கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Feb 27, 2010

தகவல்களை குறித்து வைக்க ஹாட்நோட்ஸ் (Hot Notes)

கம்ப்யூட்டரில் மிகவும் கவனமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென நமக்கு ஒரு போன் அழைப்பு வரலாம். அவசரமாய் ஏதேனும் தகவல்களை போன் செய்பவர் கூறுவார்.

அப்போதுதான் பேனா, பென்சில் மற்றும் பேப்பரைத் தேடுவோம். எதிர் முனையில் இருப்பவர், என்னய்யா இதெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்வதில்லையா என்று அங்கலாய்ப்பார். ஏன், கையில் இருக்கும் கம்ப்யூட்டரில் தகவலைக் குறித்துக் கொள்ள முடியாதா?
முடியும். நோட்ஸ், ஸ்டிக்கி நோட்ஸ், அர்ஜன்ட் நோட்ஸ் என இதனைக் குறிப்பிடுவோம். இது போல நோட்ஸ் குறிப்புகளை, டெஸ்க்டாப்பில் எழுதி வைக்கும் வசதியைத் தர பல புரோகிராம்கள் இருந்தாலும், ஹாட்நோட்ஸ் (Hot Notes) என்னும் புரோகிராம், இவ்வகையில் சிறப்பானதாக இருந்தது. 

மெசேஜ், லிஸ்ட், ஸ்கிரிப்பிள் என மூன்று வகைகளில், மூன்று தனி தனிக் கட்டங்களில் நாம் அவசரத் தகவல்களை எழுதி வைக்கலாம். இந்த கட்டங்கள் ஒளி ஊடுறுவும் தன்மை உடையதாய், டெஸ்க் டாப்பில் உள்ளதை மறைக்காதவகையில் இருக்கும். சிறிய அளவில் இதில் படங்களைக் கூட வரைந்து வைக்கலாம். அல்லது படத்தை ஒட்டியும் வைக்கலாம். வேஸ்ட் பாஸ்கட் என்னும் வசதியில், அதிகம் பயன்படாத குறிப்புகளை எழுதி வைக்கலாம். தேவைப்பட்டால், ரீசைக்கிள் பின்னிலிருந்து எடுத்துக் கொள்வதைப் போல எடுத்துக் கொள்ளலாம். முக்கியமான தகவல்களை பேக்கப் பைலாக வைத்துக் கொள்ளவும் இதனைப் பயன்படுத்தலாம்.


நினைவில் வைத்துக் கொண்டு, வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை, இதில் ஒரு நினைவூட்டல் போர்டு மாதிரி எழுதி வைத்துக் கொள்ளலாம்.இது எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் போர்ட்டபிள் வெர்ஷனாகவும் கிடைக்கிறது. இதனை பிளாஷ் டிரைவில் எடுத்துச் சென்று எந்த பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.

itamilworld

Leia mais...

Feb 26, 2010

புளூடூத் பயன்பாடும் பாதுகாப்பும்

வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன.

நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.


ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

Leia mais...

Feb 25, 2010

பயர்பாக்ஸில் திறக்க மறுக்கும் வெப்சைட் தளங்கள்

நீங்கள் தொடர்ந்து பயர்பாக்ஸ் பயன்படுத்து பவராக இருந்தால், நிச்சயம் சில இணைய தளங்களுடன் இந்த பிரச்னையைச் சந்தித்திருக்கலாம். ஏனென்றால் சில இணைய தளங்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் மட்டுமே இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

அத்தகைய தளங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் இயங்காது. எனவே, அந்த தளங்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறந்து, அத்தளங்களில் கொடுத்துள்ள தொடர்பு முகவரிக்கு இந்த பிரச்னை குறித்து இமெயில் அனுப்புங்கள். அல்லது பயர்பாக்ஸ் பிரவுசரில், டூல்பாரில் ஹெல்ப் (Help) பட்டனை அழுத்தவும். அதன்பின் Report Broken Website என்பதில் கிளிக் செய்திடவும். உடைந்த(!) இணைய தளங்களில் சில வகைகள் இருக்கும். அவற்றில் சில குறித்து உங்களுக்கு இங்கு தருகிறேன்.

1. Browser Not Supported

இத்தகைய தளங்கள் அடிக்கடி கிடைப்பதில்லை. ஏனென்றால் பயர்பாக்ஸ் பிரவுசர் இப்போது ஒரு முதன்மை பிரவுசராக நமக்கு கிடைத்து வருகிறது. இருப்பினும் Report பட்டனை அழுத்தி முன்பு கூறியபடி ரிப்போர்ட் செயல்படவும்.

2. Plug in Not shown

இதனைத்தான் நான் முழுமையாக வெறுக்கிறேன். பயர்பாக்ஸில் உள்ள ப்ளக் இன் பைண்டர் பொதுவாகவே சரியான ப்ளக் இன் பார்த்து இன்ஸ்டால் செய்து கொள்ளும். இருப்பினும் சிலவற்றை அதனால் பெற்று இன்ஸ்டால் செய்திட முடியாது. இதில் அதிகம் தொல்லை கொடுப்பது விண்டோஸ் மீடியா பிளேயர் 11 க்கான ப்ளக் இன் தான். எனவே இந்த செய்தி கிடைத்தால் அதற்குத்தானா என்று பார்த்து பெற்று இன்ஸ்டால் செய்திடவும்.

3. Other content missing

இது பொதுவாக ரிப்போர்ட் செய்யப்பட வேண்டிய ஒன்று. வெப்சைட் ஒன்றில் ஏதேனும் மெனு காட்டப்பட்டு அவை காலியாக இருந்தால் இந்த செய்தி கிடைக்கும். ரிப்போர்ட் பட்டன் அழுத்தி மேலே கூறியபடி தகவல் தர வேண்டியதுதான்.

4. Can’t Log in

உங்களுடைய அலுவலக இன்ட்ரா நெட் நெட்வொர்க்கினை, வீட்டிலிருந்த படி தொடர்பு கொள்ள முடிந்தால் இந்த தகவல் தரப்படலாம். பாஸ்வேர்ட் மறத்தல், தவறாக டைப் செய்தல் போன்ற தவற்றை நீங்கள் செய்திடவில்லை என்றால், மேலே சொன்னபடி ரிப்போர்ட் செய்திட வேண்டியது தான். மேலே சொன்னவைதான் சிக்கலான பிரச்னைகள். மற்றவை எல்லாம் சாதாரணமானவையே.

Leia mais...

Feb 22, 2010

பயர்பாக்ஸ் ஆட் ஆன் மூலம் பரவிய வைரஸ்கள்...!!!

இரு வாரங்களுக்கு முன் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்புகளுடன் ட்ரோஜன் வைரஸ் கம்ப்யூட்டர்களைப் பாதிப்பதாக, உறுதியான செய்திகள் கிடைத்தன. Sothink Web Video Downloader என்னும் தொகுப்பின் பதிப்பு 4 மற்றும் Master Filer என்னும் இரு தொகுப்புகளில் இந்த பிரச்னை இருந்ததாக மொஸில்லா குற்றம்சாட்டியிருந்தது. இவற்றுடன் வைரஸ் மறைந்து ஒட்டிக் கொண்டு வந்து தொல்லை கொடுத்ததாக அறிவிக்கப்பட்டது.

முதல் தொகுப்புடன் Win32.LdPinch.gen என்ற வைரஸும், இரண்டாவது தொகுப்புடன் Win32.Bifrose.32 என்ற வைரஸும் பரவுவதாகக் கூறப்பட்டது. ஆனால் சென்ற வார இறுதியில் வெளியான தகவல் அறிக்கையில் முதல் ஆட் ஆன் தொகுப்புடன் வைரஸ் இல்லை என்று சொல்லப்பட்டது. இரண்டாவது ஆட் ஆன் தொகுப்பில் மட்டும் ட்ரோஜன் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதுவும் இப்போது மொஸில்லாவினால் சரி செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் இந்த வைரஸ் புரோகிராம் எப்படி ஆட் ஆன் தொகுப்புகளுடன் கலந்தன என்று விளக்கப்படவில்லை.

இது மொஸில்லாவுக்கு ஓர் அதிர்ச்சி தரும் நிகழ்வுதான். ஆட் ஆன் தொகுப்புகள் பயர்பாக்ஸ் பிரவுசருக்குப் பெருமையைத் தந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படி நிகழ்ந்திருப்பது மொஸில்லா இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்பதனைக் காட்டுகிறது.

- தேன்தமிழ்

Leia mais...

Feb 18, 2010

கூகுளின் தேடலில் மைஸ்பேஸ் தகவல்கள்

கூகுளின் தேடல் முடிவுகள் சமீபத்தில் நேரடியாக உடனுக்கூடன் தெரிவித்து இணையதள ரசிகர்களை மகிழ்சியில் ஆழ்த்தியது நமக்கு தெரிந்த ஒன்று தான் அதன் பின் டிவிட்டரின் முடிவுகளை நேரடியாக உடனுக்கூடன் கூகுள் காட்டியதுஇப்போது அதையும் தாண்டி மைஸ்பேஸ்( Myspace) முடிவுகளையும் உடனுக்குடன் நேரடியாக காட்டும் சேவை சில மணி நேரங்களுக்கு முன் தொடங்கப்பட்டுள்ளது.

கூகுளின் நேரடி தேடல் முடிவுகளில் இப்போது புதிதாக மைஸ்பெஸ்-ம் சேர்ந்துள்ளது இனி டிவிட்டர் முடிவுகள் மட்டுமல்ல மைஸ்பேஸ் முடிவுகளையும் கூகுள் மூலம் நேரடியாக பார்க்கலாம். மைஸ்பேஸ்-க்கு என்று பிரத்யேகமான தேடுபொறிகள் பல இருந்தாலும் அத்தனையும் தாண்டி சில மணி நேரத்திற்க்குள் மைஸ்பேஸ்-ல் என்ன தேட வேண்டுமோ அதையும் சில நொடிகளில் தேடி கொடுத்து அதிலும் கூகுள் நம்பர் 1 ஆக வந்துள்ளது.

உதாரணமாக நாம் மைஸ்பேஸ் முடிவுகளை கூகுளில் தேட வேண்டுமானால் கூகுள் இணையதளத்துக்கு சென்று மைஸ்பேஸ் ( Myspace Music ) என்று தொடங்கி இடைவெளிவிட்டு உங்கள் கேள்விகனைகளை தொடுக்கலாம்.

இப்போது மைஸ்பேஸ் இணையதளத்தில் நீங்கள் கொடுத்த் வார்த்தைக்கான முடிவுகளையும் சில நொடிகளிலே கொடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது

Leia mais...

Feb 14, 2010

கூகுள் வண்டு (Buzz)

தொட்ட இடங்களில் எல்ல்லாம் முதல்வனாக வரும் நம் கூகுளின் பெரிய சமூகவலைப்பின்னலாக வரும் கூகுள் வண்டு (இரை). பெயர் கொஞ்சம் புதிதாக தான் இருக்கிறது. வண்டு எனபது எல்லா பூக்களில் இருந்தும் இரையைத் தேடி எடுத்து அதை கூட்டில் சேமித்து வைக்கும் அதே தான் இந்த கூகுள் வண்டு (Buzz)

முதலில் இந்த கூகுள் பஸ் என்ன வேலை செய்கிறது என்று பார்ப்போம் கடந்த ஆறுமாதமாக மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது குறைந்திருக்கிறது இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பேஸ்புக்கும் டிவிட்டரும் தான்.

மக்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் புகைப்படம் வீடியோ என அத்தனையையும் இதில் பகிர்ந்து கொள்கின்றனர் அதனால் மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது கொஞ்சம் குறைந்துள்ளது இந்த பிரச்சினையை மையமாக வைத்துதான் கூகுள் லைவ் தேடுதல் வந்தது நமக்கு தெரியும் ஆனாலும் எதிர்பார்த்த அளவு பெரியதாக மக்கள் அதை பயன்படுத்துவதில்லை.

இதற்காக கூகுள் உலகிலே அதிகளவு பயன்படுத்தும் தன் ஜிமெயிலை வைத்து காய் நகர்த்தியிருக்கிறது, ஜிமெயிலில் புதிதாக வந்துள்ளது 'Buzz' என்ற வசதி இதன் மூலம் நாம் செய்தி,படம், வீடியோ மற்றும் ஃபீட்ரீடர் என்ற அனைத்து வசதியையும் ஜிமெயிலில் பயன்படுத்தலாம்.

உதாரணமாக நாம் விரும்பும் பிளிக்கர் புகைப்படத்தை நம் நண்பருடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். அதே போல் வீடியோ,டிவிட்டர் மற்றும் ஃபீட்ரீடர் வசதியை கூட பயன்படுத்தலாம்.இதை எல்லாம் விட பெரிய சிறப்பு இந்த வசதியை மொபைலிலும் பயன்படுத்தலாம்.

இத்தனையையும் ஜிமெயிலிலே செய்யலாம் என்றால் கொஞ்சம் அல்ல அதிகமாகத்தான் ஆவல் இருக்கிறது ஆனால் இப்போது இந்த கூகுள் வண்டு பயன்படுத்த சிலருக்கு மட்டுமே அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leia mais...

Feb 11, 2010

எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண

கால ஓட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகளாக Divx, FLV, MP4, MKV என்று வீடியோக்கள் புதிது புதிதாக வடிவங்களில் வருகின்றன. இணையத்தில் பெரும்பாலும் பகிரப்படும் வீடியோக்கள் இந்த வடிவங்களில்தான் வருகின்றன.

தரவிறக்கி அவற்றை நீங்கள் பார்க்க முற்படும் போது Codec இல்லை என்ற பிழைச்சொல் வரும். சிலவற்றில் DVD வீடியோக்கள் ஓடாது.

இது போன்ற வீடியோக்கள் திறக்க உங்கள் கணினியில் அவற்றிற்கு ஏற்ற கோடக் (Codec) தேவைப்படும்.விண்டோஸ் இயங்குதளத்துடன் வருவது விண்டோஸ் மீடியா பிளேயர். நீங்கள் திறக்கும் வீடியோ கோப்புகள் இதில் தான் தெரியும். ஆனால் விண்டோஸ் மீடியா பிளேயர் எல்லா வீடியோ வடிவத்திற்கான கோடக்குகளுடன் வருவதில்லை.

அவற்றை இணையத்தில் தேடி உங்கள் கணினியில் நிறுவ வேண்டி வரும். சில சமயம் வேலை செய்யும். பல நேரம் காலை வாரும். பெரிய தலைவலி பிடித்த வேலை இது. புதிதாக கணினி வாங்கிய நண்பர்கள் / உறவினர்கள் அடிக்கடி என்னிடம் கொண்டு வரும் பிரச்சனை இது.

இந்த இம்சையில் இருந்து விடுபட ஒரே வழி விண்டோஸ் மீடியா ப்ளேயரை உபயோகிப்பதை நிறுத்தி விடுங்கள். எல்லா வீடியோ கோப்புகளையும் தடை இன்றி திறக்க ஒரு மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.

VLC Media Player. கணினிக்கான மிகச்சிறந்த மீடியா பிளேயர் இது. இதற்கென நீங்கள் எந்த வீடியோ கோடக்குகளையும் தனியே நிறுவ வேண்டியதில்லை. எல்லாம் உள்ளடங்கியே வருகிறது. அடிக்கடி மேம்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து விதமான வீடியோவையும் திறக்கிறது.

இது முற்றிலும் இலவசம். தற்சமயம் ஒரு வினாடிக்கு பதினேழுக்கும் மேற்பட்டோர் இதனை தரவிறக்குவதாக அவர்கள் இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளார்கள். இது விண்டோஸ், லினக்ஸ், மேக் ஓஎஸ் என்று பெரும்பாலான இயங்குதளங்களில் வேலை செய்யும். இந்த சுட்டிக்கு சென்று உங்கள் கணினி இயங்குதளத்திற்கு ஏற்ற விஎல்சி மீடியா ப்ளேயரை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

இனி 'கணினியில் இந்த வீடியோ திறக்க மாட்டேன் என்கிறது' என்ற பிரச்னைக்கு முடிவு காட்டுங்கள். இணைய உலாவிகளில் பயர்பாக்ஸ் எப்படி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றாக உள்ளதோ அது போல் விண்டோஸ் மீடியா ப்ளேருக்கு மிகச்சிறந்த மாற்று விஎல்சி மீடியா பிளேயர். இது ஒவ்வொருவர் கணினியிலும் காட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள்.
விஎல்சி மீடியா பிளேயர் வீடியோ பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் வீடியோக்களை வெட்டுவது, இணைய ஒளிபரப்புகளை பார்க்க, வீடியோ கன்வெர்ட் செய்ய, உங்கள் வீடியோக்களை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்ப, உங்கள் கணினி ஸ்க்ரீன் காட்சிகளை பதிவு செய்ய என பல விதங்களில் பயன்படுகிறது.

Lankasritech

Leia mais...

Google talk சில நுட்பங்கள் : டிப்ஸ் & டிரிக்ஸ்

பலர் கூகுள் டாக் ஐ பயன்படுத்துபவர்களாக இருப்பீர்கள் ஆனால் அதில் உள்ள நுட்பங்கள் சிலருக்கு தான் தெரிய வாய்ப்புண்டு. அவற்றில் சில இங்கே.

 நுட்பம் 1

சாட்டிங்க் செய்கையில் பாண்ட் அளவை கூட்டி குறைப்பதற்கு கீபோட் இல் கன்ரோல் விசையை அழுத்தியபடி மவுஸ் வீலை சுற்றுங்கள். பாண்ட் அளவு வாசிக்க இலகுவாக கூடி குறையும்.

நுட்பம் 2

சாட்டிங்கில் டைப் செய்யும் இடம் எப்போதும் ஒரு லைனில் இருக்கும் இதை அதிகரிக்க செய்வதற்கு கீபோட் இல் சிப்ட் விசையை அழுத்தியபடி எண்டர் விசையை தட்டிக் கொண்டே போக டைப் செய்யும் இடத்தின் அளவு அதிகரிக்கும்.

நுட்பம் 3

சாட்டிங்கில் டைப் செய்யும் எழுத்தை போல்ட் செய்ய *this* இவ்வாறு எழுதுங்கள்.

நுட்பம் 4

சாட்டிங்கில் டைப் செய்யும் எழுத்தை இட்டாலிக் செய்ய _this_ இவ்வாறு எழுதுங்கள்.

நுட்பம் 5

திறக்கும் விண்டோக்களை Tab விசை மூலம் கையாளலாம். ஒவ்வொருமுறை விசையை அழுத்தும் போதும் அடுத்த அடுத்த விண்டோக்கள் திறக்கும். Tab விசையுடன் எண்டரையும் தட்டினால் சாட் விண்டோ முழுதாக திறந்து கொள்ளும். கன்ரோல் விசையுடன் Tab ஐ அழுத்தினால் சாட் விண்டோவை தானகவே முழுதாக திறக்கலாம்.

நுட்பம் 6

கூகுள் டாக்கில் ஒரே நேரத்தில் சுமார் 32767 நீளமான எழுத்துருக்களை எழுதலாம்.

Leia mais...

Feb 8, 2010

மொபைல் தேடலில் முதலிடத்தை பெறுமா கூகிள்?

இன்டர்நெட்டில் தகவல்களைத் தேடுவதில் நமக்குப் பயன்படும் சர்ச் இஞ்சினை யார் முதலில் வடிவமைத்தார்கள்? என்று ஒரு கேள்வி கேட்டால் உடனே பெரும்பாலான வர்கள் கூகுள் நிறுவனம் என்றுதான் பதில் அளிப்பார்கள்.

ஆனால் அது உண்மையல்ல. கூகுள் நிறுவனம் தன் சர்ச் இஞ்சினை வழங்கு முன்பே சர்ச் இஞ்சின் வேறு நிறுவனங்களால் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் கூகுளின் வேகம், தேடல் வகை அதற்கு ஒரு தனி இடத்தைக் கொடுத்துள்ளது.

இப்போது ஸ்மார்ட் போனில் மேற்கொள்ளப்படும் தேடலிலும் தான் முதல் இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் கூகுள் காய் நகர்த்துகிறது. அட்மாப் மற்றும் டெராசென்ட் (AdMob and Teracent) என்ற இரு நிறுவனங்களை அண்மையில் கூகுள் வாங்கியதன் மூலம் ஸ்மார்ட் போன் தேடலிலும் தன் இடத்தை வலுவாக கூகுள் அமைத்துள்ளது.

இன்டர்நெட் தேடலைப் பொறுத்தவரை கூகுள், சென்ற டிசம்பர் மாதம் மொத்த தேடலில் 70 சதவீதம் கொண்டிருந்தது. மொத்தம் மேற்கொள்ளப்பட்ட 13 கோடியே 10 லட்சம் தேடலில், 8 கோடியே 80 லட்சம் தேடல்கள் கூகுள் வழியே மேற்கொள்ளப்பட்டன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 58 சதவீதம் கூடுதலாகும். இது கூகுள் பெரிய அளவிலான இடத்தைக் கொண்டிருப்பது மட்டுமின்றி, இந்த பிரிவில் வேகமாகவும் வளர்ந்து வருகிறது என்பதுதான். தன் நிலையை இன்னும் வலுவாக்க சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுடன் கூகுள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதனால் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமுதாய இணைய தளங்களில் தேட விரும்புவர்கள், நேரடியாக கூகுள் தளத்திலேயே தங்கள் தேடலை மேற்கொள்ளலாம் என்பதுதான்.

கூகுள் தளத்திற்கு சவால் விடும் அளவிற்கு உள்ள ஒரு தேடுதளம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் தான். ஆனால் இது பெயரளவில் தான் உள்ளது. ஏனென்றால் இந்த தேடல் சந்தையில் பிங் இஞ்சினின் பங்கு வெறும் 4 சதவீதம் மட்டுமே.

Lankasritech

Leia mais...

Feb 4, 2010

மொபைலில் கால் வைக்கும் ‘பயர்பொக்ஸ்’

அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு உலகத்தில் முதலாவதாக இருக்கும் பயர்பொக்ஸ் இணைய உலாவி இனி மொபைல் துறையிலும் கால் பதிக்க இருக்கிறது.

இணையத்தில் பாதுகாப்பு, அதிக அளவு வசதிகள்,எல்லா செயல் நிரல்களும் சரியாக தெரிவதாக இருக்கட்டும் அனைத்திலும் பயர்பொக்ஸ்  தனி முத்திரை பதித்ததுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அளவிற்கு கணினியில் முதலிடத்தில் உள்ள இணைய உலாவி பயர்பொக்ஸ் இன்னும் மொபைலில் சிறப்பாக வரவில்லையே என்று நினைப்பவர்களுக்கு உண்மையிலே மகிழ்ச்சியான செய்தி தான் இப்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பயர்பொக்ஸ் இனி மொபைலிலும் வரப்போகிறது.

அனைத்து வசதிகளும் கொண்டு பயர்பொக்ஸ் இணைய உலாவி Nokia N90-ல் முதன் முதலாக வரப்போகிறது.

டிவிடரிலிருந்து யூடியுப் வரை அனைத்தும் பயன்படுத்தும் வண்ணம் தயாராகி இருக்கிறது. இதைத் தவிர புக்மார்க் ,பாஸ்வேர்ட்ஸ் சேமித்து வைத்தல் போண்ற எண்ணற்ற வசதிகளும் இதில் உள்ளது. இதுவரை அதிக அளவு பயனாளர்களை கொண்டு மொபைல் உலாவியில் முதலிடத்தில் இருந்து வந்த ஒபேரா (opera)-க்கு சரியான போட்டியாக பயர்பொக்ஸ்  மொபைல் இணைய உலாவி வந்துளளது.

இதை மேலும் விரிவுபடுத்தி அனைத்து லேட்டஸ்ட் மாடல் மொபைலும் சப்போர்ட் செய்யும் வகையில் விரைவில் வர இருக்கிறது.

அதைப்போல் மொபைல் மூலமாக ஹக் செய்வதும் இனி அதிகஅளவு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leia mais...

Feb 3, 2010

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து

கூகுள் நிறுவனத்தின் சர்வர்களில் சில ஹேக்கர்கள் நுழைந்து மெயில்களை நாசம் செய்ததாக சில வாரங்களுக்கு முன் பெரிய அளவில் பிரச்னைகளும் அதன் பின்விளைவுகளும் நடந்தேறின.

இதன் காரணமாக சீன அரசுக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் தகராறு முற்றி, சீனாவிலிருந்து கூகுள் வெளியேறும் எல்லை வரை இந்த பிரச்னை சென்றுவிட்டது.

கூகுள் மெயில் சர்வருக்குள் புகுந்து நாசம் செய்தவர்கள் சீனாவில் இயங்கும் ஹேக்கர்கள் தான் என்பது பலரின் வாதம். யார் என்பதைக் காட்டிலும், இந்த சர்வர் இயக்கத்தில் எங்கு பிழை ஏற்பட்டு ஹேக்கர்கள் நுழைந்தனர்? கூகுள் நிறுவனத்திற்கே இந்த கதி என்றால் நம் மெயில்கள் எல்லாம் என்ன ஆவது?

என்ற கவலை நம்மில் பலரைத் தொற்றிக் கொண்டது. இதற்கான மூலகாரணம் என்ன என்று பார்க்கும் போது, மைக்ரோசாப்ட் நிறுவனம், கூகுள் மீது ஏற்பட்ட பாய்ச்சலுக்குத் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள பிழைகளே காரணம் என்று ஒத்துக் கொண்டது.

அதனைச் சீர்செய்திடும் வழிகளையும் காட்டி உள்ளது. அந்த வழிகளை நாமும் பின்பற்றி நம் சர்வர்களையும், கம்ப்யூட்டர் களையும் பாதுகாத்துக் கொள்ளலாமே என்ற ஆவல் உங்களுக்கு உள்ளதா! ஆசை எழுவது இயல்பு தானே. மிக எளிதாக இந்த பாதுகாக்கும் வழியை மேற்கொள்ளலாம். அதனை இங்கு பார்க்கலாம்.

விண்டோஸ் 2000 சிஸ்டத்தில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 5 வரை, இத்தகைய பிரச்னை எதுவுமில்லை. IE 6, IE 7, மற்றும் IE 8 ஆகிய பதிப்புகள் விண்டோஸ் 2000, எக்ஸ்பி, சர்வர் 2003, விஸ்டா, சர்வர் 2008, விண்டோஸ் 7 மற்றும் சர்வர் 2008 E2 ஆகியவற்றில் தான் இந்த பிழை உள்ளது தெரியவந்துள்ளது.

இந்த இயக்கங்கள் எல்லாமே இப்போது அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன. இன்றைய நிலையில் இவற்றால் ஏற்படும் ஆபத்தினை முழுமையாகத் தவிர்க்க இயலவில்லை என்று மைக்ரோசாப்ட் ஒத்துக் கொண்டுள்ளது. இருந்தாலும் பிழை இருப்பதனை ஓரளவிற்கு மறைத்து வைக்க முடியும் என்று கூறி உள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள Protected Mode என்பதனை இதற்குப் பயன்படுத் தலாம். இது விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும்போது கிடைக்கிறது. இத்துடன் Data Execution Protection என்பதனையும் இயக்கை வைக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள IE security zone I "High"என வைப்பதும் ஒரு வழியாகும்.

புரடக்டட் மோட் Protected Mode

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 7ல் தரப்பட்டுள்ள புரடக்டட் மோட் (விண்டோஸ் விஸ்டா மற்றும் 7ல் கிடைக்கும்) ஹேக்கர் ஒருவர் உங்கள் கம்ப்யூட்டரில் தன்னுடைய டேட்டா அல்லது புரோகிராமினைத் திணிக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. எனவே இந்த வழியை இயக்கி வைப்பது நல்லது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இது தானாக இயக்கிவைக்கப்படுகிறது.

ஆனால் முந்தைய பதிப்புகளில் நாம் தான் இதனை இயக்க வேண்டும். அடுத்ததாக, ஆக்டிவ் ஸ்கிரிப்டிங் இயங்குவதைத் தற்காலிகமாக நாம் நிறுத்தி வைக்க வேண்டும். இதனால் இதனை இயக்கும் முன் நமக்கு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். அப்போது இதனைத் தற்காலிகமாக இயக்க அனுமதிக்கலாம். ஆனால் அவ்வாறு அனுமதிக்கும் முன் இன்டர்நெட் செக்யூரிட்டி செட்டிங்ஸை "High" என செட் செய்திட வேண்டும்.

புரடக்டட் மோட் வழியை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம். IE 7 மற்றும் IE 8 பதிப்புகளில் இது மிகவும் எளிது. Tools —> Internet Options தேர்ந்தெடுத்து Security டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Enable Protected Mode என்பதற்கு முன்பாக உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். இவ்வாறு அமைத்த பின் மாற்றங்களை இயக்குவதற்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரரை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும்.

இதே போல் கம்ப்யூட்டரின் செக்யூரிட்டி ஸோனை "High" ஆக வைப்பதும் எளிது. Tools —> Internet Options தேர்ந்தெடுத்து Security டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து அங்கு காணப்படும் ஸ்லைடரை "High" என்பதை நோக்கித் தள்ளிவிடவும். இந்த செட்டிங்ஸ் இயக்கத்திற்கு வர, நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோ ரரை மீண்டும் ரீஸ்டார்ட் செய்திட வேண்டியதில்லை.

டி.இ.பி. (DEP Data Execution Protection) இயக்க: இந்த பாதுகாப்பு வழி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இயக்கப்பட்டே கிடைக்கிறது. அதை உறுதிப்படுத்தவும், பதிப்பு 7ல் இயக்கவும், கீழே தரப்பட்டுள்ளபடி செயல்பட வேண்டும். Tools —> Internet Options சென்று Advanced டேப்பினைக் கிளிக் செய்திடவும்.

பின் Security பிரிவுக்கு ஸ்குரோல் செய்து செல்லவும். அடுத்து "Enable memory protection to mitigate online attacks" என்று இருப்பதன் முன் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இந்த மாற்றம் செயல்பட, இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூடிப் பின் மீண்டும் இயக்கவும்.

இதனை எப்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6ல் இயக்குவது என்று பார்க்கலாம். மை கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் அட்வான்ஸ்டு டேப்பில் கிளிக் செய்திடவும்.

இனி Performance என்பதில் செட்டிங்ஸ் என்பதைத் தேர்ந்தெடுத்து, Data Execution Prevention என்ற டேப்பிற்குச் செல்லவும். அடுத்து "Turn on DEP for all programs and services except those I select" என்ப தனைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply மற்றும் OK கிளிக் செய்து மூடவும்.

மைக்ரோசாப்ட் ஈஉக தானாக இயங்க டூல் ஒன்றை தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இதனைப் பெற என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அதில் தரப்பட்டுள்ள குறிப்புகள் படி செயல்படவும்.

மேலே கண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவிட்டால், ஹேக்கர்களிடமிருந்து முழுமையான பாதுகாப்பு பெற முடியுமா? சந்தேகம்தான். இருப்பினும் ஓரளவிற்கு பாதுகாப்பினை இது தரும்.

மைக்ரோசாப்ட் விரைவில் இதற்கான பேட்ச் பைல் ஒன்றை வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இந்த செய்தியை எழுதும் நேரத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஒரு ஸ்பெஷல் பேட்ச் பைல் ஒன்றை வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

ஆனால் ஜெர்மனியில் பயர்பாக்ஸ் பிரவுசர் டவுண்லோட் திடீரென அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சீன கூகுள் ஹேக்கர் பிரச்னையால், ஜெர்மனியில் இயங்கும் இணைய பாதுகாப்பு மையம், Federal Office for Information Security, , இன்டர்நெட் எக்ஸ்புளோரரை நீக்கிவிட்டு, வேறு ஏதேனும் ஒரு பிரவுசரை இன்ஸ்டால் செய்து இயக்குமாறு அறிவித்துள்ளது.

இதனால் நான்கு நாட்களில் மட்டும் ஜெர்மனியில் 3 லட்சம் பேர் பயர்பாக்ஸ் தொகுப்பினை டவுண்லோட் செய்துள்ளனர். இதேபோல் பிரான்ஸ் நாட்டின் இன்டர்நெட் பாதுகாப்பு மையமான CERTA வெளியிட்ட அறிக்கையில், இன்டர்நெட் பிரவுசரை நிறுத்திவிட்டு வேறு பிரவுசரைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதே போன்ற ஒரு எச்சரிக்கை ஆஸ்திரேலியாவிலும் வெளியாகியுள்ளது .

- Lankasritech

Leia mais...

Feb 1, 2010

பேஸ்புக் சேமிக்கும் புகைப்படத்தின் அளவை அதிகப்படுத்தியுள்ளது

பல நாள் கோரிக்கை இறுதியாக இப்போது தான் பேஸ்புக் தனது நெட்வொர்க்கில் சேமிக்கும் படத்தின் உயரம் மற்றும் அகலத்தை அதிகரித்துள்ளது. அதிகமான பயனாளர்களை கொண்டு உலகத்தில் வலம் வரும் பேஸ்புக் கடந்த சில நாட்களாகவே புகைப்படத்தின் அளவை அதிகப்படுத்தபோவதாக அறிவித்துவந்தது

இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அதாவது படத்தின் அகலம் 180 உயரம் 540 (180×540) என்று அளவை தான் இதுவரை பேஸ்புக் -ல் நாம் பயன்படுத்தி வந்தோம் ஆனால் இனி அகலம் 200 மற்றும் உயரம் 600 என்று படத்தின் உயரம் மற்றும் அகலத்தை அதிகப்படுத்தியுள்ளது.

பிளிக்கர் போன்ற இணையதளங்களில் இருந்து நாம் அப்லோட் செய்யும் புகைப்படத்தின் அளவும் இனி இந்த அளவாக மாற்றப்பட்டுவிடும்.இதற்காக பேஸ்புக்-ல் கூடுதலாக சேமிக்கும் இடத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo