கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Mar 20, 2010

உங்கள் தளத்தை வேகமாக செயலாற்ற வைக்க வழிகள்




வரிசையாக பார்ப்போம்

 முதலில் ஒரு முக்கியமான விஷயத்தை முடிவு பண்ணிக்குங்க ..உங்க தளம் வேகமா இருக்கனுமா இல்ல அலங்காரமா இருக்கனுமா! என்று.. வேகத்திற்கும் அலங்காரத்திற்கும் என்ன சம்பந்தம்! என்று டென்ஷன் ஆகாதீங்க.

அவசியமில்லாத அழகு கேட்ஜட்களை நிறுவுவதை அறவே தவிர்க்க வேண்டும். இதில் சில அழகோடு வைரசையும் சேர்த்து கொண்டு வந்து விடும் மற்றும் தேவையில்லாத பாப் அப் களும் தோன்றி உங்கள் தளத்துக்கு வருபவர்களை வெறுப்பேற்றும்
உங்கள் டெம்ப்ளேட்டில் மற்ற தளங்களின் நிரழிகள் (ஸ்க்ரிப்ட்) அதிகம் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் (கூகிள் அனலைஸ்டிக்ஸ், தமிழ்மணம் மற்றும் உங்களுக்கு தேவையான திரட்டிகளின் ஒட்டுப்பட்டை நிரழிகள் தவிர) காரணம் நம் தளத்தை திறக்கும் போது அந்த நிரழிகள் அதற்குண்டான வேலையை செய்ய அந்த சர்வரை தொடர்பு கொள்ள நேரம் எடுக்கும்.

இதனால் நம் தளம் திறக்க நேரமாகும், அதனால் திறக்கும் வரை நாம தலைய சொரிஞ்சுட்டு இருக்க வேண்டியது தான். எனவே முடிந்த வரை தேவையில்லாமல் உள்ள மற்ற தள நிரழிகளை நீக்கணும்.

இதுல தேவை இல்லாத நிரழி தேவையான நிரழின்னு எப்படி கண்டு பிடிக்கிறது என்றால் வடிவேல் சொல்ற மாதிரி நீங்க புடுங்குறது எல்லாமே தேவையில்லாதது தான் (அதுக்குன்னு உங்க தளத்து நிரழிய நோண்டிடாதீங்க :-D)

உங்களுக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிற கேட்ஜட் (வாசகர்கள் வருகை, ரீடர், பின் தொடருபவர்கள் போன்றவை) மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் நீக்கி விடுங்கள்.
உங்கள் தளங்களில் சைடு பாரில் அதிக அளவில் படங்களை வைக்க கூடாது
முன் பக்கத்தில் உள்ள இடுகைகளின் எண்ணிக்கையை இரண்டிற்கு மிகாமல் வைத்துக்கொள்வது நல்லது, இதுவும் வேகத்தை குறைக்கம். ஒரு சிலர் சிரிப்பான் வைத்து இருப்பார்கள், இவை எல்லாம் ஒவ்வொரு முறை உங்கள் தளத்தை திறக்கும் போதும் அது தொடர்பான தளத்தை தொடர்பு கொள்ளும் எனவே சில நொடிகள் திறக்க நேரம் எடுக்கும் தமிழிஷ் மற்றும் புதிய திரட்டிகளின் ஒட்டு பட்டை கீழ் பகுதியில் வரும் ஆனால் தமிழ்மணத்தின் கருவி (ஓட்டு) பட்டை மேற்பகுதியில் வரும் இதை அடிப்பகுதியில் மாற்றி வைத்துக்கொள்ளவும். ஒருவேளை தமிழ்மணம் சர்வர் பிரச்சனை என்றாலும் நமது தளம் திறக்க நேரம் எடுக்காது. (இதை எப்படி செய்வது என்ற தொடுப்பு என்னிடம் இல்லை இருப்பவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்)
இதை போன்ற காரணங்களால் உங்கள் தளம் திறக்க யோசனை செய்து கொண்டு இருக்கும், ஒரு சிலர் தளத்தை பார்த்தீர்கள் என்றால் பின்னூட்ட பகுதி வர ரொம்ப நேரம் எடுக்கும், அதற்கெல்லாம் இதை போன்ற காரணங்களே இருக்கும். இதை எளிதாக அறிந்து கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா என்பவர்களுக்கு...உங்கள் தளத்தை திறக்கும் போது உலவியில் ஸ்டேட்டஸ் பாரில் எந்த தளத்தில் அதிக நேரம் நின்று கொண்டு இருக்கிறது என்பதை கவனித்து அது சம்பந்தமாக என்ன உள்ளது என்று கண்டறிந்து நீக்கி விடுங்கள். சுருக்கமாக சொல்வதென்றால் முடிந்த வரை மற்ற தளங்களின் நிரழிகளை தவிருங்கள்.

தளத்தை அழகு படுத்துவதற்காக அதிகளவில் கேட்ஜட்டுகளை சேர்க்காமல் எளிமையான டெம்ப்ளேட்டை நல்ல வண்ணத்துடன் சேர்ப்பதன் மூலம் அழகை எளிதாக கொண்டு வந்து விடலாம்.

கிரி Blog

Leia mais...

சோஷியல் நெட்வொர்க்கிங் 2 சிம் போன்


பெரிய மற்றும் சிறிய நகரங்களில் வாழும் இளைஞர்கள் இன்று தங்கள் நண்பர்களுடன் எந்த நேரத்திலும் தகவல்கள், ஆசை, அபிலாஷைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர்.
போகிற போக்கில் இதனை மேற்கொள்ள மொபைல் போனில் இந்த வசதிகள் எந்தக் குறையுமின்றி கிடைக்க வேண்டும் என விரும்புகின்றனர். இவர்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் இலக்குடன் பிளை மொபைல்ஸ் நிறுவனம் Fly LINKZ (E145) என்னும் போனை வடிவமைத்து விற்பனைக்கு தந்துள்ளது.

இந்த போனில் 240 x 400 ரெசல்யூசனுடன் வண்ணத்திரை பளிச் என உள்ளது. 2 எம்பி கேமரா 1600 x 1200 ரெசல்யூசனில் படங்களைத் தருகிறது. போட்டோ ஸ்லைட் �ஷா வசதியும் உண்டு.

மோஷன் சென்சார் கேம்ஸ், வீடியோ மற்றும் ஆடியோ ரெகார்டிங் பிளேயர், வால்யூம் இயக்க மட்டும் கீகள், 3.5 மிமீ ஆடியோ ஜாக்,எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோ மீட்டர், கையில் எழுதினால் புரிந்து இயங்கும் டெக்ஸ்ட் வசதி, 1000 முகவரி கொள்ளும் அட்ரஸ் புக், 2000 எஸ்.எம்.எஸ். கொள்ளும் மெமரி, போட்டோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி, எண்களை அழைக்கவிடாமல் தடுக்கும் வசதி, பல மத விழா காட்டும் காலண்டர், ஸ்டீரியோ புளுடூத், மொபைல் ட்ரேக்கர், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, பெர்சனல் கம்ப்யூட்டர் இணைத்து இயக்கும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன.

சோஷியல் நெட்வொர்க் தளங்களை எளிதாக அணுகவும், இன்ஸ்டண்ட் மெசேஞ்சர்களை இயக்கவும் Nimbuzz அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. Skype, Windows Live Messenger (MSN), GTalk, Yahoo!, AIM, MySpace, ICQ ஆகியவற்றில் இயங்க சப்போர்ட் தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெறப்படும் லைவ் காண்டாக்ட் லிஸ்ட் மூலம் ஆன்லன் மற்றும் ஆப் லைனில் இருப்பவர்கள், பிசியாக உள்ளவர்கள், மெசஞ்சர் விண்டோவில் இருந்து விலகி உள்ளவர்களைக் காட்டுகிறது. Twitter, Facebook, Picasa, Flickr and Google Calendar ஆகியவற்றுடன் எளிதாக இணைப்பு கொள்ள Snaptu தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு லேட்டஸ்ட் ஸ்கோர், ராய்ட்டர்ஸ், பி.பி.சி., நியூ யார்க் டைம்ஸ்,யாஹூ மற்றும் பல தளங்களில் இருந்து அந்த நேரத்திய செய்திகளை அறியலாம். 


lankasritech

Leia mais...

Mar 19, 2010

விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க

புதிதாக ஒரு இயங்கு தளம் அல்லது ஒரு இயங்கு தளத்தின் புதிய பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை.
உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளி வந்த போது அதில் எக்ஸ்பீயிற்கு முன்னைய பதிப்புகளில் இயங்கிய ப்ரோக்ரம்களை இயக்க முடியாமல் போனது. அதன் பிறகு வெளிவந்த விஸ்டா பதிப்பிலும் அதே நிலைமைதான். இவ்வாறே இப்போது வெளி வந்துள்ள விண்டோஸ் செவனிலும் அதே நிலைமை தொடர்கிறது.

ஒரு இயங்கு தளத்தை மேம்படுத்தி அதன் புதிய பதிப்பை வெளியிடும்போது பழைய எப்லிகேசன்களும் இயங்கத் தக்கதாக அதற்கு ஒத்திசையும் வண்ணம் உருவாக்கவே முயற்சிக்கப்படும். இதனை பேக்வர்ட் கம்படிபிலிட்டி (Backward Compatibility) எனப்படும் இருந்தாலும் சில எப்லிகேசன்களை இவ்வாறு இயக்க முடிவதில்லை எனினும் இந்த சிக்கலுக்கு தீர்வாக மைக்ட்ரோஸொப்ட் நிறுவனம் தனது புதிய இயங்கு தளங்களில் பழைய ப்ரோக்ரம்களையும் இயக்கக் கூடிய வசதியை எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் விண்டொஸ் செவன் பதிப்புகளிலும் வழங்கி வருகிறது.

உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீயில் முறையாக இயங்கிய ஒரு ப்ரோக்ரம் விஸ்டாவிற்கு மாறிய பிறகு இயங்க மறுத்தால் அந்த குறிப்பிட்ட ப்ரோக்ரமுக்கு மட்டும் தேவையான செட்டிங்கை மாற்றி இயங்க வைக்கும் வசதி உள்ளது. அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக்குரிய .exe பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் compatibility டேபில் க்ளிக் செய்யுங்கள். அடுத்து Run this program in compatibility mode for என்பதைத் தெரிவு செய்யுங்கள். பின்னர் விண்டோஸின் உரிய பதிப்பைத் தெரிவு செய்து விட்டு ஓகே சொல்லுங்கள்.

அப்படியும் அது இயங்காது போனால் மேலும் சில தெரிவுகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக அதே டயலொக் பொக்ஸில் Run this program as an administrator என்பதைத் தெரிவு செய்து இயக்கிப் பாருங்கள்.

ப்ரோக்ரம்ஸ் லிஸ்டில் உள்ள Program Compatibility Wizard மூலமாகவும் ஒரு ப்ரோக்ரம் இயங்கு தளத்துடன் ஒத்திசைகிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்கலாம்.

சரி, இந்த .exe பைலை எங்கே போய்த் தேடுவது? எங்கும் போக வேண்டாம் . (மை) கம்பியூட்டர் விண்டோவில் C ட்ரைவில் ப்ரோக்ரம் பைல்ஸ் போல்டரைத் திறந்து பாருங்கள். நீங்கள் இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக் குரிய போல்டரும் அங்கு காணப்படும். அந்த போல்டரில் .exe பைலைக் காணலாம் 


lankasritech

Leia mais...

Mar 18, 2010

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

செல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டது. ஆனால் இதே செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள், உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து வருகிறது.

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (ஈடபிள்யூஜி) சமீபத்தில் ஒரு செல்போன் பட்டியலை வெளியிட்டது.

இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு பாதிக்கப்பட்டு மூளைப் புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு செல்போனும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவை வைத்து இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியேஷன் அளவை Specific Absorption Rate எனப்படும் SAR அலகைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.

அந்த லிஸ்ட்:

மோட்டாரோலா ட்ராய்ட் (Motorola Droid)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.50 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.49 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.50 W/kg

ஆப்பிள் ஐபோன் 3 ஜி – ஜிஎஸ்எம் 850 (Apple iPhone 3G S)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.19 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.63 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.52 W/kg

எச்டிசி நெக்ஸஸ் ஒன் (HTC Nexus One)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.39 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.87 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.39 W/kg

பிளாக்பெர்ரி – போல்ட் 9700 (Blackberry Bold 9700)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.55 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.55 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.77 W/kg

சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி (Samsung Instinct HD)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.16 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.16 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.71 W/kg

மோட்டாரோலா க்ளிக் (Motorola Cliq)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.10 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.69 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.10 W/kg

மோட்டாரோலா ப்ரட் (Motorola Brute i680)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.86 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.59 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.86 W/kg

பேண்டக் இம்பாக்ட் (Pantech Impact)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.92 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.72 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.92W/kg

எல்ஜி சாக்லேட் டச் (LG Chocolate Touch)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.46 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.46 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.79W/kg

சாம்ஸங் மிதிக் (Samsung Mythic)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.08 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.67 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.64W/kg
ஜிஎஸ் எம் 1900 மாடல் இது.

மோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே செல்போன் வாங்கும் வாங்கும் முன் அல்லது பயன்படுத்தும் முன் இந்த கதிர்வீச்சு சமாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ளவும்!

lankasritech

Leia mais...

Mar 17, 2010

மிகச்சிறந்த இலவச ஆன்டி-வைரஸ்

பணம் கொடுத்து 'ஆன்டி-வைரஸ்' வாங்க முடியாத வாடிக்கையாளர்கள் தங்களுடைய மென்பொருட்களை பயன்படுத்தியாவது பார்க்கட்டுமே என்ற எண்ணத்தில் வழங்கப்படும் 'ஆன்டி-வைரஸ்' தான்"இலவச ஆன்டி-வைரஸ்".

இந்தவகை மென்பொருட்களில் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டி-வைரஸில் இருப்பதை விட கொஞ்சம் குறைவான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்,சில வாடிக்கையாளர்கள் தங்கள் கணினுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் பணம் கொடுத்தே ஆன்டி-வைரஸை வாங்கிக்கொள்வார்கள்.

ஆனால் என்னதான் பணம் கொடுத்து நாம் கணினியில் ஆன்டி-வைரஸ் போட்டுக் கொண்டாலும் புதுபுது வைரஸ்களின் அட்டகாசம் இன்றைக்கும் தாங்க முடியாததாகத்தான் உள்ளது.

குறிப்பாக நாம் இணையதளங்களில் உலவும்போது கண்டிப்பாக வைரைஸ்களின் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.அவை நாம் இணையதளங்களிருந்து ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது வைரஸும் அதன் கூடவே சேர்ந்து வந்து நம் கணினியில் உட்கார்ந்து கொள்ளும்.

இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் (வந்து கொஞ்ச நாள் ஆன) இலவச Microsoft Security Essentials என்ற மென்பொருள்.

பல கணினி உபயோகிப்பாளர்கள் பயன்படுத்தி பார்த்த வரையில் மிக அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் ஆன்டிவைரசாக Microsoft Security Essentials மென்பொருள் செயல்படுகிறது.குறிப்பாக இணையதளங்களில் நாம் உலவும்போது இந்த ஆண்டிவைரஸ் அதிகபட்ச இணைய பாதுகாப்பை நமக்கு தருகிறது.இந்த இலவச ஆன்டிவைரஸ்' நாம் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டிவைரஸ் தரும் அதிகபட்ச பாதுகாப்பை ஒத்த பாதுகாப்பை நமது கணினுக்கும் வழங்குகிறது.

அது மட்டுமல்லாமல் அதுவே தானாக அடிக்கடி தன்னை புதுப்பித்துக் கொள்வதால் நமது கணினிக்கு நல்ல பாதுகாப்பும் கிடைக்கிறது,இந்த ஆன்டிவைரஸை பயன்படுத்திப் பார்த்த பலபேர் இதன் செயல்திறனை வெகுவாக பாராட்டுகிறார்கள்.


இணையத்தள முகவரி

Leia mais...

Mar 16, 2010

மூன்று சிம்களுடன் இன்டெக்ஸ் மொபைல்

சென்ற வாரம் இன்டெக்ஸ் நிறுவனம் மூன்று மற்றும் இரண்டு சிம்களுடன் இயங்கும் இரண்டு மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இரண்டு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம்.ஏ. என மூன்று சிம்களை இயக்கும் போனாக Intex IN 5030 வெளிவந்துள்ளது. ஒரு ஜி.எஸ்.எம். சிம் இயங்குகையில், சி.டி.எம்.ஏ. சிம் இணைப்பும் இயக்கத்தில் உள்ளது. இரண்டிலும் அழைப்புகள் வந்தால் மாற்றி மாற்றி பேசிக் கொள்ளும் வசதியை இந்த போன் தருகிறது.

ஜாவா இயக்கத்தில் செயல்படும் இந்த போனில் இரண்டு பேட்டரிகள் தரப்பட்டுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால், ஒன்று 4 மணி நேரமும், மற்றொன்று 120 மணி நேரமும் தாக்குப் பிடிக்கின்றன.

Intex IN 4420 மாடல் போன் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்குகிறது. இந்த போனில் வித்தியாசமான ஒரு வசதி உள்ளது. இதன் மூலம் இந்திய கரன்சியில் போலியான ரூபாய் நோட்டுக்களை கண்டறியலாம்.

நெட்வொர்க் இணைப்பில் இருக்கையில் போனை அழைப்பவர் அல்லது அழைக்கப் படுபவர் எந்த ஏரியாவில் உள்ளார் என்று அறியலாம். இரண்டு எல்.இ.டி. டார்ச் லைட் தரப்பட்டுள்ளது. வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, இந்திய திருவிழாக்களையும் விசேஷங்களையும் காட்டும் காலண்டர் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளன.

இதன் பேட்டரி தொடர்ந்து 3.5 மணி நேரம் பயன்படுத்தும் சக்தியைக் கொண்டு ள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 270 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது.

இரண்டு போன்களிலும் எப்.எம். ரேடியோ, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர், புளுடூத், பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைந்த செயலாக்கம், மோடம், வெப்காம் செயல்பாடு, பி.சி. சூட், ஜி.பி.ஆர்.எஸ்., வாப், மொபைல் ட்ரேக்கர், ஆட்டோ கால் ரெகார்டர், கரன்சி கன்வெர்டர், மெமரியை 4ஜிபி வரை அதிகமாக்கும் வசதி ஆகியவை உள்ளன.

lankasritech

Leia mais...

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் நமது உடலின் வெப்பநிலை கூடினாலோ, குறைந்தாலோ உடல் நோய்வாய்ப்படும். நமது இயக்கத்துக்கு ஏற்ப வெப்ப ஆற்றல் வெளிப்படும். மாறுபடவும் செய்யும்.
இப்படி உடல் இயக்கத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை சேகரித்து அந்த ஆற்றலைக் கொண்டு எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க ஒரு கருவி தயாரித்துள்ளது எம்.ஐ.டி. பல்கலைக்கழகம்.

நடப்பது, ஓடுவது என எந்த வேலையில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட அளவில் ஆற்றல் செலவாகிறது. அதில் ஒரு பகுதி வெப்ப ஆற்றலாக வெளியேறுகிறது. இந்த வெப்ப ஆற்றலையும், சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் உள்ள ஆற்றலையும் கிரகித்து மின்ஆற்றலாக சேமிக்கிறது இந்தக் கருவி. இதைக் கொண்டு 2 வாட் மின்சாரத்துக்கும் குறைவான பயன்பாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

செல்போன் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் கருவிகள் மிகக் குறைந்த மின் ஆற்றலில் இயங்கக்கூடியவை. எனவே இந்த கருவியில் சேமிக்கும் மின் ஆற்றலைக் கொண்டு இனி செல்போன்களை சார்ஜ் செய்ய முடியும். சார்ஜரை தேடிக் கொண்டோ, தூக்கிக் கொண்டோ திரிய வேண்டாம். அனைவரும் பயன்படுத்தலாம் இந்த லாபமான கருவியை.

lankasritech

Leia mais...

அதிவேக Opera பிரவுசர் வெளியீடு


விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதில் இதுதான் அதிவேக பிரவுசர் என்ற அடைமொழியுடன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது ஆப்பரா பிரவுசர் பதிப்பு 10.50.  என்ற ஆப்பராவின் தளத்தில் இதனை டவுண்லோட் செய்திடலாம். இதில் தரப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் மற்றும் கிராபிக்ஸ் லைப்ரரி இரண்டும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுமையானவையாகும்.
இதனைப் பயன்படுத்துபவர்கள், எந்த இணைய தளத்திற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதன் வடிவமைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் தற்போது மற்ற பிரவுசர்களில் அமைந்திருக்கும் பிரைவேட் பிரவுசிங் வசதியும் தரப்பட்டுள்ளது. வழக்கமான மெனு பாருக்குப் பதிலாக ரேடியோ பட்டன் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புள்ளியை அழுத்துவதன் மூலம், ஆப்பரா தரும் அனைத்து வசதிகளையும் பார்த்து அறியலாம்.
 புதிய தொழில் நுட்பம் முழுவதையும் இது சப்போர்ட் செய்வதால், கண்களைக் கவரும் வகையில் இணைய தளங்களை அமைப்பவர்கள், இந்த பிரவுசரில் அவை நன்றாகக் காட்டப்படும் என நம்பி அமைக்கலாம். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளின் ஏரோ கிளாஸ் இந்த பிரவுசரில் சப்போர்ட் செய்யப்படுகிறது.
lankasritech

Leia mais...

வீடியோ DVDகளை AutoPlay செய்ய

.சில சமயங்களில் நாம் வீடியோ டிவிடிகளை நமது கணினியின் DVD Drive இல் இட்டபிறகு அதுவாகவே ப்ளேயரை திறக்காமல் இருந்து விடுகிறது. My Computer அல்லது  Computer ஐ  திறந்து பார்க்கையில் VIDEO_TS மற்றும்  AUDIO_TS ஆகிய   கோப்புறைகள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. இந்நிலையில் நாம் ப்ளேயரை திறந்து பிறகு அந்த குறிப்பிட்ட வீடியோ கோப்பை திறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 
 

இது போன்ற வீடியோ டிவிடிகளை ஆட்டோ ப்ளே செய்ய என்ன செய்யலாம்?
My Computer ஐ திறந்து கொள்ளுங்கள். 

உங்களது DVD Drive ஐ வலது க்ளிக் செய்து Properties சென்று கொள்ளுங்கள். 

அங்கு AutoPlay டேபை க்ளிக் செய்யுங்கள்.

Dropdown மெனுவில் DVD Movie என்பதை தேர்வு செய்யுங்கள்.

Select an action to perform என்பதற்கு நேராக உள்ள Radio button ஐ க்ளிக் செய்யுங்கள்.

Play DVD movie using Windows Media Player என்பதை தேர்வு செய்து
OK button ஐ க்ளிக் செய்து விடுங்கள்.


அவ்வளவுதான்.



சூர்யா ௧ண்ணன்blogspot.com

Leia mais...

Mar 9, 2010

புதிய பாட்நெட் வைரஸ்


நெட்விட்னஸ் என்னும் இன்டர்நெட் ஆய்வு நிறுவனம் புதிய வைரஸ் ஒன்று வேகமாக நிறுவனங்கள் மற்றும் சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
“நீபர் பாட்நெட்“ என அழைக்கப்படும் இந்த வைரஸ் இந்த குறிப்பை எழுதும் நாள் வரை 2,500 நிறுவனங்களின் 75,000 கம்ப்யூட்டர்களிலும், சில சோஷியல் நெட்வொர்க் தளங்களில் அக்கவுண்ட் வைத்துள்ளவர்களின் கம்ப்யூட்டர்களிலும் பரவி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தான் பற்றிக் கொண்டுள்ள கம்ப்யூட்டர்களிலிருந்து பாஸ்வேர்ட், யூசர் நேம் உட்பட அனைத்து பெர்சனல் தகவல்களையும் திருடி, இதனைத் தயாரித்து அனுப்பிய ஹேக்கர்களின் கம்ப்யூட்டர்களுக்கு அனுப்பும். பாட்நெட் என்பது இந்த வைரஸ் பரவி உள்ள கம்ப்யூட்டர் நெட்வொர்க்கினைக் குறிப்பிடுகிறது. இந்த நெட்வொர்க்கை ஹேக்கர்கள் தள்ளி உள்ள ஓர் இடத்தில் தங்களின் மையக் கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

இந்த வைரஸ் பரவி வருவது வழக்கமான ஒரு சோதனையின் போது நெட்விட்னஸ் நிறுவனத்தால் கண்டறியப்பட்டது. வழக்கமான மால்வேர் பாதுகாப்பு வழிமுறைகள், சிக்னேச்சர் வரிகள் அடிப்படையிலான கண்டறிதல் ஆகியவை இந்த வைரஸிடம் செல்லுபடியாகாமல், கண்டறிய முடியாமல் உள்ளன.

Lankasritech

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo