கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jan 29, 2010

மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி

பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.

ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.

ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.

தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.

நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.

ஸ்கைபயரின் இணையதளம். உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.

-TVS50

Leia mais...

Jan 28, 2010

குழந்தைகளுக்கு பாதுகாப்பான சைபர் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்



சிறிய வயது உள்ள குழந்தைகள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உள்ளது. முற்றிலும் வண்ணமயமாக்கப்பட்ட குழந்தைகள் விளையாடும் பிளே ஸ்டேசன் போல் உள்ளது.
முதலில் இதன் ஹார்டுவேர் கான்பிக்ரேசன் பற்றி பார்ப்போம்.
  • Intel Pentium Dual Core E5200 CPU
  • 19”inch touchscreen LCD
  • 500GB HDD
  • 4GB RAM
  • DVD super drive
  • Intel GMA 3100 3D Graphic Card
  • Realtek HD audiO 
  •  Windows 7 OS
இந்த டெஸ்க்டாப் கம்யூட்டருக்கு பிரிமியர் கிட்ஸ் சைபர்நெட் ஸ்டேசன் (Premier Kids Cybernet station) என்று பெயர் வைத்துள்ளனர். தண்ணீர் கீபோர்டில் பட்டால் கூட எந்த பழுதும் ஏற்படாது என்பதில் இருந்து மானிட்டரை தொட்டு இன்புட் கொடுக்கலாம் என்பதுவரை அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாக தான் உள்ளது.

இண்டெர்நெட்டில் ஆபாச இணையதளங்களை தடுக்கும் மென்பொருளும் எந்த வைரஸும் கம்யூட்டரை தாக்காத வண்ணம் உள்ள மென்பொருள்களையும் வடிவமைத்துள்ளனர். இதனுடன் குழந்தைகள் அறிவை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான பேக்கேஸும் சேர்த்தே கொடுக்கின்றனர் இதில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த டொட்லர் என்று முதல் பேக்கேஸ். இரண்டாவது 5  முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த கைண்டர்கெர்டன் என்ற பேக்கேஸ்.மூன்றாவதாக 11 முதல் 15  வயது வரை உள்ள தொடக்க மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான  பேக்கேஸும் உள்ளது.

இத்தனை வசதிகளும் உள்ள இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் விலை கொஞ்சம் அதிகம் தான் இதன் விலை $1999 அமெரிக்க டாலர்.

Lankasritech

Leia mais...

Jan 26, 2010

வைரஸ் பரவலை தடுக்க மைக்ரோசாப்ட்டின் 'பாதுகாப்பு கவசம்'


கடந்த வாரம் சீனாவில் கூகுள் நிறுவன செயல்பாடுகளை பெருமளவில் பாதித்த வைரஸைப் போல, தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை குறி வைத்து பரவி வரும் வைரஸ் தாக்குதலிலிருந்து தனது வாடிக்கையாளர்களைக் காக்க புதிய வகை சாப்ட்வேரை களம் இறக்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில், கூகுள் உள்பட சீனாவில் இயங்கி வரும் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் குறி வைத்து கடந்த வாரம் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டது.

குறி்ப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மூலமாக இந்த வைரஸ் பரப்பப்பட்டது.

இதையடுத்து எக்ஸ்புளோரர் பிரவுசரை பயன்படுத்துவோரைக் காக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு புதிய சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. இதை நிறுவிக் கொண்டால் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியுமாம்.

இதுகுறித்து உலகின் முன்னணி பாதுகாப்பு சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான சிமென்டெக்கின் பாதுகாப்பு ஆய்வாளர் ஜான் ஹாரிசன் கூறுகையில், மைக்ரோசாப்ட்டின் பலவீனமான பிரவுசர்களின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அவற்றை செயலிழக்க வைக்கக் கூடிய வைரஸ்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.

இப்போது இந்த வைரஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6ஐ வெகுவாக தாக்குகிறதாம். 7 மற்றும் 8வது வெர்சனை தாக்கக் கூடிய வகையில் அந்த வைரஸ்களை வலுவாக்கும் முயற்சிகளிலும் 'ஹேக்கர்கள்' ஈடுபட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 100 முன்னணி இணையத் தளங்களில் இதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இவை மிகவும் அபாயகரமானவை. பிரவுசர் வழியாக நுழைந்தவுடனேயே இது கம்ப்யூட்டரைத் தாக்கி விடும் என்றார்.

தற்போதைய புதிய சாப்ட்வேரால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் வைரஸ் தாக்குவதைத் தடுக்க முடியும் என மைக்ரோசாப்ட் கூறுகிறது.

மேலும், சில வகை வைரஸ்கள் மூலம் நமது கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாக்கள் உள்ளிட்டவற்றை தொலை தூரத்திலிருந்தபடி உளவு பார்க்கும் வேலைகளையும் சிலர் செய்ய ஆரம்பித்துள்ளனராம் என்கிறார் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பாமர்.

சீனாவில் கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பெரும் வைரஸ்-உளவு சாப்ட்வேர் தாக்குதலால், அங்கிருந்து தனது அலுவலகங்களை இடம் மாற்றப் போவதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. அதேசமயம், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னிடம் அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

வைரஸ் தடுப்பு சாப்ட்வேரை நிறுவிக் கொள்ள தனது இணையதளத்திற்குச் செல்லுமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

Leia mais...

Jan 25, 2010

ஹக்கர்களின் அட்டகாசம் யூடியுப்யையும் விடவில்லை


நாளுக்கு நாள் பெருகிவரும் ஹக்கரின் அட்டகாசம் இப்போது யூடியூப் வரை சென்றுள்ளது. சென்ற வாரம் தான் டிவிட்டரை ஒரு வழிபடுத்தினார்கள் அதற்குள் இரண்டு நாட்களுக்கு முன் யூடியுப்பையும் ஒரு கை பார்த்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன் யூடியுப் இணையதளத்தை திறந்தால் YouTube is currently experiencing some downtime issues, reporting a “Http/1.1 Service Unavailable” error or a a 500 Internal Server  error. இப்படி ஒரு செய்தி தெரிந்தது உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் யூடியுப் இணையதளத்தை திறந்தவர்கள் ஒன்றும் புரியாமல்  விழித்தனர் ஒருத்தர் டிவிட்டரில் எனக்கு இங்கு யூடியூப் தெரியவில்லை என்று ஒரு டிவிட்டை தட்டி விட விஷயம் காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்தது. சரியாக 20 நிமிடம் ஒன்றும் செய்ய முடியவில்லை அடுத்து உடனடியாக நம் கூகுள் இந்த பிரச்சினையை பெரிதாகும் முன் சரி செய்தது. இதைப்பற்றி கூகுளிடம் கேட்டதற்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் நம்மிடமே கைவரிசை காட்டிவிட்டனரே என்று குழப்பத்தில் உள்ளனர். இப்போது தான் அனைவருக்கும் சீனாவின் இராஜதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்திருக்கிறது.

இப்படியே சென்றால் சீனாவுக்கும் இண்டெர்நெட் வசதியே இல்லாமல் செய்தாலும் செய்துவிடுவார்கள் போல அல்லது சீனா முழுவதையும் இன்ட்ராநெட் ஆக மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதிற்கு ஒன்றுமில்லை.

Leia mais...

Jan 23, 2010

இரட்டையான கோப்புகளை அழிக்க உதவும் மென்பொருள்

தற்போது இணையம் வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் அனைவராலும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொவரும் அவர்களுக்கு தேவையானவற்றை உதாரணமாக songs,ebooks,ringtones,wallpaper டவுன்லோட் செய்வது உண்டு . பல கோப்புகளை டவுன்லோட் செய்யும் போது ஒரே மாதிரியான கோப்புகள் மீண்டும் டவுன்லோட் செய்ய வாய்ப்பு உண்டு. அதாவது Duplicate ஆக வாய்ப்பு உண்டு.இதே போல் பல இரட்டையான கோப்புகள் உங்கள் கணினியில் இருக்கலாம். இது போன்ற இரட்டையான கோப்புகளை நாமே தேடி பிடித்து அழிப்பது மிகவும் கடினம். இவைகளை அழிக்க ஒரு மென்பொருள் உள்ளது பெயர் Auslogics Duplicate File Finder

இந்த மென்பொருளில் உங்களுக்கு தேவையான Folders,Drives தேர்வு செய்து இரட்டையான கோப்புகளை கண்டுபுடிக்கலாம்.




மேலும் பெயர் மட்டுமன்றி Size,Content மற்றும் தேதி ஆகியவற்றை வைத்தும் இரட்டையான கோப்புகளை கண்டுபுடிக்கும் வசதி இதில் உண்டு.





மென்பொருள் தரவிறக்க சுட்டி





Leia mais...

Jan 22, 2010

மொபைல் இணைய தேடல்


மொத்த இன்டர்நெட் தேடலில், மொபைல் போன் வழியாகத் தேடுவது இப்போது 1.3 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இறுதியில், டிசம்பர் மாதத்தில் இந்த தேடல் மிக அதிகமாக இருந்ததாக இவற்றைக் கவனித்து வரும் வெப் மெட்ரிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்ற பிப்ரவரி மாதத்தில், மொத்த இன்டர்நெட் பயன்பாட்டில் 0.57 சதவீதம் ஆக இருந்த மொபைல் வழித் தேடல் தற்போது 1.35 சதவீதம் டிசம்பரில் உயர்ந்தது. இதனால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழி தேடல் 99.28சதவீதம் லிருந்து 98.36% ஆகக் குறைந்தது.

மொபைல் வழி இன்டர்நெட் தேடலில் கூகுளின் ஆண்ட்ராய்ட் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இதன் பயன்பாடு 58.4 சதவீதம். பிளாக்பெரி 22.2 சதவீதம், ஐபோன் 20.1சதவீதம், சிம்பியன் 19.01 சதவீதம் மற்றும் ஜாவா எம்.இ. 15.6 சதவீதம் ஆக இருந்தன.

- Lankasritech

Leia mais...

Jan 21, 2010

கணிணி வேகம் அதிகரிக்க


நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு குட்டீசோ விளையாட Game சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திருப்போம் இதனை கணிணி software Registery ல் அப்டேட் செய்து விடும் நாம் இந்த game விளையாட தொடங்கும் போது புதிய சில Instructions மூலம் இயங்க வைக்கும் சிலநாட்களில் அதனை Delete செய்து அடுத்த Game விளையாடுவோம் .

நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும்.

ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software ஐ ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்க்கு registry error என்று பெயர் . இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் மெதுவாக செயல்பட தொடங்கும் .இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது, இதனை கண்டறிந்து நீக்க எனப்படும் software உள்ளது. இதனை நிறுவி அவற்றை முழுமையாக நீக்கலாம்.

தரவிறக்க சுட்டி

Leia mais...

Jan 20, 2010

அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம்



அசுஸ் நிறுவனமும் புதிதாக நாமும் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை களம் இறக்கினால் தான் நம்மால் மார்க்கெட்டிங்கில் இருக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்து புதிதாக அசுஸ் வேவ்பேஸ் அல்ட்ரா என்பதை உருவாக்கியுள்ளனர். கையில் நாம் கட்டும் பிரேஸ்லட் போன்று இதன் வடிவம் இருக்கிறது.


பொர்ட்டபிள் எங்கு வேண்டுமானாலும் நம் கையில் மாட்டி எடுத்துச் செல்லலாம். இந்த வேவ்பேஸ் அல்ட்ராவின் பயன் என்ன வென்று பார்த்தால் இதில் நாம் முக்கியமாக செய்ய வேண்டிய வேலைகளை
குறித்து வைத்துக் கொள்ளலாம். இதனுடன் OLED டிஸ்பிளேயும் உள்ளது. இதில் நாம் தேவையான நிகழ்வை பார்த்துக்கொள்ளலாம். நேரம் பார்ப்பதிலிருந்து ப்ளுடுத் வரை அனைத்தும் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் இதில் நம் உடலின் வெப்பநிலையை அறிந்து கொள்ளவும் இரத்த அழுத்தத்தை கண்டறியவும் உடனுக்குடன் தெரியப்படுத்தும் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தொலைவில் இருந்தும் கூட நாம் இதற்கு கட்டளை கொடுக்கலாம். இப்படி பல தொழில்நுட்ப மாற்றங்களுடன் அசுஸின் வேவ்பேஸ் அல்ட்ரா விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.



- வின்மணி



Leia mais...

Jan 19, 2010

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?


விண்டோஸ் 7 வெளியானதிலிருந்து அதன் பரபரப்பு பற்றிக் கொண்டது. விண்டோஸ் 7 பற்றி எல்லா தரப்பினரிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் வருகின்றன. விண்டோஸ் 7 ஐ நிறுவுதல் அல்லது மேம்படுத்தலும் இலகுதான் ஆனால் உடனடியாக செய்யலாமா செய்வதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை பற்றி கேள்விகள் எழலாம் அவற்றை பற்றி பார்க்கலாம்.

ஏன் அப்கிரேட் செய்ய வேண்டும்?

1. விண்டோஸ் 7 நீங்கள் எங்கிருந்தும் கணணியை இயக்குவதை இலகுவாக்கிறது. அனைத்து டேட்டாக்களையும் பாதுகாப்பாக கையாள உதவுகிறது. நாளந்த நடவடிக்கைகளை சற்று இலகுவாக்குகிறது.

2. உங்கள் தகவல்களுக்கு அதிக பாதுகாப்பளித்தல். விண்டோஸ் 7 இல் இருக்கும் NAP எனும் தொழில்நுட்பம் அதிக பாதுகாப்பை நெட்வேர்க் கணணிகளுக்கு வழங்குகிறது. தேவையற்ற அப்பிளிகேஸன்களை நிறுத்தி வைக்க உதவுகிறது.

3. விண்டோஸ் 7 இலகுவாக மனேஜ் செய்து கொள்ள முடிகிறது. இதற்கு MDOP எனும் தொழில்நுட்பம் உதவுகிறது.

4. விண்டோஸ் 7 விஸ்டாவை தழுவிய பதிப்பு போன்று தோன்றினாலும் விஸ்டாவை விட அதிக நிலையான (Stable) பதிப்பாக இருக்கிறது.  விஸ்டாவை விட வேகமாகவும் குறைவான வழங்களை பயன்படுத்தியும் இயங்குகிறது. மற்றைய இயங்கு தளங்களை விட அதிக Performance ஐ காட்டுகிறது.

மேம்படுத்த முடிவு செய்து விட்டீர்களெனில் அதிலுள்ள சிக்கல்கள் என்ன?

1. அனைத்து மென்பொருட்களும் இயங்குமா என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? மற்றும் நிலையான பதிப்பென்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது.  இந்த சிக்கலில் இருந்து விடுபட நீங்கள் பாவிக்கும் மென்பொருட்களின் நிறுவனங்களின் இணையத்தளங்களை தொடர்பு கொண்டு அவர்களின் பதிப்புக்கள் விண்டோஸ் 7 க்கு இசைவாக்கப்பட்டுள்ளதா என்பதை பார்ப்பதாகும்.

2. அப்பிளிக்கேஸன் மைகிரேஸன் என்பது சிறிய, பெரிய நிறுவனங்களுக்கு பொருந்தும். விஸ்டா பதிப்பு வெளியாகும் போதும் இதே சிக்கலை இந்நிறுவங்கள் எதிர்கொண்டது. இன்னும் விரிவாக கூறினால் நிறுவனத்துக்கென உருவாக்கப்பட்ட அப்பிளிகேஸன் கள் விண்டோஸ் 7 ற்கு ஏற்றவாறு மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு முழுவதுமாக விண்டோஸ் 7 க்கு மாறுவதற்கு முதல் வியாபார அப்பிளிகேசன்களை ஒரு சில கணனிகளில் பரீட்சித்து விட்டு மேலும் தொடர்வது தீர்வாக இருக்கும் .

Leia mais...

Jan 17, 2010

Trial மென் பொருளை எளிதாக கிராக் செய்ய...

இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் பல பயனுள்ள மென்பொருட்கள் trial ஆகவே உள்ளது. எனவே இதனை சில நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது.

ஒவ்வொரு முறை நாம் அந்த மென்பொருளை பயன்படுத்த ஆரம்பிக்கும் போதும் அது நம் கணிணியின் தேதியையும் அந்த மென்பொருள் பதியப்பட்ட தேதியையும் ஒப்பிடுகிறது. நமது கணிணியின் தேதி trial தேதிக்குள் இருந்தால் பயன்படுத்த அனுமதிக்கிறது. நமது கணிணியின் தேதியை trial நாளுக்குள் இருக்குமாறு செய்ய Run As Date என்கிற மென்பொருள் பயன்படுகிறது. இதனை Windows 2000, XP, 2003 and Vista ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.




நீங்கள் பதியும் மென்பொருளின் தேதியை நினைவு வைத்துக்கொள்ளவும், பின்னர் அதன் trial period முடியும் வரை இதனை சாதாரணமாக பயன்படுத்தலாம்.
Trial period முடிவதற்கு ஒரு நாள் முன்பு Run As Date மென்பொருளை இயக்கவும்.
பெரும்பாலான மென்பொருட்களை இதனைக்கொண்டு பயன்படுத்த முடியும்.

தரவிறக்க சுட்டி

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo