கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Apr 25, 2010

இன்டர்நெட்டில் பதற்றம் தரும் செய்திகள்

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் அடிக்கடி சில போலியான செய்திகள், தகவல்கள் நம்மை அச்சுறுத்தி உடனே செயல்பட வைக்கும் வகையில் வருவது அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகிறது.
இந்த செய்திகள் பலவகைப்படும். சில எடுத்துக் காட்டுக்களைப் பார்க்கலாம். இவை எல்லாமே பாப் அப் விண்டோக்களில் காட்டப்படும். உங்கள் கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்குவதை அறியவில்லையா? வைரஸ் பாதித்துள்ளது.
ஒரு அப்டேட் செய்திட வேண்டும். ட்ரோஜன் அல்லது மால்வேர் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்துள்ளது. இந்த லிங்க்கில் கிளிக் செய்தால் கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படும், வைரஸ் நீக்கப்படும்.


இவற்றைப் படித்த நாம் அனைவருமே சிறிது கலவரப்படுவோம். உடனே செயல்பட்டு லிங்க்கில் கிளிக் செய்து வைரஸை இலவசமாக நீக்க முயற்சிக்க ஆசைப்படுவோம்.

இன்னும் சில செய்திகள், பெரிய புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து வந்தது போல் காட்டப்படும். அந்நிறுவனத்தின் வெப்சைட் முகவரி தரப்பட்டிருக்கும். நிறுவனத்தின் முகவரி தானே, சரியாகத்தானே இருக்கும் என்று எண்ணி கிளிக் செய்திடுவோம்.

ஆனால் ஒரு சிறு எழுத்தை மாற்றி வேறு ஒரு வெப்சைட் செல்வோம். அங்கும் நிறுவனத்தின் வெப்சைட் சாயலில் வெப்சைட் காட்டப்பட்டு நாம் மாட்டிக் கொள்வோம்.

இது போன்ற செய்திகளை நம்பி நாம் செயல்படுகையில் நம் கம்ப்யூட்டரைக் கையகப்படுத்தும் வகையில் புரோகிராம்கள் பதியப்படலாம். பின் நம் பெர்சனல் தகவல்கள் அனைத்தும், அந்த புரோகிராமினை அனுப்பியவர்கள் கைகளுக்குச் சென்றுவிடும்.

அல்லது கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் வைரஸ்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து அனைத்து மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். இது போன்ற நிகழ்வுகளை எப்படி சமாளிப்பது?

முதலில் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எந்தக் காரணத்தைக் கொண்டும், லிங்க் ஆகத் தரப்பட்டிருக்கும் இடம் அருகே கர்சரைக் கொண்டு செல்ல வேண்டாம். எங்கும் கிளிக் செய்திட வேண்டாம். உடனே மால்வேர் அல்லது வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்க ஆரம்பிக்கும். இதனைத் தடுத்து நிறுத்தும் வழி எதுவும் திரையில் கிடைக்காது.

1. ஆல்ட் + எப்4 (Alt+F4) கீகளை சேர்த்து அழுத்தினால், இந்த எச்சரிக்கை செய்தி தரும் கட்டம் மறைந்துவிடும். அல்லது பிரவுசரே மறைந்துவிடலாம். பின் மீண்டும் பிரவுசரை இயக்கி இன்டர்நெட் பிரவுசிங்கைத் தொடங்கி விடலாம்.
2. மேலே சொன்ன வழியின் மூலம், அந்த விண்டோவினை மூட இயலவில்லை என்றால், கண்ட்ரோல்+ ஆல்ட்+டெல் (Ctrl+Alt+Del) கீகளை அழுத்தி டாஸ்க் மேனேஜரைப் (Task Manager) பெறவும். இதில் அப்ளிகேஷன்ஸ் (Applications) டேப்பில் இடது கிளிக் செய்திடவும்.

3. இங்கு உங்கள் பிரவுசர் பெயர் பட்டியலில் இருக்கும். உடன் ஏதாவது புதியதாக ஒரு புரோகிராம் தெரிகிறதா என்று பார்க்கவும். இருந்தால் அதுதான் உங்களை ஏமாற்றும் புரோகிராம். அதனைத் தேர்ந்தெடுத்து என்ட் டாஸ்க் (End Task) பட்டனை அழுத்தி, அந்த புரோகிராமினை மூடவும். அப்படி ஒன்றும் இல்லை என்றால், பிரவுசர் புரோகிராமினை மூடவும்.

சில நடவடிக்கைகளை நாம் மறக்காமல் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.
எப்போதும் உங்கள் ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும். வழக்கமாகப் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இல்லாமல், வேறு ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை டவுண்லோட் செய்து, அவ்வப்போது இயக்கிப் பார்ப்பதுவும் நல்லது.

இதற்கென புரோகிராம் ஒன்றினை இணையத்தில் அண்மையில் காண நேர்ந்தது. அதன் பெயர்Malwarebytes AntiMalware. இதனை இலவசமாக டவுண்லோட் செய்து கம்ப்யூட்டரில் இயக்கலாம்.

தரவிறக்கம் செய்ய

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo