கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jul 20, 2010

உங்கள் தகவலை ரகசியமாய் வைக்க QR Code தொழில்நுட்பம்

நம் தகவல்களை QR தொழில்நுட்பத்தின் வழியாக Encode செய்யலாம். QR என்பதின் விரிவாக்கம் Quick Response ஆகும். ஜப்பானிய தொழில்நுட்பமான இது உலகெங்கும் இன்று நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. Bar Code நாம் அனைவரும் அறிந்ததே. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியே இந்த QR Code ஆகும். இதன் சிறப்பு என்னவென்றால் உங்களுடைய தகவலை QR Code ஆக Encode செய்தவுடன் அந்த படத்தை நீங்கள் எங்கு எதில் வேண்டுமானாலும் அச்சடித்து வைத்துக் கொள்ளலாம்.

அந்த படத்தை scan செய்து Decode செய்தால் அதில் உள்ள தகவல்களை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதில் நீங்கள் உங்கள் விலாசம், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் அல்லது ஐந்து வரி உள்ள ஒரு தகவல் என எந்த தகவலை வேண்டுமானாலும் நீங்கள் Encode செய்து கொள்ளலாம். ஏன் நம் தாய் மொழியாம் தமிழில் கூட அந்த தகவல் இருக்கலாம். இது போன்ற தகவலை உள்ளடக்கிய இந்த புகைப்படத்தை நம் கைபேசி(Mobile Phone or Cell Phone) ஐ கொண்டு அதில் உள்ள தகவல்களை படிக்க முடியும் என்பது இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம். QR Reader என்கிற மென்பொருளை இணையத்தில் தேடி உங்களுடைய கைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள். என் நண்பர் வைத்துள்ள Nokia 5230 இல் வேலை செய்கிறது.

முதலில் இந்த சுட்டியை கிளிக் செய்து உங்களுடைய தகவலை Encode செய்யவும். பின்னர் இந்த சுட்டியை கிளிக் செய்து Decode செய்து பாருங்கள்.

புதுவை

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo