனடிய விமானத்தில் ஏறுவதற்கு 10 நிமிடங்களே இருந்தன. கனடிய விமானத்தில் கடைசியாக ஏறியது நானும் என் பொண்ணும் ஏறி 5 நிமிடங்களில் விமானம் புறப்பட்டு விட்டது அன்று 10 பேர் விமானத்தை தவறவிட்டதாக கனடா விமான நிலையத்தில் கூறினார்கள். என் பயண அனுபவத்தை மறக்கவே முடியாது. அதைவிட வலி என் உறவுகளை (குடும்பம். நட்பு)பிரிந்து  வந்தது.

கனடாவில் கால் பதித்ததும் யாவும்  புதுசாக  இருந்தது. நான் கனடா வந்து இறங்கிய காலப்பகுதியில் குளிர் இல்லாத காலநிலை. 6ஆம் மாதம் விடுமுறை  காலமும் ஆரம்பம். கனடாவில் பல இடங்கள் சுற்றி பார்த்தேன். நான் சுற்றிய பார்த்த இடங்களை உங்களுக்கும் சுற்றிக்காட்டுகின்றேன். நான் முதலில் சுற்றுலா போன இடம்..

நயாகரா நீர்வீழ்ச்சி( Naigara Falls) 
(Niagara Falls are one of beautifull amazing waterfalls in the world)

நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு இணையத்தில் அலசினேன் விக்கிபீடியாவில் தகவலை பெற்றுக்கொண்டேன். அத்தகவலை உங்களுடன் பகிர்கின்றேன். அதற்கு முன் நயாகரா நீர்வீழ்ச்சி( Naigara Falls)  வீடியோவை பாருங்கள்....


நயாகரா நீர்வீழ்ச்சி( Naigara Falls) At Night.
 
நயாகரா நீர்வீழ்ச்சி அல்லது நயாகரா பேரருவி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது. இது தனியான இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது. சுமார் 85% நீர் கனடாவில் உள்ள ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ அருவி என ஆங்கிலத்தில் வழங்கப்படும் குதிரை இலாட அருவியிலும், மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில் உள்ள அமெரிக்கன் அருவியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாமல் ஒரு சிறிய பிரைடல் வெய்ல் அருவியும் உண்டு. குதிரை இலாட அருவி 792 மீ அகலம் கொண்டது, உயரம் 53 மீ. அதிக உயரமானதாக இல்லாவிடினும் நயகாரா அருவியானது மிகவும் அகலமானது. அமெரிக்கன் அருவி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. நயாகராப் பேரருவியில் ஆறு மில்லியன் கன அடிக்கு (168,000 m³) அதிகமான நீரானது ஒவ்வொரு நிமிடமும் இந்த அருவியினூடு பாய்ந்துசெல்கிறது. உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட இந்த அருவியானது வட அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த அருவியாகவும் இருக்கிறது.( மேலதிகமாக தெரிந்து கொள்ள விக்கிபீடியா செல்லுங்கள்)

 இவ் வீடியோவை கட்டாயம் பாருங்கள் சுற்றி பார்த்தமாதிரி இருக்கும் விளக்கத்துடன் கூடிய வீடியோ இணைப்பு...


குறிப்பு:-2010 டையரியில் பதியாமல் மனதில் பதிந்த ஞாபகங்கள் அதிகம். இன்னும் நிறையவே பார்த்த ரசித்த இடங்கள் இருக்கு. பதிவு நீண்டு கொண்டு போவதால். அடுத்தடுத்து வரும் பதிவுகளில் பகிர்கின்றேன் பார்த்து ரசித்திடுங்கள். அத்துடன் சென்றுவிடாமல் கருத்தையும் கூறிவிட்டு செல்லுங்கள்...

Leia mais...

Jan 24, 2011

எச்சரிக்கை: அப்டேட் பைலில் மோசமான வைரஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனமானது ஒவ்வொரு மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, தன் தொகுப்புகளின் பிழைகளை நிவர்த்தி செய்திடும், பேட்ச் பைல்களை வெளியிடுகிறது.

இவை அப்டேட் பைல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, பல சைபர் கிரிமினல்கள், வைரஸ்களைப் பரப்புகின்றனர்.சென்ற மாதம், இதனைப் பயன்படுத்தி வைரஸ் ஒன்றினைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் இந்த செயல் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் "ஸ்டீவ் லிப்னர்" (Steve Lipner) பெயரில் ஒரு இமெயில் அனுப்பப்படுகிறது. அதில், கம்ப்யூட்டரை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, உடனடியாக இணைக்கப்பட்டுள்ள KB453396ENU.exe என்ற பைலை இன்ஸ்டால் செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உண்மையிலேயே அந்த பைல் தான் வைரஸ்.

இந்த வைரஸானது, விரைவில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களுக்குப் பரவும் தன்மை உடையது. இதன் மூலம் பாட்நெட் என்று அழைக்கப்படும் மோசமான தன்மை உடைய வைரஸின் ஒரு பகுதியாக இது செயல்படும். பின்னர், அந்த பாட்நெட், இணைய தளங்கள், பெரிய நிறுவனங்களின் சர்வர்களில் பரவி தகவல்களைத் திருடுகின்றது.

பின்னர் இந்த தகவல்கள் அனைத்தும் இந்த வைரஸை எழுதியவர்களால், குற்றவாளிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மின்னஞ்சலை உற்று நோக்கினால், அதில் பல விஷயங்கள் போலி என எளிதாக அறிந்து கொள்ளலாம்.

1.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அப்டேட் பேட்ச் பைல், ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க்கிழமை மட்டும் தான் வெளியிடப்படும்.

2.மெயிலின் வாசகமும், ஒரு பெரிய நிறுவனத்தின் ஸ்டைலில் இருக்காது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்டவனின் வாசகமாக இருக்கும்.

3.மெயிலின் ரிப்ளை முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் என்ற சொல்லில் எழுத்துப் பிழை இருக்கும்.

எனவே இது போன்ற மெயில்களைப் பெறுகையில் கவனமாக இவற்றைப் பார்த்து எச்சரிக்கை கொள்ள வேண்டும்.

TamilCNN

Leia mais...

Jan 21, 2011

எனக்கு பிடித்த 10 பெண்குரல் பாடல்கள் (தொடர்பதிவு)

தோழி ஜெ.ஜெ அழைப்பினை ஏற்று இத்தொடர் பதிவினை பதிவிடுகின்றேன். முதலில் தொடர்பதிவிற்கு அழைத்த தோழி ஜெ.ஜெ க்கு நன்றிகள். தாமதமாக பதிவிடுவதற்கு மன்னிக்கனும் தோழி... பதிவிற்குள் நுழைகிறேன்.. எனக்கு பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்  தெரிவு....

முதலாவது தெரிவாக.

"ப்ரியமான தோழி" படத்தில் இருந்து சித்ரா பாடிய பாடலான காற்றே பூங்காற்றே கவிதை சொல்வாயா... இப்பாடலின் இசை அருமை.  நண்பனுக்கு ஆறுதல்  கூறும் ஒரு  பாடல்.. நிஜத்தில இப்படியான நட்பை காண்பது மிக  அரிது. ஒவ்வொரு வரிகளிலும்  மிக ஆழமான கருத்துள்ளது அதுவே எனக்கு இப்பாடல் பிடிக்க காரணம்.. 

இப்பாடலில் ரொம்ப பிடித்தவரிகள்
நதியென்பது ஓர் நாள் கரையென்பதை சேரும்
எப்போதுமே ஓடும் நதியாகலாம்....
றோஜாச்செடி போலே நீ பூக்கலாம்இங்கே
காற்றோடு போராடும் குணம் வேண்டுமே..
அட உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாதே
ஒரு பறவை மோதி கோபுரம் தான் சாய்ந்திட க் கூடாதே... 
"ஓவியன் கைவலி சித்திரம் ஆகுது
ஒவ்வொரு வலியிலும் சாதனை உள்ளது"
டுத்து வரும் ஒவ்வொரு வரிகளும் ஆழமான  வரிகள்

**********************************************

 இரண்டாவது தெரிவாக..

"மாயி" படத்திலிருந்து  பாடகி சுஜாதா பாடிய பாடலான நிலவே வான்நிலவே வான்நிலவே வார்த்தை..இப்பாடலில் அவளின் ஏக்கம்.... ஏக்கம் நிறைந்த வரிகள்... மிக மிக பிடிக்கும்
இப்பாடலில் பிடித்த வரிகள்.
"கண்களை மூடிக்கொண்டால் வெளிச்சம் இருக்காது...
தீ நடுவில் நீயே நின்றால் தீர்வு கிடைக்காது...
சூரியன் உதிப்பதை நிறுத்திக்கொண்டால்
உலகில் விடிவேது...
சுவாசிக்கும் காற்று வீசிட மறுத்தால்
உயிர்கள் கிடையாது...

***********************************************

 மூன்றாவது தெரிவாக

"நினைத்தேன் வந்தாய்" படத்தில் சித்ரா பாடிய பாடலான  உன்மார்பில் விழிமூடி தூங்குகிறேன் தினமும் கனவில்... எனும் பாடல். மணாளனை நினைத்து கற்பனையில் லயித்திடும் ஒரு பெண்ணின் பாடல். ஒரு பெண்ணின் காதல் கற்பனைகளை அழகாக வெளிப்படுத்தும் அருமையான பாடல்.
இப்பாடலில் என்னை கவர்ந்த வரிகள்
 நெஞ்சம் எதிலும் ஒட்டாமல் 
கண்ணில் கனவும் வற்றாமல்
ஏனிந்த நிலமை புரியவில்லை
இந்த பரவசம் உனக்குள்ளும் இருக்கின்றதா?

***********************************************

நான்காவது தெரிவாக...

"சத்துரியன்" படத்தில் சொர்ணலதா பாடிய மாலையில் யாரோ மனதோடு பேச.....எனும் பாடல். இப்பாடலில் வரும் இயற்கை காட்சிகள் அருமையிலும் அருமை... இயற்கையை ரொம்பவே ரசிப்பேன். 
பிடித்த வரிகள்
"தென்றலே பாட்டெழுது
அதில் நாயகன் பெயரெழுது...
வருவான் காவல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற...
கரைமேல் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து என் கண்ணை பார்க்க.."
காட்சிகளுடன்  பாடல் வரிகளை கேட்கும் போது மனதில் ஒருவகை அமைதி கிடைக்கும்
***********************************************

ஜந்தாவது பாடலாக... 

"என் ஆசைமச்சான்"  படத்தில் சித்தரா பாடிய கருப்பு நிலா நீ தான் கலங்குவதேன்.....எனும் பாடல்.  எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.
 இப்பாடலில் பிடித்த வரிகள்
கறுப்பு நிலா நீதான் கலங்குவதேன் 
துளித்துளியா கண்ணீர் விழுவது ஏன்
சின்ன மானே மாங்குயிலே உன் மனசில என்ன குறை
பெத்த ஆத்தா போலிருப்பேன்
இந்த பூமியில் வாழும் வர...
அடுத்த வரும் வரிகள் ஒவ்வொன்றும் அருமை. தனிமையில் இப்பாடலை  கேட்கும் போது அழுகையே வந்திவிடும்.

***********************************************

 ஆறாவது பாடலாக....
கோபுர தீபம் படத்திலிருந்து என் வாழ்க்கை மன்னவனே உன்னை என்று நான் அடைவேன்.... எனும் பாடல். பாடியவர யாரென தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் கூறுங்களேன். இப்பாடலில் வரும் எல்லா வரிகளும் அருமை..

ரொம்ம பிடித்த வரிகள்.
பொங்கும் கடலுக்கு அணையுண்டு 
உண்மை அன்புக்கு அணையுண்டா..

 ***********************************************

ஏழாவது பாடலாக. 

"காதல் சுகமானது"  படத்திலிருந்து பாடகி சித்ரா பாடிய பாடலான சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்... எனும் பாடல்.
இப்பாடலில் பிடித்தவரிகள் 
"தூண்டிலினை தேடும் 
ஒரு மீன்போல ஆனேன்
துயரங்கள் கூட அட சுகமானது"

 ***********************************************

எட்டாவது பாடலாக..

"ஆட்டோகிராப்" படத்திலிருந்து  பாடகி சித்ரா பாடிய பாடலான ஒவ்வொரு பூக்களுக்குமே.... எனும் பாடல். மறக்கமுடியாத ஓரு பாடல். வாழ்க்கையின் சாதகமான பக்கங்களை சொல்லும் வகையில் ஒவ்வொரு வரிகளும்.
இப்பாடலில் பிடித்த வரிகள் என குறித்துச் கூறமுடியாது..அனைத்தும் ஆறுதல் கூறும் அருமையான வரிகள்..
"அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வியின்றி வரலாறா"

***********************************************

ஒன்பதாவது பாடலாக...
'பூவெல்லாம் உன் வாசம்" படத்திலருந்து  பாடகி சொர்ணலதா பாடிய  திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே...
ஜோதிகா நடிப்பை ரசித்துக்கோண்டே இருக்கலாம்.

***********************************************

பத்தாவது பாடலாக...
கடைசித்தெரிவாக படம், பாடியவர் எதுவுமே தெரியல. பாடல் மட்டும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு... நீங்களும் கேட்டு பாருங்கள். 
குறிப்பு:-இப்பாடல கேட்டு விட்டு போகமல் உங்களுக்கு தெரிந்தால் எந்த படத்தில இப்பாடல் என கூறிச்செல்லுங்கள்.

Leia mais...

Jan 20, 2011

பல நாட்டு தொலைகாட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் கண்டுகளிக்க

பல நாடுகளின் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரே இடத்தில் கண்டு களிக்க யாருக்குதான் ஆசை இல்லை.

அதுவும் இலவசமாக என்றால் கேட்கவும் வேண்டுமா? அத்தகைய ஒரு தளமே இது.

இங்கு சுமார் 1042 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் பார்த்து இரசிக்க முடியும்.

மற்றைய சில தளங்கள் போல இங்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

எந்த நாட்டின், எந்த மொழி அலைவரிசை வேண்டும் என்பதினை தேர்வு செய்து கொள்ளமுடியும்.

இணையதள முகவரி
http://www.tvweb360.com/

VK

Leia mais...

Jan 17, 2011

PDF பைலின் Password இனை சுலபமாக உடைக்க...

உங்களிடம் உள்ள ஒரு PDF file பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். அந்த கோப்புகளை பாஸ்வேர்டு இல்லாமல் திறப்பதற்கு, சிரமப்படவே தேவையில்லை. கீழே காட்டியுள்ள தளத்தின் மூலமாக அந்த கோப்புகளை பாஸ்வேர்டை நீக்கி படிக்கலாம்.

1. PDF Crack : இந்த தளத்தில் 5எம்.பி அளவிலான கோப்புகளை இலவசமாக திறக்க முடியும்.

2. Free My PDF : இந்த தளத்தில்7 எம்.பி அளவிலான கோப்புகளை இலவசமாக திறக்க முடியும்.

Leia mais...

Jan 15, 2011

இணையத்தில் ஆபாச விடயங்களை தேடுபவரா நீங்கள்?

'காமசூத்ரா பாடம்' என்ற தலைப்பில் பவர்பொயிண்ட் கோப்பு ஒன்று தற்போது இணையத்தில் உலாவருகின்றது. ஆவலுடன் அதனை தரவிறக்கம் செய்தால் காத்திருக்கின்றது உங்களுக்கு ஆபத்து.

ஆம், இதனை நீங்கள் தரவிறக்கம் செய்தால் “Troj/Bckdr-RFM” என்ற வைரஸ் உங்கள் கணனிகளில் தானாக தரவிறங்கிக் கொள்ளும்.

நீங்கள் காம சூத்ரா பாடத்தில் இலயித்திருக்கும் போது உங்கள் கணனி தானாக ஆபத்தில் சிக்கியிருக்கும். பின்னர் உங்கள் அடையாளங்கள் மற்றும் இரகசியங்கள் யாரோ ஒரு இணையத்திருடனிடம் சிக்குண்டிருக்கும்.

எனவே இத்தகையவற்றிடம் கவனமாக இருங்கள் ! கண்டவற்றிக்காக பெறுமதி வாய்ந்தவற்றை இழக்க வேண்டாம் !

VK

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo