கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Apr 23, 2010

கம்பியூட்டரா? கொக்கா

நினைத்ததை செய்தும்
நேரத்தை விழுங்கும் போதை;
விஞ்ஞானம் பேசி அஞ்ஞானத்திலும்
ஆழ்த்தும் கண்டுபிடிப்பு; கணினி!

வளர்க்கவும் கெடுக்கவும் தெரிந்த
ஆசிரியன்;
மின் சக்தியில் உயிர் பெரும் 
ஜடப்பொருள்;கணினி!

உலகம் பற்றி - ஒரு
சொடுக்கலில் காட்டும் வித்தகன்;
மனிதன் விதைத்ததில் - விலையும்
அறிவு ஜாலம்;கணினி!

சான்றிதழ் இன்றி
சர்வமும் கற்பிக்கும் கல்வியாலயம்;
சரித்திரம் பேசி, இலக்கியம் புனைய
மெத்தனமாய் போட்ட முதலீடு;கணினி!

நூறு பேர் வேலையை விழுங்கி
முதலாளிகளை வளர்த்த உத்தி;
மாத வருட  வேலைகளை
ஒரு நாளில் முடிக்கும் தேச வளர்ச்சி;கணினி!

நாடு கடந்து வாழ்பவருக்கு
கடலை -  தூரத்தை - வென்று
உறவுகளை வீட்டிற்குள் காட்டிய விந்தை;
தொலைபேசியில் சிறுக சிறுக தொலைத்ததை
ஒருநாளில் மொத்தமாய் வாங்கிய சந்தோஷம்;கணினி!

பட்டிதொட்டியெல்லாம்
பறந்து பரவிய அதிசயம்;
வீட்டுக்கு வீடு -
தொலைகாட்சியை விற்றாகவேணும்
வாங்கவேண்டிய அவசியம்;கணினி!

மொத்தத்தில், இருப்பவர் அனுபவிக்கும்
ஆதாயம்;
இல்லாதவன் இன்றும் ஏங்கி.. பயந்து.. பார்க்கும்
'என்னவோ ஒரு டி.வி. மா(தி)ரி பெட்டி; கணினி!

வித்யாசாகர்

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo