கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jul 15, 2010

கூகிள் பரீட்சிக்கும் புதிய வசதி


நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கூகிள் கணக்குளை பாவிப்பவராயின் உங்களுக்கு இந்த செய்தி பஞ்சாமிர்தமாக இனிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரே ப்ரவுசரில்(browser) இருந்து கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட கூகிள் கணக்குகளை திறப்பதென்பது இதுவரை சாத்தியம் இல்லாமலே இருந்து வந்தது. அவ்வாறு ஒரே தருணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகிள் கணக்குகளை திறக்க வேண்டுமாயின் புதிய ப்ரவுசரை திறந்தே நமது அடுத்த கூகிள் கணக்கினை திறக்க வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் தற்போதைக்கு கிடைத்திருக்கும் செய்திப்படி கூகிள் பல்கணக்கு திட்டம் ஒன்றை பரீட்சிப்பதாகவும் அது Gmail, Google Calendar, Google Reader, Google Docs, Google Sites and Google Code, ஆகிய சேவைகளில் ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக செய்தியை இந்த முகவரிக்கு சென்று  பெற்றுக்கொள்ளவும்.

www.eseak.com

Leia mais...

Jul 14, 2010

ஐ-போன் 4ல் காணப்படும் குறைபாடு கண்டுபிடிப்பு

அப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய ஐ-போன் 4ல்(iphone 4) குறைபாடு இருப்பதாக தெரியவந்துள்ளது.இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட consumer union எனும் அமைப்பு தனது consumer report எனும் சஞ்சிகையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது என்னவென்றால் புதிய ஐ-போன் 4 ன் இடது பக்க கீழ் மூலையில் காணப்படும் ஒரு சிறிய இடைவெளியில்(antenna gap) நமது கைவிரல் தற்செயலாக தொடுமிடத்து எமக்கு வரும் தொலைபேசி அழைப்பில் தடங்கள் ஏற்படலாம் எனவும் சமிஞ்ஞை அளவு சடுதியாக மிகப்பெரியளவில் குறைவடைவதே இதற்கு காரணமாகும் என தெரிவித்துள்ளது.

இதற்கான தீரவையும் இந்த நிறுவனம் தர மறக்கவில்லை. ஐ-போனில்(iphone 4) காணப்படும் அந்த சிறிய அண்டென்னா இடைவெளியை ஒரு சிறிய duct tape துண்டினைக்கொண்டு மறைத்துவிடுவதன் மூலம் இந்த குறைபாட்டினை தீர்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Leia mais...

மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் புதிய வெளியீடு

மைக்ரோ சொஃப்ட்(microsoft) நிறுவனம் தனது புதிய உற்பத்தி தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. தனது விண்டோஸ் 7(windows) இயங்கு தளத்தை கொண்டு இயங்கும் tablet pc க்கள் இந்த வருடத்தில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளது. இது ஸ்மார்ட்(smart) சாதன பாவனையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பான அறிவிப்பை தனது வியாபார பங்காளர்களுடன் இடம்பெற்ற மகாநாட்டில் வெளியிட்டிருந்தது. இங்கு Hp, Asus, Dell, Samsung, Toshiba, and Sony போன்ற நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Apple நிறுவனத்தின் ipad வெளியாகி 80 நாட்களுக்குள் 3 மில்லியன் விற்றுத்தீர்ந்த நிலையில் இந்த அறிவிப்பானது மிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leia mais...

Jul 12, 2010

ஜிமெயிலை IE ல் பயன்படுத்தும் போது படங்கள் தெரியவில்லையா?

உலகின் முன்னணி மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் பாதுகாப்பான மின்னஞ்சல் சேவையின் அறிமுகப்படுத்தியிருந்தது. அதாவது அதன் ஜிமெயில் முகவரி https://mail.google.com/mail  என்று வரும். அதாவது Secured HTTP Connection. இதனால் தகவல் பரிமாற்றம் கூடுதல் பாதுகாப்பில் நடக்கும். பொதுவாக் இந்த https வகை தொடர்பு பண பரிமாற்றங்களுக்காகவும், தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்திற்காகவும் பயன்படுத்தப்படும்.

ஆனால் நீங்கள் ஜிமெயிலை IE8 உலாவியில் பார்ப்பதாக இருந்தால் https பயன்படுத்தினால் அதில் வரும் பிற படங்களை பாதுகாப்பில்லாதது என நினைத்து IE8 பயனாளருக்கு காட்டாது.

இதை சரிசெய்ய ஜிமெயில் முகவரி https:// என்று இருப்பின் அதை http:// என்று வருமாறு பார்த்துக்கொள்ளுங்கள்,

நிரந்தரமாக http:// என வைக்க ஜிமெயில் அமைவுகளில் (settings) சென்று Browser connection என்ற தலைப்பில் இருக்கும்

Always use https
Don't always use https

என்பதில் Don't always use https என்பதை தெரிவு செய்து கொள்ளவும்.

Leia mais...

Jul 11, 2010

மிகவும் அறிந்து கொள்ள வேண்டிய சோஷியல் நெட்வார்க்

கற்றுத்தேர்ந்தவர்களோடு நாம் பழகினால், நாமும் பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். மேலும் நாம் கற்றதையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம்.

இதற்கு இன்டர்நெட்டில் எங்கு செல்வது? நமக்கென ஒரு வலைமனை (Blog) அமைத்து வைத்தாலும், அனைவரும் வந்து படிப்பார்கள். சரியான கருத்துரைகளை (Comments) பதிவார்கள் என்பது என்ன உறுதி? இந்த குறையைப் போக்கும் வகையில், கற்றவர்கள் கலந்துரையாடி, தங்களுக்கு தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ள இணையத்தில் ஒரு தளம் உள்ளது. அதன் முகவரி www.wepapers.com. இது ஒரு கல்வியாளர்களின் சோஷியல் நெட்வொர்க் என்று சொல்லலாம்.

இதில், பெரும்பாலும் பல்கலை மற்றும் கல்லுõரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் இடம்பெறுகின்றனர். இதில் கலந்து கொள்வதன் மூலம் அதில் உள்ள அறிவு சார்ந்த கட்டுரைகளைப் படிக்கலாம். நமக்கு தெரிந்ததை இதில் பதிப்பிக்கலாம். ஆய்வுச் சுருக்கங்கள் (abstracts)கட்டுரைகள், உரைக்குறிப்புகள், ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவை இங்கு பெருமளவில் இடம்பெற்றுள்ளன.

இவற்றை வகைப்படுத்தி பட்டியலிட்டுள்ளனர். 40 வகைகளில் இவை கிடைக்கின்றன. உலகின் அனைத்து பொருட்களும் இதில் அடங்கும். இந்த கட்டுரைகள் பிளாஷ் தொழில்நுட்பத்தில் காட்டப்படுகின்றன. (யுட்யூப் மற்றும் பிற வீடியோ கிளிப்புகளைக் காட்டுவது போல) கட்டுரைகளில் சுருக்கம் அல்லது ஒரு சிறிய முன்னோட்டத்தினைப் பார்த்து, பின் அவற்றை டவுண்லோட் செய்திட வேண்டுமா என்பதனை முடிவு செய்து டவுண்லோட் செய்திடலாம்.

இந்த தளத்தின் இடது பக்கம் உள்ள பிரிவில், நாங்கள் விரும்பும் கட்டுரைகள் (Papers We Like) என்று ஒரு பட்டியலில், அப்போது பதியப்பட்ட சிறந்த ஏழு கட்டுரைகள் காட்டப்படுகின்றன. நீங்களாக ஒரு பொருள் குறித்து கட்டுரை ஒன்றை தேட வேண்டும் எனில், நடுப்பக்கத்திற்குச் செல்லலாம். இங்கு உள்ள Search கட்டத்தில் பொருள் குறித்த சொல்லை டைப் செய்து "எனி (any)' என்பதில் கிளிக் செய்தால் உடன் கட்டுரைகளின் பட்டியல் கிடைக்கும்.

நிச்சயமாக, நீங்கள் அதிசயப்படத்தக்க வகையில் தேடுவதற்கு கொடுத்த பொருள் குறித்த பல்வேறு கோணத்தில் கட்டுரைகளின் தலைப்பைக் காணலாம். நீங்கள் உங்கள் கட்டுரையை இதில் பதிய வேண்டுமா? இதில் பதிவு என்பது மிக மிக எளிமையானது. பெயர், கல்லூரி அல்லது பல்கலை முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் கொடுத்து Capcha சோதனையை முடித்தால் போதும். பின்னர் sign up செய்து உள்ளே நுழையலாம். நீங்கள் ஒரு பொருள் கற்றுக்கொடுக்க எண்ணினால், கோர்ஸ் லீடர் என்ற பிரிவின் மூலம் செல்லலாம். அல்லது உங்கள் கட்டுரையை உங்கள் மாணவர்கள் அல்லது மற்ற ஆய்வாளர்களுடன் இணைந்து குழுவாக அமைத்திடலாம்.

கட்டுரைகளை அப்லோட் செய்வதும் மிக எளிதாக உள்ளது. அப்லோட் செய்த பின்னர், அந்த கட்டுரை குறித்த சுருக்க தகவல்களை நீங்கள் அதற்கான படிவத்தில் தர வேண்டும். கற்கும் மாணவர்களுக்கும், கற்றுக்கொடுக்க எண்ணும் பேராசிரியர்களுக்கும், ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஒர் அருமையான இணையதளம் இது. இஸ்ரேல் நாட்டின் ஜெருசலம் நகரைச் சேர்ந்த Hanan Weiskopf மற்றும் Ehud Zamir என்ற இரு மாணவர்களால் இந்த தளம் தொடங்கப்பட்டு நடத்தப்படுகிறது. பல நாடுகளில் இருந்து இதற்கான நிதி உதவியாக வழங்கப்படுகிறது.

இந்த தளத்தின் முகவரி

Leia mais...

Jul 9, 2010

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்

கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை நடத்தினர்.அதில், கம்ப்யூட்டர், லேப்-டாப், ஐபாட் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு, நாளடைவில், தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிய வந்தது.கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள், மனித மூளையின் வழக்கமான செயல்பாடுகளை பாதிப்பதும் தெரிய வந்தது.மனித மூளை, காலை சூரிய வெளிச்சம் வந்தவுடன் இயங்க ஆரம்பித்து இரவு சூரிய ஒளி மங்கியவுடன் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும் வகையில் செயல்படுகிறது.இதை, மெலட்டோனின் என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது.

இது அறிவியல் விந்தையாக கருதப்படுகிறது.ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல நிற வெளிச்சம், மெலட்டோனின் ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து, தூக்கத்தை கெடுப்பதாக தெரிவிக்கின்றனர். மனிதனின் கண்கள், நீல நிறத்தை பகல் பொழுதாக எடுத்துக் கொள்ளும் தகவமைப்பை பெற்றுள்ளது என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.இரவில் நிம்மதியாக தூங்க, நல்ல புத்தகங்களை படிப்பது சிறந்த வழி. தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்க்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை கொண்டு மெலட்டோனின் ஹார்மோன் இரவில் தூக்கம் வருவதை தவிர்த்து, விழிப்புடன் இருக்க, மூளையை தூண்டும். இதனால்,  தூக்கம் வருவதில் நாளடைவில் சிக்கல் எழும் என, நார்த்வெஸ்ட் பல்கலைக் கழக மூளை அறிவியல் துறை பேராசிரியர் பில்லீஸ் சீ தெரிவித்துள்ளார்.

Leia mais...

Jul 8, 2010

கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்

கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை?

1. Boot Sector Viruses:

அதாவது, பூட் செக்டார் வைரஸ் என்பது, நமது கணினியின் BIOS என சொல்லிப்படும் "அடிப்படை உள்ளீட்டு அல்லது வெளியீட்டு முறை" எனும் சிஸ்டம் மீது தான் தாக்குகின்றன. பொதுவாக வைரஸ் வந்ததை உண்ர்ந்தால் உடனே இயங்குதள நிறுவி குறுந்தகட்டை தேடி எடுத்து, மறு நிறுவல் செய்து விடுவோம். அப்படி எல்லாம் செய்தால் இந்த பூட் செக்டார் வைரஸை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. நீங்கள் புதியதாக ஒரு HDD வாங்கி வந்து வைத்தாலும் சரி, அதுவும் பாதிக்கப்படும். காரணம் இது தாக்குவது பாதிப்பது எல்லாம் MBR (MBR என்றால் Master Boot Record ஆகும். இது இயங்குதளத்தை கண்டுபிடித்து இயங்க வகை செய்யும்) எனும் தகவலைச் சேமித்துவைத்திருக்கும் BIOS-இன் பகுதியைத் தான். அதனால் BIOS ரெகவரி டிஸ்க் ஒன்று உருவாக்கி BIOS-ஐ மீள்-நிறுவல் செய்து, HDD-இனையும் அழித்து, இயங்குதளம் மீள்-நிறுவல் செய்து தான் கணினியைக் காப்பாற்ற முடியும்.

2. கூடாத நிரல் அல்லது கோப்புகள்:

இந்த வகை வைரஸ்கள், நிரல்களாகவோ அல்லது கோப்பாகவோ ஹார்ட் டிஸ்கில் இயங்குதளத்தின் பார்ட்டீசனில் உட்கார்ந்துக் கொள்ளும். இவை, இயங்குதளம் தொடங்கும் போதே, தானும் தொடங்கி தன் கூடாத செய்கையினால் கணினியை பாதிப்புக்குள்ளாக்கும். அந்த நிரல்/கோப்பு எதுவென்று தெரிந்தாலே, Task Manager கொண்டு நிறுத்திவிடலாம். பின்னர், அழித்தும் விடலாம்.

3. Stealthy Virus:

இவையும் இரண்டாவதாக சொல்லப்பட்ட வைரஸ் போலத் தான். ஆனால், இந்த வகை வைரஸ்கள் தனது அடையாளத்தைக் காட்டிக் கொள்வதே இல்லை. இதனால், இதனைக் கண்டுபிடித்து முடக்க/அழிக்க மிகவும் கடினமானதும் கூட. Anti-Virus இருக்கிறதே என தப்புக் கணக்குப் போடாதீர். வேட்டியாடும் Anti-Virus-களிடம் தான் இதன் விளையாட்டே. நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்யத் தொடங்கியவுடன் தனது கோப்பிற்கு, ஒரு நல்ல நிரல் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டுத் தானே தற்காலிகமாக முடங்கிக்கொள்ளும். இதனால், Anti-virus-களிடம் இது அகப்படாது தப்பித்துவிடும்.

4. MultiPartite:

இந்த வகை வைரஸ்கள் மேலே சொல்லப்பட்ட மூன்று வகையிலும் சார்ந்தவை. இதனால், இது பாதிக்காத இடமே கணினியில் இருக்காது. இவ்வாறான வைரஸ்கள் பெரும்பாலும் தாக்குவது குறைவாக இருந்தாலும், தாக்கப்பட்டால் பெரும்பாதிப்பு உண்டாகும்.

5. Polymorphic:

பாலிமார்பிக் வைரஸ்கள், தங்களைத் தாங்களே திருத்தி எழுதிக்கொள்ளும் வல்லமைக் கொண்டவை. இதனால் வைரஸ் ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு ஸ்பைவேராகவும், ஸ்பைவேருக்கு ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு வைரஸாகவும் மாற்றிக் கொண்டு பாதிப்பை உண்டாக்கிய வன்னம் இருக்கும்.

6. Macro

மேக்ரோ என்பது, சொல் திருத்திகளில் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும் ஒரு பணியை தானே செய்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் நிரலாக்கம் தான். அதையே தீங்கிழைக்கும் ஒரு பணியை இயக்க நிரலாக்கப் படுவது தான் மேக்ரோ வகை வைரஸ்கள். பெரும்பாலும், நமது மின்னஞ்சல் முகவரியில் இருந்து எல்லோருக்கும் மெயில் அனுப்புவது போன்ற சிறு சிறு தொந்தரவு தரும்.

- Vino's cafe

Leia mais...

Jul 5, 2010

தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக இலங்கை சாதனை!

உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது .

இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் பதிந்து கொள்ள இதன் மூலம் எமக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இதற்கான அனுமதியை 'அய்கன்" (ICANN) வழங்கியதை அடுத்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று 28 ஆம் திகதி கல்கிசை ஹோட்டலில் இடம்பெற்றது.

'அய்கன்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers நிறுவனம் இணையத்தள முகவரிகளைப் பதிவுசெய்து பாதுகாக்கும் இலாபகரமற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மரினா டெல் ரே (Marina Del Rey) நகரத்தை தலைமைப் பீடமாக கொண்ட நிறுவனமாகும்.

'இலங்கை" மற்றும் 'லங்கா" முதலான இணையத்தள முகவரியை பெற்றுக் கொள்வதாயின் www.nic.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.

இந் நடைமுறையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும் இந் நடைமுறையை தற்போது தேசியளவிலேயே பாவிக்க முடியும் எனவும், இன்னும் சில காலத்திற்கு பிறகு சர்வதேச ரீதியில் பாவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஏற்கனவே இணையத்தள முகவரியைப் பதிந்து கொண்டவர்கள் புதிய முறையினை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட புதிய நடைமுறையால் தமது சொந்த மொழியில் இலகுவாக இணையத்தளத்தை எவரும் பயன்படுத்த முடியும்.

உதாரணமாக வீரகேசரி இணையத்தளத்தை பார்வையிடுவதாயின் http://தளம்.வீரகேசரி.இலங்கை என்று தட்டச்சு செய்யலாம்.

இதன் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண எமது வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவிக்கையில்,

"எமது சொந்த மொழியில் இணையத்தள முகவரியை முதன் முதலாக ஆசியாவில் மட்டுமல்ல, முழு உலகிலும் அறிமுகப்படுத்திய பெருமை எமக்கு உண்டு. தாய்மொழியில் இணையத்தள முகவரியை 'இலங்கை' என்று தமிழிலும், 'லங்கா' என்று சிங்களத்திலும், நாம் அறிமுகபப்டுத்தியுள்ளோம்.

அதுவும் முதன் முறையாக தமிழில் இணையத்தள முகவரி உருவாகியுள்ளது இலங்கையில் தான் என்பதும் பெருமைக்குரியதே. இதனூடாக தமிழ் - சிங்கள் மக்களிடையே சமத்துவ நிலைமை உருவாக்கம் பெற்றுள்ளது" என்றார்.

அய்கன் (ICANN) பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான ராம் மோகன் கருத்து தெரிவிக்கும் போது,

"ஆசியாவில் தமிழில் தனது நாட்டின் பெயருடன், உலக இணையத்தள முகவரியை முதன் முதலாக அறிமுகப்படுத்திய ஒரே நாடு இலங்கை தான். இது ஒரு மாபெரும் சாதனை. இதனையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

முதன் முறையாக தாய்மொழியில் இணையத்தளத்தினூடாக, மின்னஞ்சலில் பயணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் அடைந்து கொள்ள இது நமக்கு வாய்ப்பளிக்கின்றது.

இன்று மடி கணினி (லெப்டொப்) யைவிடவும் கையடக்கத் தொலைபேசி மூலமான இணையத்தள பாவனையாளர்கள் அநேகர் உள்ளனர். எனவே எதிர்காலத்தில் 'லங்கா' மற்றும் 'இலங்கை' ஆகிய இணைய முகவரிகள் பிரபல்யம் அடையும் என்பதில் ஐயம் இல்லை" என்றார்.

Leia mais...

Jul 4, 2010

விண்டோஸ் 7 : உலகில் அதிகமாக பயன்படுத்தும் இயங்குதளம்?!

விண்டோஸ் 7 இயங்குதளம் (Operating System) கடந்த அக்டோபர் 22 2009 அன்று வெளியிடப்பட்டது. விண்டோஸ் 7 வெளியிடப்பட்ட 6 மாதங்களில் உலகத்தில் 10 ல் ஒரு கணினியில் பயன்படுத்தும் இயங்குதளமாக மாறியுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இயங்குதள வரலாற்றில், விண்டோஸ் 7 தான் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்ட மற்றும் செய்யபட போகும் இயங்குதளமாக இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் கருதுகிறது.

மைக்ரோசாப்ட் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில், $14.5 bn மார்ச் 31 வரையுள்ள காலாண்டிற்கான வருவாயாக தெரிவித்திருக்கிறது. மேலும் அந்நிறுவன தலைமை கணக்கு அலுவலர் (CFO) Peter Klein “continues to be a growth engine” என்றும் கூறியுள்ளார்.

பெரும்பாலான முன்னணி கணினி நிறுவனங்கள் விண்டோஸ் 7 ஐ தங்கள் கணினிகளுக்கு இயங்கு தளமாக்க (OS) திட்டமிட்டுள்ளனர்.

விண்டோஸ் 7 இதற்கு முந்தய version விஸ்டாவை விட மிகவும் எளிதாக மற்றும் வேகமாக இயங்கும் தளமாக (OS) இருப்பதே இதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.

Leia mais...

Jul 3, 2010

கணனிக்கு தேவையான அடிப்படை மென்பொருட்களின் பொதி

கணணியை புதியதாக வாங்குபவர்கள் அல்லது கணனியில் புதியதொரு இயங்குதளத்தை (Operating system) நிறுவினால் அததற்கு சில அடிப்படையான மிக மென்பொருட்கள் தேவைப்பாடு அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக தேடி எடுத்து நிறுவுவது என்பது மிக ஒரு கடினமான விடயம். அப்படியானவற்றை ஒவ்வொன்றாக எடுத்து நிறுவுவது என்பது நேரம் விரயமான செயல். அப்படியான மென்பொருட்களை ஒரே மென்பொருளில் எடுத்து நிறுவினால் மிக இலகுவாக இருக்கும் அத்தகைய ஒரு மென்பொருள் பொதி பற்றிய பதிவுதான் இது.

Ninite என்னும் மென்பொருளானது எல்லாவற்றையும் ஒரே குடையின் கீழ் பெறக்கூடியதான ஒரு மென்பொருளாகும். இந்த மென்பொருளானது இலவசமான ஒரு மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். இந்த மென்பொருளில் இணைய உலாவிகள் (Web Browsers), தகவல் பரிமாற்ற ஊடகங்கள் (Messaging), காணொளி, ஒலி ஊடகங்கள் (Media Players) , புகைப்பட வடிவமைப்பு மென்பொருட்கள் (Imaging), ஆவணமென்பொருட்கள் (Documents), கணணி பாதுகாப்பு(Security), போன்ற இன்னும் பல மென்பொருட்களை உள்ளடக்கியதாக இந்த மென்பொருள் பொதி காணப்படுகின்றது. மிகவும் பயனுள்ள இலவச மென்பொருள் என்பது மிகவும் சிறப்பான விடயமாகும்.

தரவிறக்க இணையச்சுட்டி

IT Park

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo