கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Sep 9, 2010

கூகுளின் 'இன்ஸ்டன்ட் சேர்ச்'

நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பம்சங்களைத் தொடர்ந்து தனது சேவைகளில் புகுத்திவருகிறது கூகுள்.

தனது தேடல் சேவையில் புதியதொரு தொழில்நுட்பத்தினை தற்போது கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் தேடல் பொறியின் மூலம் குறித்ததொரு விடயத்தினை தேடுவதற்காக, நாம் அவ்விடயத்தினை தேடல் பொறி பக்கத்தின் நடுவே தட்டச்சு செய்யும் போதே அதற்கான விடைகள் ( ரிசல்ட்ஸ்) திரையில் உடனடியாகத் தோன்றும். இதுவே அந்தச் சிறப்பம்சமாகும்.

இது 'இன்ஸ்டன்ட் சேர்ச்' என அழைக்கப்படுகின்றது. மேற்படி அம்சமானது பாவனையாளர் தேடும் விடயத்தினை மிகவும் குறுகிய நேரத்தில் பெற்றுக் கொடுப்பதினை அடிப்படையாகக் கொண்டதென தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வம்சமானது தனது சக போட்டியாளர்களான 'யாஹூ' மற்றும் 'மைக்ரோசொப்ட்' என்பவற்றுக்குப் பெரும் போட்டியாக அமையுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leia mais...

Sep 8, 2010

2038 ல் கம்ப்யூட்டர் பிரச்னை

2000 ஆண்டு தொடங்கும் முன்னால்,Y2K  என்று ஒரு பிரச்னை அனைத்து ஊடகங்களிலும் பேசப்பட்டது. கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்கள், 2000 ஆண்டு தொடங்கும்போது தவறாக தேதியைக் கணக்கிடத் தொடங்கும் என்றும் இதனால் உலகெங்கும் பல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் பேசப்பட்டது.

பல நிறுவனங்கள் தற்காப்பு நடவடிக்கையாகப் பல வழிகளைக் கையாண்டனர். இறுதியில் எதிர்பார்த்த இழப்புகள் ஏற்படவில்லை. அதற்கான தேவையான மாற்றங்களைப் பல நிறுவனங்கள் தாங்களாக மேற்கொண்டனர்.

இப்போது இன்னொரு பிரச்னை எதிர்பார்க்கப்படுகிறது. இது 2038 ஆம் ஆண்டில் ஏற்படும் என அறியப்பட்டுள்ளது. இந்த பிரச்னைUnix Millennium Bug, Y2K38 அல்லது Y2.038K என அழைக்கப்படுகிறது.

இந்த பிரச்னைக்குக் காரணம் சி புரோகிராமிங் மொழியில் பின்பற்றப்படும் ஒரு செயல்பாடுதான். சி புரோகிராம் ஸ்டாண்டர்ட் டைம் லைப்ரரி என்று ஒரு கோட்பாட்டினைப் பின்பற்றுகிறது. இதில் நேரமானது 4 பைட் பார்மட்டில் கணக்கிடப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி நேரத்தின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.

அதன் அடிப்படையில் கணக்கீடுகள், மாற்றங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.

இந்த 4 பைட் ஸ்டாண்டர்ட் நேரத்தைக் கணக்கிடுகையில், நேரத்தின் தொடக்கத்தினை ஜனவரி 1, 1970 12:00:00 முற்பகல் ஆக எடுத்துக் கொள்கிறது. இந்த நேரத்தில் நேர மதிப்பு 0 எனத் தொடங்கப்படுகிறது.

எந்த ஒரு நேரம் மற்றும் தேதியின் மதிப்பு இந்த 0 மதிப்பிற்குப் பின்னர் விநாடிகளின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே, எடுத்துக் காட்டாக 919642718 என்ற மதிப்பு ஜனவரி 1, 1970 12:00:00 முற்பகலுக்குப்பின் 919642718 விநாடிகள் எனக் கணக்கிடப்படும். அப்படிக் கணக்கிடப்படுகையில் விடை ஞாயிறு, பிப்ரவரி 21, 1999 16:18:38 எனக் கிடைக்கும்.

இது ஒரு வசதியான கணக்கீடு. ஏனென்றால் இரண்டு மதிப்புகளை விநாடிகளில் கணக்கிட்டு இதன் மூலம் நேரம் மற்றும் நாளினைக் கையாள முடிகிறது. இதன் மூலம் இரு வேறு நேரம், நாள், மாதம் ஆண்டுகளைக் கையாள முடியும்.

ஆனால் ஒரு 4 பிட் இன்டிஜர் வழியைப் பின்பற்றுகையில் அதன் வழி சொல்லப்படக் கூடிய அதிக பட்ச மதிப்பு 2,14,74,83,647ஆகும். இங்கு தான் ஆண்டு 2038 என்ற பிரச்னை எழுகிறது. இந்த மதிப்பை நாள் கணக்கில் பார்க்கையில், அது ஜனவரி 19, 2038 03:14:07 ஆக மாறுகிறது. இந்த நாள் அன்று, சி புரோகிராம்கள் நேரம் கணக்கிடுவதில் திணற ஆரம்பிக்கும். ஏனென்றால் இதற்குப்
பின்னர் இந்த புரோகிராம் கள் நெகடிவ் நேரம் காட்டத் தொடங்கும்.

புரோகிராம் எழுதத் தெரிந்தவர்கள், கீழ்க்காணும் சி புரோகிராம் ஒன்றை எழுதி இயக்கிப் பாருங்கள். உங்களுக்கு இதன் பொருள் தெரியும்.

01.#include
02.#include
03.#include
04.#include
05.
06.int main (int argc, char **argv)
07.{
08. time_t t;
09. t = (time_t) 1000000000;
10. printf (“%d, %s”, (int) t, asctime (gmtime (&t)));
11. t = (time_t) (0x7FFFFFFF);
12. printf (“%d, %s”, (int) t, asctime (gmtime (&t)));
13. t++;
14. printf (“%d, %s”, (int) t, asctime (gmtime (&t)));
15. return 0;
16.}

இந்த புரோகிராமின் அவுட்புட்
1.1000000000, Sun Sep 9 01:46:40 2001
2.2147483647, Tue Jan 19 03:14:07 2038
3.2147483648, Fri Dec 13 20:45:52 1901


என அமையும்.

இந்த பிரச்னையை சாப்ட்வேர் கட்டமைப்பைத் திருத்துவதன் மூலம் தீர்த்துவிடலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. பழைய Y2K பிரச்னை போல பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுத்துவிடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சிலர், ஐ.பி.எம். வகை பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இந்த பிரச்னை 2016 ஆம் ஆண்டிலேயே வரும் எனக் கணித்துள்ளனர். ஏனென்றால் இந்த வகைக் கம்ப்யூட்டர்களில் நேரமானது ஜனவரி 1,1980 எனத் தொடங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகைக் கம்ப்யூட்டர்களைத் தான் நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தி வருகிறோம்.

விண்டோஸ் என்.டி. சிஸ்டம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் இந்த பிரச்னை இப்போதைக்கு இல்லை. ஏனென்றால் அவற்றில் நேரத்தைக் கணக்கிட 64 பிட் இன்டிஜர் அடிப்படையாக உள்ளது. மேலும் அதன் கணக்கீடு 100 நானோ நொடிகளை அடிப்படையாகக் கொண்டது.

அதன் நேரம் ஜனவரி 1, 1601 என்பதால், 2184ல் தான் என்.டி. சிஸ்டங்களில் இந்த பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்னை குறித்து ஆப்பிள் நிறுவனம் கூறுகையில் தன் கம்ப்யூட்டர்களில் இந்த பிரச்னைக்கு இடம் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இப்போதைக்கு உள்ள நிலையில், கணக்கீட்டின் அடிப்படையில், மேக் கம்ப்யூட்டர்களில் இந்த பிரச்னை 29,940 ஆம் ஆண்டில் தான் ஏற்படுமாம்.

Leia mais...

Sep 7, 2010

'ஸார்ப்' பின் முப்பரிமாண கையடக்கத் தொலைபேசி


ஜப்பானிய இலத்திரனியல் உபகரண தயாரிப்பு நிறுவனமான 'ஸார்ப்' தனது முப்பரிமாண (3D) கையடக்கத் தொலைபேசி ஒன்றை அறிமுகம் செய்கின்றது.

இத்தொலைபேசியின் கெமரா மூலம் முப்பரிமாண புகைப்படங்களைப் பிடிக்க முடியும்.

இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்ப்பதற்கு முப்பரிமாண கண்ணாடிகளை அணிய வேண்டிய அவசியமில்லை.

இக்கையடக்கத் தொலைபேசியின் கெமரா இரண்டு வில்லைகளைக் (லென்ஸஸ்) கொண்டது.

'ஸார்ப்' தொலைபேசியானது 'பரலக்ஸ் பெரியர்' திரையைக் கொண்டது.

இதன் விலை மற்றும் விற்பனைக்கு வரும் திகதி பற்றி 'ஸார்ப்' உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதனையும் மேற்கொள்ளவில்லை.

Leia mais...

Sep 4, 2010

கூகுள் ' குரோம் 6 ' உத்தியோகபூர்வ வெளியீடு

கூகுள் ' குரோம் ' இயங்குதளம் தனது 2ஆவது பூர்த்தியை நேற்றுக் கொண்டாடியது.

இந்நிலையில் அது ' குரோம் 6 ' என்ற மேம்படுத்தப்பட்ட புதிய தொகுப்பினை நேற்று வெளியிட்டுள்ளது.

தற்போதைய அறிக்கைகளின்படி, இயங்குதள சந்தையின் பிரகாரம் அதன் பங்கு 7.5 வீதமாகும்.

அதன் போட்டியாளரான 'இன்டர் நெட் எக்ஸ்புளோரர்' மற்றும் 'மொஸிலா பயர்பொக்ஸ்' என்பன முறையே 60.4% மற்றும் 22.9% இயங்குதள சந்தையைக் கொண்டுள்ளன.

கூகுள் குரோமின் முன்னைய தொகுப்பானது சுமார் 15 முக்கிய பாதுகாப்பு குறைபாடுகளினை கொண்டதாகக் காணப்பட்டது.

ஆனால் தற்போதைய ' குரோம் 6 ' தொகுப்பானது அக்குறைபாடுகள் அற்றதெனவும் நன்கு மேம்படுத்தப்பட்டதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது முன்னைய தொகுப்பினை விட 6 மடங்கு வேகமாக இயங்கக்கூடியதுடன் மேம்படுத்தப்பட்ட 'யூஸர் இன்டர் பேஸ்'ஸினையும் கொண்டதாகும்.

இது 'ப்ளேஸ் ஐ' கொண்ட நிலையிலேயே கிடைக்கப் பெறுகின்றமை மற்றும் எச்டிஎம்ல் 5 வசதிகளைக் கொண்டுள்ளமை விசேட அம்சங்களாகும்.

மேலும் இலகுவான பாவனைக்காக 'புக்மார்க்ஸ்' பட்டன்கள் இயங்குதளத்தின் புதியதொரு இடத்தில் தரப்பட்டுள்ளன.

தரவிறக்கம் செய்ய

Leia mais...

Sep 1, 2010

பேஸ்புக்கில் வலம் வரும் போலி முகங்கள்

இணையப் பயணர்களின் இணை பிரியாத பங்காளி தான் இந்த பேஸ்புக் (Facebook) எனப்படும் சமூக வலைத் தளம். இணையத்தைப் பயன்படுத்தும் பாக்கியம் பெற்ற ஒவ்வொருவருக்கும் அநேகமாக இங்கு ஒரு கணக்கு இருக்கும். (இல்லாதவர்களும் இருக்கிறார்கள்). நாளுக்கு நாள் இதன் அங்கத்தவர்கள் பெருக, கூடவே இந்தத் தளம் சம்பந்தமான சர்ச்சைகளும் பெருகிக் கொண்டே வருகிறது. இருந்தாலும் 24x7 ஆன்லைன் (online) ஆசாமிகளின் ஆட்டம் இருக்கும் வரை இந்தத் தளம் சக்கை போடு போடும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. சரி இனி தலைப்பிற்கு வருவோம்.

இவ்வாறான Fake Profiles எனப்படும் போலி முகங்கள் இணையத்தில் தாராளமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இப்போலிகள் பேஸ்புக்கையும் விட்டு வைக்கவில்லை. இது சம்பந்தமான நான் அறிந்த அனுபவ ரீதியான விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

இலங்கையைப் பொருத்தமட்டில் இப்போலி கணக்குகள் அதிகம் ஆண்களாலேயே உண்டாக்கப் படுகின்றன. (பெண்களுக்கு போலிக் கணக்குகள் இல்லை என்று சொல்ல வரவில்லை).

பொதுவாக பெண்கள் முகம்தெரியாத ஆண்களிடமிருந்து வரும் Friend Request களை Accept பண்ணுவதில்லை. ஆனால் இதே ஒரு முகம்தெரியாத பெண்ணாக இருந்தால் அவர்கள் அவ்வளவாக சிந்திப்பதில்லை. ஆனால் இவ்வாறு பெண்களின் பெயர்களாலேயே ஆண்கள் அதிகம் போலிக் கணக்குகளை வைத்திருப்பதை இவர்கள் அறியாமல் இருக்கலாம். ஒரு சில சூட்சுமமான ஆசாமிகள் ஒரு படி மேல் சென்று போலியாக உண்மையான ஒரு பெண்ணின் பெயரை வைத்தே போலிக் கணக்கை உண்டாக்கின்றனர். இதனால் அந்தப் பெண்களைச் சார்ந்தவர்களுடன் இந்தப் போலி ஆசாமிகள் இலகுடன் தொடர்புகளை உண்டுபண்ண சந்தர்ப்பம் கிட்டுகிறது. எனவே பெண்களே உஷார்...!!!

அடுத்ததாக இவ்வாறு பெண்கள் பெயர்களில் உண்டாக்கப்படும் போலிக் கணக்குகளால் இவர்கள் ஆண்களையும் ஏமாற்றுகின்றனர். பெண்களின் பெயரில் Request வந்தால் பாய்ந்து சென்று அதை Accept பண்ணும் நபர்களே இதன் மூலம் அதிகம் ஏமாற்றப்படுகின்றனர். ( எனக்கு தெரிந்த ஒரு நபர் இவ்வாறு ஒரு போலிக் கணக்கினால் ஏமாற்றப் பட்டு குறித்த அந்தக் கணக்கை வைத்திருக்கும் நபரின் கைப்பேசிக்கு ஆயிரக்கணக்கான ரூபாக்களை மீள்நிரப்பி (Reload) விஷயம் தெரிந்த பின் கை சேதப் பட்டது வேறு கதை )

சரி இனி இவ்வாறான போலிக் கணக்குகளிலிருந்து தவிர்ந்து கொள்ள எனக்கு தெரிந்த சில முறைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்;

ஆண்களோ பெண்களோ சரி, யாராவது தெரியாத பெயர்களிடமிருந்து Request வந்தால் உஷாராகி விடுங்கள். அந்தக் கணக்கின் பின்னணியை தேடுங்கள். உண்மையான Profile Pic போடப்பட்டுள்ளதா என கவனியுங்கள். (சிலர் உண்மையான வேறு நபர்களின் படங்களை கொண்டும் போலிக் கணக்குகளை உருவாகின்றனர்.)
குறித்த கணக்கில் எதாவது ஆபாச ரீதியான வாசகங்கள் அல்லது படங்கள் இருந்தால் கொஞ்சம் உன்னிப்பாக இருங்கள். எந்த நபரும் தன் ஆபாச நிலைகளை படம் போட்டு காட்ட விரும்புவதில்லை.
பெண்களே, உங்கள் தோழியின் பெயரிலும் போலிக் கணக்குகள் உருவாக்கப் படலாம். இந்த ஆசாமிகள் சூட்சுமமாக பொதுவான நண்பர்கள் (Mutual Friends) பட்டியலைக் கூட்டிக் கொண்டு உங்களுக்கு Request கொடுக்கலாம்.ஆகவே எதாவது சந்தேகம் தோன்றினால் குறித்த உங்கள் நண்பிக்கு அழைப்பை எடுத்து உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

ஆண்களே, தெரியாத பெண்கள் பெயரில் வரும் Request களை உடனே ஏற்றுக் கொள்ள வேண்டாம். (உங்கள் மனதை கொஞ்சம் கட்டிப் போடுங்கள்
உங்கள் நண்பர்களின் பெயரிலேயே போலிக் கணக்குகள் காணப்படுவதால் சந்தேகங்கள் ஏற்படும் சந்தர்பங்களில் குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி உறுதி செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறான கணக்குகளை இனங்காண எனக்குத் தெரிந்த சில முறைகள்:

குறிப்பாக இந்தக் கணக்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள் இருப்பார்கள். அதிலும் அதிகம் ஆண்களே இருப்பார்கள். கொஞ்சம் சிந்தியுங்கள், ஒரு பெண்ணுக்கு பெண்களை விட அதிகம் ஆண் நண்பர்கள், அதுவும் ஆயிரத்தையும் தாண்டி.. உஷார் ..!!!

ஆபாசமான படங்கள் காணப்படும். அதிலும் அந்த ஆபாசமான படங்களிற்கு கொடுக்கப் பட்டிருக்கும் ஆபாசமான பின்னூட்டல்களிற்கு (comments) அந்த நபரும் சிரித்துக் கொண்டே பதில் சொல்லி இருப்பார்.
குறித்த கணக்கின் Profile, இலகுவான பாதுகாப்பு நிலைமைகளைக் கொண்டிருக்கும். அதாவது அக்கணக்கின் சுவரை (wall) யாருக்கும் பார்க்கலாம், நண்பர் இல்லாவிடினும்.

குறிப்பாக சிலர் உண்மையான படங்கள் இல்லாததனால் அதிகம் குழந்தைகளின் படங்களைப் பகிர்ந்து கொண்டே இருப்பார். (தான் பெண் என்று நிரூபிக்க

பொதுவாக Looking for, Interested in பகுதிகளில் எல்லா தெரிவுகளையும் தெரிவு செய்து இருப்பார். (குறிப்பாக Looking for a relationship)
அடிக்கடி கொஞ்சம் அப்புடி இப்படியான Pages, Groups களில் இணைவாங்க.

அதோட கொஞ்சம் கவர்ச்சியான யாரோ ஒருத்தரின் படங்களை தன் படம் என்று பகிந்து கொள்வாங்க. (இதுக்குப் போய் சில அப்பாவிப் பசங்க Hai, u r soooo beautiful என்று சொல்லும் கொடுமை இருக்கே... அப்பா சொல்லிப் பிரயோசனம் இல்லை

முக்கிய குறிப்பு: இவ்வாறான தன்மை கொண்ட எல்லா கணக்குகளும் போலி என்று சொல்லி விட முடியாது. இப்படியான தன்மைகளுடன் உண்மையான கணக்குகளை வைத்திருப்பவர்கள் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பிரபல நபர்களின் Wall, நண்பர் இல்லாவிடினும் பார்க்கக் கூடிய பாதுகாப்பு தன்மையையே கொண்டிருக்கும். (Open to Everyone)

அது சரி இவ்வளவு சொல்லும் என் கணக்கிலேயே ஐந்திற்கும் மேற்பட்ட போலி ஆசாமிகள் குந்தி இருக்கிறார்கள். ஏன் இன்னும் தூக்காம இருக்கிறேன் என்று கேக்குறீங்களா..? பதிவிட அவர்களின் தொழிற்பாடுகளைப் பற்றி அனுபவம் இருக்க வேண்டும் தானே...!

(இங்கு வாசிப்பவரின் இலகு கருதி தேவையான இடங்களில் ஆங்கில சொற்களைப் பயன்படுத்தி உள்ளேன். பேஸ்பூக்கிற்கு மூஞ்சிப் புத்தகம் அல்லது முகநூல் என்று தமிழாக்கம் செய்வதில் இஷ்டமில்லை. Yahoo, Google, Orkut... இதுக்கெல்லாம் தமிழாக்கம் கேட்டா வில்லங்கம் தானே...

மின்னஞ்சலில் வந்தது

Leia mais...

Aug 31, 2010

உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென் பொருட்கள்

உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென்பொருட்கள், சமூக இணையத்தளங்கள் மற்றும் இதர சேவைகளின் பாவனையாளர்களின் எண்ணிக்கை தொடர்பான ஆய்வொன்றினை பிரபல நிறுவனமொன்று நடத்தியுள்ளது.

இப் புள்ளிவிபரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவனம் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து மாற்றமடைந்து வருவதனால் உத்தேச அளவில் இதனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இப்புள்ளிவிபரமானது கடந்த கால அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டது.

அதன் படி

1) டுவிட்டர் - 200 மில்லியன் பாவனையாளர்கள்.

பிரபல சமூக மற்றும் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் வேகமாக மொத்தமாக 200 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தளமாகும்.

2) விண்டோஸ் லைவ் மெசெஞ்சர் - 305 மில்லியன் பாவனையாளர்கள்

உலகின் மிகப்பெரிய மெசெஞ்சர் சேவையான இது, தற்போது ஸ்கைப் மற்றும் பேஸ்புக் என்பனவற்றினால் பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.

3) பேஸ்புக்- 510 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் தளம் இது. மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமுமாகும்.

4) ஸ்கைப் - 530 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் அதிக பாவனையாளர்களைக் கொண்ட வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினை வழங்கும் நிறுவனம் இது.

5) எபல் ஐ டியூன் - 800 மில்லியன் பாவனையாளர்கள்

அப்பிள் நிறுவனத்தின் இசைசார்ந்த மென்பொருளான இது, உலகம் முழுவதும் மிகப்பிரபலம் பெற்றது.

6) அடோப் பிளாஸ் - 1.5 பில்லியன் பாவனையாளர்கள்

அடோப் பிளாஷ், இணையத் தள பாவனையாளர்கள் பரவலாகப் பயன்படுத்திவரும் ஒரு மென்பொருளாகும்.

Leia mais...

Aug 29, 2010

கடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்

கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்

நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்.

கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம். இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு 8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த முகவரியைச் சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.

மென் பொருளை தரவிறக்கம செய்ய

Leia mais...

Aug 27, 2010

இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு..!

கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர்.இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய தேவையில்லை. இணையத்தில் தேட வேண்டுமா?உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள்.

இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த பொறியாளர்கள்.

ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின் படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது.

Leia mais...

Aug 26, 2010

ஜிமைல் தொலைபேசிச் சேவை அறிமுகம் .........

இன்று ஜிமைலினை திறந்தபோது நீங்கள் ஆச்சர்யப்பட்டதை நாம் அறிவோம். நீங்கள் நினைப்பது சரிதான், தற்போது உங்கள் ஜிமைல்(gmail) கணக்கில் இருந்தவாறே உங்கள் நண்பனின் போனுக்கு(phone) ரின்ங் பண்ணலாம், கோல்(call) பண்ணலாம்.எல்லாம் செய்யலாம்.

கூகிள் , தனது கூகிள் வொய்ஸ்(Google Voice) சேவையினை ...ஜிமைலுடன் இணைத்து இந்த புதிய அனுபவத்தை தருகிறது. உங்கள் ஜிமைலில் தோன்றும் Call Phone ஐகனை(Icon) சொடுக்கி உங்கள் நண்பனின் / நண்பியின் போனுக்கு கோல்(Call) எடுக்கலாம்.

கட்டணம் அறவிடப்படுமா??? இல்லையா??? கூகிளும் பாவம் தானே..யோசிக்க வேண்டாம் ஒரு சிறிய அளவி்ல்தான் அவர்கள் கட்டணம் அறவிடுகிறார்கள். தற்போதைக்கு அமெரிக்கா(USA) மற்றும் கனடாவில் (Canada) உள்ள நண்பிக்கு இலவசமாக(தற்போதைக்கு) கோல் பண்ணலாம். ஏனைய நாடுகளுக்கு சிறிய கட்டணம் அறவிடப்படுகிறது(கட்டண விபரம் https://www.google.com/voice/rates#S Australia, Brazil , Denmark , Guam, Hongkong, Hungary , Iceland , Italy , Japan , Mexico மற்றும் Newzealand போன்ற நாடுகளுக்கு வெறும் 0.02 அமெரிக்க டொலர்களுக்கு கோல் பண்ணலாம்.
இந்த புதிய சேவையை பயன்படுத்த இந்த voice and video plugin. http://www.google.com/chat/voice/ ஐ இன்ஸ்டால்(Install) செய்து கொள்ளுங்கள்.

 

தொழில்நுப்பம் செய்தியோடை

 

Leia mais...

Aug 24, 2010

விண்டோஸ் 7 அற்புத வசதிகள்

விண்டோஸ் விஸ்டாவில் கிடைக்காத புகழை, எப்படியும் விண்டோஸ் 7 மூலம் பிடித்துவிட எண்ணிய மைக்ரோசாப்ட், தன் புதிய சிஸ்டத்தில் பல எதிர்பாராத வசதிகளைத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். இந்த சிஸ்டத்திற்கு மாறியுள்ள அனைவருக்கும் இவை உதவலாம்.

1. வேகமாக இயங்க பிளாஷ் ட்ரைவ்: கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கும் வேகத்தினை அதிகப்படுத்த ஓர் எளிய வழி, அதன் ராம் (RAM Random Access Memory) மெமரியை அதிகப்படுத்து வதுதான். ராம் மெமரியை அதிகப்படுத்துகையில், உங்கள் கம்ப்யூட்டர் சி.பி.யு. தனக்கு வேண்டிய டேட்டாவிற்காக, ஹார்ட் டிஸ்க்கை அணுக வேண்டிய தேவை குறையும். ராம் மெமரியிலிருந்து டேட்டா படிக்கப்படுவதால், ராம் மெமரி, ஹார்ட் டிஸ்க்கினைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைத் தருவதால், கம்ப்யூட்டர் அதிக வேகத்தில் இயங்கும். மேலும் ராம் மெமரி தற்காலிக மெமரி என்பதால், அதில் ஏற்றப்படும் டேட்டா, கம்ப்யூட்டர் இயங்கும் வரையில் மட்டுமே இருக்கும். கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன், டேட்டா தங்காது.

ஆனால் சில கம்ப்யூட்டர் மதர்போர்டுகளில் தான், ராம் மெமரியை அதிகப்படுத்த காலியான ஸ்லாட்டுகள் இருக்கும். சில கம்ப்யூட்டர்கள் இவற்றை ஏற்றுக் கொள்ளாது. மேலும் மதர்போர்ட் வரை சென்று, புதிய ராம் மெமரி சிப்களை இணைப்பது எல்லோராலும் இயலாத காரியம். இதற்கு விண்டோஸ் 7 ஓர் எளிய வழி ஒன்றைத் தருகிறது. இதன் பெயர் ரெடி பூஸ்ட்  (Ready Boost). கூடுதல் மெமரி கொள்வதற்கு, ராம் நினைவகச் சிப்களைப் பயன்படுத்த வேண்டிய தில்லை. நம்மிடம் உள்ள பிளாஷ் ட்ரைவினையே அதற்குப் பயன்படுத்தலாம். ஆம், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, அதன் போர்ட்டில் செருகி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் சில அமைப்புகளை ஏற்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டர், பிளாஷ் ட்ரைவினை கூடுதல் ராம் மெமரியாக எடுத்துக் கொண்டு செயல்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பின்புறம் ஏதேனும் யு.எஸ்.பி.போர்ட்டில், பிளாஷ் ட்ரைவ் ஒன்றினைச் செருகி, இந்த செட் அப் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அப்போதுதான், நிலையாக அந்த பிளாஷ் ட்ரைவ், கூடுதல் ராம் மெமரியாக என்றும் செயல்படும்.

பிளாஷ் ட்ரைவினைச் செருகியவுடன், சிறிய விண்டோ பாக்ஸ் ஒன்று எழுந்து வரும். இதில்  “Speed up my system, using Windows Ready Boost”என்று ஒரு பிரிவு இருக்கும். இந்த விண்டோ கிடைக்கவில்லை என்றால்,Start  மெனு சென்று  My Computer தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்படும் பிளாஷ் ட்ரைவில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ் விரி மெனுவில்,  Propertiesஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் , கிடைக்கும் டேப்களில்Ready Boostஎன்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டேப்பிற்கான விண்டோவில் Use this device என்று ஒரு வரி இருக்கும். இந்த ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், கீழாக உள்ள வேகத்தின் அளவை ஓரளவிற்கு அதிகப்படுத்தவும்.

இதற்குக் குறைந்த பட்சம் 256 எம்பி அளவு உள்ள பிளாஷ் ட்ரைவ் தேவை. ஆனால் 1 ஜிபி பயன்படுத்துவது நல்லது. இப்போது மிகவும் குறைவான விலையில், பிளாஷ் ட்ரைவ் கிடைப்பதால், இன்னும் கூடுதலாக கொள்ளளவு கொண்ட பிளாஷ் ட்ரைவினைப் பயன்படுத்தலாம். உங்கள் கம்ப்யூட்டர் இதன் பின் வேகமாகச் செயல்படுவதனைக் காணலாம்.

2.கிளிப் போர்டைக் காலி செய்திட: பல வேளைகளில் நாம், நம்மை அறியாமல், பெரிய அளவில் டேட்டாவினை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்வோம். அதனைப் பயன்படுத்துவோம்; ஆனால் கிளிப் போர்டில் இருந்து நீக்க மாட்டோம்; அல்லது மறந்துவிடுவோம். அதனால் தான் ஆபீஸ் புரோகிராம்களை மூடுகையில், நீங்கள் அதிகமான டேட்டாவினைக் கிளிப் போர்டில் வைத்திருக்கிறீர்கள். அதனை அப்படியே வைத்திருக்கவா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். இவ்வாறு கிளிப் போர்டில் வைக்கப்படும் டேட்டா அளவு பெரிய அளவில் இருந்தால், சிஸ்டம் இயங்கும் வேகம் குறையும். ஏனென்றால், இது அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும். பெரிய அளவிலான டெக்ஸ்ட் அல்லது படம் ஒன்றைக் காப்பி செய்கிறீர்கள். அது கிளிப்போர்டில் சென்று அமர்ந்து கொள்கிறது.

பின் அதனை இன்னொரு பைலில் ஒட்டுகிறீர்கள். ஒட்டப்பட்டாலும், அது கிளிப் போர்டில் இடத்தைப் பிடித்துக் கொண்டுதான் இருக்கும். இதனால் கம்ப்யூட்டர் இயங்கும் வேகம் தடைப்படும். இதனைத் தீர்க்க, கிளிப் போர்டில் உள்ளதை, உடனே எளிதான முறையில் காலி செய்திட வேண்டும். இதற்கென ஷார்ட் கட் ஒன்றை டெஸ்க் டாப்பில் அமைக்கலாம். மேலும் காலி செய்வதன் மூலம், கிளிப் போர்டில் உள்ளதை, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள் அறியும் வாய்ப்பினைத் தடுக்கலாம்.

முதலில், டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில்New, பின் Shortcut என்பவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, Create Shortcut என்னும் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் நீள் சதுரம் ஒன்று தரப்படும். அதில் cmd/c “echo off /clip” என டைப் செய்திடவும். அடுத்து நெக்ஸ்ட் என்பதில் டைப் செய்து, பின் இந்த ஷார்ட் கட் கீக்கு ஒரு பெயர் கொடுத்து, Finish என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த ஷார்ட் கட் ஐகானில் கிளிக் செய்திடுகையில், கிளிப் போர்டில் காப்பி செய்த டெக்ஸ்ட், படம் போன்றவை நீக்கப்பட்டு, மெமரி இடம் அதிகமாகும்.

3. விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாக்க: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் டெக்ஸ்ட் சைஸ் 96 டி.பி.ஐ. (DPI  dots per inch)  அதாவது 100%. ஆனால் இதனையும் நாம் விரும்பும்படி அட்ஜ்ஸ்ட் செய்திடலாம். இதனை நம் மானிட்டரின் ஸ்கிரீன் ரெசல்யூசனை மாற்றாமலேயே மேற்கொள்ளலாம். ஸ்டார்ட்(Start)மெனு சென்று, கண்ட்ரோல் பேனல்(Control Panel) தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில் டிஸ்பிளே (Display) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர்  Adjust Font Size (DPI) என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Large Sizeஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply  மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து விண்டோஸ் மீண்டும் பூட் ஆகும்போது, இந்த மாற்றங்கள் அமலாக்கப்பட்டு, விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாகக் காட்டப்படும்.

இந்த DPI Scaling Windowவில், நமக்கேற்ற வகையில், எழுத்தின் அளவை செட் செய்திட, ஒரு ஸ்கேல் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை எப்படிக் கையாள்வது என்பது, இதனைப் பார்த்தாலே புரியும். இதனை நீங்களாக செட் செய்து, பின் டெக்ஸ்ட் அளவைப் பார்த்து, அதன் பின் உங்கள் மனதிற்கு நிறைவைத் தரும் வரையில், அளவை மாற்றிப் பின் சரியான அளவு வந்த பின், அதனையே கொள்ளலாம்.

4. அட்ரஸ் பார் வழி இணைய தளம்: நாம் எல்லாரும், இணையதளம் ஒன்றைப் பார்க்க, முதலில் பிரவுசரைத் திறக்கிறோம். பிரவுசரில் ஹோம் பேஜாக ஏதேனும் தளம் ஒன்றை அமைத்திருந்தால், முதலில் அது திறக்கப்படுகிறது. பின்னர், நாம் காண விரும்பும் தளத்தின் முகவரியினை, அட்ரஸ் பாரில் டைப் செய்து பெறுகிறோம். இது சற்று தேவையற்ற நேரத்தை எடுத்துக் கொள்கிறது. விண்டோஸ் 7 தொகுப்பில் இதற்கு ஒரு சுருக்கு வழி உள்ளது.

முதலில் உங்கள் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Toolbars தேர்ந்தெடுத்து, அதில் Addressஎன்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் டாஸ்க் பாரில், Address என்ற வரி கிடைக்கும். இதில் நேரடியாக, நீங்கள் காண விரும்பும், இணைய தள முகவரியினை டைப் செய்திடலாம். இதில்http:// அல்லது www என்பதெல்லாம் தேவையில்லை. எடுத்துக்காட்டாக ஞீடிணச்ட்ச்டூச்ணூ என்று நேரடியாக டைப் செய்திடலாம். டைப் செய்தவுடன், என்டர் தட்டவும். நீங்கள் செட் செய்துள்ள பிரவுசர் இயக்கப்பட்டு, இந்த இணைய தளம் காட்டப்படும். டாஸ்க் பாரில் உள்ள அட்ரஸ் பாரில் உள்ள இணைய முகவரியின நீக்க, ஷார்ட் கட் மெனுவில் அட்ரஸ் பாரில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இது போல பல செயல்பாடுகளில், விண்டோஸ் 7 தொகுப்பு நம் வேலைத்திறனைக் குறைப்பதுடன், விரைவாகவும் செயல்பட பல வழிகளைத் தருகிறது. பின்னர் அவற்றைக் காணலாம்.

Dileep

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo