கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jul 29, 2010

' மைஸ்பேஸ் ' இன் அதிரடி நடவடிக்கை

' மை ஸ்பேஸ் ' என்பது பேஸ்புக் பிரபலமடையும் முன்னர் பலரின் விருப்பத்திற்குரிய சமூகவலைப்பின்னல் தளமாக இருந்தது.

எனினும் பேஸ்புக்கின் அபாரவளர்ச்சி ' மை ஸ்பேஸ் ' ஐ பின்தள்ளியது. மீண்டும் இழந்த தனது முதலிடத்தை அடைவதற்கு அத்தளமானது இவ் வருடம் மீள்வெளியீடு செய்யப்படவுள்ளது.

இத் தகவலை அதன் தற்போதைய உரிமையாளரான ' நியூஸ் கோர்ப் ' நிறுவனம் அறிவித்துள்ளது.

' நியூஸ் கோர்ப் ' என்பது உலகின் 2ஆவது மிகப் பெரிய ஊடக பல்கூட்டுத்தாபன நிறுவனமாகும். மேற்படி நிறுவனம் 2005ஆம் ஆண்டில் இச் சமூகவலைப்பின்னல் தளத்தினை 580 மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்தது.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த ' நியூஸ் கோர்ப் ' நிறுவன உயர் அதிகாரியொருவர் பேஸ்புக் 500 மில்லியன் பாவனையளர் இலக்கினை எட்டியுள்ள போதிலும் ' மை ஸ்பேஸ் ' உலகளாவிய ரீதியில் தற்போதும் பிரபலமாகவுள்ளது.

மேலும் மாதமொன்றிற்கு அமெரிக்காவில் மாத்திரம் 65 மில்லியன் முதல் 70 மில்லியன் வரையிலான நிரந்தர பாவனையளர்களைக் கொண்டிருப்பதாகவும். இன்னும் அதன் பாவனையாளர்கள் உலகம் முழுவதிலும் காணப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

' மைஸ்பேஸ் ' இனிமேல் புதிய இசைக்கலைஞர்களுக்கு தங்களின் படைப்புகளை பிரபலப்படுத்த வாய்ப்பளிக்கவுள்ளதாகவும், முற்றுமுழுதாக இளைஞர்களை குறிவைத்துள்ளதாகவும், இதன் புதிய வடிவம் இளமை ததும்பும் வகையில் காணப்படுமெனவும் , கணனி விளையாட்டுகளுக்கென அதிக கவனம் செலுத்தப்படுமெனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந் நடவடிக்கையானது ' மைஸ்பேஸ் ' மற்றும் பேஸ்புக் இடையேயான போட்டித்தன்மையை மேலும் அதிகரித்துள்ளது.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo