கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jun 8, 2010

ஆன்லைன் வைரஸ் பரிசோதனை

பிரபலமான ஆண்டி வைரஸ் புரோகிராம் வைத்திருக்கிறேன். அவ்வப்போது இன்டர்நெட்டில் அதன் தளம் சென்று அப்டேட் செய்து வருகிறேன். இருந்தாலும் வைரஸ் வந்துவிட்டதோ என்று எப்போதும் அச்சம் என்று சிலர் புலம்புகின்றனர். சிலரோ இத்தகைய புரோகிராம் இருந்தும் வைரஸ் வந்துவிட்டதே என்று தவிக்கின்றனர். ஏன் இந்த நிலை? எத்தகைய திறன் மிக்க ஆண்டி வைரஸ் தொகுப்பாயிருந்தாலும் சில வைரஸ்களை, குறிப்பாகப் புதியதாக எழுதி உலாவிடப்படும் வைரஸ்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

இதற்குக் காரணம் வைரஸ்களை உருவாக்குபவர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதுதான். மேலும் பிரவுசர் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களில் ஹேக்கர்கள் நுழையும் வகையில் பல பலவீனமான இடங்கள் இருப்பதுதான். இத்தகைய சூழ்நிலைகளில் நமக்கு உதவ இணைய தளம் ஒன்று செயல்படுகிறது.

உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு புரோகிராம் அல்லது பைல் ஒன்றில் வைரஸ் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால் அல்லது டவுண்லோட் செய்யப்படும் அனைத்து புரோகிராம்களையும் நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும் என விரும்பினால் உடனே அதனை இந்த தளத்திற்கு அனுப்பலாம். இந்த தளம் நீங்கள் அனுப்பும் புரோகிராமினை முழுமையாக சோதனை செய்து வைரஸ் இருக்கிறதா எனச் சோதிக்கும்.

ஜஸ்ட் லைக் தேட் சோதிக்காமல் 36 வெவ்வேறு வகையான ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் கொண்டு சோதிக்கும். முடிவுகளை உடனே நமக்கு அறிவிக்கும். இதற்கான கட்டணம் எதுவும் இல்லை. நீங்களும் சந்தேகப்படும் அனைத்து புரோகிராம்களையும் இந்த தளத்திற்கு அனுப்பிப் பார்க்கலாமே.

தற்போது தமிழ் வலைப்பதிவுகளில் நெல்லை தமிழ் திரட்டியால் வழியே வந்த மால்வேர் வைரஸ் பிரச்சினையால் வலைத்தளங்கள் முடக்கப்படுகின்றன. தங்கள் தளங்களிலும் வைரஸ் உடுருவியிருக்குமோ என சந்தேகிப்பவர்கள் தங்கள் வலைப்பதிவுகளை BackUp செய்து இந்த தளத்தில் பரிசோதித்துப் பார்ர்க்கலாம்.

- ரமணா

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo