கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Aug 21, 2010

பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள நண்பர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் புதிய வசதி

கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் அதனை பயன்படுத்துபவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் படியான ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

" பேஸ்புக் ப்ளேசெஸ் " என அழைக்கப்படும் இந்த புதிய பயன்பாட்டினில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் பயனாளிகள் இருக்கும் இடம் கண்டறியப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷன் விரைவில் உலகெங்கும் உள்ள பேஸ்புக் பயனாளிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்கிறது அந்நிறுவனம்.

அதே நேரத்தில் பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தினால் குற்றங்கள் பெருக வாய்ப்பு அதிகம் உள்ளதாக பலர் விமர்சித்துள்ளனர். ஒரு நபர் எங்கே இருக்கிறார் வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்பன போன்ற விபரங்களை வெளியிடுவது கொள்ளை சம்பவங்கள் பெருக வழி வகுக்கும் என்கின்றனர் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பை சேர்ந்தோர்.

Tamilcnn

Leia mais...

Aug 19, 2010

ஆப்பிளின் ஐபேட் (IPAD) விரிவான அறிமுகம்

தகவல் தொடர்பு உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகள் எப்போதும் புரட்சியை உண்டுபண்ணும் விதம் வெளிவந்திருக்கின்றன. மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளமே ஆப்பிள் மேக் இயங்குதளங்களை காப்பி அடித்து வந்தவைதான்.

இப்படியெல்லாம் வசதி அளிக்க முடியுமா? என்று எதிர்பாரா வசதிகளுடன் பயனர்களை மகிழ்விப்பதில் ஆப்பிள் நிறுவனம் கில்லாடி. பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஆப்பிள் ஒரு முன்னோடி. உதாரணத்திற்கு ஐபோன் எடுத்து கொள்ளுங்கள்.
ஐபோன் வருவதற்கு முன்பு மொபைல் சந்தை எப்படி இருந்தது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். தொடுதிரை மொபைல் என்பது கனவுதான். ஆனால் ஐபோன் வந்த பின்பு எத்தனை நிறுவனங்கள் வகை வகையான தொடுதிரை மொபைல்களை போட்டு தாக்கி வருகின்றன. மொபைல் போன் சந்தையில் ஒரு புத்துணர்ச்சியை உண்டு பண்ணியது ஐபோன் என்றால் அது மிகையாகாது.  ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்துவது அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப் படுகிறது.


மடிக்கணினிக்கும், மொபைல் போன்களுக்கும் இடையில் எளிதாக எங்கும் எடுத்து செல்லும் எளிமையுடன் நெட்புக் கணினிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் சிறிய திரைகளுடன் கூடிய நெட்புக் கணினிகளை வெளியிடத் துவங்கி உள்ளன.

கூகிள் நிறுவனமும் தனது புதிய இயங்குதளமான குரோம் ஓஎஸ் ஆரம்பத்தில் நெட்புக் கணினிகளுக்காகத்தான் வெளியிடுகிறது. இவை நேட்புக் கணினிகளுக்கான சந்தை எதிர்காலத்தில் அதிகம் இருப்பதை உணர்த்துகிறது.

இந்த சந்தையையும் தனது வித்தியாசமான தயாரிப்பு மூலம் கலக்கப் போகிறது ஆப்பிள். நேற்று (ஜனவரி 27, 2010) ஐபேட் (IPad) எனும் தனது புதிய தயாரிப்பை உலகுக்கு தந்துள்ளது.  தோற்றத்தில் பெரிய ஐபோன் போன்று இருக்கும் ஐபேட் 9.5 இன்ச் தொடுதிரையுடன் வருகிறது. இது Wi-Fi, Wi-Fi + 3G என்று இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டு உள்ளது.

அரை அங்குல தடிமனுடன், .68 kg எடையுடன் வரும் ஐபேட்தில் இணையத்தில் உலவுதல், இசை கேட்டல், வீடியோ பார்த்தல், ஈபுக் (Ebook) வாசித்தல் போன்ற வேலைகளை எளிமையாக செய்து கொள்ள முடியும். தொடுதிரை உள்ளதால் மற்ற கணினிகளை உபயோகிப்பதை விட ஐபேட்டை உபயோகிப்பது மிகவும் எளிது.

ஐபேட் இயங்குதளம், ஐபோனின் இயங்குதளத்தை ஒத்ததாகவே உள்ளது. செயல்முறைகள் பெரும்பாலும் ஐபோனே போன்றே உள்ளன. இது ஆப்பிளின் 1Ghz பிராசசரில் இயங்குகிறது. இதன் முழுமையான தொழிநுட்ப விபரங்கள் குறித்து அறிந்து கொள்ள இந்தப் பக்கத்திற்கு செல்லுங்கள். இதன் பயன்பாடுகள் குறித்து வீடியோவை பாருங்கள்.
இந்த ஐபேட் மக்களை எந்த அளவு கவரும்?  கவருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எடை குறைவு. எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்து செல்ல முடியும். தொடுதிரை. எளிதில் உபயோகிக்கலாம். மடியில் வைத்துக்கொண்டு புத்தகம் போல வாசித்து கொள்ளலாம். காலத்தின் வளர்ச்சியில் பெரும்பாலான மாணவர்கள் கையில் சிலேட் போன்று ஐபேட் மாதிரியான சாதனங்கள் உட்காரும் காலம் வரலாம்.

ஐபேட்டில் உள்ள குறைகளை பார்க்கலாமே. மல்டிடாஸ்கிங் (Multitaking) கிடையாது. ஒரே நேரத்தில் பல செயலிகளில் (Application) வேலை செய்ய இயலாது. வெப்கேம் இல்லாததால் வீடியோ சாட்டின் செய்ய இயலாது. 3G மாடலாக வந்தாலும் அதை நீங்கள் இணைய இணைப்புக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியுமே தரவிற போன் அழைப்புகள் (Phone Calls), குறுஞ்செய்தி (SMS) சேவை முதலியவற்றை பயன்படுத்த இயலாது.

நேரடியாக USB க்களை ஐபேட்டில் பயன்படுத்த இயலாது, அதற்கென தனியே அடாப்டர் தேவைப்படும். Flash சப்போர்ட் கிடையாது. இணையதளங்களில் உள்ள பிளாஷ் பகுதிகள் தெரியாது. புரியும்படி கூற வேண்டும் என்றால் இணையப்பக்கங்களில் உள்ள Flash வீடியோக்களை பார்க்க இயலாது. 16GB, 32GB, 64GB போன்ற அளவுகளில் கிடைக்கிறது. இருந்தாலும் நீங்கள் தனியே மெமரி கார்ட் வாங்கி இதனை மேம்படுத்தி (Upgrade) கொள்ள முடியாது.

ஐபேட்டின் இயங்குதளம் ஐபோன் போன்று கட்டுப்பாடுகளை உடையது. அவற்றிற்கு யார் புதிய செயலிகளை வெளியிட்டாலும் ஆப்பிள் அனுமதித்தால் மட்டுமே அவற்றை ஐபேட்டில் பயன்படுத்த முடியும். ஐபோனுக்கான கூகுளின் அருமையான பல செயலிகளை (Applications) ஆப்பிள் மட்டுறுத்தியிருக்கிறது.

எனவே ஆப்பிள் என்ன தருகிறார்களோ அவற்றை தான் பயன்படுத்த வேண்டுமே தவிர மற்ற கணினிகள் போன்று பிறர் செயலிகளை ஐபேட்டில் பயன்படுத்த இயலாது. உதாரணத்திற்கு நீங்கள் மைக்ரோசாப்ட் வோர்ட் (Microsoft Word), பயர்பாக்ஸ் விரும்புபவர் என்றால் அதனை ஐபேட்டில் உபயோகிப்பதற்கான வாய்ப்பு கிடையாது.

விலையைப் பொறுத்தவரை மிகவும் அதிகம் இல்லை. Wifi மாடல் 499 டாலரில் இருந்தும், 3G+Wifi மாடல் 629 டாலரில் இருந்தும் கிடைக்கிறது. ஐபோன்களின் அறிமுக விலையை ஒப்பிடும் போது ஐபேட்டின் விலை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

மொத்தத்தில் ஆப்பிளின் ஐபேட் புதுமையான, கவர்ச்சிகரமான தயாரிப்பாக வந்துள்ளது. ஆனால் சூப்பர் என்று கொண்டாடுவதற்கு குறைகள் இன்றி இல்லை. இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்தால் நாம் கூறிய குறைகள் அற்ற ஐபேட் போன்ற புதிய தயாரிப்புகள் கூகிள், நோக்கியா போன்ற நிறுவனங்களிடம் இருந்து வரலாம்.  அதற்குள் ஐபேட் சந்தையை ஆக்ரமித்து கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளது.

Leia mais...

கூகிளின் அடுத்த வேட்டை ஒன் லைன் கேம்

எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இணையத்தில் தனது ஆக்கிரமிப்பை மேற்கொண்டுவரும் கூகிள், தற்போது தனது பார்வையை ஆன் லைன் கேம்(Online Games) பக்கம் திருப்பியுள்ளது.கடந்த மே மாதம் இடம் பெற்ற I/O மகாநாட்டில் வாக்குறுதியளித்ததிற்கு அமைய இந்த ஒக்டோபரில் (1up அறிக்கை) தனது Chrome web store இனை உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த சந்தையானது குறிப்பாக ஆன்லைன் கேமினை குறிவைத்து தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆன் லைன் கேமினை (Online Games) முக்கியப்படுத்துவதற்கான காரணங்களாக கூகிள் நிறுவனம் குறிப்பிடுவதாவது,
01. சிறந்த ஆன் லைன் கேமினை(Online Games) இணையத்தில் தேடிப் பிடிப்பது கடினமாக உள்ளமை.
02. இந்த Games களின் பிரபல்யத்தன்மையினை அறிந்து கொள்ள எந்த ஒரு வசதியும் இல்லாமல் இருப்பது.
03. இந்த Games தொடர்பான கருத்துக்களை அறிய ஒரு சிறந்த ஒரு இடம் இல்லமை.
04. Game வடிவமைப்பாளர்கள், அவர்களின் கேம்களை வைத்து பணம் பண்ணுவதற்கு ஒரு சிறந்த வழி இல்லமை.
இது போன்ற பலகாரணங்களை கூறுகின்றது. எது எவ்வாறு இருந்தாலும் ஆன்லை கேம் துறையில் இது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.

lankasritech

Leia mais...

Aug 16, 2010

மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 9ன் சோதனைத் தொகுப்பு வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

அதிகம் பேர் இந்த தொகுப்பைப் பயன்படுத்தத் தொடங்கு கையில், மைக்ரோசாப்ட் தரும் பிங் தேடல் சாதனத்தினையும் அவர்கள் பயன்படுத்த முயற்சிப்பார்கள். அதனால், தேடல் வகை வருமானம் அதிகமாகும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. இப்போது பெரும்பாலானவர்களால் இன்னும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இது செயல்படாது. இதனால், இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கும் அளவிற்கு உயராது.

இதில் தரப்படும் சில வசதிகள், தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் போட்டியாகச் சந்தையில் உள்ள மற்ற பிரவுசர்களில் உள்ளவையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சீன நாட்டின் தளம் ஒன்றில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக "Your most popular sites" என்ற வகையில் நாம் அடிக்கடி செல்லும் இணைய தளங்களுக்கான சிறிய படங்கள் காட்டப்படும் என இந்த தளம் அறிவித்துள்ளது. இது தற்போது குரோம் பிரவுசரில் உள்ள ஓர் அம்சமாகும்.

அதே போல ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை டவுண்லோட் செய்திடத் தரப்பட்டுள்ள டவுண்லோடிங் விண்டோவும், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் உள்ள சிறப்பான அம்சங்களாகும்.

இவை மற்றவர்களுக்கு, மைக்ரோசாப்ட் வழங்காமல் திருட்டுத் தனமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெளியாகி யிருக்கும் தகவல்களே. சோதனைப் பதிப்பு வரும் போதுதான், இவற்றை நாம் உறுதிப்படுத்த முடியும். எனவே அடுத்த ஆண்டு இதே காலத்தில் இந்த புதிய பிரவுசரின் சோதனைப் பதிப்பிற்காகக் காத்திருப்போம்.

தகவல் உலகம்

Leia mais...

Aug 15, 2010

வீடியோ கன்வர்டர் இலவசமாக தரவிறக்கம் செய்திட

கடந்த பத்து ஆண்டுகளில் வீடியோ இயக்கும் சாதனங்களின் எண்ணிக்கையும், வகையும் அதிகரித்து உள்ளன. வீடியோ கேம் சாதனங்கள், மொபைல் போன்கள், எம்பி3 பிளேயர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், நெட்புக் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் என இந்தப் பட்டியல் தொடர்கிறது.

ஒவ்வொரு சாதனமும் வீடியோ பைல்களை இயக்க தனித்தனி வரையறைகளைக் கொண்டுள்ளன. இந்த சாதனங்களுக்கேற்ற பார்மட்டுகளில் வீடியோ பைல்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. இவற்றுடன் திரை அளவு மற்றும் ரெசல்யூசன் அளவுகளும் வீடியோ இயக்கத்திற்கு வரையறை களைத் தருகின்றன.

எனவே வீடியோ பைல்களை இந்த சாதனங்களில் இயக்க முயற்சிக்கையில், அவற்றின் பார்மட் வரையறைகளை, அந்த சாதனங்களுக்கேற்ற வகையில் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. பார்மட் மாற்றம் ஓர் அவசியத் தேவையாகிவிட்ட சூழ்நிலையில், இதற்கு உதவிட பல இலவச புரோகிராம்கள், இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் மிக அதிகமாகப் பயன்படக் கூடிய புரோகிராம் ஹேம்ஸ்டர் பிரீ வீடியோ கன்வர்டர் (Hamster Free Video Converter) ஒன்று.

இந்த புரோகிராம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியது.வீடியோ பார்மட் மாற்றம் மூன்று நிலைகளில் மிக வேகமாக மாற்றப்படுகிறது. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோக்களை ஒரே நேரத்தில் மாற்றுகிறது.

முதலில் வீடியோ பைல்களை மொத்தமாக இதன் இன்டர்பேஸுக்குள் இழுத்து அமைத்துவிடலாம். ஏறத்தாழ அனைத்து வீடியோ பார்மட்களுக் கிடையேயும் (AVI, MPG, WMV, MPEG, FLV, HD, DVD, M2TS மற்றும் பிற) இந்த புரோகிராம் மாற்றத்தினை ஏற்படுத்தித் தருகிறது. இரண்டாவது நிலையில் மாற்றத்திற்கான வரையறைகளைத் தேர்ந்தெடுக்கிறோம். பைல் பார்மட் அடிப்படையில் மட்டுமின்றி, சாதனங்களுக்கு ஏற்ற வகையிலும் இது பார்மட்டை மாற்றித் தருகிறது. எடுத்துக் காட்டாக, ஐபேட், ஐபோன், எக்ஸ்பாக்ஸ், பி.எஸ் 3, ஆப்பிள் டிவி, பிளாக்பெரி, ஐரிவர் என சாதனங்களின் பெயர்களைக் கொடுத்தும் வீடியோ பைல்களின் பார்மட்டினை மாற்றிக் கொள்ளலாம்.

எந்த பார்மட்டில் வெளியாக வேண்டுமோ, அதற்கான வீடியோ தன்மை, ரெசல்யூசன், கோடக் பைல் ஆகியவற்றையும் தேர்ந்தெடுக்கலாம். இவை அனைத்தையும் முடித்த பின்னர்,இறுதி பட்டன் அழுத்தி, மாற்றம் மேற்கொள்ள கட்டளை இடலாம். நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் செயல் வேகத்திற்கிணங்க, வீடியோ பார்மட் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

இந்த புரோகிராமின் சிறப்பு, வீடியோ பைல் பார்மட்டுகள் குறித்து அவ்வளவாக அறியாதவர்கள் கூட இந்த புரோகிராம் மூலம் தங்கள் வீடியோ பைல்களை மாற்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு எளிமையான வழி நடத்துதல் தரப்பட்டுள்ளன.

இதனை இலவசமாக தரவிறக்கம் செய்திட என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்ல வேண்டும். விண்டோஸ் இயக்கத்தில் 32 பிட் மற்றும் 64 பிட் இயக்கத்திற்கான தனித்தனி புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் 7 இயக்கத்திற்கும் இணைவாக மாற்றத்தை மேற்கொள்ளலாம். அத்துடன் இந்த புரோகிராம் குறித்த் தகவல்கள் 40 மொழிகளில் கிடைக்கின்றன.

Leia mais...

Aug 14, 2010

பேஸ்புக் நண்பர்களுக்கிடையே இலவசமாக பேசிக்கொள்ளும் வசதி

இணையதளம் மூலம் தொலைபேசி சேவை தரும் நிறுவனமான வோனேஜ் நிறுவனம், பேஸ்புக் நண்பர்களுக்குள்ளே இலவசமாக பேசிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது.

இதுகுறித்து, வோனேஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இணையதளத்தின் மூலமமான தொலைபேச வசதியை பிரபலப்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் ‌போன்களில் இந்த வசதி அறிமுகப்படு்த்தப்பட உள்ளதாகவும்,

இந்த வசதியைப் பெற, வோனேஜ் இணையதளத்திற்கு சென்று, அதற்குரிய சாப்ட்வேரை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும், அதன்பின், அவர்கள் வழக்கம்போல, பேஸ்புக்கை லாக் இன் செய்தால், அதில் அவர்களின் நண்பர்களின் தொலைபேசி எண்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தகவல் தொலைதொடர்பு வரலாற்றின் முக்கிய மைல்கல் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leia mais...

இணையத்தில் பொழுதை கழிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

தொடர்ச்சியாக 23 மணிநேரம் இன்டர் நெட்டில் வெப்சைட் பார்ப்பவரா .. எங்களுக்கு எல்லாம் வெற வேலையே இல்லையா? என்று கோபப்படக்கூடாது.அப்படி பார்த்துக்கிட்டு, படிச்சிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு தான் கீழே உள்ள மேட்டர்...அப்படி மொய்பவர்களுக்கு இருதயம் சம்மந்தமான நோய் வரும் என அமெரிக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது என நாளிதழ் ஓன்றில் செய்தி வந்துள்ளது.

அமெரிக்காவின் டெய்லி மெயில் எனும் மருத்து இதழின் ஆசிரியர் டேவிட் டஸ்டன் கூறுகையில்...

நாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டரில் பணி செய்வதன் காரணமாக நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து இணையதளத்தில் முழ்கிவிடுவோம் அவ்வாறு நாள் ஒன்றுக்கு 23 மணிநேரமும் சைட் பார்ப்பவர்களுக்கு 65 சதவீத இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு. இது சாதாரணமாக 11 மணிநேரம் சைட் பார்ப்பவர்களைவிட அதிகம் ஏற்படும் என ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. சாதாரணமாக நாம் நடக்கும் போது, நிற்கும் போது கால்களில் தசைகளில் வேலை செய்கின்றன. இதன் மூலம் உடலில் நம் இதயத்தில் செல்லக்கூடிய ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு சீராக உள்ளது. ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும் போது தான் உடல் ஆக்கச்சிதைவு ஏற்பட்டு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் இருதயம் பலவீனமடைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இது போன்று ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. பார்ப்பதும் அதற்கு காரணமாகும். ஆகவே சிறிது நேரம் எழுந்து நிற்பது தான் சிறந்தது எனவும் அறிவுறுத்துகின்றனர்.பெண்களில் ஆறு மணிநேரத்திற்கு மேல் பணியாற்றினால் 37 சதவீதமும், ஆண்களுக்கு 18 சதவீதமும் அதிகரிக்கும் என அமெரிக்காவின் மயோ மருத்துவமனையின் மருத்து பேராசிரியர் ஜேம்ஸ் லேவின் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leia mais...

Aug 12, 2010

கூகுள் அண்ட்ரோயிட்டைத் தாக்கும் புதிய 'ட்ரொஜன்'

கூகுள் அண்ட்ரோயிட் மொபையில் எனப்படுவது கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தின் மூலம் இயங்கும் கையடக்கத் தொலைபேசிகளாகும்.

இக்கையடக்கத் தொலைபேசிகளானது உலகம் பூராகவும் மிகவும் வேகமாக விற்பனையடைந்து வருவதும் போட்டியாளர்களை தனது வேகமான விற்பனை மூலம் அதிர்ச்சியடையச் செய்துவருவதும் நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.

இந்நிலையில் முதல் முறையாக அக் கையடக்கத் தொலைபேசிகளது 'ட்ரொஜன்' எனப்படும் தீங்கு நிரலினால் (மெல்வெயார்) தாக்கப்பட்டுள்ளதாக பிரபல மென்பொருள் பாதுகாப்பு நிறுவனமான கெஸ்பர்ஸ்கை அறிவித்துள்ளது.

இது 'ட்ரொஜன்'- எஸ்எம்எஸ்.அண்ட்ரோயிட் ஒஸ்.பேக்பிளேயர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேற்படி 'ட்ரொஜன்' ஆனது மீடியாபிளேயர் மென்பொருள்போல தோற்றமளிக்கும் ஒரு தீங்கு நிரலாகும். குறுந்தகவல்கள் மூலம் பாவனையாளரின் கையடக்கதொலைபேசியை அடையும் மேற்படி தீங்கு நிரலானது 13 கெபி அளவினைக்கொண்டதாகும்.

பிறகு அதன் பாவனையாளர்கள் அதனை தமது கையடக்கதொலைபேசிகளில் நிறுவும் (இன்ஸ்டால்) படி அறிவுறுத்தப்படுவர்.

அவ்வாறு அதனை நிறுவியதும் பாவனையாளர்கள் அறியாத வண்ணம் இரகசியமாகக் குறிப்பிட்ட பாவனையாளரின் கையடக்கதொலைபேசியிலிருந்து பல்வேறு பாவனையாளர்களுக்கு அது குறுந்தகவல்களை அனுப்பத் தொடங்கும்.

அந்த ஒவ்வொறு குறுந்தகவல்களும் 5 டொலர்கள் வரை நட்டத்தினை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெருந்தொகையை இழக்கநேரிடும். தற்போது இந்த 'ட்ரொஜன்' ரஸ்யாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவ்வகை கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் அவதானமாக இருக்கவேண்டுமென கெஸ்பர்ஸ்கை நிறுவனம் அறிவித்துள்ளது.

VK

Leia mais...

Aug 10, 2010

கூகுள் நிறுவனம் எச்சரிக்கை

ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, ரகசிய எண் போன்ற விவரங்களை கேட்டு வரும் செய்திகளுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என, கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கூகுள் நிறுவனத்தின் ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சில தினங்களுக்கு முன் கூகுள் நிறுவனத்தின் பெயரில் அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: பாதுகாப்பு காரணங்களுக்காக, வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், வங்கி கணக்கு ரகசிய எண், வேலை, எந்த நாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பூர்த்தி செய்து உடனடியாக பதில் அனுப்ப வேண்டும்.
 
கடிதம் கிடைத்து ஏழு நாட்களுக்குள் மறுபதிவு செய்யாவிட்டால் ஜி-மெயில் கணக்கு நிரந்தரமாக காலாவதி ஆகிவிடும். இவ்வாறு குறிப்பிட்டிருந்த கடிதத்தைப் பார்த்த வாடிக்கையாளர்கள், குழம்பினர். சில நாட்களுக்குப் பின்னரே, இக்கடிதம் போலியானது என தெரிந்தது. இதுகுறித்து, கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது: கூகுள் நிறுவனம் சார்பில், அது போன்ற கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை. சில விஷமிகள் மோசடி செய்யும் எண்ணத்தில், கூகுள் நிறுவன பெயரில் தவறான கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
 
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்கள், ரகசிய எண் ஆகியவற்றை தெரிந்து கொண்டு, பண மோசடிகளில் ஈடுபடும் எண்ணத்துடன் அவர்கள், ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதுபோன்று தனிப்பட்ட விவரங்கள் கேட்டு, நாங்கள் ஒருபோதும் கடிதம் அனுப்புவது கிடையாது. தனிப்பட்ட விவரங்கள் கேட்டு வரும் கடிதங்களுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என, வாடிக்கையாளர்களை அவ்வப்போது நாங்கள் எச்சரித்து வருகிறோம்.
 
இதுபோன்ற கடிதங்களை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம். கடிதங்கள் குறித்து சந்தேகம் எழுந்தால், http://mail.google.com/support/bin/answer என்ற முகவரியில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களை கொண்டு, போலியான கடிதங்களை தெரிந்து கொள்ளலாம். இன்டர்நெட் பயன்படுத்துவோர், இதுபோன்று வரும் மோசடி கடிதங்களை விசாரணை மையங்கள் உதவியுடன் அறிந்துகொண்டு öŒயல்படுவது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leia mais...

Aug 9, 2010

'கூகுள் மீ' இரகசிய தளம்! : உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னுமில்லை

' கூகுள் மீ ' என்ற சமூக வலைப்பின்னல் தளமொன்றினை கூகுள் இரகசியமாக உருவாக்கி வருவது அனைவரும் அறிந்த விடயம்.

கூகுள் இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் தனது மற்றைய சேவைகளான 'ஜீ மெயில்' எனப்படும் மின்னஞ்சல் கணக்கு, கூகுள் பஸ் மற்றும் அதன் மற்றைய வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்டும் ' ஸ்லைட் ' மற்றும் ' சிங்கா ' ஆகியவற்றினை உபயோகப்படுத்தியும் தனது சமூக வலைப் பின்னல் தளத்தினை உருவாக்கி வருவதாகப் புதிய தகவல்கள் கசிந்துள்ளன.

' ஸ்லைட் ' நிறுவனமானது மற்றைய சமூக வலைப்பின்னல் தளங்களான ' மைஸ்பேஸ் ' மற்றும் 'பேஸ்புக்' ஆகியவற்றுக்கு மென் பொருட்களை உருவாக்கிய நிறுவனம்.

இந் நிறுவனத்தை கடந்த 4ஆம் திகதி கூகுள் விலைக்கு வாங்கியது.

மேலும் ' சிங்கா ' எனப்படும் ' மைஸ்பேஸ் ' மற்றும் 'பேஸ்புக்' ஆகியவற்றுக்கு இயங்குதளம் சார்ந்த விளையாட்டுக்களை உருவாக்கிய நிறுவனத்தில் கூகுள் 100 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கூகுளின் இத்தகைய நடவடிக்கைகளானது, பாவனையாளர்களுக்குப் புது வகையான அனுபவத்தினை தரும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இத்தளத்தில் கணினி விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கூகுளின் மற்றைய சேவைகளான கூகுள் 'எப்ஸ்', கூகுள் 'வொயிஸ்', கூகுள் 'ரீடர்' மற்றும் 'ஐ' கூகுள் போன்றவற்றின் பாவனையாளர்களைத் தனது கூகுள் 'மீ' தளத்திற்கான இலக்காக கூகுள் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கூகுள் நிறுவனம் கூகுள் 'பஸ்', 'ஓர்குட்' ஆகிய சமூக வலைபின்னல் தளங்களை உருவாக்கி தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'பேஸ்புக்'கின் பிரமாண்ட வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மற்றைய தளங்களின் எண்ணிக்கை என்பன கூகுளின் இன்னும் அறிவிக்கப்படாத கூகுள் 'மீ' தளத்தின் வெற்றிக்குப் பெரும் சவால்களாக விளங்குகின்றன.

VK

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo