கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Aug 8, 2010

உங்கள் ஈமெயில்கள் படிக்கப்பட்டதா? எங்கிருந்து படிக்கப்பட்டது?

சில நேரங்களில் முக்கியமான ஈமெயில்களை அனுப்பிவிட்டு நீங்கள் பதிலுக்காக காத்திருக்கலாம். ஆனால் நீங்கள் அனுப்பிய ஈமெயில்களுக்கு பதில் ஏதும் வராமல் இருக்கலாம், அவருக்கு மீண்டும் ஈமெயில் மூலம் நினைவுறுத்தலாமா? அவர் அந்த மெயிலைப் படித்திருப்பாரா? மாட்டாரா? என்பது போன்ற கேள்விகள் எழலாம். இது போன்ற நேரங்களில் இவற்றை நாம் எப்படி அறிந்து கொள்வது இதைப்பற்றித்தான் இந்த பதிவு.

இது போன்று மெயில் எங்கிருந்து படிக்கப்பட்டது என்று அறியவேண்டிய சூழ்நிலை வேறு காரணங்களுக்கு ஆகவும் ஏற்படலாம். இவற்றை தெரிந்து கொள்வதற்காகவே இரண்டு தளங்கள் செயல்படுகின்றன. முதலில் spypig.com  தளம். இத்தளத்தில் நம்முடைய ஈமெயில் முகவரி மற்றும் மெசேஜ் டைட்டில் ஆகியவற்றை உள்ளிட்டு நமக்கு விருப்பமான ஒரு image ஐ select செய்து கொள்ளவேண்டும். இந்த image நம்முடைய ஈமெயிலுடன் இணைத்து அனுப்பப்படும். ஆனால் image தெரியாதவாறு blank ஆன image ஐயும் அனுப்பலாம். இங்கு எத்தனை முறை படிக்கப்படும் வரை தெரியவேண்டும் என்பதையும் தேர்ந்தெடுக்கலாம். பின்னர் click to activate my spypig என்பதில் கிளிக் செய்து activate செய்துகொள்ளவேண்டும். பின்னர் நீங்கள் செலக்ட் செய்த image ஐ copy செய்து 60நொடிகளுக்குள் அனுப்பவேண்டிய ஈமெயிலில் paste செய்து send கொடுத்துவிடுங்கள். இனி நீங்கள் அனுப்பிய இந்த மெயிலை open செய்யும் போதெல்லாம் உங்களுக்கு ஈமெயில் மூலம் தெரிவிக்கப்படும். மேலும் எங்கிருந்து படிக்கப்பட்டது? எப்போது படிக்கப்பட்டது? அவர் பயன்படுத்தும் browser, அவருடைய service provider உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெறலாம். இச்சேவை முழுவதும் இலவசம் registrationனும் தேவையில்லை.

ஆனால் spypig இல் படிக்கப்பட்ட இடம் சில  நேரங்களில் துல்லியமாக இருப்பதில்லை எனவே துல்லியமாக அறிந்து கொள்ள அவர்கள் அனுப்பும் ஈமெயிலில் recipient ip என்றிருக்கும் ip address ஐ copy செய்து  தளத்தில் உள்ளிட்டு அறிந்து கொள்ளலாம். மற்றொரு தளமான,  தளத்தில் image எதையும் உள்ளிட தேவையில்லை. இங்கு நீங்கள் register செய்து கொள்ள வேண்டும். பின்னர் track செய்ய வேண்டிய ஈமெயிலின் முகவரியில் .readnotify.com என இட்டு அனுப்பவேண்டும். இதனை பெறுபவர் காண இயலாது. எனவே நீங்கள் track செய்வதை அவர்கள் அறிந்து கொள்ள முடியாது. இச்சேவையில் முதல் இருபத்தி ஐந்து மெயில்கள் வரை இலவசமாக track செய்து கொள்ளலாம். இதற்க்கு மேல் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும்.

- வாசு

Leia mais...

Aug 7, 2010

மொபைல்போன்களுக்கான ஆன்டி வைரஸ் சொல்யூச‌ன்ஸ்

மொபைல் போன்களுக்கான ஆன்டி வைரஸ் சொல்யூச‌னை இன்னும் 12 மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக மேக்ஸ் செக்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த மேக்ஸ் செக்யூர் சாப்ட்வேர்ஸ் நிறுவன நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சஞ்சய் பிரதான் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :

மொபைல்போன் உபயோகிப்பாளர்கள் இதுவரை, தங்கள் மொபைல் போன்களை கம்ப்யூட்டரின் துணையுடன் ஆன்டிவைரஸ் சாப்டவேரின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்ததாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, இன்னும் 12 மாதங்களில் மொபைல் ‌போன்கள் தங்களுக்குள்ளேயே ஸ்கேன் செய்யும் அளவிற்கு ஆன்டி வைரஸ் சொல்யூசனகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி, இந்த நிதியாண்டில் 100 பே‌ரை புதிதாக பணியமர்த்த உள்ளதாக சஞ்சய் பிரதான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

Leia mais...

Aug 6, 2010

பேஸ்புக் - டுவிட்டர் நிறுவனங்களின் புதிய எதிரி

பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலை பின்னல் தளங்களில் அதிக நேரம் விரயம் செய்யும் ஊழியர்களினால் பிரித்தானிய நிறுவனங்களுக்கு பில்லியனளவில் பணவிரயமேற்படுவதாக ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

பிரித்தானிய இணையத்தளமொன்று நடத்திய வாக்கெடுப்பு ஒன்றின் முடிவின்படி பிரித்தானியாவின் 34 மில்லியன் ஊழியப்படையில் 2 மில்லியன் பேர் 1 மணித்தியாலத்திற்கும் அதிகமான தங்களது வேலை நேரத்தை மேற்படி சமூக வலை பின்ணல் தளங்களில் செலவிடுவதாக அந்த இணையத்தளம் தெரிவிக்கின்றது. இது மொத்த வேலை நேரத்தில் 8 இல் 1 பங்காகும்.

மேற்படி இணையதளத்தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் கருத்துப்படி ஐக்கிய இராச்சியத்தில் ஊழியர்கள் மிகவும் அதிக நேரத்தினை சமூக வலை பின்னல் தளங்களில் செலவிடுவதாகவும், இது நிறுவனங்களினால் கவனத்தில் கொள்ளப்படுவதில்லையெனவும் இது ஊழியர்களின் ஆக்கத்திறனில் மறைமுக பாதிப்பை எற்படுத்துவதாகவும் இதனால் நிறுவனங்கள் பல்வேறு நட்டங்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

ச.கவிந்தன்

Leia mais...

Aug 5, 2010

' ஐ போன் ' உடன் மோதவுள்ள பிளக்பெரி டோர்ச் 9800

கையடக்கத் தொலைபேசி சந்தையில் அதிகரித்துவரும் அப்பிளின் ' ஐ போன் ' வகை தொலைபேசிகளின் ஆதிக்கத்தை கருத்தில் கொண்டும் சந்தையில் இழந்துவரும் தங்களது இடத்தினை மீண்டும் தக்கவைத்துகொள்ளும் நோக்குடனும் பல்வேறு நிறுவனங்கள் தமது நவீன கையடக்கதொலைபேசிகளை வெளியிட்டு வருகின்றன.

இந் நிலையில் ஆர்.ஐ.எம் நிறுவனம் தனது புதிய பிளக்பெரி கையடக்கதொலைபேசியை நேற்று அறிமுகம் செய்தது.

ஆர்.ஐ.எம் என்றறியப்பட்ட 'ரிசேர்ச் இன் மோசன்' நிறுவனம் கனடா நாட்டைச் சேர்ந்த தொலைத்தொடர்பு மற்றும் கம்பி இல்லா சாதன தயாரிப்பு நிறுவனமாகும். மேற்படி நிறுவனமே தற்போது பிளக்பெரி கையடக்கதொலைபேசிகளை உருவாக்கி வருகின்றது.

' பிளக்பெரி டோர்ச் 9800 ' என இப் புதிய கையடக்கதொலைபேசி பெயரிடப்பட்டுள்ளது.

மேற்படி கையடக்கதொலைபேசியை கடந்த 18 மாதகாலமாக அந் நிறுவனம் உருவாக்கி வந்தது.

மேற்படி தொலைபேசியானது அந்நிறுவனத்தின் 3வது தொடுந்திரையுடன் கூடிய வெளியீடு என்பதுடன் முதலாவது ' ஸ்லைட் அப் ' எனப்படும் மேல்நோக்கி தள்ளக்கூடிய அமைப்பினை கொண்ட வெளியீடாகும்.

மேலும் பிளக்பெரி ' ஒஸ் 6 ' எனப்படும் அதி நவீன இயங்கு தளத்தினை கொண்டியங்கவுள்ள முதலாவது கையடக்கத்தொலைபேசி இது என்பது குறிப்பிடத்தக்கது.

3.2'' எச்விஜிஎ + (480X360 பிக்ஸல்ஸ்) திரையுடன் கூடியதும், 3ஜீ, வை-பை பி.ஜீ.ன், ப்ளூடுத் மற்றும் ஜிபிஸ் ஆகிய வசதிகளையும் 5 மெகா பிக்ஸல் கமெராவையும் வீடியோ வசதியையும் கொண்டதாகும்.

512 எம்பி ஒபரேட்டிங் மெமரியை கொண்டுள்ளதுடன். 4 ஜிபி சேமிப்பு வசதியையும் கொண்டது மேலும் இதன் சேமிப்பு வசதி 16 ஜிபி வரை அதிகரிக்கப்படக்கூடியதாகும்.

இவ் வெளியீடானது அப்பிளின் ' ஐ போன் ' இற்குத் தகுந்த போட்டியளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக சவூதி அரேபியாவில் பிளக்பெரி கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்ப அந்த நாட்டு அரசாங்கம் தடைவிதித்துள்ளதும் ஐக்கிய அரபு இராஜ்சியமும் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் தமது நாடுகளிலும் பிளக்பெரிக்கான தடையை விதிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ச.கவிந்தன்.

Leia mais...

Aug 4, 2010

அகரவரிசை கீ போர்டுடன் மொபையில் போன் அறிமுகம்

பட்ஜெட் விலையில், குவெர்ட்டி கீ போர்டுடன் கூடிய இரண்டு சிம் மொபைல் போன்கள், இன்றைய நிலையில் மொபைல் சந்தையில் சக்கை போடு போட்டுக் கொண்டுள்ளன. இந்நிலையில் லாவா நிறுவனம், அகர வரிசை கீ போர்டுடனும் தன் லாவா 2 மற்றும் லாவா 5 மாடல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

விரும்புபவர்களுக்கு குவெர்ட்டி கீ போர்டுடனும் இந்த போன்கள் கிடைக்கின்றன. பொதுவாக குவெர்ட்டி கீ போர்டு டைப்ரைட்டிங் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கூடுதல் வசதி அளித்து வருகிறது. மற்றபடி டைப்ரைட்டிங் தெரியாதவர்களுக்கு, அகரவரிசையில் கீ போர்டு இருப்பது, உதவியாய் உள்ளது. இதனை அறிந்த லாவா நிறுவனம், மிகச் சரியாக அகரவரிசை கீ போர்டுடன், மொபைல்களை வடிவமைத்துத் தருகிறது.

இவை இரண்டிலும் 2.2 அங்குல டி.எப்.டி. ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் இரண்டு சிம்களைப் பயன்படுத்தும் வசதி, எப்.எம். ரேடியோ, புளுடூத், மொபைல் ட்ரேக்கர் , எல்.இ.டி. டார்ச் ஆகியன தரப்படுகின்றன. இவற்றில் லாவா பி5 மாடலில், 2 எம்பி திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. இதில் உள்ள மியூசிக் பிளேயர் MP3, MP4, AVI, 3GP, MIDI மற்றும் AMR ஆகிய பார்மட்களை சப்போர்ட் செய்கிறது.

ஆனால் பி2 மாடலில் 1800mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. இதனால் பல நாட்கள் போனை சார்ஜ் செய்திடாமல் பயன்படுத்த முடிகிறது. பி 5 மாடலில் 1400mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது. லாவா பி2 விலை ரூ.3,999 மற்றும் லாவா பி5 ரூ. 4,399 எனக் குறியிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

Leia mais...

Aug 3, 2010

மோட்டாரோலாவின் பட்ஜெட் போன்கள்

பல விலை மலிவான மொபைல் போன்கள் வருகையால், தன் மார்க்கட்டினை இழந்து வரும் நிலையில், மோட்டாரோலா நிறுவனம் மீண்டும் தன் இடத்தைப் பிடிக்க, ஐந்து, பட்ஜெட் தொடக்க நிலை மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டாயுவா என்ற பெயரில் இவை வந்துள்ளன.

இவற்றின் விலை ரூ.1,490 முதல் ரூ. 2,890 வரை உள்ளன. இந்த மாடல்கள் WX181, WX260, WX265, WX290 மற்றும் WX295 என்ற எண்களுடன் கிடைக்கின்றன. இவற்றில் மிக மலிவானது WX181 ஆகும். இதன் விலை ரூ. 1,490. இதில் மெமரி ஸ்லாட் இல்லை. WX260 மாடலில் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் தரப்பட்டுள்ளது. 2ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

எப்.எம். ரேடியோ பிளேயர், வண்ணத்திரை உள்ளன. இரண்டு அலை வரிசையில் இயங்கும் இந்த மாடலில் ஜி.பி.ஆர்.எஸ் வசதியும் தரப்பட்டுள்ளது.WX265 மாடல் ஒரு பிளிப் போன் ஆகும். புளுடூத் இணைப்பு உள்ளது. இவற்றில் WX290 ஒரு அட்வான்ஸ்டு மாடல் போனாகும். மாடலில் விஜிஏ கேமரா ஒன்று தரப்பட்டு ள்ளது.

எப்.எம்.ரேடியோ மற்றும் இரண்டு டிஸ்பிளே இந்த போனின் சிறப்பாகும். வேகமாக வளர்ந்து வரும் இந்திய மொபைல் சந்தையில், ஒவ்வொரு நிறுவனமும் தன் பங்கினைக் குறையவிடாமல் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றன. அந்த வகையில் மோட்டாரோலாவின் இந்த மாடல்கள் இந்நிறுவனத்திற்குக் கை கொடுக்குமா என்று காணலாம்.

Leia mais...

sonyயின் புதிய தொழில்நுட்பம்!!!

சோனி நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. டோக்கியோவை மையமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் தான் இறங்கிய தளங்களில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டிவருகிறது. அதிலும் குறிப்பாக சோனி அறிமுகப்படுத்திய walkman ஒரு புரட்சியையே உருவாக்கியது. made in japan என்ற வார்த்தைகளுக்கு ஒரு மரியாதையையே ஏற்படுத்தியது எனலாம். இந்நிறுவனம் தற்போது  ஒரே நேரத்தில் இரண்டு சேனல்களை பார்க்க கூடிய வகையில் அறிமுகப்படுத்தவிருக்கும் TVயை பற்றித்தான்.

நீங்கள் கிரிக்கெட் போட்டியை பார்க்க விரும்பும்போது, உங்கள் வீட்டில் வேறு எதாவது திரைப்படங்கள் போன்ற நிகழ்சிகளை பார்க்கவிரும்புவார்களா? remote யார் வைத்திருப்பது என்பதில் சண்டை வருமா? அப்படியானால் சோனி அறிமுகப்படுத்தவிருக்கும்  புது TV உங்களுக்கு தான். இந்த tv இல் ஒரே நேரத்தில் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் அவரவர்களுக்கு விருப்பமான வேறுபட்ட இரு நிகழ்சிகளை கண்டு ரசிக்கலாம்.

இது எப்படி சாத்தியமாகிறது? இதற்க்கு நீங்கள் பிரத்தியேகமான கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். இந்த கண்ணாடிகளை டிவியின் frame rateக்கு ஏற்ப sync செய்வதன் மூலம் விருப்பமான சானல்களை பார்க்க முடியும். மேலும் இது multiplayer gameகளில் அவரவர் viewpointகளை பார்த்து விளையாட முடியும். இது 3D தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் நீட்சி தான். இத்தொலைக்காட்சிக்கான patent ஐ சோனி நிறுவனம் தற்போது பெற்றிருக்கிறது.

விரைவிலேயே இதை சந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். அதுவரை பொறுத்திருங்கள்.

வாசு

Leia mais...

Aug 2, 2010

மீண்டும் ஆக்கிரமிக்கும் 'இன்டர்நெற் எக்ஸ்புளோரர்'

பிரபல கணனி இயங்குதளமான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் ' உலகளாவியரீதியில் அதிகமாக உபயோகிக்கப்படும் கணனி இயங்குதளமாக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது.

தற்போதைய சந்தை நிலவரப்படி மற்றைய முன்னணி இயங்குதளங்களான ' மொஸிலா பயர் பொக்ஸ் ' மற்றும் ' கூகுள் குரோம் ' ஆகியவற்றை ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் ' பின்தள்ளியுள்ளது.

மேலும் உலகில் வேகமாக வளர்ந்துவரும் இயங்குதளமாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 8 ' தொகுப்பு விளங்குகின்றது.

புதிய இணைய அறிக்கைகளின் படி மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் ' இன் இயங்குதள சந்தைப்பங்கு ஜூலை மாதமளவில் 0.42 % வீதத்தால் அதிகரித்துள்ளது. அதன்படி இயங்குதள சந்தையில் அதன் மொத்த பங்கு 60.74% வீதமாகவுள்ளது.

அதற்கு அடுத்த இடங்களிலுள்ள ' பயர்பொக்ஸ் ' மற்றும் ' கூகுள்குரோம் ' இயங்குதளங்களின் சந்தைப்பங்குகள் முறையே 0.9% மற்றும் 0.08% வீதங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந் நிலையில் அப்பிளின் ' சபாரி ' இயங்குதளத்தின் சந்தைப்பங்கு 0.24% வீதத்தினால் அதிகரித்துள்ளது.

அனைவரும் எதிர்ப்பார்க்காதவகையில் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 8 ' இயங்குதளத்தின் உலகளாவிய பாவணை 0.98% வீதத்தினால் அதிகரித்துள்ளதோடு இதன் மொத்த உலகளாவிய பாவணைவீதம் 30% உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leia mais...

பிளக்பரி கையடக்கத் தொலைபேசிகளின் சில தொழிற்பாடுகளுக்கு அரபு நாடுகளில் தடை

உலகின் முன்னணி கையடக்கத் தொலைபேசிகளில் ஒன்றாகக் கருதப்படும் பிளக்பரி தொலைபேசிகளின் சில தொழிற்பாடுகளுக்கு அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சவூதி அரேபியா மற்றம் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றில் பிளக்பரி கையடக்கத் தொலைபேசியின் சில தொழிற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளக்பரி கையடக்கத் தொலைபேசியின் சில தொழிற்பாடுகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இணைய பாவனை மற்றும் மின் அஞ்சல் பாவனைகளுக்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.

ஹெட் செற்களின் ஊடாக இணைய பாவனை மேற்கொள்ளப்படும் போது அவற்றை கண்காணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் இதனால் இந்த தொழிற்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 500,000 பிளக்பரி பாவனையாளர்களும், சவூதி அரேபியாவில் 400,000 பிளக்பரி பாவனையாளர்களும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leia mais...

Aug 1, 2010

' ஐ பேட் ' இற்குப் போட்டியாக மைக்ரோசொப்ட்

உலகின் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது அப்பிளின் பிரபல ' ஐ பேட் ' ரக கணனிகளுக்குப் போட்டியாக ஒரு கணனியை உருவாக்கி வருவதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஸ்டீவ் பால்மர் தெரிவித்துள்ளார்.

இதற்காக தாம் எச்பி,லெனோவோ,எசூஸ்,டெல் மற்றும் டொஷிபா போன்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து இயங்கி வருவதாகவும் தெரிவிக்கின்றார்.

அத்துடன் தமது மென்பொருள் வல்லுநர்களுடன் சேர்ந்து கடுமையாக உழைத்து வருவதாகவும் கூடிய விரைவில் மக்களின் தேவைக்கேற்ற விதத்தில் இது சந்தைக்கு வருமெனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் மைக்ரோசொப்ட் கொரியர் எனப்படும் இரட்டைத் திரைகளைக் கொண்ட கணனிகளை அதன் வல்லுநர் குழுவொன்று இரகசியமாக உருவாக்கி வருவதாகவும் தகவல் கசிந்திருந்தது.

ஆனால் இது தாம் உருவாக்கிவரும் பலவகையான கணனிகளில் ஒரு வகை மட்டுமே என மைக்ரோசொப்ட் அண்மையில் தெரிவித்திருந்தது.

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo