கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

May 14, 2011

விரைவில் அறிமுகமாகும் கடதாசி போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட கையடக்கத் தொலைபேசி



கடதாசி போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி விஞ்ஞானிகள் சிலர் சாதனை புரிந்துள்ளனர்.

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரொயெல் வெர்டெகல் என்பவர் இதனை இவ்வாரம் நடைபெறவுள்ள கணனிக் கண்காட்சி ஒன்றில் அறிமுகம் செய்யவுள்ளார்.

இக்கையடக்கத்தொலைபேசியானது அரிசோனா பிராந்திய விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடனுமே உருவாக்கப்பட்டுள்ளது.

மெல்லிய பாரங்குறைந்த புகைப்படச் சுருள் போன்ற ஒன்றாலேயே இக் கையடக்கத்தொலைபேசி உருவாக்கப்பட்டுள்ளது.

கடதாசி போல நெகிழ்வுத்தன்மை கொண்டதால் இது 'பேப்பர் போன்' என அழைக்கப்படுகின்றது. இதன் மூலம் அழைப்புக்களை மேற்கொள்ளுதல், இலத்திரனியல் புத்தகங்களை சேமித்தல், பாடல்களை செவிமடுத்தல் போன்ற பல செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியும்.

கடனட்டை ஒன்றினைப்போன்ற மெலிதான இதில் 3.7 அங்குலமான திரையும் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் பலவற்றைக் கொண்ட போதிலும் இதனை உருவாக்க ஏற்பட்ட செலவு 7000 முதல் 10,000 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 



virakesari.com

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo