கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jun 29, 2010

வகை வகையாய் வைரஸ்கள்

1.ADWARE: கம்ப்யூட்டர் பயன் படுத்துபவரின் அனுமதியின்றி, அவர் அறியாமலேயே, பதியப்படும் ஒரு புரோகிராம். ஒருவரின் இணையத் தேடல்கள் குறித்த தகவல்களை அறிய இந்த புரோகிராம்கள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரின் விருப்பங்களை அறிந்து கொண்டு, விளம்பரங்களைத் தரும். இந்த தொல்லை மட்டுமின்றி, நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டினையும், நமக்குத் தேவை எதுவும் இன்றி எடுத்துக் கொள்ளும். Trackng cookies  என்பவையும் இதில் சேரும்.

2. BACKDOOR SANTA : இணையத்தில் கிடைக்கும் புரோகிராமின் பயன்களை விரும்பி, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்துவீர்கள். அப்போது அதே புரோகிராம், உங்களை அறியாமலேயே, உங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடு, நீங்கள் செல்லும் இணைய தளங்கள், நீங்கள் இணையத்தில் வாங்கும் பொருட்கள் போன்ற தகவல்களைத் திரட்டும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம் இந்த வேலையை மேற்கொள்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.  Alexa மற்றும்  Hotbar போன்றவை இத்தகைய புரோகிராம்களே. உங்களுடைய பிரவுசரின் டூல்பாரில், நீங்கள் எதிர்பார்க்காமல், இந்த டூல்பார்களில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தால், பேக் டோர் சாண்டா உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளதாகப் பொருள். உடனே Add/Remove Programs சென்று அதனை நீக்கவும்.

3. BHO: இதனை விரித்தால்  Browser Helper Object என்று கிடைக்கும். நீங்கள் உங்கள் பிரவுசரை விரித்தவுடன் இதுவும் இயங்கும். சில பி.எச்.ஓ.க்கள் நமக்கு உதவுபவை. ஆனால் சில புரோகிராம்கள், நம்மை இணையத்தில் திசை திருப்பி, பாலியல் தளங்களில் கொண்டு சென்றுவிடும். உங்கள் கம்ப்யூட்டரை இது ஹைஜாக் செய்துவிட்டால், கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக இயங்கத் தொடங்கும். சில ட்ரோஜன் வைரஸ்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் வேலையை முடிக்கும்.

4.  BLENDED THREAT: கம்ப்யூட்டரில் அதிக பட்ச சேதம் விளைவிக்கும் தாக்குதல். வைரஸ் மற்றும் வோர்ம் இணைந்து செயல்படுவது போல இயங்கும். இது இமெயில் வழியே வைரஸை பரப்பும். Nடிட்ஞீச் என்பது இத்தகைய தாக்குதல் ஆகும். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் புரோகிராமினை வேகமாகப் பரவிவிடும்.

5. BOTNETS : குழுவாக நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை, ஹேக்கர்கள் கைப்பற்றியபின் இவ்வாறு அழைக் கின்றனர். ஹேக்கர்கள் இவற்றைத் தங்கள் இஷ்டப்படி ஆட்டுவிப்பார்கள். அந்த நெட்வொர்க் ஒரு ரோபோ  (“robot network”)போலச் செயல்படும். இதனால் தான் இதற்கு இந்த பெயர் வந்தது.

6.  BROWSER HIJACKER: இந்த புரோகிராம், நாம் பிரவுசர் மூலம் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இந்த புரோகிராமினை அனுப்பியவரின் இணைய தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். மீண்டும் நாம் இயங்கிய தளங்களுக்கு வர முடியாது. அது மட்டுமின்றி, நம் பிரவுசர் செட்டிங்குகளையும் மாற்றிவிடும். நம் ஹோம் பக்கத்தை மாற்றிவிடும். நாமாக அதனை பழையபடி மாற்றினால், மீண்டும் அது செட் செய்திடும் தளத்தினை ஹோம் பேஜாக அமைத்துவிடும்.

7.  ADWARE COOKIES: பொதுவாக குக்கிகள் என்பவை, சில இணைய தளங்களால், நம் கம்ப்யூட்டரில் பதியப்படும் சிறிய பைல்கள். இவை உங்கள் கம்ப்யூட்டர் குறித்த தகவல்களை அந்த இணைய தளத்திற்கு அனுப்புவதற்காக பதியப்படுபவை. ஆனால் சில இணைய தளங்கள் Adware tracking cookies பதிந்துவிடுகின்றன. இவை நீங்கள் இணையத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்த தகவல்களை அவர்களுக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் விளம்பரங்களை அந்த தளங்கள் உங்களுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும்.  Adware Cookies எப்போதும் மோசமானவை என்று கருத முடியாது. ஆனால் நிச்சயம் இவை உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைச் சிறிது மந்தப்படுத்தும்.

8. DIALERS: ஒருவகையான சிறிய சாப்ட்வேர் புரோகிராம். இது நம் அனுமதியின்றி, நம் மோடம் மூலமாக தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் சில இணைய தளங்களுக்கு நம்மை கொண்டு செல்லும். பாலியல் தளங்களுக்குத்தான் பெரும்பாலும் இவை தொடர்பு அளிக்கின்றன. தொலைபேசி வழியாக இன்டர்நெட் இணைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இதனால் தொல்லை ஏற்படும். இந்தியாவில் தொலைபேசி வழி இணைப்பு இருந்த போதும், இந்த வகை தொல்லை இருப்பதாகத் தகவல் இல்லை.

7. GRAYWARE: இது தனிப்பட்ட ஒரு தொல்லை தரும் வைரஸாகத் தெரியவில்லை. பொதுவாக தடை செய்யப்பட வேண்டிய, நம் பணியை நாசம் செய்யக் கூடிய சிறிய புரோகிராம்களை இந்த சொல் கொண்டு அழைக்கலாம். மேலே சொல்லப்பட்ட அட்வேர், டயலர்கள் போன்றவை இந்த பெயரில் அடங்கும்.

8. KEYLOGGERS: நாம் கம்ப்யூட்டர் கீ போர்டில் அழுத்தும் அனைத்து கீகளையும் அப்படியே அவை எந்த கீகள் என்று பதிந்து, இந்த புரோகிராமினைப் பதிந்தவர்களுக்குக் காட்டும். நம் குழந்தைகள் கம்ப்யூட்டரில் என்ன வகை சாப்ட்வேர்களை இயக்குகிறார்கள், எந்த தளங்களுக்குச் செல்கிறார்கள் என்று கண்டறிய, இதனை நாம் பயன்படுத்தலாம். நிறுவனங்களில் தங்கள் ஊழியர்கள், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்த புரோகிராம்கள் பதியப்படுகின்றன. சில கீ லாக்கர்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. சில கட்டணம் செலுத்தினால் மட்டுமே கிடைக்கும்.

9. MALWARE: Malicious Software என்பதன் சுருக்கம். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் அனுமதியின்றி, கம்ப்யூட்டரில் இறங்கி, தீங்கு விளைவிக்கும் அனைத்து புரோகிராம்களும் இதில் அடக்கம்.

10. STALKING HORSE: இவை பிரபலமான புரோகிராம் களுடன் இணைந்து கம்ப்யூட்டரில் வந்து தங்கும். கூடுதல் வசதிக்காக இது உள்ளது என்று அறிவிக்கப்படும். ஆனால் நம் வேலைகளின் தன்மை குறித்து, புரோகிராம் தந்த நிறுவனத்திற்குத் தகவல் அனுப்பி, பின் விளம்பரங்களை அனுப்பி வைக்கும்

Leia mais...

Jun 28, 2010

மொபைல் டேட்டா அழிந்து போனால்!

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது.

போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?

சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை.

இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது. இந்த சேவையின் பெயர் rSeven. இதனை என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதியவும்.

இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது.

இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.

Leia mais...

Jun 24, 2010

ஹாட் டிஸ்கில் பிழைகள் கண்டறிய - Chkdsk

பழுதடைந்த பைல்கள் மற்றும் போல்டர்களைப் பரீட்சித்து அவற்றைச் சீரமைப்பதற்கும ஹாட் டிஸ்கில் உள்ள பழுதடைந்த செக்டர்களைக் கண்டறிந்து அவற்றை வேறாக்கி விடுவதற்கான ஒரு யூட்டிலிட்டியே Chkdsk.

இந்த செக் டிஸ்க் யூட்டிலிட்டி அன்றைய எம்.எஸ்.டொஸ் காலம் முதல் இன்றைய விஸ்டா வரை விண்டோஸின் எல்லாப் பதிப்புகளிலும் தவறாது இடம்பெற்று விடுகிறது.

எம்.எஸ். டொஸ்ஸில் Chkdsk எனப் பெயரிடப்பட்டிருந்த செக் டிஸ்க் யூட்டிலிட்டி விண்டோஸ் 9x மற்றும் விண்டோஸ் மீ பதிப்புகளில் Scandisk எனப் பெயரிடப்பட்டது. பின்னர் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா பதிப்புகளில் மறு படியும் அது Chkdsk என்றே பெயர் மாற்றப்பட்டது.

செக்டிஸ்க் யூட்டிலிட்டி ஹாட் டிஸ்கின் பௌதிக கட்டமைப்பைப் பரிசோதித்து அது சிறந்த நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்கிறது. ஹாட் டிஸ்கில் உருவாகும் பழுதடைந்த செக்டர்கள், இழக்கப்படும் க்லஸ்டர்கள், தவறான பைல் இணைப்புகள் மற்றும் போல்டர் கட்டமைப்பில் ஏற்படும் பிழைகள் போன்றவற்றைக் கண்டறிந்து சீரமைத்து விடுகிறது.

திடீரென் கணினி இயக்கம் நின்று போதல், கனிணி எந்த வித அசைவுமின்றி உறைந்து போதல், மின்சார இணைப்பில் ஏற்படும் கோளாறுகள், கணினியை முறையாக சட்டவுன் செய்யர்து விடல் என ஹாட் டிஸ்கில் பிரச்சினைகள் தோன்றுவதற்குப் பல காரணிகள் உள்ளன.

ஹாட் டிஸ்கிலுள்ள டேட்டாவைப் படிக்கும் / பதியும் ஹெட்டானது டேட்டா பதியப்படும் தளத்தில் வந்து மோதும் வன்ணம் ஹாட் டிஸ்கில் அதிர்வுகள் ஏற்படுதல் செக்டர்கள் பழுதடையக் காரணமாக அமைந்து விடுகின்றது.

ஹாட் டிஸ்கில் இவ்வாறான பழுதுகள் ஒரு முறை ஏற்பட்டதும் அதன் தொடர்ச்சியான பாவனையில் மேலும் பழுதாகி விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே ஹாட் டிஸ்கை குறிப்பிட்ட கால இடை வெளிகளில் செக் டிஸ்க் யூட்டிலிட்டி மூலம் பரிசோதித்துக் கொள்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஹாட் டிஸ்கின் செயல் திறன் குறைந்து வருகிறது என்பதையும் செக் டிஸ்க் எதிர்வு கூறிவிடுகிறத்து. ஹாட் டிஸ்க் தொடர்ச்சியான பாவனையில் படிப்படியாக தேய்மானம் அடைந்து செக்டர்கள் பழுதடைந்து விடுகின்றன. செக் டிஸ்க் பழுதடைந்த செக்டர்களைக் கணடறியுமானால் ஹாட் டிஸ்கை மாற்றிக் கொள்ள வேண்டிய காலம் அருகில் வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

செக் டிஸ்க் யூட்டிலிட்டியை கமாண்ட் லைன் இடை முகப்பிலோ அல்லது கிரபிக்கல் இடை முகப்பிலோ இயக்க முடியும். கிரபிக்கல் இடை முகப்பில் இயக்குவதற்கு மை கம்பியூட்ட்ர் ஐக்கனைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு தோன்றும் ஹாட் டிஸ்க் ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள்.

அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Tools டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Error-checking எனும் பகுதியில் உள்ள Check now பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது ஒரு சிறிய டயலொக் பொக்ஸ் தோன்றும். அதில் Automatically fix file system errors என்பதைத் தெரிவு செய்ய டிஸ்ட் செக்கிங் செய்யற்பாடு ஆரம்பிக்கப்படும்.

Leia mais...

Jun 21, 2010

கம்ப்யூட்டரைச் சற்று கவனிப்போம்

கம்ப்யூட்டரில் தான் இனி வாழ்க்கை என்று ஆகிவரும் இந்த நிலையில், அதனை அவ்வப்போது சரி செய்து, உள்அமைப்பையும் ட்யூன் செய்வது இன்றியமை யாததாகிறது. இல்லையேல் என்றாவது ஒரு நாள், திடீரென நின்று நம்மைத் திணறடித்துவிடும்.

பலமுறை இங்கு எழுதப்பட்டது போல, பைல்கள் பேக் அப், அப்ளிகேஷன் சாப்ட்வேர் அப்டேட்டிங், ஆண்ட்டி வைரஸ் புதுப்பித்தல், பயர்வால் அமைத்தல் என்பவற்றை எல்லாம் நாம் இப்போது வழக்கமாக மேற்கொள்ள பழகிக் கொண்ச்டோம். ஆனாலும் இன்னும் பலர் சற்று சோம்பேறித்தனமாகவும், நம் கம்ப்யூட்டருக்கு அது எல்லாம் ஆகாது என்றும் போலியான தன்னம்பிக்கையுடன், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றனர். இதற்குக் காரணம் நம் அன்றாட வாழ்க்கையில், கம்ப்யூட்டருக்கென சற்று வியர்வை சிந்தி உழைக்க நாம் தயாராய் இல்லை என்பதே.

இப்படிப்பட்டவர்களுக்காக சில டிப்ஸ்களை இங்கு காணலாம்.

நீங்கள் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், இப்போது உள்ள விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளில், சிஸ்டமே மேற்கொள்ளும் சில விஷயங்களை, நாமாகத்தான் விண்டோஸ் எக்ஸ்பியில் மேற்கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக, ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்வது, விண்டோஸ் 7 சிஸ்டத்தில், தானாக மேற்கொள்ளப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விண்டோஸ் எக்ஸ்பியில் நாம் தான் இதனை மேற்கொள்ள வேண்டும். எந்த ட்ரைவினை டிபிராக் செய்திட வேண்டுமோ, அதன் மீது ரைட் கிளிக் செய்து Properties, Tools, Defragment Now என்று சென்று டிபிராக் செய்திடலாம். இப்போது வரும் ஹார்ட் டிஸ்க்குகளின் கொள்ளளவு மிக அதிகமாக இருப்பதால், சிறிய ஹார்ட் டிஸ்க்குகளில் டிபிராக் செய்து கிடைக்கும் வசதிகள், பெரிய அளவில் இதில் கிடைப்பதில்லை. எனவே நீங்கள் புதியதாகக் கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால், அதில் பெரிய அளவிலான கொள்ளளவில் ஹார்ட் டிஸ்க் இருந்தால், டிபிராக் குறித்து அவ்வளாவாகக் கவலைப்பட வேண்டியதில்லை.

அடுத்ததாக நாம் கவனமாகச் செயல்பட வேண்டிய பிரிவு, பைல்களை பேக் அப் செய்திடும் பணி. திடீரென நாம் அவ்வப்போது பணியாற்றும் பைல்கள் கிடைக்கவில்லை என்றால் என்னவாகும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால், இவை எவ்வளவு முக்கியம் என்று உணர்வீர்கள். பேக் அப் செய்திட எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் அல்லது ட்ரைவ் இமேஜஸ் என்று போவதைக் காட்டிலும், இணையத்தில் கிடைக்கும் ஸ்டோரேஜ் தளங்களைப் பார்வையிட்டு அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பேக் அப் காப்பிகளை வைத்துப் பாதுகாக்கலாம். போட்டோ பைல்களைச் சேமிக்க பேஸ்புக் ஆல்பம், ப்ளிக்கர், பிகாஸா வெப் ஆல்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

டாகுமெண்ட் பைல்கள் என்றால், நாம் அப்போது நம் சொந்த மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் டாகுமெண்ட்களுக்கு அன்றாடம் பேக் அப் அவசியம். இவற்றின் அளவு ஜிபி அளவிலேயே இருக்கும். டெரா பைட் அளவிற்கு இருக்காது. எனவே இந்த பேக் அப் வசதிக்கும், ஆன்லைன் ஸ்டோரேஜ் உகந்தது.

சிஸ்டத்தில் இயங்குகின்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை அவ்வப்போது அப்டேட் செய்திடுவது இன்னொரு பாதுகாப்பான வழியாகும். சில தொகுப்புகள் தாங்களாகவே அப்டேட் செய்து கொள்கின்றன. விண்டோஸ் சிஸ்டம் தானாகவே அப்டேட் செய்து கொள்ளும். பிரவுசர், ஆபீஸ் தொகுப்புகள், பிடிஎப் ரீடர் ஆகியவையும் அப்டேட் ஆகும். அல்லது நாம் தான் அவற்றை அப்டேட் செய்திட வேண்டும். இதனால் இவற்றிற்கு மால்வேர் தொகுப்புகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். ஆனால் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் அனைத்தும் Automatically download and install என்ற வசதியைப் பெற்றிருக்கின்றன.

இந்த அப்ளிகேஷன்கள் அனைத்தும் அப்டேட் ஆகி உள்ளனவா என்றும் சோதிப்பது நல்லது. சில வாரங்களுக்கு முன் எழுதப்பட்ட filehippo என்ற பைலினை டவுண்லோட் செய்து இயக்கலாம். இதனை  என்ற தளத்திலிருந்து பெறலாம். இது ஒரு அப்டேட் செக்கர் பைல். அப்டேட் செய்யப்படாத அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைக் கண்டறிந்து, அவற்றிற்கான தொடர்புகளை உங்களுக்குக் காட்டும். இவற்றில் எல்லாவற்றிலும் முக்கியமானது ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தான். இதனை அவ்வப்போது அப்டேட் செய்வது மிக மிக முக்கியம். காலக் கெடு வரை காத்திராமல், அவ்வப்போது அப்டேட் செய்திடலாம். மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், கம்ப்யூட்டர் இயக்கங்கள் முடக்கப்படுகையில், சற்றும் பதட்டப்படாமல் நம் வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியும் என்பது உறுதி.

Leia mais...

Jun 16, 2010

உங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள்

உங்கள் கணனியில் நீங்கள் செய்யும் அனைத்து செயற்பாடுகளையும் கண்காணிக்க பல மென்பொருட்கள் உள்ளன, அவ்வாறான ஓர் மென்பொருள்தான் இந்த பணியாளர் கண்காணிப்பு மென்பொருள்.

* இந்த மென்பொருளை நிறுவியபின்னர் நிறுவிய கணனியின் செயற்பாடுகள் முழுவதும் பதிவு செய்யப்படும்.

* நாம் குறிப்பிடும் நேர இடைவெளியில் கணனி திரையினை படமாகவும் சேமிக்கும்.

 * வேறு யாரும் பார்க்காதவாறு கடவுசொல் இடும் வசதியும் உள்ளது.

 * குறித்த நேர இடைவெளியில் சேமித்த தகவல்களை நாம் வழங்கம் மின்னஞ்சலிற்கு அனுப்பிவைக்கும்.

 *  மென்பொருள் நிறுவியதற்கான தடயம் ஏதுமின்றி அழித்து விடலாம்.

* பின்னர் மென்பொருளை நாம் திறந்து பார்ப்பது எனில் Ctrl+Shift+Alt+K இனை அழுத்தி பின் நாம் வழங்கிய கடவுச்சொல்லினை இட்டு திறக்கலாம். (திறப்பதற்கான இந்த குறுக்குவழிவிசைக்கட்டளையை மாற்றலாம்)

* Run கட்டளையில் "runkgb" என வழங்கியும் திறக்கலாம்.இக்கட்டளையும் மாற்றக்கூடியதே.

மென்பொருளை நிறுவுவதற்கும் ஆரம்பிப்பதற்கும் உங்கள் கணனியில் நிறுவியுள்ள எதிர்வைரசு காப்பை நிறுத்தவேண்டி ஏற்படலாம்.

இம்மென் பொருளை தரவிறக்க.

Leia mais...

Jun 13, 2010

அடுத்த மைல்கல்லை எட்டியது டுவிட்டர்

சோசியல் நெட்வொர்க்கிங்கில் ஆரம்பித்‌த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ள டுவிட்டர் இணையதளம் அடுத்த மைல்கல்லை எட்டியுள்ளது.

மாதத்திற்கு 2 பில்லியன் டுவிட்டுகள் பரிமாறப்படுகின்றன.

இதுகுறித்து நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், நாள் ஒன்றுக்கு 65 மில்லியன் டுவிட்டுகள் பரிமாறப்பட்டு வருவதாகவும், கடந்த மே மாதம் வரை 15 பில்லியன் டுவிட்டுகள் பரிமாறப்பட்டுள்ளதாகவும், கடந்த பிப்ரவரி மாதம் வரை 10 பில்லியன் டுவிட்டுகளே பரிமாறப்பட்டு இருந்திருந்ததாகவும், 3 மாதத்தில் 5 பில்லியன் டுவிட்டுகள் பரிமாறப்பட்டு இமாலய சாதனையை டுவிட்டர் இணையதளம் எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாள் ஒன்றுக்கு 1,35,00 பேர் புதிதாக டுவிட்டர் இணையதளத்தில் உறுப்பினர்களாக சேர்வதாக அவர் மேலும் தெரிவி்த்தார்

Leia mais...

Jun 9, 2010

3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System) கணணியை செயற்படுத்தவென உருவாக்கப்பட்டவை தான் இயங்குதளங்கள் (OperatingSystem). இன்னும்  சொல்லப்போனால் கணணி வன்பொருட்களுக்கும் (Hardwares) பயனாளர்களுக்கும் (users) இடையிலான ஒரு இடைமுகமாக (Interface) செயற்படுபவை. இவ்வாறான பல இயங்குதளங்கள் இன்றைய உலகில் பல உருவாக்கப்பட்டுள்ளன உருவாக்கபட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறான பல இயங்குதளங்களாக Windows XP, Windows Vista, Windows 7 , Apple OS, Ubuntu OS, Linux, Google Chrome OS, RISC OS, Amiga OS, MAC OS, போன்ற இன்னும் பல இயங்குதளங்கள் இன்று காணப்படுகின்றன. 

அவ்வாறான இயங்குதளங்கள் இருக்கின்ற போதிலும் இவற்றைவிட மிகச்சிறிய அளவில் உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஒன்றும் உள்ளது.
KOLIBRI OS எனப்படும் இந்த இயங்குதளமானது 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது Windows,Linux, Mac போன்ற பிற இயங்குதளங்களை அடிப்படையாகக்கொண்டு அமையாமல் CPU நிரலாக்கமொழி எனப்படும் முதலாம் தலைமுறை( First Generation language) மொழியான கணணி இயந்திர மொழியின்(Machine Code) துணையுடன் உருவாக்கப்பட்ட இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது மிகச்சிறிய அளவில் மென்பொருள் பொதிகளையும் கொண்டுள்ளது. Games, Tables Editor, Compiler,Text Editor, Demos, Web Browser போன்ற மென்பொருட்கள் உள்ளடங்கலாக இந்த இயங்குதளமானது உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பான மிகச்சிறிய மென்பொருளாகும். Leia mais...

Jun 8, 2010

ஆன்லைன் வைரஸ் பரிசோதனை

பிரபலமான ஆண்டி வைரஸ் புரோகிராம் வைத்திருக்கிறேன். அவ்வப்போது இன்டர்நெட்டில் அதன் தளம் சென்று அப்டேட் செய்து வருகிறேன். இருந்தாலும் வைரஸ் வந்துவிட்டதோ என்று எப்போதும் அச்சம் என்று சிலர் புலம்புகின்றனர். சிலரோ இத்தகைய புரோகிராம் இருந்தும் வைரஸ் வந்துவிட்டதே என்று தவிக்கின்றனர். ஏன் இந்த நிலை? எத்தகைய திறன் மிக்க ஆண்டி வைரஸ் தொகுப்பாயிருந்தாலும் சில வைரஸ்களை, குறிப்பாகப் புதியதாக எழுதி உலாவிடப்படும் வைரஸ்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

இதற்குக் காரணம் வைரஸ்களை உருவாக்குபவர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதுதான். மேலும் பிரவுசர் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களில் ஹேக்கர்கள் நுழையும் வகையில் பல பலவீனமான இடங்கள் இருப்பதுதான். இத்தகைய சூழ்நிலைகளில் நமக்கு உதவ இணைய தளம் ஒன்று செயல்படுகிறது.

உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு புரோகிராம் அல்லது பைல் ஒன்றில் வைரஸ் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால் அல்லது டவுண்லோட் செய்யப்படும் அனைத்து புரோகிராம்களையும் நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும் என விரும்பினால் உடனே அதனை இந்த தளத்திற்கு அனுப்பலாம். இந்த தளம் நீங்கள் அனுப்பும் புரோகிராமினை முழுமையாக சோதனை செய்து வைரஸ் இருக்கிறதா எனச் சோதிக்கும்.

ஜஸ்ட் லைக் தேட் சோதிக்காமல் 36 வெவ்வேறு வகையான ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் கொண்டு சோதிக்கும். முடிவுகளை உடனே நமக்கு அறிவிக்கும். இதற்கான கட்டணம் எதுவும் இல்லை. நீங்களும் சந்தேகப்படும் அனைத்து புரோகிராம்களையும் இந்த தளத்திற்கு அனுப்பிப் பார்க்கலாமே.

தற்போது தமிழ் வலைப்பதிவுகளில் நெல்லை தமிழ் திரட்டியால் வழியே வந்த மால்வேர் வைரஸ் பிரச்சினையால் வலைத்தளங்கள் முடக்கப்படுகின்றன. தங்கள் தளங்களிலும் வைரஸ் உடுருவியிருக்குமோ என சந்தேகிப்பவர்கள் தங்கள் வலைப்பதிவுகளை BackUp செய்து இந்த தளத்தில் பரிசோதித்துப் பார்ர்க்கலாம்.

- ரமணா

Leia mais...

Jun 3, 2010

ஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்டியாக சீனா புதிதாக ஐபெட் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது

மடிக்கணினிகளின் விற்பனையை பின்னுக்கு தள்ளி தற்போது முதலிடம் பிடித்து வரும் ஐபேட் போலவே இப்போது புதிதாக ஐபெட் என்ற ஒன்றை சீன தொழில் நுட்ப வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர். ஐபேட் -ல் என்ன வெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் இந்த ஐபெட்-லும் பயன்படுத்தலாம்.

பயன்படுத்துவதற்க்கு எளிது மட்டுமல்ல விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வண்ணம் எளிதில் உடையாதவாறு இதன் மேல்பாகம் வடிமமைக்கப்பட்டுள்ளது. இதிலும் ஆண்டிராய்டு அப்ளிகேசன் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 128 MB RAM , 16 GB சேமிக்கும் வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் விலை $105 டாலர் தான்.

வீடியோ இணைப்பு

- லங்காசிறி

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo