கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Apr 16, 2010

kin mobile - microsoft தொழில்நுட்பம்

மென்பொருள்  உலகின்  உச்சத்தில்  அமர்ந்திருக்கும் மைக்ரோசாப்ட்  நிறுவனம்  தன் முதல் மொபைல் போனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. சமூக தளங்களை அதிகமாக பயன்படுத்துவோரை மனதில் கொண்டு  கின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கின் கைபேசிகள் இரண்டு மாடல்களில் வருகிறது.  கின் ஒன்று மற்றும்  கின்
இரண்டு இரண்டுமே,  சமூக தளங்கள்  மற்றும்  வீடியோதளங்களை  தங்கள்
கைபேசியிலிருந்த  தொடர்புகொள்ள ஏற்ற வகையில்  அமைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட்  தெரிவித்துள்ளது. இரண்டு போன்களும் ட்ச் ஸ்கீரின்களும், கீழ் நகரும் தட்டச்சும் வசதியும் கொண்டது. இவை விண்டோஸ் மொபைல் மென்பொருள் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.

கின் ஒன்று சிறியது கையடக்கமானது.4 GB ஐந்து மெகாபிக்சல் கேமிரா. கின்
இரண்டு பெரிய திரையும் தட்டச்சு பலகையும் , அதிக சேமிப்பு வசதி( 8GB)
மற்றும் அதிகபட்ச துல்லியம் கொண்ட எட்டு மெகா பிக்சல் காமிராவும் கொண்டது மற்றும் அதிக துல்லியத்துடன் வீடியோ உருவாக்குவதற்கும் வசதி கொண்டது.

’கின் எப்போதும் நண்பர்கள்,  உறவினர்களுடன் தொடர்பில் இருக்கவும்,
விசயங்களை பரிமாறிக் கொள்வதிலும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதிலும் விருப்ப முடையவர்களுக்கானது. இந்த புதிய தலைமுறை கைபேசியில் பேசுவதுடன் கூட பல விசயங்களை எதிர்பார்க்கிறார்கள்’ என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ராபி பேட்ச் கூறுகிறார்.

கின் கைப்பேசிகள் ஜப்பானைச் சேர்ந்த ஷார்ப் நிறுவனத்தினால் செய்யப்பட்டு
அமெரிக்காவில் வெரிசோன் வைர்லெஸ் கம்பெனியால் விற்பனைக்கு கொண்டு வரப்படுமெனத் தெரிகிறது. ஐரோப்பாவில் வோடாபோன் விற்பனை செய்யும்.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo