கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jul 27, 2010

பேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை

பேஸ்புக்கில் புகுந்து விளையாடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் பற்றிய அதிர்ச்சித் தகவல்களும் சம அளவில் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.

பலர் தங்கள் பணிகளை மறந்து கூட பேஸ்புக்கில் மூழ்கி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மும்பையில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி கற்பிழந்து கண்ணீருடன் தவித்து நிற்கிறாள்.

மும்பை கிழக்கு செம்பூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி, சும்மா பேஸ்புக்கில் நட்பு வளர்த்துள்ளார். எதிரே வலை விரித்த இளைஞனுக்கோ எண்ணம் வேறாக இருந்தது. தினமும் பேஸ்புக்கில் சாட் செய்த இருவரும், ஒரு நாள் பாட விஷயமாக கருத்துக்களை பறிமாறிக்கொள்ள நேரில் சந்தித்தனர். அதன் விளைவு, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அந்த இளைஞன், இளம் பெண்ணை கற்பழித்தான்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்றோரும், உற்றாரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்டெர்நெட் வசதிகளை தவறாக பயன்படுத்துவதால் இன்றைய இளசுகள் இடம் தெரியாமல் போகிறார்கள்.

Leia mais...

Jul 26, 2010

ஈமெயில் accountகளை hackerகளிடமிருந்து பாதுகாக்க..

ஈமெயில் முடக்கப்படும் போது தொடர்புகள் மட்டும் துண்டிக்கப்படுவதில்லை, பலரும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் (gmail account ஐ புகைப்படங்களை back up செய்யவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் இங்கு picasaவும் முடக்கப்படும்) பேங்க் மற்றும் வணிக தகவல்களையும் இழக்கிறார்கள். இவற்றை தவிர்க்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

முதலில் personal settings இல் password recovery option இல் alternative email address மற்றும் password reset code ஐ பெற மொபைல் நெம்பரையும் கொடுங்கள். ஆனாலும் hackerகள் ஈமெயிலுக்கான password ஐ பெற்ற உடனேயே இத்தகவல்களையும் மாற்றிவிட முடியும் என்றாலும் கொள்ளையடிக்க போன இடத்தில் காது கேட்க்காததால் முகமூடியை கழற்றிவிட்டு பேசி மாட்டிக்கொண்டதை போல வாய்ப்புகள் கிடைக்கலாம். அப்படியிருந்தால் இங்கு password reset செய்ய முயலலாம். அப்படி அத்தகவல்களும் மாற்றப்பட்டிருந்தாலும், இந்தப் பக்கத்தில் உள்ள form ஐ நிறைவு செய்து submit செய்வதன் மூலம் உங்கள் account இல் unusual activities இருந்தால், hackerகள் பயன்படுத்த இயலாதவாறு முடக்கப்படும். முடிந்தவரை அப்பக்கத்தில் சரியான தகவல்களை அளிப்பதன் மூலம் உங்கள் account ஐ பெற வாய்ப்புகள் உண்டு. தகவல்கள் முழுமையாக தெரியாவிட்டாலும் முடிந்தவரை நெருக்கமான தகவல்களை அளிக்கலாம்.

நம் passwordகள் keylogger, spywareகள் மூலமே திருடப்படுவதால் நல்ல அன்டி வைரஸ் மற்றும் அன்டி ஸ்பைவேர்களை அப்டேட் செய்து பயன்படுத்துவதன் மூலம் password திருட்டை ஓரளவிற்கு தடுக்கலாம். மேலும் நாம் நீண்ட காலம் பயன்படித்திவரும் மெயில் முகவரிகள் திடீரென நம் கம்ப்யூட்டர்கள் infect ஆவதால் அதன் மூலமே passwordகள் திருடப்படுகின்றன. பெரும்பாலும் இவ்வாறு இடையிலேயே திருடப்படுவதாலும், security questionக்கான பதிலை நாம் பெரும்பாலும் மீண்டும் மீண்டும் உள்ளீடு செய்ய தேவை இல்லை என்பதாலும் hackerகளுக்கு security questionக்கான பதில் தெரிய வாய்ப்புகள் இல்லை. password தெரிந்தால் security question ஐ மாற்றிக்கொள்ளலாம் என்றாலும் ஏற்க்கனவே இருக்கும் questionக்கு பதில் காண்பிக்கப்படாது. எனவே இங்கு நாம் password ஐ மாற்றும்போது பழைய password ஐயும் உள்ளிட்டு பின் புது password மாற்றுவது போல security questioin ஐயும் மாற்ற ஏற்க்கனவே இருக்கும் questionக்கான பதிலையும் உள்ளீடு செய்ய வேண்டும் என்பது போல் இருந்தால் hackerகளுக்கு இந்த பதிலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவற்றை மாற்ற இயலாமல் போகும். இதனால் நாம் password ஐ reset செய்ய மாற்றப்படாத securty questionக்கான பதிலை நம்மால் உள்ளீடு செய்து பெற முடியும்.

ஆனால் security question ஐ மாற்ற அதற்க்கான பதிலை உள்ளிட வேண்டும் என்ற வசதி தற்போது gmailஇல் இல்லை. ஆனால் gmailஇல் புது வசதிகளை சேர்க்க நாம் புது புது வசதிகளை suggest செய்ய இயலும். இதற்கான பக்கத்தில் பிரிவுவாரியாக உள்ள list இல் உள்ளவற்றையும் suggest செய்யலாம். வேறு ஐடியாக்கள் நம்மிடமிருந்தால் I have another idea எனும் பகுதியில் நாம் இந்த வசதியை suggest செய்யலாம். அதிகமானவர்கள் இதை suggest செய்வதன் மூலம் இவ்வசதி நமக்கு விரைவாக கிடைக்கலாம். எனவே ஜிமெயிலுக்கான் புது வசதியாக இதை முடிந்தவரை அனைவரும் suggest செய்யலாம். இதன் மூலம் பெரும் அளவிலான ஈமெயில் திருட்டுக்களை தவிர்க்க முடியும். I have  another idea பகுதியில் இதை நீங்கள் suggest செய்யலாம்.

gmailஇல் suggest செய்ய

வாசு

Leia mais...

Jul 24, 2010

35 டொலரில் ஒரு கணினி :இந்தியா புரட்சி

அனைவருக்கும் கணினி எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலகின் மிகவும் மலிவான கணினியைத் தாம் தயாரித்து வருவதாக இந்திய ஊடகத் தகவல் நிலையம் தெரிவிக்கின்றது.

இதன் விலை வெறும் 35 டொலர் மட்டுமே எனவும் மாணவர் நலன் கருதி இவ்விலை 20 டொலர் முதல் 10 டொலர் வரை குறையலாமெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கணினியானது தொடு திரையுடன் கூடியதாகக் காணப்படுமெனவும் இதனுள் பல மென்பொருட்கள் மற்றும் வசதிகள் உள்ளடங்கியிருக்குமெனவும் வெப் பிரவுசர், பிடிஎப் ரீடர், மீடியா பிளேயர், வீடியோ கொன்பிரன்ஸ் மற்றும் புகைப் படமெடுக்கும் வசதி என்பன இதில் முக்கியமாக உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இக்கணினி 2011ஆம் ஆண்டளவில் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் முக்கிய நோக்கம் இந்திய கல்லூரி மாணவருக்கிடையில் பாடவிதான ரீதியில் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதாகும்.

2,127 டொலர் நாநோ கார், 2000 டொலர் திறந்த இதய சத்திர சிகிச்சை மற்றும் 16 டொலர் நீர் சுத்தப்படுத்தும் கருவி போன்ற மலிவான இந்திய உற்பத்தி வரிசையில் இதுவும் இந்திய வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துமென அவதானிகள் கருத்து தெரிவிகின்றனர்.

Leia mais...

Jul 23, 2010

பயர்பாக்ஸ் ஸ்பெல் செக்கர்

அநேகமாக அனைத்து டெக்ஸ்ட் எடிட்டிங் புரோகிராம்களிலும், ஆங்கில எழுத்துப் பிழைகளைத் திருத்த ஸ்பெல் செக்கர் தரப்படுகிறது. இணையத்திலும் நாம் அதிகமான அளவில் டெக்ஸ்ட் அமைக்கிறோம்.

பல படிவங்களில் நம் குறிப்புகளைத் தர வேண்டியுள்ளது; ப்ளாக்குகள் என்னும் வலைமனைகளை அமைக் கிறோம்; போரம்கள் எனப்படும் மன்றங்களில் நிறைய எழுதுகிறோம். இவற்றில் எழுதுகையிலும் நமக்கு ஒரு ஸ்பெல் செக்கர் தேவைப்படுகிறது.

அப்படியானால், பிரவுசரிலும் ஒரு ஸ்பெல் செக்கர் வேண்டுமே? இருக்கிறதா என்றால், அதிசயப்படத்தக்க வகையில் பயர்பாக்ஸ் பிரவுசர் மட்டுமே இந்த வசதியைக் கொண்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8க்கு இன்னும் முழுமையான ஸ்பெல் செக்கர் இல்லை. விரைவில் வர இருப்பதாகத் தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

பயர்பாக்ஸ் பிரவுசரில் எப்படி ஸ்பெல் செக்கரை இயக்குவது எனப் பார்க்கலாம். வழக்கமாக, பயர்பாக்ஸ் பிரவுசரை இன்ஸ்டால் செய்திடுகையிலேயே, இந்த வசதியும் இயக்கப்படுகிறது. ஏதேனும் செட்டிங்ஸ் மாற்றங்களினால், ஸ்பெல் செக்கர் இயங்கவில்லை என்றால், கீழ்க்காணும் செட்டிங்ஸ் அமைப்பினை மேற்கொள்ளவும்.

முதலில் Tools>Options>Advanced எனச் செல்லவும். கிடைக்கும் டேப்களில் “General”என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Check my spelling as I type என்ற வரிக்கு நேராக உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இல்லை எனில் அங்கு உள்ள கட்டத்தில் கிளிக் செய்து ஏற்படுத்தவும்.

பின்னர் ஓகே கிளிக் செய்து டூல்ஸ் மெனுவினை மூடிவிட்டு, ஏதேனும் டெக்ஸ்ட் அமைத்துச் சோதனை செய்து பார்த்தால், ஸ்பெல் செக்கர் அமைக்கப்பட்டிருப்பது தெரியவரும்.

Leia mais...

Jul 22, 2010

500 மில்லியன் இலக்கினை எட்டும் பேஸ்புக்

பிரபல சமூகவலைப்பின்னல் தளமான பேஸ்புக் 500 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கினை அடையவுள்ளதாகவும் அவ்வறிவிப்பை பெரும்பாலும் இந்த வாரம் மேற்கொள்ளுமெனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத் தொகையானது உலக சனத்தொகையின் 8% வீதமாகும்.

இம் மைல்கல்லை கொண்டாடும் வகையில் " பேஸ்புக் கதைகள் " எனும் விசேட கதைத் தொகுப்பையும் அவ் வலையமைப்பு வெளியிடவுள்ளது. மேற்படி தொகுப்பானது பாவனையாளர்களின் வாழ்க்கையை பேஸ்புக் எவ்வாறு மாற்றியுள்ளது என்பது தொடர்பிலான விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

அனைத்து பாவனையாளர்களும் தங்கள் கதைகளை சமர்ப்பிக்கமுடியும். பாவனையாளர்களால் விரும்பப்படும் அதிகமான கதைகள் இத்தொகுப்பினுள் உள்ளடக்கப்படும். பேஸ்புக் தனது வலையமைப்பினை 150 மில்லியன் பேர் கையடக்க தொலைபேசிகள் மூலம் உபயோகிப்பதாக சமீபத்தில்அறிவித்திருந்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பேஸ்புக் வலையமைப்பின் சந்தைப்படுதல் இயக்குனர், இது தாம் ஏற்கனவே எதிர்பார்த்தவொன்றெனவும் , இதை வேறு வேறுவிதமாக கொண்டாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

பேஸ்புக் சமூகவலைப்பின்னல் தளமானது 2004ம் ஆண்டு மார்க் ஸுக்கர்பேர்க் என்பவரினால் அவரது சக மாணவர்களான எடுயுரடொ சவெரின் , டஷ்டின் மொஸ்கொவிட்ஷ் மற்றும் கிரிஷ் ஹக்ஷ் ஆகியோரின் உதவியுடன் உருவாக்கப்பட்டதாகும்.

Leia mais...

Jul 21, 2010

ஈமெயில்களை எஸ்.எம்.எஸ் களாகப் பெறுவது எப்படி?

ஈமெயில்கள் நம் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக ஆகிவிட்டன. மொபைல் மூலமே இப்போதெல்லாம் மெயில்களை கையாளுகிறார்கள். blackberry மொபைல்கள் இதற்காகவே பிரபலம் அடைந்திருக்கின்றன. ஆனால் இவற்றிற்கு செலவு அதிகம். மேலும் பலரும் மெயில்களை அலுவலக கணினி மூலமாகவும், இன்டர்நெட் மையங்கள் மூலமாகவுமே பார்க்கிறார்கள். நாம் கணிப்பொறியிலிருந்து தொலைவில் இருக்கும் போது மெயில் வந்திருக்கிறதாவென எப்படி அறிவது?

way2sms தளத்தில் இந்த வசதி இருந்தாலும் mail alertகளை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் activate செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எஸ்.எம்.எஸ் களை பெற இயலாது. இவற்றை நிரந்திரமாக மீண்டும், மீண்டும் activate செய்யாமல் பெறுவது எப்படி? இதற்க்கு windows live தளம் உதவுகின்றது.
login.live.com பக்கத்திற்கு சென்று windows live id மூலம் லாகின் செய்யுங்கள், அக்கௌன்ட் இல்லையென்றால் sign up செய்து உள்நுழையுங்கள், பின்னர் device பகுதியில் add phone கிளிக் செய்து உங்கள் மொபைல் நம்பர் ஐ உள்ளீடு செய்யுங்கள். இப்பொழுது உங்கள் மொபைலுக்கு verification code அனுப்பப்படும். code ஐ உள்ளிட்டு verify செய்துக்கொள்ளுங்கள். இனி இந்த முகவரிக்கு வரும் மெயில்கள் வந்தால் subject உடன் உங்களுக்கு sms அனுப்பப்படும். நீங்கள் default ஆக வேறு ஈமெயில் அட்ரஸ்களை பயன்படுத்துபவராக இருந்தால் அந்த முகவரியிலிருந்து windows live id முகவரிக்கு மெயில்களை forward செய்து கொள்ளுங்கள் இதன் மூலம் உங்கள் தற்போதைய முகவரிக்கு வரும் மெயில்களையும் sms மூலம் பெறமுடியும். gmail userகள் மெயிலை forward செய்ய settings சென்று Forwarding and POP/IMAP பகுதியில் Forward a copy of incoming mail to இல் ரேடியோ பட்டனை கிளிக் செய்து windows live id ஐ இடவும். இங்கும் உங்கள் மெயிலுக்கு verification code அனுப்பப்படும். அதனை verify செய்து விட்டால் இனி உங்கள் gmail மெயில்களுக்கும் sms அனுப்பப்படும்.

Vasu

Leia mais...

Jul 20, 2010

உங்கள் தகவலை ரகசியமாய் வைக்க QR Code தொழில்நுட்பம்

நம் தகவல்களை QR தொழில்நுட்பத்தின் வழியாக Encode செய்யலாம். QR என்பதின் விரிவாக்கம் Quick Response ஆகும். ஜப்பானிய தொழில்நுட்பமான இது உலகெங்கும் இன்று நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. Bar Code நாம் அனைவரும் அறிந்ததே. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியே இந்த QR Code ஆகும். இதன் சிறப்பு என்னவென்றால் உங்களுடைய தகவலை QR Code ஆக Encode செய்தவுடன் அந்த படத்தை நீங்கள் எங்கு எதில் வேண்டுமானாலும் அச்சடித்து வைத்துக் கொள்ளலாம்.

அந்த படத்தை scan செய்து Decode செய்தால் அதில் உள்ள தகவல்களை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதில் நீங்கள் உங்கள் விலாசம், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் அல்லது ஐந்து வரி உள்ள ஒரு தகவல் என எந்த தகவலை வேண்டுமானாலும் நீங்கள் Encode செய்து கொள்ளலாம். ஏன் நம் தாய் மொழியாம் தமிழில் கூட அந்த தகவல் இருக்கலாம். இது போன்ற தகவலை உள்ளடக்கிய இந்த புகைப்படத்தை நம் கைபேசி(Mobile Phone or Cell Phone) ஐ கொண்டு அதில் உள்ள தகவல்களை படிக்க முடியும் என்பது இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம். QR Reader என்கிற மென்பொருளை இணையத்தில் தேடி உங்களுடைய கைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள். என் நண்பர் வைத்துள்ள Nokia 5230 இல் வேலை செய்கிறது.

முதலில் இந்த சுட்டியை கிளிக் செய்து உங்களுடைய தகவலை Encode செய்யவும். பின்னர் இந்த சுட்டியை கிளிக் செய்து Decode செய்து பாருங்கள்.

புதுவை

Leia mais...

Jul 19, 2010

பயர்பாக்ஸ் பதிப்பு 4

மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் புதிய பதிப்பினை (பதிப்பு 4.0.) பல மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளது. இனி வரும் பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகள், இந்த புதிய கட்டமைப்பில் தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு சோதனை பதிப்புதான். யார் வேண்டுமானாலும் இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தி, இதன் நிறை மற்றும் குறைகள் குறித்து மொஸில்லாவிற்குத் தெரிவிக்கலாம். முழுமையான பதிப்பு இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படலாம். இதன் புதிய சிறப்பம்சங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

1.புதிய ஆட் ஆன் மேனேஜர்:
கூடுதல் வசதிகள் தரும் ஆட் ஆன் தொகுப்புகளுக்குப் பயர்பாக்ஸ் பிரவுசர் புகழ்பெற்றது. இவற்றைத் தனியே வைத்து நிர்வகிக்க புதிய வசதி தரப்பட்டுள்ளது. புதிய ஆட் ஆன் தொகுப்புகளை, நமக்கேற்ற வகையில் பிரவுசருடன் இணைக்கவும், தேவைப்படாத போது நீக்கவும் வழி தரப்பட்டுள்ளது. இருப்பினும் இது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இறுதி வெளியீட்டின்போது இதன் முழுமையான பயன்பாட்டு வடிவம் கிடைக்கும்.

2. வெப்–எம் பார்மட்:
ஹை டெபனிஷன் வீடியோ எனப்படும் உயர் வகை வீடியோ காட்சிகளை பிரவுசரில் யு–ட்யூப் வழியாகக் காண, எச்.டி. தன்மையுடன் கூடிய எச்.டி.எம்.எல். 5 வீடியோ தரப்பட்டுள்ளது.

3. தனிநபர் தகவல்கள் பாதுகாப்பு:
மொஸில்லா எப்போதும் தன் வாடிக்கையாளர்களின் தனி நபர் தகவல்களைக் காப்பதில் முன்னுரிமை தரும். ஏற்கனவே உள்ள பிரவுசர் ஹிஸ்டரியில் பயன் படுத்தப்பட்ட வெப் வரையறைகள், பெர்சனல் தகவல்களைக் காப்பதில் சில குறைகளைக் கொண்டிருந்தது. அது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

4.முடங்கிப் போகாது:
பிரவுசரின் ப்ளக் இன் புரோகிராம் ஏதேனும் கிராஷ் ஆனால், பிரவுசரின் இயக்கம் முழுமையாக நின்று போய், மீண்டும் இயக்க வேண்டிய நிலையில் பிரவுசர் முடங்கிப் போகும். தற்போது இது களையப்பட்டுள்ளது. தொடர்ந்து தடையின்றி இன்டர்நெட் தேடலை மேற்கொள்ளலாம். அந்த பக்கத்தை மட்டும் மீண்டும் திறந்தால் போதும்.

5. இயங்கு திறன்:

பயர்பாக்ஸ் பிரவுசர் முதலில் தொடங்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்பது பலரின் குற்றச்சாட்டாக இருந்து வந்தது. இதனையும், இணையப் பக்கங்கள் இறக்கிக் காட்டப்படும் நேரத்தினையும் மொஸில்லா கணிசமாகக் குறைத்துள்ளது.

6.தோற்றம்:
பிரவுசரைத் திறந்தவுடனேயே நம் கண்ணில் படுவது அதன் புதிய தோற்றமே. இணையத் தளங்களில் உள்ள தகவல்களுக்கு அதிக இடம் தரும் வகையில் டேப்கள் மேலே கொண்டு செல்லப்பட்டுள்ளன.

பயன்படுத்துபவரை வழி நடத்தும் இன்டர்பேஸ் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. இந்த வகையில் ஆப்பரா மற்றும் கூகுள் குரோம் பிரவுசர்களில் காணப்படும் சில அம்சங்களை, மொஸில்லா புதிய பதிப்பில் கொண்டு வந்துள்ளது எனக் கூறலாம். பல புதிய பட்டன்களும், ஒருங்கிணைந்த மெனுவும் தரப்பட்டுள்ளது. மெனுக்கள் அனைத்தும் பயர்பாக்ஸ் என்ற இடது ஓரம் உள்ள பட்டனுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கூகுள் குரோம் பிரவுசரில் இருப்பதைப் போல, டேப்கள் அனைத்தும் மேலாக நிறுத்தப் பட்டுள்ளன. கூகுளின் பிரவுசரில் இவை வட்டமாக இருக்கின்றன. இங்கே சரியான சதுரமாக உள்ளன. இருப்பினும் மெனுபார் தொடக்கத்தில் மறைத்துவைக்கப்படுகிறது. பயன்படுத்துபவர் விரும்பினால், அதனை பழைய பதிப்புகளில் இருந்தாற்போல வைத்துப் பயன்படுத்தலாம்.

7.புக்மார்க் பட்டன்:
சர்ச் பாக்ஸுக்கு அடுத்தபடியாக, புக்மார்க் பட்டன் தரப்பட்டுள்ளது. இதில் கிளிக் செய்வதன் மூலம், அனைத்து புக்மார்க்குகளும் போல்டர்களும் நமக்குத் தேடிப் பார்க்க கிடைக்கின்றன.

8. தேவையான டேப் கிடைக்க: பல டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரை இயக்குகையில், நாம் செல்ல விரும்பும் தளம் எந்த டேப்பில் உள்ளது என்பதைக் காண நமக்குச் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். இதற்கான ஒரு தீர்வை இந்த பதிப்பு கொண்டுள்ளது. ஸ்மார்ட் லொகேஷன் பாரில், விரும்பும் தள முகவரி அல்லது அதன் தலைப்பு பெயரினை டைப் செய்து நேரடியாகவும், விரைவாகவும் அந்த தளத்திற்குச் செல்லலாம்.

9.விண்டோஸ் 7 ஒருங்கிணப்பு:
இந்த புதிய பதிப்பு விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் முழுமையான முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. டேப்களின் பிரிவியூ மற்றும் ஜம்ப் லிஸ்ட் இதிலும் தரப்பட்டுள்ளது. டேப் பிரிவியூவில் திறக்கப்பட்டுள்ள அனைத்து தளங்கள் குறித்த தகவல்களைப் பார்வையிடலாம். ஜம்ப்லிஸ்ட் மூலம் அடிக்கடி திறந்து காணும் தளங்களுக்கு எளிதாகச் செல்லலாம்.

10. வேகம்:
குரோம் மற்றும் ஆப்பராவுடன் ஒப்பிடுகையில், இந்த பதிப்பின் வேகம் குறைவாகவே உள்ளது. ஆனால் முந்தைய 3.6 பதிப்பினைக் காட்டிலும் வேகம் கூடுதலாக உள்ளது.

இந்த சோதனைப் பதிப்பில் இருக்கும் அனைத்தும், இறுதியாக வெளியிடப்படும் தொகுப்பில் கிடைக்கும் என்று உறுதி கூற முடியாது. இதனைப் பயன்படுத்து பவர்களின் கருத்துக்களின் அடிப்படை யிலேயே இறுதி வடிவம் முழுமையாக்கப்படும் என மொஸில்லா அறிவித்துள்ளது.

தரவிறக்கம் செய்ய

Leia mais...

இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம்

 மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.

‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் ‌டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

தரவிறக்கம் செய்ய

Leia mais...

Jul 17, 2010

'அடோப் பிளாஷ்' அறிமுகப்படுத்தும் புதிய முப்பரிமாண புரட்சி

'அடோப் பிளாஷ்', இணையத் தள பாவனையாளர்கள் பரவலாகப் பயன்படுத்திவரும் ஒரு மென்பொருளாகும். உலகளாவிய ரீதியில் 20 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இதனை பாவித்து வருகின்றனர்.

'அடோப்' நிறுவனத்தின் அனைத்து மென் பொருட்களும் வெளியீடுகளும் வரைக்கலையில் (graphics) தனித்துவம் பெற்றவை. இந்த வரிசையில் அடுத்த வெளியீடாக முப்பரிமாண 'அடோப் பிளாஷ்' வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென சிறப்பு முப்பரிமாண (3D) கண்ணாடியையும் அது வெளியிடவுள்ளது. இவ்வெளியீடானது 'அடோப்' தனது அடுத்தக்கட்ட தொழில்நுட்பப் புரட்சிக்கு ஆயத்தமாக எடுத்துக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தொழில்நுட்பமானது இணையத்தளங்களை வடிவமைக்கவுள்ள முப்பரிமாண தோற்றத்தில் பிரமாண்டமாக வடிவமைக்க உதவும். பாவனையாளர்கள் இதனைப் பார்வையிடும் போது, எழுத்து வரைகலை, காணொளிகள் மற்றும் கணினி விளையாட்டுக்கள் போன்றவற்றில் முப்பரிமாண அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இது தொடர்பான அந்நிறுவத்தின் சிறப்பு மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo