ஐ பேட் - புதிய டிஜிட்டல் ஆப்பிள்
ஒவ்வொருமுறை ஆப்பிள் ஒரு புதிய சாதனத்தைக் கொண்டு வருகையில், இந்த உலகம் அதனை வியந்து பார்க்கிறது. சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆப்பிள் ஐ–போனைக் கொண்டு வந்த போது, ஆச்சரியப்பட்ட விழிகள் இன்று மீண்டும் விரியத் தொடங்கி உள்ளன.
மேக் கம்ப்யூட்டர், ஐபாட் மியூசிக் பிளேயர் மற்றும் ஐ போன் மொபைல் என முற்றிலும் புதிய சாதனங்களால், டிஜிட்டல் உலகில் புரட்சி ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவனம், சென்ற ஜனவரி 27ல் ஐ–பேட் (iPad) என்ற பெயரில் இன்னொரு டிஜிட்டல் அதிசயத்தைக் கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட் போனுக்கும் லேப் டாப் கம்ப்யூட்டருக்கும் இடைப்பட்ட சாதனமாக இது இயங்குகிறது. இருந்தாலும் இரண்டினையும் தன் திறமையில் ஓரம் கட்டும் சாதனமாக உள்ளது. நெட்புக் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, ஆனால் முற்றிலும் புதுமையான அனுபவத்தினைத் தரும் சாதனமாக இது இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் இறுதியில் விற்பனைக்கு பொது மக்களுக்குக் கிடைக்க இருக்கும் ஐ–பேட், ஆப்பிள் நிறுவனம் தன் திறமையைக் காட்ட வெளியிட்ட அதிரடி சாதனமாகும். ஆறு மாடல்களில் வெவ்வேறு திறனுடன் இது வெளி வருகிறது. இணையத்தைப் பிரவுஸ் செய்திடவும், அன்றாட வேலைகளான இமெயில், பாட்டு, படங்களைக் கையாளவும் மொபைல் போன் போதுமானதாக இல்லை; ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் சற்று அதிகமானது. எனவே தான் இடையே ஒரு சாதனத்தைக் கொண்டால் என்ன என்ற எண்ணத்தில், ஆப்பிள் நிறுவனம் ஐ–பேட் உருவாகியுள்ளது. இதில் ஐ–போன் அப்ளிகேஷன்கள் அனைத்தையும் இயக்கலாம்.
சிறிது வளர்ந்த ஐ–போன் போலத் தோற்றமளிக்கும் இதன் பரிமாணம் 243 x 190 x 13mm. வை–பி போன் 680 கிராம்; வை–பி + 3ஜி இணைந்த ஐ–பேட் 730 கிராம். இதன் தொடுதிரை அனைத்து மாடல்களிலும் 9.7 அங்குல அகலத்தில் 1024 x 768 ரெசல்யூசனைக் கொண்டது. வை–பி, புளுடூத் 2.1., ஜி.பி.எஸ்., காம்பஸ், மைக், ஸ்பீக்கர், ஆப்பிள் வடிவமைத்த 1எஏத் வேகத்தில் இயங்கும் ஆப்பிள் 4 ப்ராசசர், யு.எஸ்.பி. இணைப்பு எனப் பல வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் பேட்டரி 10 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது.
ஐ–பேட் பயன்படுத்தி இணையத்தை உலா வரலாம்; கேம்ஸ் விளையாடலாம்; இசையை ரசிக்கலாம்; போட்டோ பார்க்கலாம்; காலண்டர், மேப் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஐ ட்யூன்ஸ் ஸ்டோர் பெற்று தேவைப்படும் மியூசிக் மற்றும் வீடியோ பைல்களை வாங்கி ரசிக்கலாம்.
ஒரு 3ஜி போனாகப் பயன்படுத்தலாம். இணையப் பக்கங்களை இதில் பார்ப்பது மிகவும் தெளிவாக உள்ளது. போர்ட்ரெய்ட் அல்லது லேண்ட்ஸ்கேப் என எந்த தோற்றத்தில் பார்த்தாலும் வண்ணங்களும், எழுத்துக்களும் மிகவும் துல்லியமாக உள்ளன. விரல்களால் தொட்டு இணையப் பக்கங்களில் மேலும் கீழும் செல்ல முடிகிறது. போட்டோக்களைச் செல்லமாகக் கிள்ளினால் விரிகிறது, சுருங்குகிறது. ஐ–பேடை அழகான டிஜிட்டல் போட்டோ பிரேமாகப் பயன்படுத்தலாம்.
இமெயில்களைப் பார்ப்பது தனி அனுபவம். லேண்ட்ஸ்கேப் வகையில் திறந்திருக்கும் மெயிலும், மெயில் இன்பாக்ஸும் தெரிகின்றன. ஐ–பேடை போர்ட்ரெய்ட் வகைக்குத் திருப்பினால், பார்த்துக் கொண்டிருக்கின்ற மெசேஜ் மட்டும் திரை முழுவதும் தெரிகிறது. மெசேஜ் டெக்ஸ்ட் அமைப்பது எளிது; அதே போல ஒரு விரலால் தட்டினால் மெயிலை அழிக்கவும் முடிகிறது. யாஹூ மெயில், ஜிமெயில், ஹாட் மெயில் என அனைத்து பெரிய மெயில் தளங்களுடனும் இது செயல்படுகிறது.
வீடியோக்களின் தெளிவு பிரம்மிக்க வைக்கிறது. குறிப்பாக யு–ட்யூப் எச்.டி. வீடியோக்கள் அழகாகவும் ஆழமாகவும் காட்சி அளிக்கின்றன.
ஐ–பாட் மியூசிக் பிளேயர் இதில் இணைந்துள்ளது. மியூசிக் ஆல்பம், பாடல், பாடியவர், பாடல் வகை எனப் பல வகைகளில் வகைப்படுத்திப் பார்க்க முடிகிறது. இதில் உள்ள திறன் கொண்ட ஸ்பீக்கரிலும் கேட்கலாம்; புளுடூத் வயர்லெஸ் ஹெட்போன் மூலமாகவும் கேட்கலாம்.
ஐ–ட்யூன்ஸ் ஸ்டோர் ஒரு விரல் தட்டில் கிடைக்கிறது. பாடல்கள், வீடியோக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை வேகமாக பிரவுஸ் செய்திடலாம். பாடல்களை வாங்கும் முன் சிறிது கேட்டு பின் தேர்ந்தெடுக்கலாம். பின் வாங்கலாம். உங்களிடம் ஏற்கனவே உள்ள பாடல்களை இதில் இணைக்கலாம்.
ஆப்பிள் ஸ்டோரும் இதே போல எளிதாகக் கிடைக்கிறது. கேம்ஸ், பிசினஸ் அப்ளிகேஷன் புரோகிராம் மற்றும் அனைத்து வகைகளிலும் புரோகிராம்கள் குவிந்து கிடக்கின்றன. 140,000 அப்ளிகேஷன்கள் விற்பனைக்கு உள்ளன.
எந்த ஐ–புக்கையும் இதில் படிக்கலாம். ஸ்டோரிலிருந்து விலைக்கு வாங்கலாம். வாடகைக்குப் பெற்று படிக்கலம்.
உலகின் அனைத்து பகுதிகளின் சாட்டலைட் இமேஜ்களைத் தெருவாரியாகப் பெறலாம். இவற்றையும் உணவு விடுதி, பள்ளிகள், திரை அரங்குகள் என வகை வகையாய்ப் பிரித்துப் பெறலாம். இதில் உள்ள காலண்டரைப் பயன்படுத்தி, நம் வேலைக்கான அட்டவணையை அமைக்கலாம்.
நாம் அழைக்க வேண்டிய தொடர்புகளைப் பெயர், தொலைபேசி எண்கள் மற்றும் முக்கிய தகவல் அடிப்படையில் பிரித்துக் காணலாம். ஒரு தொடர்பினைக் காண்கையில் மற்றவற்றின் பட்டியலும் அருகே காட்டப்படுகிறது. இதில் உள்ள ஸ்பாட் லைட் என்னும் தேடல் வசதி மூலம் மெயில், காலண்டர், காண்டாக்ட்ஸ், ஐபாட், நோட்ஸ் ஆகிய அனைத்தையும் ஒருங்கே வைத்துத் தேட முடிகிறது.
ஐ–பேட் சாதனத்தில் ஒரு நேரத்தில் ஒரு அப்ளிகேஷனை மட்டுமே இயக்க முடியும். இது ஒரு பிரச்னைதான். இதில் கீ போர்டு இல்லை. ஆனால் அகலமான திரையில் உள்ள விர்ச்சுவல் கீ போர்டு எளிதாக இயக்கும் வகையில் உள்ளது. தனியே வாங்கி இணைத்துப் பயன்படுத்த கீ போர்டு ஒன்றினை ஆப்பிள் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. கேமரா இணைக்கப் படவில்லை. மெமரி கார்ட் இணைப்பு இல்லை.இன்ப்ரா ரெட் இணைப்பு இல்லை. ஜாவா இல்லை. ஐ–பேட் சாதனத்தின் தொடக்க விலை 499 டாலர். மக்களுக்கு எட்டும் தொலைவில் உள்ளது. ஆனால் இதன் பலவகை திறன் கொண்ட ஆறு மாடல்களுக்கு இடையே உள்ள விலை வேறுபாடு மலைக்க வைக்கிறது. அதிகபட்ச விலை 829 டாலர்.
- Axleration