கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jan 17, 2012

வீடியோ கேம் பிரியர்களு​க்காக புதிய டேப்லெட் அறிமுகம்

வீடியோ கேம் உபகரணங்களை தயாரிக்கும் "ரேசர்" நிறுவனமானது வீடியோ கேம் பிரியர்களை நோக்கமாக் கொண்டு "பியோனா" எனப்படும் புதிய டேப்லட்களை உருவாக்கி வருகின்றது.

டேப்லெட்டின் இரண்டு பக்கவாட்டிலும் இயக்குபிடிகள் காணப்படுவதுடன் தேவைக்கேற்றவாறு தொடுதிரை வசதியையும் பயன்படுத்த முடியும்.

அத்துடன் வின்டோஸ் 8 இயங்கு தளத்தையும் பயன்படுத்தக்கூடியதாக இருக்குமாம். இதில் Intel Core i7 processor இணைக்கப்பட்டிருப்பதனால் மிகவேகமாக இயங்குவதுடன் "Angry Birds" போன்ற உயர் தரமுடைய கணினி விளையாட்டுக்களையும் பயன்படுத்த முடியும்.

இவற்றை 2012ல் நான்காவது காலாண்டுப்பகுதியில் நடக்க இருக்கும் நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சியில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கின்றது.

 இதன் பெறுமதியானது 1000 அமெரிக்க டொலர்களிலும் குறைவாகவே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo