கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jan 29, 2010

மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி

பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.

ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.

ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.

தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.

நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.

ஸ்கைபயரின் இணையதளம். உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.

-TVS50

Leia mais...

Jan 28, 2010

குழந்தைகளுக்கு பாதுகாப்பான சைபர் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்சிறிய வயது உள்ள குழந்தைகள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உள்ளது. முற்றிலும் வண்ணமயமாக்கப்பட்ட குழந்தைகள் விளையாடும் பிளே ஸ்டேசன் போல் உள்ளது.
முதலில் இதன் ஹார்டுவேர் கான்பிக்ரேசன் பற்றி பார்ப்போம்.
  • Intel Pentium Dual Core E5200 CPU
  • 19”inch touchscreen LCD
  • 500GB HDD
  • 4GB RAM
  • DVD super drive
  • Intel GMA 3100 3D Graphic Card
  • Realtek HD audiO 
  •  Windows 7 OS
இந்த டெஸ்க்டாப் கம்யூட்டருக்கு பிரிமியர் கிட்ஸ் சைபர்நெட் ஸ்டேசன் (Premier Kids Cybernet station) என்று பெயர் வைத்துள்ளனர். தண்ணீர் கீபோர்டில் பட்டால் கூட எந்த பழுதும் ஏற்படாது என்பதில் இருந்து மானிட்டரை தொட்டு இன்புட் கொடுக்கலாம் என்பதுவரை அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாக தான் உள்ளது.

இண்டெர்நெட்டில் ஆபாச இணையதளங்களை தடுக்கும் மென்பொருளும் எந்த வைரஸும் கம்யூட்டரை தாக்காத வண்ணம் உள்ள மென்பொருள்களையும் வடிவமைத்துள்ளனர். இதனுடன் குழந்தைகள் அறிவை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான பேக்கேஸும் சேர்த்தே கொடுக்கின்றனர் இதில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த டொட்லர் என்று முதல் பேக்கேஸ். இரண்டாவது 5  முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த கைண்டர்கெர்டன் என்ற பேக்கேஸ்.மூன்றாவதாக 11 முதல் 15  வயது வரை உள்ள தொடக்க மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான  பேக்கேஸும் உள்ளது.

இத்தனை வசதிகளும் உள்ள இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் விலை கொஞ்சம் அதிகம் தான் இதன் விலை $1999 அமெரிக்க டாலர்.

Lankasritech

Leia mais...

Jan 26, 2010

வைரஸ் பரவலை தடுக்க மைக்ரோசாப்ட்டின் 'பாதுகாப்பு கவசம்'


கடந்த வாரம் சீனாவில் கூகுள் நிறுவன செயல்பாடுகளை பெருமளவில் பாதித்த வைரஸைப் போல, தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை குறி வைத்து பரவி வரும் வைரஸ் தாக்குதலிலிருந்து தனது வாடிக்கையாளர்களைக் காக்க புதிய வகை சாப்ட்வேரை களம் இறக்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில், கூகுள் உள்பட சீனாவில் இயங்கி வரும் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் குறி வைத்து கடந்த வாரம் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டது.

குறி்ப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மூலமாக இந்த வைரஸ் பரப்பப்பட்டது.

இதையடுத்து எக்ஸ்புளோரர் பிரவுசரை பயன்படுத்துவோரைக் காக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு புதிய சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. இதை நிறுவிக் கொண்டால் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியுமாம்.

இதுகுறித்து உலகின் முன்னணி பாதுகாப்பு சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான சிமென்டெக்கின் பாதுகாப்பு ஆய்வாளர் ஜான் ஹாரிசன் கூறுகையில், மைக்ரோசாப்ட்டின் பலவீனமான பிரவுசர்களின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அவற்றை செயலிழக்க வைக்கக் கூடிய வைரஸ்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.

இப்போது இந்த வைரஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6ஐ வெகுவாக தாக்குகிறதாம். 7 மற்றும் 8வது வெர்சனை தாக்கக் கூடிய வகையில் அந்த வைரஸ்களை வலுவாக்கும் முயற்சிகளிலும் 'ஹேக்கர்கள்' ஈடுபட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 100 முன்னணி இணையத் தளங்களில் இதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இவை மிகவும் அபாயகரமானவை. பிரவுசர் வழியாக நுழைந்தவுடனேயே இது கம்ப்யூட்டரைத் தாக்கி விடும் என்றார்.

தற்போதைய புதிய சாப்ட்வேரால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் வைரஸ் தாக்குவதைத் தடுக்க முடியும் என மைக்ரோசாப்ட் கூறுகிறது.

மேலும், சில வகை வைரஸ்கள் மூலம் நமது கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாக்கள் உள்ளிட்டவற்றை தொலை தூரத்திலிருந்தபடி உளவு பார்க்கும் வேலைகளையும் சிலர் செய்ய ஆரம்பித்துள்ளனராம் என்கிறார் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பாமர்.

சீனாவில் கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பெரும் வைரஸ்-உளவு சாப்ட்வேர் தாக்குதலால், அங்கிருந்து தனது அலுவலகங்களை இடம் மாற்றப் போவதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. அதேசமயம், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னிடம் அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

வைரஸ் தடுப்பு சாப்ட்வேரை நிறுவிக் கொள்ள தனது இணையதளத்திற்குச் செல்லுமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

Leia mais...

Jan 25, 2010

ஹக்கர்களின் அட்டகாசம் யூடியுப்யையும் விடவில்லை


நாளுக்கு நாள் பெருகிவரும் ஹக்கரின் அட்டகாசம் இப்போது யூடியூப் வரை சென்றுள்ளது. சென்ற வாரம் தான் டிவிட்டரை ஒரு வழிபடுத்தினார்கள் அதற்குள் இரண்டு நாட்களுக்கு முன் யூடியுப்பையும் ஒரு கை பார்த்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன் யூடியுப் இணையதளத்தை திறந்தால் YouTube is currently experiencing some downtime issues, reporting a “Http/1.1 Service Unavailable” error or a a 500 Internal Server  error. இப்படி ஒரு செய்தி தெரிந்தது உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் யூடியுப் இணையதளத்தை திறந்தவர்கள் ஒன்றும் புரியாமல்  விழித்தனர் ஒருத்தர் டிவிட்டரில் எனக்கு இங்கு யூடியூப் தெரியவில்லை என்று ஒரு டிவிட்டை தட்டி விட விஷயம் காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்தது. சரியாக 20 நிமிடம் ஒன்றும் செய்ய முடியவில்லை அடுத்து உடனடியாக நம் கூகுள் இந்த பிரச்சினையை பெரிதாகும் முன் சரி செய்தது. இதைப்பற்றி கூகுளிடம் கேட்டதற்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் நம்மிடமே கைவரிசை காட்டிவிட்டனரே என்று குழப்பத்தில் உள்ளனர். இப்போது தான் அனைவருக்கும் சீனாவின் இராஜதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்திருக்கிறது.

இப்படியே சென்றால் சீனாவுக்கும் இண்டெர்நெட் வசதியே இல்லாமல் செய்தாலும் செய்துவிடுவார்கள் போல அல்லது சீனா முழுவதையும் இன்ட்ராநெட் ஆக மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதிற்கு ஒன்றுமில்லை.

Leia mais...

Jan 23, 2010

இரட்டையான கோப்புகளை அழிக்க உதவும் மென்பொருள்

தற்போது இணையம் வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் அனைவராலும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொவரும் அவர்களுக்கு தேவையானவற்றை உதாரணமாக songs,ebooks,ringtones,wallpaper டவுன்லோட் செய்வது உண்டு . பல கோப்புகளை டவுன்லோட் செய்யும் போது ஒரே மாதிரியான கோப்புகள் மீண்டும் டவுன்லோட் செய்ய வாய்ப்பு உண்டு. அதாவது Duplicate ஆக வாய்ப்பு உண்டு.இதே போல் பல இரட்டையான கோப்புகள் உங்கள் கணினியில் இருக்கலாம். இது போன்ற இரட்டையான கோப்புகளை நாமே தேடி பிடித்து அழிப்பது மிகவும் கடினம். இவைகளை அழிக்க ஒரு மென்பொருள் உள்ளது பெயர் Auslogics Duplicate File Finder

இந்த மென்பொருளில் உங்களுக்கு தேவையான Folders,Drives தேர்வு செய்து இரட்டையான கோப்புகளை கண்டுபுடிக்கலாம்.
மேலும் பெயர் மட்டுமன்றி Size,Content மற்றும் தேதி ஆகியவற்றை வைத்தும் இரட்டையான கோப்புகளை கண்டுபுடிக்கும் வசதி இதில் உண்டு.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

Leia mais...

Jan 22, 2010

மொபைல் இணைய தேடல்


மொத்த இன்டர்நெட் தேடலில், மொபைல் போன் வழியாகத் தேடுவது இப்போது 1.3 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இறுதியில், டிசம்பர் மாதத்தில் இந்த தேடல் மிக அதிகமாக இருந்ததாக இவற்றைக் கவனித்து வரும் வெப் மெட்ரிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்ற பிப்ரவரி மாதத்தில், மொத்த இன்டர்நெட் பயன்பாட்டில் 0.57 சதவீதம் ஆக இருந்த மொபைல் வழித் தேடல் தற்போது 1.35 சதவீதம் டிசம்பரில் உயர்ந்தது. இதனால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழி தேடல் 99.28சதவீதம் லிருந்து 98.36% ஆகக் குறைந்தது.

மொபைல் வழி இன்டர்நெட் தேடலில் கூகுளின் ஆண்ட்ராய்ட் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இதன் பயன்பாடு 58.4 சதவீதம். பிளாக்பெரி 22.2 சதவீதம், ஐபோன் 20.1சதவீதம், சிம்பியன் 19.01 சதவீதம் மற்றும் ஜாவா எம்.இ. 15.6 சதவீதம் ஆக இருந்தன.

- Lankasritech

Leia mais...

Jan 21, 2010

கணிணி வேகம் அதிகரிக்க


நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு குட்டீசோ விளையாட Game சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திருப்போம் இதனை கணிணி software Registery ல் அப்டேட் செய்து விடும் நாம் இந்த game விளையாட தொடங்கும் போது புதிய சில Instructions மூலம் இயங்க வைக்கும் சிலநாட்களில் அதனை Delete செய்து அடுத்த Game விளையாடுவோம் .

நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும்.

ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software ஐ ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்க்கு registry error என்று பெயர் . இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் மெதுவாக செயல்பட தொடங்கும் .இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது, இதனை கண்டறிந்து நீக்க எனப்படும் software உள்ளது. இதனை நிறுவி அவற்றை முழுமையாக நீக்கலாம்.

தரவிறக்க சுட்டி

Leia mais...

Jan 20, 2010

அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம்அசுஸ் நிறுவனமும் புதிதாக நாமும் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை களம் இறக்கினால் தான் நம்மால் மார்க்கெட்டிங்கில் இருக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்து புதிதாக அசுஸ் வேவ்பேஸ் அல்ட்ரா என்பதை உருவாக்கியுள்ளனர். கையில் நாம் கட்டும் பிரேஸ்லட் போன்று இதன் வடிவம் இருக்கிறது.


பொர்ட்டபிள் எங்கு வேண்டுமானாலும் நம் கையில் மாட்டி எடுத்துச் செல்லலாம். இந்த வேவ்பேஸ் அல்ட்ராவின் பயன் என்ன வென்று பார்த்தால் இதில் நாம் முக்கியமாக செய்ய வேண்டிய வேலைகளை
குறித்து வைத்துக் கொள்ளலாம். இதனுடன் OLED டிஸ்பிளேயும் உள்ளது. இதில் நாம் தேவையான நிகழ்வை பார்த்துக்கொள்ளலாம். நேரம் பார்ப்பதிலிருந்து ப்ளுடுத் வரை அனைத்தும் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் இதில் நம் உடலின் வெப்பநிலையை அறிந்து கொள்ளவும் இரத்த அழுத்தத்தை கண்டறியவும் உடனுக்குடன் தெரியப்படுத்தும் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தொலைவில் இருந்தும் கூட நாம் இதற்கு கட்டளை கொடுக்கலாம். இப்படி பல தொழில்நுட்ப மாற்றங்களுடன் அசுஸின் வேவ்பேஸ் அல்ட்ரா விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.- வின்மணிLeia mais...

Jan 19, 2010

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?


விண்டோஸ் 7 வெளியானதிலிருந்து அதன் பரபரப்பு பற்றிக் கொண்டது. விண்டோஸ் 7 பற்றி எல்லா தரப்பினரிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் வருகின்றன. விண்டோஸ் 7 ஐ நிறுவுதல் அல்லது மேம்படுத்தலும் இலகுதான் ஆனால் உடனடியாக செய்யலாமா செய்வதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை பற்றி கேள்விகள் எழலாம் அவற்றை பற்றி பார்க்கலாம்.

ஏன் அப்கிரேட் செய்ய வேண்டும்?

1. விண்டோஸ் 7 நீங்கள் எங்கிருந்தும் கணணியை இயக்குவதை இலகுவாக்கிறது. அனைத்து டேட்டாக்களையும் பாதுகாப்பாக கையாள உதவுகிறது. நாளந்த நடவடிக்கைகளை சற்று இலகுவாக்குகிறது.

2. உங்கள் தகவல்களுக்கு அதிக பாதுகாப்பளித்தல். விண்டோஸ் 7 இல் இருக்கும் NAP எனும் தொழில்நுட்பம் அதிக பாதுகாப்பை நெட்வேர்க் கணணிகளுக்கு வழங்குகிறது. தேவையற்ற அப்பிளிகேஸன்களை நிறுத்தி வைக்க உதவுகிறது.

3. விண்டோஸ் 7 இலகுவாக மனேஜ் செய்து கொள்ள முடிகிறது. இதற்கு MDOP எனும் தொழில்நுட்பம் உதவுகிறது.

4. விண்டோஸ் 7 விஸ்டாவை தழுவிய பதிப்பு போன்று தோன்றினாலும் விஸ்டாவை விட அதிக நிலையான (Stable) பதிப்பாக இருக்கிறது.  விஸ்டாவை விட வேகமாகவும் குறைவான வழங்களை பயன்படுத்தியும் இயங்குகிறது. மற்றைய இயங்கு தளங்களை விட அதிக Performance ஐ காட்டுகிறது.

மேம்படுத்த முடிவு செய்து விட்டீர்களெனில் அதிலுள்ள சிக்கல்கள் என்ன?

1. அனைத்து மென்பொருட்களும் இயங்குமா என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? மற்றும் நிலையான பதிப்பென்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது.  இந்த சிக்கலில் இருந்து விடுபட நீங்கள் பாவிக்கும் மென்பொருட்களின் நிறுவனங்களின் இணையத்தளங்களை தொடர்பு கொண்டு அவர்களின் பதிப்புக்கள் விண்டோஸ் 7 க்கு இசைவாக்கப்பட்டுள்ளதா என்பதை பார்ப்பதாகும்.

2. அப்பிளிக்கேஸன் மைகிரேஸன் என்பது சிறிய, பெரிய நிறுவனங்களுக்கு பொருந்தும். விஸ்டா பதிப்பு வெளியாகும் போதும் இதே சிக்கலை இந்நிறுவங்கள் எதிர்கொண்டது. இன்னும் விரிவாக கூறினால் நிறுவனத்துக்கென உருவாக்கப்பட்ட அப்பிளிகேஸன் கள் விண்டோஸ் 7 ற்கு ஏற்றவாறு மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு முழுவதுமாக விண்டோஸ் 7 க்கு மாறுவதற்கு முதல் வியாபார அப்பிளிகேசன்களை ஒரு சில கணனிகளில் பரீட்சித்து விட்டு மேலும் தொடர்வது தீர்வாக இருக்கும் .

Leia mais...

Jan 17, 2010

Trial மென் பொருளை எளிதாக கிராக் செய்ய...

இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் பல பயனுள்ள மென்பொருட்கள் trial ஆகவே உள்ளது. எனவே இதனை சில நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது.

ஒவ்வொரு முறை நாம் அந்த மென்பொருளை பயன்படுத்த ஆரம்பிக்கும் போதும் அது நம் கணிணியின் தேதியையும் அந்த மென்பொருள் பதியப்பட்ட தேதியையும் ஒப்பிடுகிறது. நமது கணிணியின் தேதி trial தேதிக்குள் இருந்தால் பயன்படுத்த அனுமதிக்கிறது. நமது கணிணியின் தேதியை trial நாளுக்குள் இருக்குமாறு செய்ய Run As Date என்கிற மென்பொருள் பயன்படுகிறது. இதனை Windows 2000, XP, 2003 and Vista ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.
நீங்கள் பதியும் மென்பொருளின் தேதியை நினைவு வைத்துக்கொள்ளவும், பின்னர் அதன் trial period முடியும் வரை இதனை சாதாரணமாக பயன்படுத்தலாம்.
Trial period முடிவதற்கு ஒரு நாள் முன்பு Run As Date மென்பொருளை இயக்கவும்.
பெரும்பாலான மென்பொருட்களை இதனைக்கொண்டு பயன்படுத்த முடியும்.

தரவிறக்க சுட்டி

Leia mais...

Jan 16, 2010

'எல்.இ.டி' தொழில்நுட்பம்

நாளுக்கு நாள் பெருகி வரும் தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு புதிய அம்சங்களை தந்து வருகிறது.

அந்த வகையில் மனிதனின் வாழ்க்கையில் ஒரு குடும்ப உறுப்பினரை போல் ஆகி விட்ட டி.வி தொழில்நுட்பத்தில் இப்போது அதி உயர்வகை தொழில்நுட்பமாக இருந்து வருவது எல்.சி.டி என்னும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய எல்.சி.டி டிவிக்கள் தான்.

டி.வி தொழில்நுட்பத்தை பொருத்தவரை முதலில் சாதாரண வகை டிவிக்கள் வந்தன, இவைகள் பெரும்பாலும் மிக அதிக கனத்துடன் கூடியதாக இருக்கும்,அடுத்ததாக 'பிளாட்'என்று சொல்லப்படுகின்ற டி.விக்கள் வந்தன,இந்தவகை டி.விக்கள் முன்பக்கம் தட்டையாக பார்ப்பதற்கு நல்ல வடிவமைப்புடன் இருக்கும்.அதற்கு அடுத்த படியாக 'ஸ்லிம்' என்று சொல்லப்படுகின்ற டி.விக்கள்.வந்தன.இந்த வகை டி.விக்கள் அதிக கனம் இல்லாமல் எடை குறைவாக இருக்கும்.

அதற்கு அடுத்தபடியாக "பிளாஸ்மா" என்று அழைக்கப்படுகின்ற தொழில்நுட்பத்தில் டிவி.க்கள் வந்தன, இந்த வகை டி.விக்கள் மிக அகன்ற திரையுடன் காட்சியளிக்கும், சாதாரண வகை டி.வியுடன் ஒப்பிடும் போது இதன் திரைக்காட்சிகள் அற்புதமாக இருக்கும்.பிளாஸ்மாவின் முன்னேற்றமாக இப்போது சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் தொழில்நுட்பம் தான் 'எல்.சி.டி'.

மிக எடை குறைவான, அகன்ற திரையுடன், அதிநுட்பமான புள்ளிகள் இல்லாத திரைக்காட்சிகளை கலர்புல்லாக காட்டக்கூடிய டி.வியாக இந்த வகை டிவிக்கள் சந்தையில் விற்பனையில் சக்கைபோடு போடுகின்றன, இந்த வகை டிவிக்கள் சந்தையில் அறிமுகமான பொது அதிக விலையில் விற்கப்பட்டது.

ஆனால் பல்வேறு நிறுவனங்களும் இதில் போட்டி போட்டதால் இதன் விலை படிப்படியாக குறைந்து கிடைக்கின்றன.இந்த தொழில்நுட்பம் அறிமுகமானபோது பிளாஸ்மா வகை டிவிக்கள் விற்பனை குறைந்தது,மேலும் பிளாஸ்மாவுடன் ஒப்பிடும்போது எல்.சி.டி தொழில்நுட்பம் உயர்ந்ததாக உள்ளது.

ஆனால் இப்போது எல்.சி.டி தொழில்நுட்பத்தையும் தூக்கி சாப்பிடும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிவிட்டது, அதுதான் 'எல்.இ.டி'தொழில்நுட்பத்தை உள்ளடைக்கிய எல்.இ.டி டிவி. இனி சந்தையில் இந்த வகை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் டி.விக்கள் தான் போட்டியில் களமிறங்கும்.

இந்த வகை டி.விக்களில் அகன்ற திரை, படங்களை மிகத்துல்லியமாக காட்டும்(high resulation picture engine, இன்டர்நெட் டி.வி,யு.எஸ்.பி போர்ட்,Wireless LAN Adaptor Support ,100/200Hz என்ற வேகத்தில் செல்லக்கூடிய திரைக்காட்சிகள் போன்ற புதிய தொழில்நுட்ப வசதிகள் உண்மையிலேயே நம் வாழ்க்கையை இன்னும் பரவசப்படுத்துவதாக அமையும் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்தியாவை பொறுத்தவரை "சாம்சங்" நிறுவனம் தான் முதல்முறையாக இந்த வகை டி.விக்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் விலை மட்டும் மிக மிக அதிகமாக உள்ளது.

இது அறிமுகப்படலம் என்பதால் விலை அதிகமாக உள்ளது, போட்டி நிலவும் போது விலையும் தானாக குறைந்து விடும். அதுவரை பொறுத்திருப்போமே?

Leia mais...

Jan 15, 2010

போனுக்கு மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்மைக்ரோசாப்ட் நிறுவனம் ஐ போனுக்கு அப்ளிகேஷன் புரோகிராமினைத் தருமா என்ன? என்று நீங்கள் வியப்பது தெரிகிறது. ஆனால் உண்மை அதுதான்.

மைக்ரோசாப்ட் லைவ் லேப்ஸ் அத்தகைய ஒரு புரோகிராம் ஒன்றைத் தருகிறது. ஸீ ட்ரேகன் என இதற்குப் பெயர் இட்டுள்ளது. இதன் மூலம் ஐ போன் பயன்படுத்துபவர்கள் 3ஜி அல்லது வை–பி வழியாக பெரிய அளவிலான போட்டோ லைப்ரேரிகளை எளிதாகப் பெற்று காண முடியும்.

இந்த சாப்ட்வேர் தொகுப்புடன் 50 படங்கள் இணைத்துத் தரப்படுகின்றன. சில படங்கள் 10 கிகா பிக்ஸெல்கள் அளவில் மிகப் பெரியதாக உள்ளன. இதில் சில சாட்டலைட் மூலம் எடுத்த படங்கள், சில ஸ்பேஸ் போட்டோக்கள், சில அதிக ரெசல்யூசனில் உள்ள கலைப் படங்களாகும்.

இந்த சாப்ட்வேர் தொகுப்பின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இது முற்றிலும் இலவசம். ஒரு சின்ன மாற்றம் இருந்தாலும் அடுத்த மேம்படுத்தப்பட்ட சாதனத்திற்கு மாறிக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் வழங்கும் மைக்ரோசாப்ட் இவ்வாறு இலவச தொகுப்பினை எப்போதும் பயன்படுத்தும் வகையில் வழங்குவது புதுமைதான்.

இதனுடைய சொந்த மொபைல் பிளாட்பார்மில் இயங்கும் விண்டோஸ் மொபைல் இயக்கத் தொகுப்பிற்கான புரோகிராம்களைத் தந்தால் நாம் வாழ்த்தலாம். அதுவும் போனை மாற்றாமலேயே பயன்படுத்தும் படி அவை இருக்க வேண்டாம்

Leia mais...

Jan 14, 2010

மைக்ரோசொப்டின் புதிய மென்பொருள்


எப்பொழுதும் புதியதாக யோசிக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனம் மீண்டும் தன்னை நிருபித்துள்ளது. மென்பொருள் உலகின் சுல்தான் ஆன மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு அறிய படைப்பு இது.

நம் அனைவருக்கும் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது என்றால் கொள்ளை விருப்பம்தானே. அது போல நாம் ஒரு கம்ப்யூட்டர் கேம்சை உருவாக்கினால், அப்படிதான் யோசித்தது மைக்ரோசாப்ட். அதன் விளைவாக அனைவரும் கம்ப்யூட்டர் கேம்ஸ் உருவாக்கும் வகையில் ஒரு மென்பொருளை கண்டுபிடித்துள்ளது. அதன் பெயர் கோடு (KODU)

இதனை பயன்படுத்த எந்த ஒரு கம்ப்யூட்டர் மொழியும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தும் மிக எளிய வகையில் செய்து விடலாம். இதை பயன்படுத்தி ஒரு குழந்தை கூட ஓர் விளையாட்டை உருவாக்கிவிடும். மைக்ரோசொப்டின் இந்த முயற்சி கண்டிப்பாக பாராட்டத்தக்கது.

கம்ப்யூட்டர் அனைவருக்கும் உரிய சாதனமாகும் மைக்ரோசொப்டின் முயற்சியில் இது ஒரு மைல்கல். இந்த சாப்ட்வேர்ஐ பயன்படுத்தி மைக்ரோசொப்டின் Xbox எனப்படும் சாதனத்துக்கும் விளையாட்டுக்களை உருவாக்கலாம்.

மென்பொருள் தரவிறக்கம் செய்ய

Leia mais...

Jan 13, 2010

ஐபோன் பயன்படுத்துவோர் உஷார்


வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை ஐபோன் மூலம் மேற்கொள்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய வைரஸ் ஒன்று ஐபோனிலுள்ள வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட விவரங்களைக் "லபக்'கிடும் அபாயம் தலைதூக்கியுள்ளது.

மொபைல் போன் என்பது பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது இவற்றைக் கடந்து, அன்றாட தொழில் சம்பந்தமான பணப் பரிவர்த்தனை, வங்கிக் கணக்கு கையாளல் போன்றவற்றுக்கு கூட இப்போது பயன்படுத்தப்படுகிறது.

சைபர் கிரிமினல்கள் என்ற கணினி அல்லது மொபைல் போன்மூலம் கொள்ளையடிக்கும் கும்பல், இப்போது இந்தப் புது வகை உயர் ரக போன்களிலும் புதிய வைரசைப் பரப்பி வருகிறது.குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் இந்தப் புதிய வகை வைரஸ் புயல் வேகத்தில் பரவி வருகிறது. மொபைல் போனில் புரியாத வார்த்தைகள், பிரபலங் களின் படங்கள் திடீரென தோன்றினால், அது புதிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வைரஸ், மொபைல் போனில் பதிவிடப்பட்டிருக்கும் வங்கிக் கணக்குகளை அப்படியே லவட்டி, சைபர் கிரிமினல்களுக்கு அனுப்பி விடும். போன் உரிமையாளரால் கூட இதைக் கட்டுப்படுத்த முடியாது.

வங்கிக் கணக்குகள், பாஸ்வேர்டு உள்ளிட்ட பணப் பரிவர்த்தனைக்குரிய அத்தனை ரகசியங்களும் சைபர் கிரிமினல்களின் கைக்குச் சென்றுவிடும்.ஆப்பிள் நிறுவன மொபைல் போன் போல் போலிதயாரிப்புகள் வருகின்றன.

அவை மூலம் இந்த வைரஸ் அதிவேகத்தில் பரவுகிறது.சில வாரங்களுக்கு முன் தான் இந்த வைரசை அடையாளம் கண்டறிந்துள்ளனர் நிபுணர்கள்.

இந்த வைரஸ் பரப்பப்படுவதில் பண மோசடி செய்யும் கும்பல் மிகப் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leia mais...

Jan 12, 2010

மொபைல் போன் வைரஸ்


கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் அளவிற்கு மொபைல் போன் வைரஸ் தாக்கமும் பரவலும் இல்லை என்றாலும் அவை குறித்து அறிந்து கொள்வது நல்லது. முன் கூட்டியே நம் மொபைல் போன்களைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். செல் போன் வைரஸ்கள் தன்மை மற்றும் அவை எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இங்கு பார்க்கலாம்.

மொபைல் வைரஸ் – சில அடிப்படைக் கூறுகளும் பரவும் விதமும்

மொபைல் போனில் பரவும் வைரஸ் புரோகிராமும் கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராம் போலவே தேவையற்ற ஒரு எக்ஸிகியூட்டபிள் பைல் ஆக வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. ஒரு சாதனத்தைக் கைப்பற்றிப் பின் மற்ற சாதனங்களுக்கு அதன் காப்பியை அனுப்பும் வழியையே இந்த வைரஸும் பின்பற்றுகிறது.

கம்ப்யூட்டர் வைரஸ் இமெயில் அட்டாச்மெண்ட் மற்றும் இன்டர்நெட் டவுண்லோட் புரோகிராம் வழியாகப் பரவுகின்றன. மொபைல் போன் வைரஸும் இன்டர்நெட் டவுண்லோட் பைலுடன் வருகிறது; எம்.எம்.எஸ். மெசேஜ் இணைந்து பரவுகிறது; புளுடூத் வழி பைல்களை மாற்றுகையில் உடன் செல்கிறது.

பெரும்பாலும் கம்ப்யூட்டருடன் பைல்களை பரிமாறிக் கொள்கையில் மொபைல் போன்களுக்கு வைரஸ்கள் பரவி வந்தன. இப்போது மொபைல் போன் களுக்கிடையேயும் பைல் பரிமாற்றத்தின் போது பரவி வருகின்றன.

இந்த வகை பரவல் பெரும்பாலும் சிம்பியன் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் மொபைல் போன்களுக்கிடையே நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களுக்கென தயாரித்து பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள போன்களில் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

வைரஸ் பாதிக்கப்பட்ட மொபைல் போன்களில், வைரஸ்கள் கேம்ஸ், செக்யூரிட்டி பேட்ச், கூடுதல் வசதி தரும் ஆட் ஆன் புரோகிராம், பாலியியல் படங்கள் போலக் காட்சி அளிக்கின்றன. சில வைரஸ்கள் போனுக்கு வந்திருக்கும் மெசேஜ் டெக்ஸ்ட்டின் தலைப்பு வரிகளைத் திருடி, அவற்றையே தங்கள் தலைப்பாகவும் வைத்துக் கொள்கின்றன.

இதனால் நாம் அவற்றைத் திறக்க ஆர்வம் காட்டுவோம். ஆனால் மெசேஜைத் திறப்பதனால் உடனே வைரஸ் நம் போனை முடங்கச் செய்துவிடும் வாய்ப்புகளும் நூறு சதவிகிதம் இல்லை. அந்த மெசேஜ் உடன் வந்திருக்கும் வேறு இணைப்பு பைலைத் திறந்தால் தான் வைரஸ் தன் வேலையைக் காட்டும்.

இது போன்ற பரவும் வழிகளில், போன் பயன்படுத்துபவர் தானாக ஒன்று அல்லது இரண்டு முறை மெசேஜ் இயக்க அழுத்த வேண்டியதிருக்கும். பொதுவாக போன் அழைப்புகளை ஏற்படுத்தவும் பெறவும் மட்டுமே பயன்படும் மொபைல்களில் அவ்வளவாக வைரஸ்கள் பரவுவதில்லை.

Leia mais...

கணணியின் வேகத்தை அதிகரிக்க ஒரு சிறந்த டிஸ்க்எந்த கண்ணியிலும் Hard disk தான் மிக வேகம் குறைந்த பகுதியாகும். இது அதன் capacity ஐ பொறுத்து மாறுபடும். hard disk ஐ பராமரிப்பதும் இலகு அல்ல . இதனாலேயே கணணி டெக்னிசியன்ஸ் களால் அடிக்கடி hard disk ஐ Defragment செய்யுங்கள் என அறிவுறுத்தப்படுவீர்கள்.

விண்டோஸ் இல் ஏற்கனவே இருக்கும் டிஸ்க் Defragmentation டூல் கொண்டு இதைச் செய்தால் மிக மெதுவாகவே Defragment செயற்பாடு இருக்கும். இதை சற்றே அதிக வேகத்துடன் செய்வதற்கெனவும் வீட்டுப்பாவனையாளர்களுக்கு  இலவசமாகவும் Auslogics Disk Defrag டூல் கிடைக்கிறது.

பாரம் குறைந்த பயன்படுத்த இலகு வானதுமான Disk Defrag 3 ஒரு டிஸ்க் ஒப்டிமைசராகவும் செயற்படும். மற்றைய புரோகிராம்ஸ் இயங்கும் போதும் இது அதிக கணணி வளத்தை எடுக்காமல் background இல் இயங்கக் கூடியது. மேலும் கணனியின் எவ்வளவு வீதம் டிஸ்க் usage ஐ பாவிக்க வேண்டும் என்பதையும் இதில் அஜெஸ்ட் செய்யலாம்.

தரவிறக்க சுட்டி

Leia mais...

கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தவென ஒரு இலவச திசைகாட்டி (Compass) மென்பொருள்


கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்தவென  ஏராளமான பயனுள்ள  மென்பொருட்கள் இணையத்தில் குவிந்து காணப்படுகின்றன. அத்தகைய ஒரு மென்பொருள் பற்றிய பதிவுதான் இது.

Compass 4.1 எனப்படும் இந்த மென்பொருளானது கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்த கூடிய வகையில் அமைக்கப்படுள்ள ஒரு திசைகாட்டி ஆகும்.

இந்த மென்பொருளானது நமது அமைவிடத்தின் ஆள்கூறுகளை(Location Coordinates)  கொண்டு வானியலில் கதிரவன்(Sun) மற்றும் நிலவின்(Moon)  வானியல்  (Astronomy) அமைவிடங்களை எமக்கு தருகின்றது. அத்துடன் சர்வதேச நியம நேரத்தினை அடிப்படையாக கொண்டு (GMT)  அந்த நாடுகளின் நேரங்களில் கதிரவனினதும் சந்திரனினதும் உதயமாகும் நேரம்(Rise) , மத்திய கோட்டினை கட்டைக்கும் நேரம் (Transit) மற்றும் மறையும் நேரம் (Set) என்பவற்றினையும் எமக்கு தருகின்றது. அத்துடன் பல்வேறுபட்ட தகவல்களையும் பெற்றுகொள்ள கூடிய விதத்தில் இந்த மென்பொருளானது வடிவமைக்கப்படுள்ளது.

பெரும்பாலான Nokia, Samsung, Sony ericson,LG,RoverPC:M1,sagem.Qtek,Philips,pantech, lenovo, T-Mobile , Toshiba, i-mate,Sendo,sharp,Orange,O2,Mitac,Motorola,Huawei, போன்ற பல வகையான தொலைபேசிகளில் பயன்படுத்த முடியும்.

தரவிறக்க சுட்டி

Leia mais...

Jan 11, 2010

இணையத்திலிருக்கும் 6 அற்புத அப்பிளிகேஷன்கள்

we Transfer

நச் என்று இருக்கும் தள வடிவமைப்புடன் மிக இலகுவாக 2 GB அளவு வரையான file களை நண்பர்களுடன் பகிர உதவும் தளம். ரெயிஸ்டர் செய்யத்தேவையில்லை. 2 வாரத்துக்கு உங்கள் data க்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாப்பாக இருக்கும் என்கின்றனர் இவர்கள்.

flockdraw

கணணி மென்பொருட்களின் உதவி இல்லாமல் இணையத்திலிருந்தவாறே சுலபமாக படம் வரைவதற்க்கு உதவும் தளம். இது ஒரு  ரியல்டைம் பெயிண்டிங் டூல்.

Mitto

இது ஒரு ஒன்லைன் பாஸ்வேட் மனேஜர். மிக பாதுகாப்பானதும் கூட. விசிட் செய்யும் அனைத்து தளங்களின் பாஸ்வேட் யூசர் நேம் விபரங்களை ஒரே இடத்தில் சேமித்து ஒரு கிளிக் இல் அனைத்தையும் லாகின் செய்ய உதவும் தளம்.

Squareleaf

ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியவற்றை சிறிய சிட்டையில் எழுதி வைத்துக் கொள்வதுண்டு அதையே இணையத்தில் செய்யவதற்க்கு Squareleaf ஐ பயன்படுத்தலாம். இது ஒரு விர்ச்சுவல் வைட்போட்.

freemypdf

சில pdf டாக்குமெண்ட் File கள் பாஸ்வேட் கொடுத்து சேமித்திருப்பார்கள். அதை சுலபமாக நீக்கி தடையின்றி pdf டாக்குமெண்ட் File ஐ திறந்து படிக்க உதவும் தளம்.

profilder

சோசல் நெட்வேர்க் தளங்களில் உள்ள  Profile களை வண்ண மயமாக்க உதவும் தளம்.

Leia mais...

மடி கணனியின் அடுத்த அவதாரம் 'டேப்ளட்'

தொழில்நுட்ப மேம்பாட்டின் வளர்ச்சி காரணமாக தற்போதுள்ள லேப்டாப் எனப்படும் மடிக்கனிணியின் அடுத்த அவதாரம் தான் விரைவில் வெளிவரவுள்ள இந்த டேப்ளட் எனப்படும் சிறிய அளவிலான கம்ப்யூட்டர்கள்.

பார்ப்பதற்கு ஸ்லேட் போன்றே இருப்பதால் இதை ஸ்லேட் என்று அழைத்தாலும் தவறு இல்லை. இந்த டேப்ளட்கள் விரைவில் ஆப்பிள், டெல், ஹெச்பி, மோட்டோரோலா, லெனோவா என அனைத்து நிறுவனங்களும் அறிமுகப்படுத்த உள்ளன.

லாஸ் வேகாசில் இந்த வாரம் நடைபெறவுள்ள புதிய நுகர்வோர் மின்னணு பொருட்கள் கண்காட்சியில் இந்த டேப்ளட்கள் காட்சிக்கு வர உள்ளன. ஸ்மார்ட் போன்கள் எனப்படும் நவீன செல்போன்களுக்கும், லேப்டாப்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் இந்த டேப்ளட்கள் அமைந்திருப்பதாக தொழில்நுட்ப நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆப்பிள் அறிமுகம் செய்ய உள்ள 10 அங்குலம் அளவிலான டேப்ளட் குறித்த அறிவிப்பு இம்மாதம் 27ம் தேதி வெளியிடப்பட உள்ளது. செல்போன்களில் ஐபோன் ஏற்படுத்திய மாற்றத்தை கம்ப்யூட்டர்களில் இந்த டேப்ளட் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அளவை விட குறைவான அளவில் கூட டேப்ளட்கள் வந்து புரட்சியை ஏற்படுத்தப் போவதாக என்விடியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஜென் சுன் ஹுவாங் தெரிவித்துள்ளார்.

இந்த டேப்ளட்கள் 500 டாலர் என்ற அளவில் விலை இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leia mais...

இணைய ஆபத்தும் பாதுகாப்பும்


பொதுவாக கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டில் நாம் சந்திக்கும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லாவா சாப்ட் (Lavasoft) நிறுவனம், வரும் ஆண்டில் ஐந்து வகையான ஆபத்துகள் இருக்கும் எனப்பட்டியலிட்டுள்ளது.

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மீது தாக்குதல், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில் தாக்குவதற்கு ஏதுவான இடம் பார்த்து நுழைதல், நாசம் விளைவிக்கும் தொகுப்புகள் தயாரிப்பு, விண்டோஸ் தவிர மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் பயன்பாடு அதிகரித்தல் மற்றும் மொபைல் போன்களில் மால்வேர் புரோகிராம்கள் என இவற்றை வரிசைப்படுத்தியுள்ளது.

(லாவா சாப்ட் நிறுவனம் 1999ல் தொடங்கப்பட்டது. இதனை ஒரிஜினல் ஆண்ட்டி ஸ்பைவேர் நிறுவனம் என அழைப்பார்கள். இதனுடைய இலவச ஆட்–அவேர் புரோகிராம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே பிரபலமானது. இதுவரை 40 கோடிக்கு மேலான எண்ணிக்கையில் இது டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது)

1. 2009ஆம் ஆண்டின் இறுதியில் ஆன்லைன் கிரிமினல்கள் நடவடிக்கை 477% உயர்ந்து இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆட் அவேர் (AdAware) என்னும் ஆண்ட்டி மால்வேர் தளத்தில், நாசம் விளைவிக்கும் புதிய புரோகிராம்களின் பட்டியலின் எண்ணிகை அந்த அளவிற்கு உயர்ந்துள்ளது.

வழக்கமான முறையிலேயே இந்த மால்வேர் புரோகிராம்களின் வேலை தொடரும். அதே நேரத்தில் புதிய சிஸ்டம் புரோகிராம்கள் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் வழியாகவும் இவை தங்கள் வேலையை மேற்கொள்ளும் என இந்நிறுவனம் எச்சரித்துள்ளது. குறிப்பாக தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களை இந்த வகை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இலக்காகக் கொண்டு நிச்சயம் மால்வேர் புரோகிராம்கள் வடிவமைக்கப்படும். மைக்ரோசாப்ட் இதனைத் தடுத்து, சிஸ்டத்தி னை பாதுகாப்பானதாக அமைக்கும் பட்சத்தில், புதிய அப்ளிகேஷன் சாப்ட்வேர்களைத் தங்கள் தளமாக மால்வேர்கள் கொள்ளலாம்.

எனவே ஆப்பிள் மேக் மற்றும் பிற சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்கள், தங்களுக்கென ஒரு ஆண்ட்டி வைரஸ் சிஸ்டத்தினை உருவாக்கிக் கொள்வது இந்த ஆண்டில் ஏற்படும்.

3.ஸ்கேர்வேர் (Scareware) என்ற வகையில், நேரடியாகவே வைரஸ் புரோகிராமாக உருவாக்கப்படுபவற்றின் எண்ணிக்கையும் இந்த ஆண்டில் அதிகரிக்கும். இவற்றைத் தயாரித்து நிறுவனங்களிடம் பணம் பறிக்கும் வேலை அதிகமாகும்.

4. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது அதிருப்தி கொண்டவர் எண்ணிக்கை உயரும் வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த ஆண்டில் உபுண்டு லினக்ஸ், புதிதாக விண்டோஸ் தவிர்த்து மற்ற சிஸ்டங்களை நாடுபவர்களிடம் இடம் பெறலாம்.

விண்டோஸ் அளவிற்கு இது உயராவிட்டாலும், விண்டோஸ் மீது வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல்கள் இருக்கும் பட்சத்தில், லினக்ஸ் புதிய இடம் பெறலாம். அப்படி இடம் பெறுகையில், இதுவரை அதிகம் தாக்குதலுக்கு ஆகாத லினக்ஸ் தொகுப்புகள் பக்கம் மால்வேர் உருவாக்குபவர்களின் ஆர்வம் திரும்பலாம்.

5. ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு இந்த ஆண்டு அதிகம் இடம் பெறலாம். கூடுதலான பயன் தன்மையுடன், குறைவான விலையில் இவை கிடைப்பதாலும், மொபைல் வழி நெட்வொர்க் எளிதாகக் கிடைப்பதாலும், சேவைக் கட்டணம் குறைப்பாலும், மொபைல் போன்களிடையே ஸ்மார்ட் போன் நிச்சயம் அதிக எண்ணிக்கையில் இடம் பெறும்.

அப்படி இடம் பெறுகையில், ஸ்மார்ட் போன்களைத் தாக்கும் மால்வேர் புரோகிராம்களும் அதிக எண்ணிக்கையில் காணப்படும். எனவே 2010 ஆம் ஆண்டு, பலமுனை பயமுறுத்தல்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும் என லாவாசாப்ட் கருத்து தெரிவிக்கிறது.

Leia mais...

Jan 10, 2010

டிவிட்டருக்கு மாற்றாக ஒரு புதிய சேவை


குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு போட்டி என்று சொல்லக்கூடிய சேவை பெரிதாக எதுவும் இல்லை. இருப்பவை பிரபலமாக இல்லை.டிவிட்டருக்கு மாற்று என்று சொல்லக்கூடிய குறும்பதிவு சேவைகளும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.


ப‌வுன்ஸ்,ஜெய்கூ,பிரைட்கைட்,போன்ற‌ மாற்று சேவைக‌ள் இருக்க‌வே செய்கின்ற‌ன‌ என்றாலும் டிவிட்ட‌ருக்கு ச‌வால் விட‌க்கூடிய‌தாக‌ அவை இல்லை என்ப‌தே விஷ‌ய‌ம்.

இனி ஒரு புதிய‌ குறும்ப‌திவு சேவை டிவிட்ட‌ர் அள‌வுக்கு புக‌ழ் பெற‌ முடியுமா? என்று தெரிய‌வில்லை.

இந்நிலையில் டிவிட்ட‌ருக்கு மாற்று என்னும் அறிமுக‌த்துட‌ன் புதிய‌தொரு டிவிட்ட‌ர் போன்ற‌ சேவை உத‌ய‌மாகியுள்ள‌து. http://txt.io/http://txt.io/ என்னும் அந்த‌ சேவை டிவிட்ட‌ரைவிட‌ எளிமையான‌து என்றும் என‌வே டிவிட்ட‌ர் ப‌ய‌ன்ப‌டுத்த‌ சிக்க‌ல‌ன‌தாக‌ இருக்கிற‌து என‌ க‌ருதுப‌வ‌ர்க‌ளுக்கான‌து என‌ தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌‌து.

டிவிட்ட‌ரை விட‌ எளிமையான‌ சேவை கிடையாது . அதை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில் எந்த‌ சிக்க‌லும் இல்லை.டிவிட்ட‌ரில் முக‌வ‌ரி க‌ண‌க்கை துவ‌ங்கி ஒற்றை வ‌ரியில் அல்ல‌து சிறிய‌தான‌ ஒரு சில‌ வ‌ரிக‌ளில் க‌ருத்துக்க‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌த்தௌவ‌ங்க‌லாம்.அத‌ன்பிற‌கு பின்தொட‌ர்வ‌து,குறிச்சொல் இடுவ‌து என‌ எண்ண‌ற்ற‌ வ‌ச‌திக‌ள் இருக்கின்ற‌ன‌. அவை ச‌ற்று மிர‌ட்சியை த‌ர‌லாம். ஆனால் ப‌ய‌ன்ப‌டுத்த‌ ஆர‌ம்பித்துவிட்டால் அவ‌ற்றை எளிதாக‌ புரிந்து கொள்ள‌லாம்.

உண்மையில் இத்‌த‌கைய‌ வ‌ச‌திக‌ளே டிவிட்ட‌ரை ஒரு சாதா‌ர‌ண‌ சேவையில் இருந்து அசாத‌ர‌ண‌ சேவையாக‌ உய‌ர்த்தியுள்ள‌து.

இருப்பினும் டிவிட்ட‌ர் புரிய‌வில்லை அல்ல‌து சிக்க‌லான‌தாக‌ இருப்ப‌தாக‌ நினைப்ப‌வ‌ர்க‌ள் இருக்க‌கூடும் என்ற‌ ந‌ம்பிக்கையில் மேலே சொன்ன‌ சேவை உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

சேவை எளிமையான‌தோ இல்லையோ அத‌ன் முக‌ப்பு ப‌க்க‌ம் எளிமையான‌தாக‌ உள்ள‌து.சொல்ல‌ப்போனால் ப‌டு எளிமை.கூகுல் க‌ண‌க்கு மூல‌ம் புதிய‌ ப‌க்க‌த்தை உருவாக்கி கொள்ளுங்க‌ள் என்னும் வாச‌க‌த்தை கிளிக் செய்து உறுப்பின‌ராக‌ சேர்ந்தால் இந்த‌ சேவையை ப‌ய‌ன்ப‌டுத்த‌ துவ‌ங்கிவிட‌லாம்.
நினைப்ப‌தை டைப் செய்து ப‌திவு செய்ய‌லாம். ஆனால் அத‌னால் என்ன‌ ப‌ய‌ன் என்று தெரிய‌வில்லை.

உண்மையில் இந்த‌ சேவை டிவிட்ட‌ரை காட்டிலும் எளிமையான‌து அல்ல‌; ஆனால் டிவிட்ட‌ர் ஏன் சிற‌ப்பான‌தாக‌ இருக்கிற‌து என‌ புரிந்து கொள்ள‌ உத‌வ‌க்கூடிய‌து.எளிமை என்ப‌து ப‌யன்பாடு சார்ந்த‌து என்றால் டிவ்ட்ட‌ர் தான் அதில் ம‌ன்ன‌ன்.

- சைபர் சிம்மன்

Leia mais...

உங்கள் இணையத்தின் வேகம் !!!!!


பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் Condition-களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், நம்மிடம் வாங்கும் கட்டணத்திற்கேற்ற வேகத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்று இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை நாம் கணக்கிட்டுப் பார்த்து அறிய வேண்டும். இதனை எந்த வழியில் அறியலாம் என்று பார்க்கலாம்.

உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய  www.speedtest.net என்ற தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான Router-ருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்துகாட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.

தளத்திற்கு சென்றவுடன் Begin Test என்பதை Click செய்யவும்


உங்கள்  இணைய வேகம் அடங்கிய தகவல்கள் இப்படி கிடைக்கும்


அடுத்ததாக, நீங்கள் இன்டர்நெட் இணைப்பு பெற்று சில ஆண்டுகள் கழிந்திருந்தால், உங்களிடம் முதன் முதலில் கொடுத்த பிராட்பேண்ட் மோடம் தான் இருக்கும். இணைப்பு தரும் நிறுவனத்திடம், தற்போது அதிக வேக இணைப்பு மோடம் இருந்தால், ஒன்று உங்கள் இணைப்பிற்கென கேட்டுப் பெறவும். இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் அடிப்படை இயக்க சாதனங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது போல புதுப்பித்துத் தருவதில்லை; அது குறித்த தகவல்களைக் கூடத் தருவதில்லை.

Tamil IT


Leia mais...

Jan 9, 2010

நிலவில் மிகவும் குளிர்ச்சியான பகுதி

இரவில் குளிர்ச்சி தருவது நிலவு. ஆனால் சூரிய குடும்பத்திலேயே வெதுவெதுப்பான கிரகம் சந்திரன்தான். இருந்தாலும் நிலவின் குளிர்ச்சியான பகுதி தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

நாசா விண்வெளி மையத்தின் எல்.ஆர்.ஓ. என்ற நிலவை ஆராயும் விண்கலம் இதை கண்டுபிடித்தது. நிலவின் தென் மேற்குப் பகுதிதான் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இரவில் மைனஸ் 294 டிகிரி செல் சியஸ் குளிருக்குச் செல்கிறது.

நிலவு 1.54 டிகிரி சாய்வாக இருந்து பூமியை சுற்றி வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப மாற்றம் அதிகமாக வித்தியாசப்படுவதில்லை. நில நடுக்கோட்டுப் பகுதியில் மட்டும் சற்று அதிகமான வெப்பமும், அதிகமான குளிரும் நிலவுகிறது.

நிலநடுக்கோட்டுப் பகுதியில் பகலில் 127 டிகிரி செல்சியஸ் வெப்பமும், அதே பகுதியில் இரவு மிக அதிகமான குளிரும் ஏற்படுகிறது. சூரியன் 6 மாதகாலம் பூமியின் தென் அரைக்கோளத்திலும், மற்ற 6 மாதம் வட அரைக்கோள பாதையிலும் சுற்றிவரும். சமீபத்தில் அக்டோபரில் தென் அரைக்கோளத்தில் பயணித்தபோது வெப்ப அளவீடுகள் கணிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நிலநடுக்கோட்டின் தென்பகுதியில் மைனஸ் 238 செல்சியஸ் வரையும், தென்மேற்கு பகுதியில் மைனஸ் 294 செல்சியஸ் வரையும் குளிர் நிலவுகிறது. ஆனால் வடபகுதியில் அதிகஅளவில் வேறுபாடுகள் இல்லை.

கிரகங்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றிவருவது இந்த மாறுபாட்டுக்கு காரணம் ஆகும். நிலவின் குளிர்ச்சியான தென்மேற்குப் பகுதிக்கு `ஹெர்மைட்’ என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.

Leia mais...

காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்

காதலரை விட செல்போனை பெண்கள் அதிகம் நேசிப்பதாக ஆஸ்திரேலிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் பான்புரோக்கர் பாரோ. அது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 4,000 இளம்பெண்களிடம் ஒரு ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது. அதில் பாய் பிரண்டைவிட தங்கள் செல்போனை அதிகம் நேசிப்பதாக 10ல் 4 பெண்கள் தெரிவித்தனர்.

காதலரை பிரியும் போது கவலையை விட செல்போன் தொலைந்தால் ஏற்படும் கவலை அதிகம் என்றனர். அதிக பணம் தருவதாக கூறினால் பாய் பிரண்டை கைவிடத் தயாரா என்ற கேள்விக்கு 10ல் ஒரு பெண் ஓகே என்றாராம். ரூ.4.5 கோடிக்கு மேல் கொடுத்தால் காதலரை கைகழுவுவேன் என்பது அவரது கண்டிஷன். விலை கொஞ்சம் ஓவர்தான் இல்லையா?

Dinakaran

Leia mais...

மொபைலுக்கு வயது 26

மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனிலிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி ஐ–போன் வரையில் வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது26.

ஆம், 1983ல் முதன்முதலாக மோட்டாரோலா நிறுவனத்தின் பிரிக் ("BRICK") என்ற மொபைல் போன் மூலம் வர்த்தக ரீதியான மொபைல் விற்பனைக்கு வந்தது. மொபைலில் முதன் முதல் அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா? தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல் உறவினரே அவர். அமெரிக்கன் மொபைல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பாப் பார்னெட் தான் இந்த அழைப்பை ஏற்படுத்தினார்.

அப்போதெல்லாம் வெகுநாட்கள் வரை பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக மொபைல் இருந்துவந்தது. இப்போது நம் அன்றாடவாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அமைந்துவிட்டது. 2007 ஆம் ஆண்டில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐ–போன் வடிவமைப்பிலும் இன்டர்பேஸ் இணைப்பிலும் மொபைல் போன் அதன் பயன்பாட்டில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொபைல் போன் முதன் முதலில் வந்த பின் ஓராண்டு கழிந்த பின்னர் மொத்தம் ஏறத்தாழ 12 ஆயிரம் பேரே இந்த சேவைக்கு வாடிக்கையாளர்களாகப் பதிந்திருந்தனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கான பேர் மொபைல் போனைப் பயன்படுத்தி வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக லேண்ட் லைன் போனை மொபைல் நீக்கிவருகிறது.

பேசுவதற்கு மட்டும் வந்த போன் இன்று டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்புவதற்கும் பெரும்பாலும் பயன்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா பரிமாற்றத்தை ஏற்படுத்த ஏற்பட்டதே இன்றைய 3ஜி மற்றும் வர இருக்கும் 4ஜி மொபைல் சேவைகள் ஆகும். இந்த புயல் வேக மாற்றங்கள் அடுத்த 25 ஆண்டுகளில் மொபைல் போனில் என்ன என்ன மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதைக் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலவில்லை.

Leia mais...

Jan 8, 2010

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் : ஜேர்மனிய விஞ்ஞானிகள்


"செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும்'' என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. `அல்ஷ் கெய்மெர்ஷ்' என்ற மறதி நோயினால் உலகில் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். மூளையில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழப்பதால் இந்த நோய் உருவாகிறது.

இந்த நோயை ஜெர்மனியை சேர்ந்த `ஆலியோஸ்' என்ற விஞ்ஞானி கடந்த 1906-ம் ஆண்டு கண்டு பிடித்தார். அன்று முதல் இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது தான் இந்த நோயை குணப்படுத்த புதிய யுக்தி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து செல்போன் பேசுவதன் மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம் என ஆய்வு மூலம் தெளிவு படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டனர். இவர்கள் 96 எலிகளுக்கு நாள் ஒன்றுக்கு இருமுறை செல்போன்கள் மூலம் எலக்ட்ரோ மேக்னடிக் அலை கற்றைகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாய்ச்சினர்.

இதன் மூலம் அல்ஷ்கெய் மெர்ஷ் நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் நினைவாற்றல் அதிகரித்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் செல்போனில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் அலைக்கற்றைகள் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

தினமலர்

Leia mais...

USB Devices ஐ பாதுகாப்பாக கணனியிலிருந்து அகற்றுவதற்கான ஒரு இலவச மென்பொருள்

USB Removable Devices ஐ எமது கணனியிலிருந்து பாதுகாப்பாக அகற்றுவது அவசியம். இல்லாதுவிடில் உங்கள் USB Drives களிலிருந்து சிலவேளைகளில்தரவுகளோ, கோப்புக்களோ( documents and folder) காணாமல் போகும் சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே உங்கள் கணனியிலிருந்து USB Devices பாதுகாப்பாக அகற்றப்படுவது மிக அவசியம்.

அவ்வாறு உங்கள் USB Devices ஐ பாதுகாப்பாக நீக்குவதற்கு என பிரத்தியேகமாக சில மென்பொருட்கள் உள்ளன. அத்தகைய ஒரு இலவச மென்பொருள் தான் USB Safely Remove.


மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியதன் (Install) பின்னர் கணனியில் System Tray இல் ICON ஒன்று தோன்றும். அதில் அழுத்தி (CLICK) USB Devices ஐ பாதுக்காப்பாக உங்கள் கணனியிலிருந்து அகற்றி கொள்ளுங்கள்.
மென்பொருள் தரவிறக்க சுட்டி: Download USB Safely Remove.

Leia mais...

YouTube இலிருந்து காணொளிகளை தரவிறக்க இணையவழி இலவச மென்பொருள்

இணையத்தில் Youtube இலிருந்து காணொளிகளை ன்றும் பல ஆவணங்களை பல்வேறுபட்ட வடிவங்களில் தரவிறக்கவென பல்வேறு இணையத்தளங்கள், மென்பொருட்கள் உள்ளன. ஏற்கனவே எனது இடுகைகளில் அத்தகைய பல தகவல்களை பதிவிட்டுள்ளேன். அத்தகைய ஒரு இணைய வழியிலான மென்பொருள் சம்பந்தமான இணையம் பற்றித்தான் இன்றைய பதிவை இடவுள்ளேன்.

catch YouTube இது ஒரு இணையவழியிலான மென்பொருள் என்று குறிப்பிடலாம். இதிலிருந்து நீங்கள் YouTube காணும் காணொளிகளை பார்த்து மகிழலாம். இதிலுள்ள சிறப்பம்சம் mpg,mov,3gp,mp3,dvd,wav,mp4 போன்ற வடிவங்களில் இந்த தொகுப்புக்களை நீங்கள் தரவிறக்கி கொள்ளலாம். நீங்களும் தரவிறக்கி பார்த்து மகிழுங்கள்.

இணையச்சுட்டி: http://www.catchyoutube.com/

Leia mais...

கணனித்திரையில் சுருக்குவழி சின்னங்களை( Shortcut Icons) உருவாக்க ஒரு இலவச மென்பொருள்

நேரத்தை மீதப்படுத்தி கணணியை கையாள்வதற்கு பல வழிகள் உள்ளன. அவ்வாறான வழிகளில் ஒன்று தான் கணனித்திரையில் சுருக்குவழி சின்னங்களை (Desktop Shortcut Icons) உருவாக்கி அவற்றின் மூலம் கணணியை கையாள்வதற்கான நேரத்தை மீதப்படுத்தி கொள்ளலாம்.
அவ்வாறு கணனித்திரையில் சுருக்குவழி சின்னங்களை (Shortcut Icons) உருவாக்கவென இலவச மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளில் சுருக்குவழியில் உருவாக்கப்பட்டுள்ள சில சின்னங்கள் உள்ளன.

Handy Shortcuts எனப்படும் இந்த மென்பொருளில் Lock WorkStation, Switch Account. Shutdown, Restart, Log Off, Hibernate, Show Desktop, Uninstall Programs, Device Manager, Security Center, Windows Defender, Windows DVD maker, Flip 3D, Launch Screen-saver, Disable Windows Firewall, Enable Windows Firewall, Clear Clipboard, Connect to Internet, Safely Remove Hardware and a Master Control Panel. போன்ற சுருக்குவழி சின்னங்களை உருவாக்க முடியும். இந்த சுருக்குவழி சின்னங்கள் யாவும் உங்கள் கணனித்திரையில் உருவாக்கப்படும். இலகுவானதொன்றாகவுள்ளது.

Leia mais...

இணையத்தில் ஒரு கணணி வியத்தகு இணையவழி இலவச இயங்குதளம்


ஆச்சரியப்பட கூடியவிதத்தில் இணையத்தில் கணணியை உருவாக்கியுள்ளார்கள் இணைய வல்லுனர்கள். இந்த இணையத்தில் கணணி என்பது (A computer in a web page) நீங்கள் கணணியை ஆரம்பித்து கடவுச்சொல் வழங்கி கணணி திறக்கும் போது கணணித்திரை (Desktop) எமது கண்களுக்கு எவ்வாறு புலப்படுகின்றதோ அவ்வாறு http://g.ho.st என்னும் இணையத்தளத்தில் இணையக்கணணி என்று அழைக்கப்படக்கூடிய விதத்திலே இவ் இணையத்தளமானது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையக்கணணி தளத்திலே 15GB கொள்ளளவுடைய G.ho.st Drive என்னும் சேமிப்பகம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 10GB கொள்ளளவுடைய மின்னஞ்சல் ஒன்றும் தருகின்றது. அத்துடன் ஆவணங்களை,தரவுகளை உருவாக்கக்கூடிய விதத்திலே Zoho Editor,Zoho sheets போன்ற மென்பொருட்கள் காணப்படுகின்றன. கணணித்தகவல்களை நிர்வகிக்ககூடிய விதத்திலே கட்டுபாட்டு தளம் (Control panel) போன்ற பல பகுதிகளும் காணப்படுகின்றன. கணணி ஒன்றுக்கு தேவையான அடிப்படை மென்பொருட்கள் பலவும் இதில் காணப்படுகின்றன. அத்துடன் மேலும் பல வசதிகளும் இதில் காணப்படுகின்றன. இது ஒரு முற்று முழுதான இலவசமான தளம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு சிறப்பான அம்சமாகும்.

Leia mais...

Winpatrol - 2010 :- சிறப்பான மற்றும் புதுமையான Anti Virus

நமது கணணி பயன்பாட்டில் மிகப்பெரிய சவாலாக அமைவது வைரஸ் புரோகிராம்களே.இவை கணனியில் உள்ள தகவல்களை பதம் பார்ப்பதில் பலே கில்லாடிகள். நாமும் இவற்றை அழிப்பதற்கு விதம் விதமான anti virus களை பயன்படுத்துகிறோம்.ஆனாலும் வைரஸ் புரோகிராம்கள் இவற்றையும் தாண்டி தமது வேலையை காட்டுகின்றன.

பொதுவாக வைரஸ் புரோகிராம்கள் கணனியில் உட்புகுந்தவுடன் தமது என்ட்ரியை கணணியின் registry யில் பதிவு செய்கின்றது.ஆகவே வைரஸ்ஸை registry யில் பதிவு செய்ய முன்பே தடுத்தால் எப்படியிருக்கும்? அதற்கான மென்பொருள் தான் Winpatrol. இந்த புரோகிராமினை AOL ஈமெயில் கிளையன்ட் புரோகிராமை வடிவமைத்த BILL PYTLOVANY உருவாக்கினார்.

இந்த புரோகிராமை கணனியில் பதிந்தவுடன் எமது கணணியின் registry யை ஒரு snap shot எடுத்து வைத்துக்கொள்ளும். பின்பு அதில் ஏதேனும் கோட் வரிகள் எழுதப்படும் போதெல்லாம் இது போல எழுதுவதற்கு இந்த புரோகிராம் முயற்சிக்கிறது என எச்சரிக்கை செய்கிறது. நீங்கள் அனுமதி கொடுத்த பிறகே registry யில் எழுதவிடும்.


இதன் காரணமாக நாம் ஏதேனும் ஒரு புரோகிராமினை install செய்யாத சமயத்தில் திருட்டுத்தனமாக நுழையும் புரோகிராம்களை தடுக்க முடிகிறது. இந்த வகையில் Winpatrol ஒரு சிறந்த security மென்பொருள் ஆகும்.

Leia mais...

Jan 6, 2010

செயற்கை ரத்தசெல்கள் தயாரிப்பு – இந்தியர் சாதனை

உடல் இயக்கத்தில் பெரும்பங்கு வகிப்பது ரத்தம். நாம் உண்ணும் உணவு, பல மாறுதல்களுக்குப் பிறகு ரத்தமாக மாறுவது இயற்கை வினோதங்களில் உச்சமாகும்.

ஆபத்துக் காலத்தில் உயிரைத் தாங்கிப் பிடிப்பதில் ரத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனாலும் ரத்தப்பிரிவுகள் வேறுபடுவதால் எல்லோருக்கும் தேவையான ரத்தம் உடனடியாக கிடைப்பதில்லை. இதற்காக ரத்தத்தை உறையவைத்தல், தனித்தனி ரத்தசெல்களாக பிரிப்பது என பல வழிகளில் ரத்தத்தை பிரித்து சேமித்து பயன்படுத்துகிறோம்.

விஞ்ஞான வளர்ச்சியில் ரத்தசெல்களை வளர்த்து செயற்கையாக ரத்தம் உருவாக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது செயற்கையாகவே ரத்த செல்கள் உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இந்த ரத்த செல்களை உருவாக்கியவர் அமெரிக்கவாழ் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் வேதியல் பிரிவு பேராசரியராக பணியாற்றி வரும் சாமிர் மித்ராகோத்திரி என்பவர்தான் இந்த ரத்த செல்களை உருவாக்கி உள்ளார். இவர் 1992-ம் ஆண்டில் மும்பையில் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்தவர் ஆவார்.

இவர் உருவாக்கி இருப்பது, ரத்த சிவப்பணுக்களாகும். இது 90 சதவீத அளவில் இயற்கை ரத்த செல்கள் போலவே செயல்படுகிறது. மிருதுவானதாகவும், நெகிழும் தன்மையுடனும் இருப்பதோடு ஆக்சிஜனை எடுத்துச் செல்வதிலும் சிறப்பாக பணியாற்றுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு ரத்தத் தேவையை நிறைவேற்றும், நோய் எதிர்ப்புத்தன்மையுடன் கூடிய ரத்தமாக உட்செலுத்தும் புதிய மருத்துவ முறையாகவும் பயன்படும் என்று தெரிகிறது.

மித்ராகோத்திரி, ஏற்கனவே சிறப்புத் தன்மை கொண்ட பாலிமரை உருவாக்கி சாதனை படைத்தவர் எனது குறிப்பிடத்தக்கது.

Leia mais...

தம்மனாவுக்கு வந்த பரிதாபதம்


மேக்கப் போட்டு முதல் ஷாட் எடுத்தாலும், அடுத்தஷாட்டுக்கு இருப்பமோ இல்லையோநிலைமைதான் நடிகைகளுக்கு! இந்தஃபார்முலாவுக்கு லேட்டஸ்ட் பலி தமன்னா.

ஆனால் இந்த பலி தானாக தேடிக் கொண்ட வலிஎன்பதுதான் முக்கியமான செய்தி.

சிம்பு நடிக்க கே.வி.ஆனந்த் இயக்கப் போகும் கோபடத்தில் சிம்புவுடன் ஜோடி சேர ஒப்பந்தம்செய்யப்பட்டார் தமன்னா. கெத்தாக அறிவிக்கவேண்டிய இந்த சந்தோஷம், கொத்தோடுபிடுங்கப்பட்டிருக்கிறது இப்போது. ஏன்? தமன்னாவின் சில நிபந்தனைகள் பிடிக்காதஇயக்குனர், “வேணாம் இந்த பொண்ணுஎன்று கூறிவிட்டாராம். அப்படின்னாசிம்பு அப்செட் ஆகியிருப்பாரே? அதுதான் இல்லை. வெண்ணையை வெயிலில்போட்டாலும், நெய்யாக உருகி வந்து நெஞ்சை நனைக்குமல்லவா? அப்படிதான்இந்த ஹீரோயின் மாற்றம் அவரை குளிர வைத்திருக்கிறது.

75 லட்சம் சம்பளம், ஸ்டார் ஓட்டலில் ரூம் போன்ற விஷயங்களை கூட ஒப்புக்கொண்டார்களாம் தயாரிப்பாளர் தரப்பில். தன்னுடன் வேலை செய்யும் மேக்கப், காஸ்ட்யூம் ஊழியர்களான ஆறு பேருக்கும் தனக்கு அருகிலேயே ரூம் வேண்டும்என்றாராம். அதில்தான் ஜர்க் அடித்திருக்கிறது கோ தரப்பு. “கோ கோஎன்றுதுரத்தியடிக்காத குறையாக அனுப்பிவிட்டார்களாம் தமன்னாவை.

கடைசிநேர கைகுலுக்கலில் வசமாக சிக்கியிருப்பவர் ராதாவின் மகள் கார்த்திகா! ஆஹா... என்று ஆனந்தப்படுகிறாராம் சிம்பு!

Leia mais...

சூரிய மண்டலத்துக்கு அருகே 5 புதிய கிரகங்கள் : நாசா கண்டுபிடிப்பு


சூரியமண்டலத்துக்கு அருகே 5 புதிய கிரகங்கள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளதாக அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

டெலஸ்கோப் டெல்டா - 2 என்ற டெலஸ்கோப், ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இதில் மிகப்பெரிய காமிரா பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த டெலஸ்கோப் தொடர்ந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை கண்காணித்து வருகிறது. இந்நிலையில் இந்த டெலஸ்கோப் 5 கிரகங்களை கண்டுபிடித்து உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

இந்த 5 புதிய கிரகங்களும் நெப்டினை விட பெரியவை. இந்த கிரகங்களுக்கு 4 பி, 5 பி, 6 பி, 7 பி, 8 பி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த 5 கிரகங்களும் பூமியை விட 4 மடங்கு பெரியவை ஆகும்.

இவை சூரியனுக்கு நெருக்கமாக உள்ளன.அவை 3.2 நாட்கள் முதல் 4.9 நாட்களுக்கு ஒருமுறை தம்மைத்தாமே சுற்றி வருகின்றன.

சூரியனை விட இந்த 5 கிரகங்களும் அதிக வெப்பம் மிகுந்தவை என்றும், மிகுந்த பிரகாசமான இந்த கிரகங்களில் 1200 முதல் 1650 சென்டி கிரேடு வரை வெப்பம் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது.

Leia mais...

Jan 4, 2010

விண்டோஸ் தொகுப்பிற்கான சில இலவசங்கள்!விண்டோஸ் தொகுப்பில் செயல்படும் சில ஆச்சரியப்படத்தக்க புரோகிராம்கள் சிலவற்றைக் காண நேர்ந்தது. இவை வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட வையாக இருந்ததனால் இங்கு விபரங்கள் தரப்படுகின்றன.


1. ஐகால்சி – iCalcy
உங்களுக்கு ஐபோன் மிகவும் பிடிக்குமா? இந்த புரோகிராமிற்கும் ஐ போனுக்கும் என்ன சம்பந்தம்? ஐ போன் கிடைக்குமா என்ன? என்றெல்லாம் கேள்விகளைக் கேட்க வேண்டாம். இது ஒரு கால்குலேட்டர்; இந்த கால்குலேட்டர் ஒரு ஐபோன் வடிவில் உங்களுக்கு மானிட்டரில் கிடைக்கும். அதனால் தான் இதன் பெயர் iCalcy. இது வழக்கமான, ஒரு சாதாரண கால்குலேட்டர் என்ன செய்திடுமோ அவை அனைத்தையும் செய்து காட்டும். ஐ போன் போல அகலவாக்கிலும் தோற்றம் தரும். ஜஸ்ட், ஒரு மாறுதலுக்கு இதனை இலவசமாக டவுண்லோட் செய்து பதிந்து இயக்கிப் பாருங்களேன். இந்த புரோகிராம் http://aviassin.wikidot.com/icalcy என்ற முகவரியில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள கிடைக்கிறது.

2. விண்டோஸ் 7 சூப்பர் பார்:
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து வெளியான தகவல்களில் அதன் தோற்றங்கள் சிலவற்றில், சிலருக்கு ஆர்வம் இருக்கலாம். இந்த சிஸ்டத்தின் சைட் பார் விஸ்டாவின் டாஸ்க் பார் போல இருப்பதாகப் பலர் கூறியுள்ளனர். இந்த விருப்பத்தின் அடிப்படையில் சீன கம்ப்யூட்டர் பொறியாளர் ஒருவர் டாஸ்க் பாரினைச் சற்று மாற்றி விண்டோஸ் 7 சூப்பர் பார் போல அமைத்துத் தந்துள்ளார். இந்த புரோகிராம் இலவசமாக http://flarejune.deviantart.com/art/TaskbarResizeToolforVista104078306 என்னும் முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து இயக்கிப் பார்த்தும் கிடைக்கவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் விசுவல் சி ப்ளஸ் ப்ளஸ் 2008 இல்லை என்று பொருள். அதனை இன்ஸ்டால் செய்து பின் இந்த புரோகிராமினை இயக்க வேண்டும். இந்த விசுவல் சி++ புரோகிராம் கிடைக்க http://www.microsoft.com/downloads/details.aspx?familyid=A5C842753B974AB7A40D3802B2AF5FC2&displaylang=en என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

3. கிளாஸ் சி.எம்.டி. (GlassCMD):
“டெஸ்க்டாப்பில் கிடைக்கும் விண்டோ எல்லாம், சும்மா பளபளன்னு இருக்கணும்; அடுத்த பக்கம் ஊடுறுவித் தெரியும்படி கண்ணாடியா இருக்கணும்'' என்று என் நண்பர் ஒருவர் கதை அடித்துக் கொண்டிருப்பார். அவரைப் போன்ற விருப்பம் உள்ள நபர்களுக்காகவே கிளாஸ் சி.எம்.டி. என்ற புரோகிராம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு சின்ன புரோகிராம்; எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம்; இதைக் கம்ப்யூட்டரில் பதிந்து, அதன் மீது டபுள்கிளிக் செய்தால், சிஸ்டம் ட்ரேயில், கடிகாரம் பக்கத்தில் அமர்ந்து கொள்கிறது.உங்களுடைய கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினை, ஊடுறுவிச் செல்லும் கண்ணாடியாக மாற்றுகிறது. இது உங்கள் கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினை மாற்ற வில்லை. அதனை பின்புறம் உள்ள பொருட்களைக் காட்டும் கண்ணாடியாக மாற்றுகிறது. இந்த புரோகிராமினை http://komalo.deviantart.com/art/GlassCMDforVista121457868 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். இது ராம் மெமரியில் எடுத்துக் கொள்ளும் இடம் 1 எம்பிக்குக் குறைவாக உள்ளதால், தாராளமாக எடுத்துப் பயன்படுத்தலாம்.

4. பயர்பாக்ஸ் கண்ணாடி (Glassy Firefox):
பயர்பாக்ஸ் பிரவுசரின் மிகப் பெரிய பலம் அது தரும் பாதுகாப்பு; அதற்கு அடுத்தபடியாக, அதன் ரசிகர்கள் கூட்டம். பல கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுநர்கள் தீம்ஸ், எக்ஸ்டென்ஷன்ஸ் என்ற பெயரில் பல அரிய, வேடிக்கையான மற்றும் கூடுதல் பயன்தரும் புரோகிராம்களை உருவாக்கி அவற்றை ஆட் ஆன் தொகுப்புகளாகத் தருகிறார்கள். நியோவின் (Neowin) என்பவர் அம்ப்ரூஸ் (Ambroos) என்னும் கிளாஸி பயர்பாக்ஸ் தீம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனைப் பதிந்து இயக்க 64 பிட் விண்டோஸ் இயக்கத் தொகுப்பு இருக்க வேண்டும். ஜிமெயில் செக்கர் இருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் ஒத்துக் கொண்டால், நீங்கள் இதனை இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம். இது பயர்பாக்ஸ் தளத்தில் கிடைக்கவில்லை. கிடைக்கும் முகவரி http://www.neowin.net/forum/index.php?s=ee8053c1716233beb4b6dcb3715500cc&showtopic=746714


5. நோட்பேட் கண்ணாடி (Transparent Notepad):
கிளாஸ் சிஎம்டி போல இது இருந்தாலும் சற்று வித்தியாசமான ஊடுறுவும் கண்ணாடியில் இயங்குவது போல நோட்பேடினை இந்த புரோகிராம் அமைக்கிறது. மற்ற புரோகிராம் போல, ஜஸ்ட் ஒரு கண்ணாடி இன்டர்பேஸ் தராமல், மொத்த நோட்பேட் புரோகிராமினையும் ஒரு கிளாஸ் தட்டில் அமைக்கிறது. ஒரு விதத்தில் வேர்ட்பேட் போலவும் செயல்படுகிறது. அனைத்து பைல்களையும் ஆர்.டி.எப். (.rtf) பார்மட்டில் சேவ் செய்கிறது. இருப்பினும் டி.எக்ஸ்.டி. (.txt) அல்லது எச்.டி.எம்.எல். (.html) பார்மட்டில் சேவ் செய்திடும் ஆப்ஷனையும் தருகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://sourceforge.net/projects/transnote/

6. கிளாஸ் 2கே (Glass 2K):
மற்ற புரோகிராம்கள் போல் கண்ணாடி போன்ற எபக்ட் தராமல், சற்று ஒளி ஊடுருவும் வகையில் இது விண்டோ வினை அமைக்கிறது. ஒவ்வொரு விண்டோவினையும் இவ்வாறு செயல்படுத்துகிறது. தற்போதைக்கு விண்டோஸ் 2000 மற்றும் எக்ஸ்பியில் மட்டும் செயல்படுகிறது. இதைச் செயல்படுத்தும்போது ‘Runtime DLL/OCX File error’ போன்ற எர்ரர் ஏற்பட்டால், இந்த புரோகிராம் கிடைக்கும் தளத்தில் இதற்கான தீர்வுகளும் கிடைக்கின்றன.

Leia mais...

கம்ப்யூட்டரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய்யலாம் !நம் கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்க்கு இஞ்னியர் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் பென்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம்.

கம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான் காரணங்களும்...

மானிட்டர் விளக்கு மினுமினுத்தல்:
மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள்கள், ராம், டிஸ்பிளே கார்டு, மற்றும் சி.பி.யூ இணைப்புகள் சரியில்லை என்றால் இது தோன்றும். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள்:
ராம் இணைப்பில் சிக்கல் உள்ளது. சி.பி.யூ திறந்து ராம் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள் (1 ஒலி நீளமாக, மற்ற இரண்டும் சிறியதாக):
உங்கள் டிஸ்பிளே கார்டு இணைப்பில் சிக்கல் உள்ளது. முதலில் அதை கவனிக்கவும்.

மூன்று நீளமான பீப் ஒலிகள்:
பயாஸ் அல்லது ராம்-இல் சிக்கல் உள்ளது.

நிற்க்காமல் தொடர்ச்சியாக பீப் ஒலிகள்:

விசைப் பலகை (கீ போர்டு) சிக்கல். சில நேரம் விசைப்பலகையில் உள்ள முக்கியமான கீ-கள் தொடர்ந்து அழுத்தப்பட்டிருக்கும். இதனால் இந்த் சிக்கல் ஏற்படும்.

பிளாப்பி டிரைவுக்கான இடத்தில் உள்ள விளக்கு தொடந்து மினுக்குதல்:
டேட்டா கேபிள் (முறுக்கிய கேபிள்) சரியாக பொருத்தப்படவில்லை.

திரையில் எதுவும் தெரியவில்லை:
ஹார்டு டிஸ்க் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பொருத்த வேண்டும்
முக்கியமான பவர் விளக்கு எரியவில்லை:
1. முக்கியமாக பவர்கார்டை சரிபார்க்கவேண்டும்
2. எஸ்.எம்.பி.எஸ்., சோதிக்கவும்
3. மதர்போர்டு இணைப்பை சரிபார்க்கவும்

திரையில் படங்கள் அலை அலலயாய் நடனமாடுதல்:
1.டிஸ்பிளே கார்டு இனைப்பை சரிபார்க்கவும்
2.வைரஸ் புகுந்துள்ளதா எனப்பார்க்கவும்
3.வீடியோ மெமரி கூட இந்த சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்

திரை அதிருதல்:
மின்சார எர்த் கசிவு காரணமாக இருக்கலாம். காந்தப் பொருள் அருகில் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். (நீங்கள் கம்ப்யூட்டருக்கு அருகில் வைத்திருக்கும் ஸ்பீக்கர் பாக்ஸ் இதற்க்கு காரணமாக இருக்கலாம்)

செயல்படும்போது ஹார்டு டிஸ்க் சத்தமிடுதல்:
1.முறையற்ற பவர் சப்ளை
2.கேபிள்கள் மற்றும் பிளக்குகள் சரியாக செருகப்பட்டுள்லதா என்பதை பார்க்கவும்.
3.ஹார்டு டிஸ்க்கிற்க்கு Y கனெக்டர்களை பயன்படுத்த வேண்டாம்

வண்ணக் காட்சி பொருத்தமின்றி இருத்தல்:
டிஸ்பிளேகார்டை, அதன் சிடி உதவியுடன் முறையாக மீண்டும் இன்ஸ்டால் செய்யவும்.

Leia mais...

2010: மைக்ரோசாப்ட் சந்திக்க இருக்கும் சவால்கள

தொழில்நுட்ப வளர்ச்சியில் ஈடுபட்டு வர்த்தகத்தை மேற்கொண்டு இயங்கும் எந்த ஒரு நிறுவனமும், தொடர்ந்து சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கும்.


இந்த வகையில் உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட் சவால்களைச் சந்தித்த வண்ணம் உள்ளது அனைவரும் அறிந்ததே.

2009 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தன் கட்டமைப்பில் பல சிக்கல்களை மைக்ரோசாப்ட் சந்தித்தது. இதன் பல பிரிவுகளில் அலுவலர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். இதன் காலாண்டு வருமானம் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மிகவும் குறைவாக இருந்ததாக அறிவிக்கப்பட்டது.

இருந்தாலும் ஆண்டின் இறுதியில் விண்டோஸ் 7 கை கொடுக்க, மைக்ரோசாப்ட் தலை நிமிர்ந்தது. சிஸ்டம் பொதுமக்களுக்கு வெளியாவதற்கு முன் வெளியிட்ட சோதனைத் தொகுப்புகளே இதன் இமேஜை நிமிர்த்தின. அக்டோபரில் விண்டோஸ் 7 வெளியானபோது மைக்ரோசாப்ட் உறுதியான தளத்தில் இருந்தது.

இதன் சர்ச் இஞ்சின் பிங் மிக அருமையான இலக்குகளை முன்வைத்து மற்றவற்றிலிருந்து மாறுபட்ட இயக்கத்தைக் கொடுத்து வெற்றி பெற்றது. இதன் வழி விளம்பர வருமானமும் இதற்குக் கை கொடுத்தது. இதன் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் வெளியான அஸூர் இன்னும் உறுதியான எதிர்காலத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வழங்கியது.

இருந்தாலும் மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய பெரிய நிறுவனம் மேலும் பல காரணங்களால் பாதிக்கப்படுவது இயற்கையே. உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மைக்ரோசாப்ட் தப்ப இயலவில்லை. தற்போது பன்னாட்டளவில் பொருளாதார நிலை சீரடைந்து வருவதால், 2010 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குத் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஆண்டாகத் தான் இருக்கும்.

1.சாதிக்க முடியாத மொபைல் பிரிவு:

மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 6.5 மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம், இங்கும் தன் வலிமையை நிரூபித்து நிலைக்க முடியும் என்று எண்ணியது. ஆனால் அது எடுபடவில்லை. ஏற்கனவே உறுதியாக இயங்கிக் கொண்டிருக்கும் பல நிறுவனங்களுக்குப் போட்டியாக நுழைந்து வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் இழுப்பது, வெற்றி பெற முடியாத சவாலாகவே மைக்ரோசாப்ட் 2009ல் கண்டது.

ஆர்.ஐ.எம்., பால்ம், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களின் வெற்றி, வாடிக்கையாளர்கள் ஒரே நிறுவனத்திலிருந்து தங்கள் போன்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் ப்ராஜக்ட் பிங்க் என்ற பெயரில் தன் மொபைல் போன்களை தயாரிக்கும் திட்டம் ஒன்றை அறிவித்தது.

அதில் ஸூன் சர்வீஸ் இணைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப் பட்டது. அப்படியானல் இன்னும் ஓராண்டு நாம் அதற்காகக் காத்திருக்க வேண்டும். ஐ போன்,பிளாக்பெரி, பால்ம் மற்றும் கூகுள் ஆண்ட்ராய்ட் ஆகியவற்றுடன், மொபைல் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் போட்டியில் இயங்க முடியவில்லை.

நல்ல ஒரு பார்ட்னர் நிறுவனத்துணையுடன் சாப்ட்வேர், சர்வீசஸ் ஆகிய இரண்டுடனும் இறங்கினால் தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் மொபைல் சந்தையில் இயங்க முடியும். இல்லையேல் இந்தப் பிரிவை மறக்க வேண்டியதுதான்.

2. விண்டோஸ் 7:

2007–09 ஆம் ஆண்டுகள் மைக்ரோசாப்ட்டிற்கு மிகுந்த சோதனையைக் கொடுத்தது. இதற்குக் காரணம் மக்களிடையே எடுபடாமல், பல பிரச்சினைகளை வாடிக்கையாளர் களுக்குக் கொடுத்து வந்த விண்டோஸ் விஸ்டா இயக்கத்தொகுப்பாகும்.

ஆனால் விண்டோஸ் 7 வந்தவுடன் அதில் விஸ்டாவின் இயக்கம் துளி கூட இல்லை என்ற செய்தியே கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு இனிப்பாக இருந்தது. தொடக்க விற்பனையும், விஸ்டா 7 குறித்து வந்த ஆய்வுக் குறிப்புகளும் மைக்ரோசாப்ட் நிலையைத் தூக்கி நிறுத்தியது. 2010ல் இந்த நிலையைத் தொடர்ந்து தக்க வைப்பதுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலையாய பணியாக இருக்கும்.

3. எம்.எஸ். ஆபீஸ்:

மைக்ரோசாப் நிறுவனத்திற்கு, மற்ற எந்த சாப்ட்வேர் தொகுப்பினைக் காட்டிலும் அதிக வருமானம் தரும் தொகுப்பு அதன் ஆபீஸ் தொகுப்புதான். இலவசமாகக் கிடைக்கும் ஓப்பன் ஆபீஸ் மற்றும் ஸோஹோ தொகுப்புகள் ஆபீஸ் தொகுப்பிற்கு போட்டியா என்பது இன்னும் கேள்விக் குறிதான்.

சர்வர்களைக் கொண்டு அலுவலகப் பணிகளை இயக்கி வரும் பெரிய நிறுவனங்கள் தற்போது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பைத்தான் விரும்புகின்றன. ஆனால் கூகுள் தற்போது மிக வேகமாகக் கொண்டு வரும் கிளவுட் கம்ப்யூட்டிங் அப்ளிகேஷன்கள், டேட்டா ஸ்டோரேஜ் போன்ற விஷயங்கள், மைக்ரோசாப்ட் நிலையைச் சற்று அசைத்துப் பார்க்கும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே அடுத்த 2010 ஜூனில் வெளியாக இருக்கும் ஆபீஸ் 2010 கூகுள் தரும் அப்ளிகேஷன்களைச் சமாளிக்க வேண்டியதிருக்கும். எனவே தன்னுடைய ஆபீஸ் தொகுப்பு எப்படி மற்றவற்றைக் காட்டிலும் சிறந்தது என்று காட்ட வேண்டிய சவாலை மைக்ரோசாப்ட் நிறுவனம் சந்திக்க வேண்டியதிருக்கும்.

4. பிங் சர்ச் இஞ்சின்:

வரும் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சின் இலக்கு மிக எளிதான ஒன்றாக இருக்கும். விளம்பர வழி வருமானத்தைப் பெருக்குவதும், சர்ச் இஞ்சின் பிரிவில் பெரிய அளவில் இடம் பெறுவதும் ஆகும். தற்போது இந்தப் பிரிவில் 9.9% இடத்தை பிங் கொண்டுள்ளது.

யாஹூவுடன் கொண்டுள்ள ஒப்பந்தம் மற்றும் பிங் தொடர்ந்து கொடுத்து வரும் புதிய வசதிகள் நிச்சயம் 2010 ஆம் ஆண்டில் இதனை உயரத்திற்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

Leia mais...

Jan 3, 2010

370 பாஸ்வேர்டுகளுக்கு டுவிட்டர் தடை

சமூக இணையதளமான டுவிட்டர் தனது பயன்பாட்டாளர்கள் 370 சொற்களை கடவுச்சொல்லாக (பாஸ்வேர்ட்) பயன்படுத்த தடை விதித்துள்ளது.

இந்த கடவுச் சொற்கள் எளிதாக யூகிக்க கூடியது என்றும், இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் யார் வேண்டுமானாலும் தனது பயன்பாட்டாளர்களின் கணக்கில் மூக்கை நுழைக்க முடியும் என்பதாலும் இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரை மேற்கோள் காட்டி டெலிகிராஃப் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

123456 என் எண் வரிசை, பாஸ்வர்ட் என்ற சொல் போன்றவை அதிக அளவில் பாஸ்வேர்டாக பயன்படுத்தப்படுகிறது என்பதால் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் போர்ஸ்ச், ஃபெர்ராரி போன்ற கார்களின் பெயர்கள், செல்சியா மற்றும் ஆர்சினால் போன்ற கால்பந்து அணிகளின் பெயர்களை பாஸ்வேர்டாக உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில அறிவியல் பெயர்களுக்கும் தடை விதிக்ப்பட்டுள்ளது. ஸ்டார் வார்சின் முதல் படமான டிஹெச்எக்ஸ்1138 போன்றவற்றுக்கும் தடை உள்ளது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், கடவுச் சொற்களை தேர்வு செய்பவர்கள் அதனை மற்றவர்கள் எளிதாக யூகிக்கக் கூடிய அளவில் தேர்வு செய்வதாக தெரியவந்துள்ளது.

எழுத்துக்கள், எண்கள், ஆச்சரியக் குறிகள் என எல்லாவற்றையும் கலந்து கடவுச் சொற்களை உருவாக்குமாறும், அடிக்கடை அவற்றை மாற்றிக் கொண்டே இருக்குமாறும், ஒரே கடவுச் சொல்லலை எல்லாவற்றுக்கும் பயன்படுத்தாதீர்கள் என்றும் நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

Leia mais...

(HTML) டாகுமெண்ட் என்றால் என்ன?

எச்.டி.எம்.எல். (HTML) டாகுமெண்ட் என்றால் என்ன?

பதில்: சுருக்கமாகச் சொல்வதென்றால் அது ஓர் வெப் பேஜ் என்று சொல்லப்படும் இணைய தளம் ஆகும். வெப்பேஜ் என்பது இன்னொரு வகையான டாகுமெண்ட் . இந்த டாகுமெண்ட் ஒரு குறிப்பிட்ட வகையில் உங்கள் வெப் பிரவுசர் படித்து உணரும்படி எழுதப்பட்டிருக்கும். எச்.டி.எம்.எல். (HTML) என்பதனை விரித்தால் Hyper Text Markup Language என வரும்.

உங்களால் இதைப் போல எழுத முடியவில்லை என்றால் வேர்டில் எழுதப்பட்ட டாகுமெண்ட்டை Save as a HTML Document எனக் கிளிக் செய்தால் அந்த பக்கம் எச்.டி.எம்.எல். பக்கமாக சேவ் செய்யப்படும்.

தொழில்நுட்ப ரீதியில் சொல்வதென்றால் இது வெப் பக்கங்களுக்கான புரோகிராமிங் மொழி என்று கூட கூறலாம். (உண்மையில் இது புரோகிராமிங் மொழி அல்ல.) இது எப்படித்தான் எழுதப்படுகிறது என நீங்கள் பார்க்க விரும்பினால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் திறந்து உங்களுக்குப் பிடித்த இணைய தளப் பக்கத்தைத் திறந்து கொள்ளுங்கள். பின் பிரவுசரில் View மெனுவைத் திறந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் Source or View Source என்பதனைக் கிளிக் செய்து பார்த்தால் அந்த பக்கம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.

இணையத்தளம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்
பயர் பாக்ஸ் பாவிக்கிறவர்கள் இதே படிமுறை பின்பற்றவும்
இண்டேநெட் எக்ஸ்ப்லூர் பாவிக்கிறவர்கள் இந்த படிமுறையை பார்க்கவும்
முதலில் உங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்லூர் பக்கத்த்ற்கு சென்று VIEW என்பதை கிளிக் செய்யவும்.

என்பதை கிளிக் செய்த பிறகு SOURCE என்பதை Cகிளிக் செய்யவும்

Leia mais...

கணினியிலுள்ள தகவல்களை அழிக்கும் வைரஸ்கள்


வைரஸ் (Virus) 1.வைரஸ்கள் பல வகைகளாக உபயோகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் இதன் பொதுவான குணமானது ஒரு கணினியில் உள்ள EXE எனப்படும் விரிவு கொண்ட புரோகிராம்களுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொள்ளும் திறன் கொண்டது.இது போன்று சேர்ந்து கொண்ட வைரஸ் புரோகிராமானது அந்த EXE விரிவு கொண்ட புரோகிராமை உபயோகப்படுத்தும் போது நாம் எதிர்பாரா வகையில் அந்த புரோகிராமை இயக்க முடியாத வகையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சில வைரஸ்கள் நமது புரோகிராம்களில் உள்ள சில கரக்டர்களை வேறு சில கரக்டர்களாக மாற்றியோ அல்லது நமது புரோகிராம் வ?களை காணாமல் செய்தோ பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுவரை பல்லாயிரக்கணக்கான வைரஸ்கள் உலகில் உபயோகத்தில் இருந்து வந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த I Love You எனப்படும் வைரஸ் கணினியில் ஏற்படுத்திய பாதிப்பை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.

2. டிராஜன் ஹோர்ஸ் (Trojan Horse) இது ஒரு புது வகையான வைரஸ் ஆக கருதப்பட்டாலும் இதன் பாதிப்புகள் நாம் எதிர்பாராத வகையில் இருக்கும். ஏனென்றால் இந்த வகை வைரசானது ஒரு கணினி புரோகிராமுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொண்டாலும் பல நேரங்களில் எதிர்பார்க் காத சில வேலைகளைச் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு யூசர் தனது புரோகிராமை எடுத்து அதில் சிலமாற்றங்களைச் செய்ய முற்படும்போது அந்தப் புரோகிராமை அழித்து விடும் தன்மை கொண்டது தான் இந்த டிராஜன் ஹோர்ஸ் ஆகும். இது போன்று புரோகிராம்களை அழித்து விடுவதால் யூசர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போகும் நிலை உருவாகிறது.

3. வோம் (Worm
) இந்த வகை வைரஸ் ஆனது சற்று வேடிக்கையானதும் கூட. ஏனென்றால் ஒரு புரோகிராமை நாம் கொப்பி செய்யும் போது அதே போன்று அதே பெயரில் மற்றொரு புரோகிராம் ஒன்றும் உருவாகும். இந்த இரண்டு புரோகிராம்களின் அளவும் ஒரே அளவாகவே காட்டும். ஆகையால் நாம் ஏதாவது ஒன்றை அழிக்க நினைத்து புரோகிராமை அழித்து விடுவோம். அதன் பிறகு நம்மிடம் இருக்கும் அந்த மற்றொரு புரோ கிராமை எடுத்து அதில் உள்ள தகவல்களை பார்த்தோமேயானால் ஒன்றுமே இருக்காது. ஒரு புரோகிராம் வரி கூட இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக ஓர் அலுவலகத்தில் கணினியை உபயோகிக்கும் ஒருவர் ஒவ்வொரு முறையும் தனது கணினியில் இருந்து Server கணினிக்கு தகவல்களை அனுப்பும் போதும் இது போன்ற வைரஸ்கள் உள்ளதா என்று சோதனையிட வேண்டும்.

அது போன்று சோதனையிடும் போது இது போன்ற அபாயகரமான வைரஸ் புரோகிராம்களை அழித்து விட்டு பிறகு தான் அவற்றைக் கணினியில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo