கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

May 31, 2010

பயர்பாக்ஸ் 4 வடிவமைப்பில் சுறுசுறுப்பு

தொடர்ந்து பல மாதங்களாக, கூகுள் குரோம் பிரவுசர் தன் சந்தையை விரிவு படுத்திக் கொண்டிருக்கிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9ல் புதிய வசதிகளைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் முயற்சித்துக் கொண்டுள்ளது.

எனவே மொஸில்லா தன் பயர்பாக்ஸ் தொகுப்பு 4 ஐ, எந்த விதத்திலாவது படு சூப்பராக அமைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதன் கட்டமைப்பை வடிவமைக்கும் குழுவின் தலைவர் மைக் பெல்ட்ஸ்நர் இது பற்றி அண்மையில் ஒரு பிரசன்டேஷன் அளித்துள்ளார்.

பயர்பாக்ஸ் தொகுப்பு 4 மூன்று இலக்குகளை முதலில் நிறுத்தியுள்ளது. இந்த பிரவுசரின் இணைய தளங்களின் தேடல் வேகம் சூப்பர் பாஸ்ட் ஆக இருக்க வேண்டும். எச்.டி.எம்.எல். 5 மற்றும் பிற தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இந்த பிரவுசரைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்கள் இணைய தேடலைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ள கூடுதல் வசதிகள் தரப்பட வேண்டும்.

அநேகமாக டேப்கள் அட்ரஸ் பாருக்கு மேலாக அமைக்கப்படலாம். ஹோம் பேஜ் பட்டனுக்குப் பதிலாக, ஹோம் டேப் தரப்படலாம்.
பயர்பாக்ஸ் 4 பிரவுசர் சோதனைத் தொகுப்பு வரும் ஜூன் மாத இறுதிக்குள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சரியாக வெளிவரும் நிலையில், வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் இறுதித் தொகுப்பு வெளியாகலாம்.

மொஸில்லா மட்டுமின்றி, தங்கள் பிரவுசர்களைப் புதுப்பித்து புதியனவற்றைக் கொண்டு வர முயற்சிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பல சவால்கள் முன் உள்ளன. முதலாவதாக ஸ்பீட். இந்த பிரிவில் குரோம் மற்றவற்றை முந்திக் கொண்டு தற்போது இயங்குவதுடன், இன்னும் அதனை அதிகப்படுத்தி வருகிறது. எனவே மற்றவர்கள் இதற்கு இணையாகச் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரவுசர்களுக்கும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். திடீரென அதிரடி மாற்றங்களுடன் புதிய பிரவுசர்கள் வந்தால், அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு செயல்பட அவர்கள் தயங்கலாம். மூன்றாவதாக, இப்போது பிரவுசரில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அவை பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மட்டுமின்றி, மொபைல் போன்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். இந்த பிரிவு வேறு வகையான தொழில் நுட்பத்தினையும் சூழ்நிலைகளையும் கொண்டிருப்பதால், நிறுவனங்கள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இணைய அப்ளிகேஷன்களில் தற்போது புதுமையான பல தொழில் நுட்பங்கள் வேகமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகப் புதிய பிரவுசர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo