கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Aug 26, 2011

புதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 6 பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு..


அண்மையில் பயர்பொக்ஸ் உலாவியின் 6 வது பதிப்பை வெளியிட்டது மொஸிலா நிறுவனம்.
பயர்பொக்ஸ் 5இல் இருந்த ஆயிரக்கணக்கான குறைகளை சீர் செய்து இப்புதிய பதிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கிறது மொஸிலா நிறுவனம்.
அதிக வேகம், லினக்ஸ் இயங்குதளத்திலும் வேகமாக இயங்குதல் போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும். மேலும் அண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இயங்கக் கூடிய பதிப்பையும் வெளியிட்டப்பட்டுள்ளது. 


எவ்வாறாயினும் பயர்பொக்ஸ் பதிப்புக்களில் பாரிய மேம்படுத்தல்கள் இல்லாத போதும் ஏனைய உலாவிகளுடன் இருக்கும் போட்டித்தன்மையை தக்க வைப்பதற்காகவே மொஸிலா நிறுவனம் இப்பதிப்புக்களை வேகமாக வெளியிடுவதாக கூறப்படுகிறது. 

Leia mais...

கூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே தடவையில் தரவிறக்கம் செய்வதற்கு

கூகுள் தளம் வாசகர்களுக்காக சில பயனுள்ள மென்பொருட்களை அளிக்கிறது. இந்த மென்பொருட்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய முடியும்.

இந்த பட்டியலில் கூகுளின் மென்பொருட்கள் மட்டுமின்றி கூகுள் பரிந்துரை செய்யும் சில பயனுள்ள மென்பொருட்களும்(Firefox, Avast, Skype) உள்ளன.

இந்த மென்பொருட்களையும் நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த Packல் 14 இலவச மென்பொருட்கள் உள்ளது. இதில் 6 மென்பொருட்கள் கூகிளின் மென்பொருட்களாகும். இதர மென்பொருட்கள் வேற்று நிறுவனங்களின் மென்பொருட்கள். விண்டோஸ் XP, Vista, 7 ஆகிய இயங்கு தளங்களில் இந்த மென்பொருளை நிறுவலாம்.

இந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கீழே கொடுத்துள்ள லிங்கில் செல்லுங்கள். அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் மென்பொருட்களின் பட்டியல் இருக்கும்.

அதில் உங்களுக்கு தேவையான உங்கள் கணணியில் இல்லாத மென்பொருட்களை டிக் செய்து கொள்ளுங்கள்.

தேவையானதை டிக் செய்து கீழே உள்ள தரவிறக்க பட்டனை அழுத்தினால் போதும் நீங்கள் டிக் செய்த மென்பொருட்கள் உங்கள் கணணியில் தரவிறக்கம் ஆகிவிடும். பின்பு இன்ஸ்டால் செய்து நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்


from:-lankatech

Leia mais...

Aug 3, 2011

வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்.

 வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி  அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள்  நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

மென்பொருள் தறவிரக்க முகவரி:  http://www.lightworksbeta.com/

இத்தளத்திற்கு சென்று Download now என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும் , இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை  ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது. வீடியோ எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Leia mais...

1913 தொடக்கம் 2010 வரை வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் (தொகுப்பு06)

 1945 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள்

  • என் மகன்

  • கண்ணம்மா என் காதலி

  • சாலிவாகனன்

  • சௌ சௌ

  • கலிகால மைனர்

  • பள்ளி நாடகம்

  • சூரப்புலி

  • பக்த காளத்தி

  • பர்மா ராணி

  • பரஞ்சோதி

  • மஹா மாயா

  • மானசம்ரக்சணம்

  • மீரா

  • ஸ்ரீவள்ளி

 1946 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள்

  • அர்த்தனாரி

  • ஆரவல்லி சூரவல்லி

  • உதயணன் வாசவதத்தா

  • குமரகுரு

  • குண்டலகேசி

  • சகடயோகம்

  • சுபத்ரா

  • ஸ்ரீ முருகன்

  • ராம் ரஹிம்

  • ருக்மாங்கதன்

  • வைங்கி

  • வால்மீகி

  • வித்யாபதி

  • விஜயலட்சுமி

  • விகடயோகி
  1947 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள் 


  •     ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
  •     ஏகம்பவாணன்
  •     கஞ்சன்
  •     கன்னிகா
  •     கடகம்
  •     கங்கணம்
  •    குண்டலகேசி
  •     சண்பகவல்லி
  •    சித்ரபகாவலி
  •     சுறுசுறுப்பு
  •     சுலாசனா
  •     தன அமராவதி
  •     தாய்நாடு
  •     தியாகி
  •     துளசி ஜலந்தர்
  •     தெய்வ நீதி
  •     நாம் இருவர்
  •     பக்த துளதிதாஸ்
  •     பங்கஜவல்லி
  •     பிரம்மரிஷி விஸ்வாமித்ரா
  •     பைத்தியக்காரன்
  •     பொன்னருவி
  •     மதனமாலா
  •     மகாத்மா உதங்கர்
  •     மலைமங்கை
  •     மிஸ் மாலினி
  •     ராஜகுமாரி
  •     ஸ்ரீ லட்சுமி விஜயம்
  •     விசித்ர வனிதா
  •     வீர வனிதா
  •     வேதாளபுரம்
  •     ஜம்பம்
  •     ருக்மாங்கதன்
  •     ஜீவஜோதி


Leia mais...

பேஸ்புக் நண்பர்களின் ஸ்கைப் முகவரியை கண்டறிவதற்கு

 
நாம் பேஸ்புக்கில் பல நண்பர்களுடன் தொடர்பில் இருப்போம். ஆனால் அவர்களில் நாம் விரும்பும் நபரோடு முகம் பார்த்து பேச விரும்பினால் இலகுவாக தொடர்பு கொள்ள ஸ்கைப்பை தான் அனைவரும் விரும்புவோம்.

ஆனால் பேஸ்புக்கில் இருக்கிற அனைவரும் தங்கள் ஸ்கைப் முகவரியை பேஸ்புக் சுயவிபர குறிப்பில் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆகவே அதை எவ்வாறு பெறுவது? இதற்கு ஸ்கைப்பிலே வசதி உள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது ஸ்கைபிலே சென்று contacts ->import contacts ஐ சொடுக்குங்கள். அதன் பின்னர் ஒரு விண்டோ தோன்றும்.

அதில் உங்கள் பேஸ்புக்கின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கொடுத்து import என்பதை அழுத்துங்கள்.

சற்று நேரத்திலே உங்கள் பேஸ்புக் தொடர்பில் உள்ளவர்களது மின்னஞ்சல் முகவரிகளுடன் ஸ்கைப் முகவரியையும் வெளிக்காட்டும்.

Lankatech

Leia mais...

May 17, 2011

ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய ஒரு தளம்

ஆடியோ பைல்களை ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளின் உதவியை மட்டுமே நாடி செல்ல வேண்டும். ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இணையத்தில் அதிகமான மென்பொருள்கள் கிடைக்கிறன. மென்பொருள்களின் உதவி இல்லாமல் ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது. நாம் சாதாரணமாக பாடல்களை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் கணினியில் மென்பொருளை நிறுவி அந்த மென்பொருளின் வாயிலாக கன்வெர்ட் செய்வோம். சில நேரங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளானது கிடைக்கபெறாது அதுபோன்ற சூழ்நிலைகளில் நண்பர்களின் உதவியை நாடி செல்ல வேண்டும். ப்ரெளங் மையங்களின் எந்தவித மென்பொருளையும் நிறுவ விடாமல் கணினியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள் அதுபோன்ற கணினிகளில் எவ்வாறு பாடல்களை கன்வெர்ட் செய்வது என்றால் அதற்கு ஒரே வழி ஆன்லைன் மட்டுமே ஆகும். அந்த வகையில் பாடல்களை கன்வெர்ட் செய்ய ஒருதளம் உதவி செய்கிறது.
தளத்திற்கான சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, உங்களுடைய பாடல்கோப்பினை தேர்வு செய்யவும். பின் எந்த பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். அடுத்ததாக மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். கடைசியாக Switch my file என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்களுடைய பாடலானது கன்வெர்ட் செய்யப்பட்டு உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பி வைக்கப்படும்.


http://tamilitnews.com/

Leia mais...

May 14, 2011

யூடியூப் வீடியோக்களை தேவையான போர்மட்டில் தரவிறக்க செய்வதற்கு

 
யூடியூப் இணையதளத்தில் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு ஏகப்பட்ட படங்கள் உள்ளன.

படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவருகிறதோ இல்லையோ இதில் முன்கூட்டியே வெளியிடப்படும். இதில் படங்களைப் பார்ப்பவர்கள் பிடித்திருந்தால் தரவிறக்க வேண்டும் என நினைப்பார்கள்.

சிலர் மென்பொருள்களின் மூலமும், சில இணையதளங்களின் மூலமாகவும் படங்களைத் தரவிறக்கம் செய்வார்கள். இதில் படங்கள் FLV என்ற வடிவத்தில் இருக்கும். இதனால் படங்களைத் தரவிறக்கி மறுபடியும் நமக்குப் பிடித்த வடிவத்திற்கு மாற்றுவோம்.

வேறு எந்த மென்பொருளின் துணையின்றியும் வேறு இணையதளத்திற்குச் செல்லாமலும் பயர்பொக்ஸ் உலவியில் ஒரு நீட்சியைச் சேர்ப்பதன் மூலம் எளிதாக யூடியூப் படங்களைத் தரவிறக்க முடியும். இந்த நீட்சியின் பெயர் Easy Youtube Video Downloader.

இதில் உள்ள சிறப்பு வசதி என்னவென்றால் பார்த்துக் கொண்டிருக்கிற படம் பிடித்திருந்தால் நேரடியாக படத்திற்கு கீழேயே தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பில் வேண்டிய வகையைத் தேர்வு செய்து தரவிறக்கலாம்.

Mp3, Mp4, FLV மற்றும் யூடியூபின் புதிய வசதியான High Definition வகையிலும் தரவிறக்க முடியும். சில படங்கள் HD யில் இல்லாமல் இருக்கும். அவற்றிற்கு கிழே HD என்ற வசதி மட்டும் இருக்காது.

பின்னர் பயர்பொக்ஸ் உலவியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து விட்டு யூடியூப் தளத்திற்குச் சென்று எதாவது ஒரு படத்தைக் கிளிக் செய்து பாருங்கள். வீடியோவிற்குக் கிழே Download as என்ற மெனு புதியதாக இருக்கும். அதில் வேண்டிய வடிவத்தைத் தேர்வு செய்தால் படம் உங்கள் கணணிக்கு எளிதாக தரவிறக்கப்படும்.

குரோம் உலவிக்கும் இந்த நீட்சி தரப்பட்டுள்ளது.

Lankatech

Leia mais...

விரைவில் அறிமுகமாகும் கடதாசி போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட கையடக்கத் தொலைபேசி



கடதாசி போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி விஞ்ஞானிகள் சிலர் சாதனை புரிந்துள்ளனர்.

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரொயெல் வெர்டெகல் என்பவர் இதனை இவ்வாரம் நடைபெறவுள்ள கணனிக் கண்காட்சி ஒன்றில் அறிமுகம் செய்யவுள்ளார்.

இக்கையடக்கத்தொலைபேசியானது அரிசோனா பிராந்திய விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடனுமே உருவாக்கப்பட்டுள்ளது.

மெல்லிய பாரங்குறைந்த புகைப்படச் சுருள் போன்ற ஒன்றாலேயே இக் கையடக்கத்தொலைபேசி உருவாக்கப்பட்டுள்ளது.

கடதாசி போல நெகிழ்வுத்தன்மை கொண்டதால் இது 'பேப்பர் போன்' என அழைக்கப்படுகின்றது. இதன் மூலம் அழைப்புக்களை மேற்கொள்ளுதல், இலத்திரனியல் புத்தகங்களை சேமித்தல், பாடல்களை செவிமடுத்தல் போன்ற பல செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியும்.

கடனட்டை ஒன்றினைப்போன்ற மெலிதான இதில் 3.7 அங்குலமான திரையும் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் பலவற்றைக் கொண்ட போதிலும் இதனை உருவாக்க ஏற்பட்ட செலவு 7000 முதல் 10,000 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 



virakesari.com

Leia mais...

Apr 30, 2011

1913 தொடக்கம் 2010 வரை வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் (தொகுப்பு05)

1942 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள் 
  1. அல்லி விஜயம்
  2. அனந்தசயனம்
  3. ஆனந்தன்
  4. ஆராய்ச்சி மணி (மனுநீதி சோழன்)
  5. என் மனைவி
  6. கங்காவதார்
  7. கண்ணகி
  8. காலேஜ் குமாரி
  9. கிருஷ்ணபிடாரன்
  10. சம்சாரி
  11. சன்யாசி
  12. சதி சுகன்யா
  13. சிவலிங்க சாட்சி
  14. சோகா மேளர்
  15. தமிழறியும் பெருமாள்
  16. தாசிப்பெண் (ஜோதிமலர்)
  17. கிழட்டு மாப்பிள்ளை
  18. நந்தனார்
  19. நாடகமேடை
  20. பக்த நாரதர்
  21. பஞ்சாமிர்தம்
  22. திருவாழத்தான்
  23. பிருத்விராஜன்
  24. பூகைலாஸ்
  25. மனமாளிகை
  26. மனோன்மணி
  27. மாயஜோதி
  28. ராஜசூயம்

 1943 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள்
  • அக்ஷயம்
  • அருந்ததி
  • அசட்டுப்பிள்ளை
  • உத்தமி
  • காரைக்கால் அம்மையார்
  • குபேர குசேலா
  • சிவகவி
  • ஜோதிமலர்
  • திவான் பகதூர்
  • தேவகன்யா
  • மங்கம்மா சபதம்

1944 ஆம் ஆண்டுவெளிவந்த படங்கள்

  • தாசி அபரஞ்சி
  • பர்த்ருஹரி
  • பக்த ஹனுமான்
  • பிரபாவதி
  • பூம்பாவை
  • மகாமாயா
  • ராஜ ராஜேஸ்வரி
  • ஜகதலப்பிரதாபன்
  • ஹரிதாஸ்
  • ஹரிச்சந்திரா

Leia mais...

Apr 23, 2011

வகை வகையாய் வைரஸ்கள்

1.ADWARE: கம்ப்யூட்டர் பயன் படுத்துபவரின் அனுமதியின்றி, அவர் அறியாமலேயே, பதியப்படும் ஒரு புரோகிராம். ஒருவரின் இணையத் தேடல்கள் குறித்த தகவல்களை அறிய இந்த புரோகிராம்கள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரின் விருப்பங்களை அறிந்து கொண்டு, விளம்பரங்களைத் தரும். இந்த தொல்லை மட்டுமின்றி, நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டினையும், நமக்குத் தேவை எதுவும் இன்றி எடுத்துக் கொள்ளும். Trackng cookies என்பவையும் இதில் சேரும்.

2. BACKDOOR SANTA: இணையத்தில் கிடைக்கும் புரோகிராமின் பயன்களை விரும்பி, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்துவீர்கள். அப்போது அதே புரோகிராம், உங்களை அறியாமலேயே, உங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடு, நீங்கள் செல்லும் இணைய தளங்கள், நீங்கள் இணையத்தில் வாங்கும் பொருட்கள் போன்ற தகவல்களைத் திரட்டும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம் இந்த வேலையை மேற்கொள்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. Alexa மற்றும் Hotbar போன்றவை இத்தகைய புரோகிராம்களே. உங்களுடைய பிரவுசரின் டூல்பாரில், நீங்கள் எதிர்பார்க்காமல், இந்த டூல்பார்களில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தால், பேக் டோர் சாண்டா உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளதாகப் பொருள். உடனே Add/Remove Programs சென்று அதனை நீக்கவும்.

3. BHO: இதனை விரித்தால் Browser Helper Object என்று கிடைக்கும். நீங்கள் உங்கள் பிரவுசரை விரித்தவுடன் இதுவும் இயங்கும். சில பி.எச்.ஓ.க்கள் நமக்கு உதவுபவை. ஆனால் சில புரோகிராம்கள், நம்மை இணையத்தில் திசை திருப்பி, பாலியல் தளங்களில் கொண்டு சென்றுவிடும். உங்கள் கம்ப்யூட்டரை இது ஹைஜாக் செய்துவிட்டால், கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக இயங்கத் தொடங்கும். சில ட்ரோஜன் வைரஸ்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் வேலையை முடிக்கும்.

4. BLENDED THREAT: கம்ப்யூட்டரில் அதிக பட்ச சேதம் விளைவிக்கும் தாக்குதல். வைரஸ் மற்றும் வோர்ம் இணைந்து செயல்படுவது போல இயங்கும். இது இமெயில் வழியே வைரஸை பரப்பும். Nடிட்ஞீச் என்பது இத்தகைய தாக்குதல் ஆகும். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் புரோகிராமினை வேகமாகப் பரவிவிடும்.

5. BOTNETS: குழுவாக நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை, ஹேக்கர்கள் கைப்பற்றியபின் இவ்வாறு அழைக் கின்றனர். ஹேக்கர்கள் இவற்றைத் தங்கள் இஷ்டப்படி ஆட்டுவிப்பார்கள். அந்த நெட்வொர்க் ஒரு ரோபோ ("robot network")போலச் செயல்படும். இதனால் தான் இதற்கு இந்த பெயர் வந்தது.

6. BROWSER HIJACKER: இந்த புரோகிராம், நாம் பிரவுசர் மூலம் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இந்த புரோகிராமினை அனுப்பியவரின் இணைய தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். மீண்டும் நாம் இயங்கிய தளங்களுக்கு வர முடியாது. அது மட்டுமின்றி, நம் பிரவுசர் செட்டிங்குகளையும் மாற்றிவிடும். நம் ஹோம் பக்கத்தை மாற்றிவிடும். நாமாக அதனை பழையபடி மாற்றினால், மீண்டும் அது செட் செய்திடும் தளத்தினை ஹோம் பேஜாக அமைத்துவிடும்.

7. ADWARE COOKIES:  பொதுவாக குக்கிகள் என்பவை, சில இணைய தளங்களால், நம் கம்ப்யூட்டரில் பதியப்படும் சிறிய பைல்கள். இவை உங்கள் கம்ப்யூட்டர் குறித்த தகவல்களை அந்த இணைய தளத்திற்கு அனுப்புவதற்காக பதியப்படுபவை. ஆனால் சில இணைய தளங்கள் Adware tracking cookies பதிந்துவிடுகின்றன. இவை நீங்கள் இணையத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்த தகவல்களை அவர்களுக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் விளம்பரங்களை அந்த தளங்கள் உங்களுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். Adware Cookies எப்போதும் மோசமானவை என்று கருத முடியாது. ஆனால் நிச்சயம் இவை உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைச் சிறிது மந்தப்படுத்தும்.

8. DIALERS: ஒருவகையான சிறிய சாப்ட்வேர் புரோகிராம். இது நம் அனுமதியின்றி, நம் மோடம் மூலமாக தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் சில இணைய தளங்களுக்கு நம்மை கொண்டு செல்லும். பாலியல் தளங்களுக்குத்தான் பெரும்பாலும் இவை தொடர்பு அளிக்கின்றன. தொலைபேசி வழியாக இன்டர்நெட் இணைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இதனால் தொல்லை ஏற்படும். இந்தியாவில் தொலைபேசி வழி இணைப்பு இருந்த போதும், இந்த வகை தொல்லை இருப்பதாகத் தகவல் இல்லை.

7. GRAYWARE: இது தனிப்பட்ட ஒரு தொல்லை தரும் வைரஸாகத் தெரியவில்லை. பொதுவாக தடை செய்யப்பட வேண்டிய, நம் பணியை நாசம் செய்யக் கூடிய சிறிய புரோகிராம்களை இந்த சொல் கொண்டு அழைக்கலாம். மேலே சொல்லப்பட்ட அட்வேர், டயலர்கள் போன்றவை இந்த பெயரில் அடங்கும்.

8. KEYLOGGERS: நாம் கம்ப்யூட்டர் கீ போர்டில் அழுத்தும் அனைத்து கீகளையும் அப்படியே அவை எந்த கீகள் என்று பதிந்து, இந்த புரோகிராமினைப் பதிந்தவர்களுக்குக் காட்டும். நம் குழந்தைகள் கம்ப்யூட்டரில் என்ன வகை சாப்ட்வேர்களை இயக்குகிறார்கள், எந்த தளங்களுக்குச் செல்கிறார்கள் என்று கண்டறிய, இதனை நாம் பயன்படுத்தலாம். நிறுவனங்களில் தங்கள் ஊழியர்கள், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்த புரோகிராம்கள் பதியப்படுகின்றன. சில கீ லாக்கர்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. சில கட்டணம் செலுத்தினால் மட்டுமே கிடைக்கும்.

9. MALWARE: Malicious Software என்பதன் சுருக்கம். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் அனுமதியின்றி, கம்ப்யூட்டரில் இறங்கி, தீங்கு விளைவிக்கும் அனைத்து புரோகிராம்களும் இதில் அடக்கம்.

10. STALKING HORSE: : இவை பிரபலமான புரோகிராம் களுடன் இணைந்து கம்ப்யூட்டரில் வந்து தங்கும். கூடுதல் வசதிக்காக இது உள்ளது என்று அறிவிக்கப்படும். ஆனால் நம் வேலைகளின் தன்மை குறித்து, புரோகிராம் தந்த நிறுவனத்திற்குத் தகவல் அனுப்பி, பின் விளம்பரங்களை அனுப்பி வைக்கும்.

www.itamil.com 

Leia mais...

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo