கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jul 23, 2010

பயர்பாக்ஸ் ஸ்பெல் செக்கர்

அநேகமாக அனைத்து டெக்ஸ்ட் எடிட்டிங் புரோகிராம்களிலும், ஆங்கில எழுத்துப் பிழைகளைத் திருத்த ஸ்பெல் செக்கர் தரப்படுகிறது. இணையத்திலும் நாம் அதிகமான அளவில் டெக்ஸ்ட் அமைக்கிறோம்.

பல படிவங்களில் நம் குறிப்புகளைத் தர வேண்டியுள்ளது; ப்ளாக்குகள் என்னும் வலைமனைகளை அமைக் கிறோம்; போரம்கள் எனப்படும் மன்றங்களில் நிறைய எழுதுகிறோம். இவற்றில் எழுதுகையிலும் நமக்கு ஒரு ஸ்பெல் செக்கர் தேவைப்படுகிறது.

அப்படியானால், பிரவுசரிலும் ஒரு ஸ்பெல் செக்கர் வேண்டுமே? இருக்கிறதா என்றால், அதிசயப்படத்தக்க வகையில் பயர்பாக்ஸ் பிரவுசர் மட்டுமே இந்த வசதியைக் கொண்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8க்கு இன்னும் முழுமையான ஸ்பெல் செக்கர் இல்லை. விரைவில் வர இருப்பதாகத் தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

பயர்பாக்ஸ் பிரவுசரில் எப்படி ஸ்பெல் செக்கரை இயக்குவது எனப் பார்க்கலாம். வழக்கமாக, பயர்பாக்ஸ் பிரவுசரை இன்ஸ்டால் செய்திடுகையிலேயே, இந்த வசதியும் இயக்கப்படுகிறது. ஏதேனும் செட்டிங்ஸ் மாற்றங்களினால், ஸ்பெல் செக்கர் இயங்கவில்லை என்றால், கீழ்க்காணும் செட்டிங்ஸ் அமைப்பினை மேற்கொள்ளவும்.

முதலில் Tools>Options>Advanced எனச் செல்லவும். கிடைக்கும் டேப்களில் “General”என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Check my spelling as I type என்ற வரிக்கு நேராக உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இல்லை எனில் அங்கு உள்ள கட்டத்தில் கிளிக் செய்து ஏற்படுத்தவும்.

பின்னர் ஓகே கிளிக் செய்து டூல்ஸ் மெனுவினை மூடிவிட்டு, ஏதேனும் டெக்ஸ்ட் அமைத்துச் சோதனை செய்து பார்த்தால், ஸ்பெல் செக்கர் அமைக்கப்பட்டிருப்பது தெரியவரும்.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo