கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jan 3, 2010

370 பாஸ்வேர்டுகளுக்கு டுவிட்டர் தடை

சமூக இணையதளமான டுவிட்டர் தனது பயன்பாட்டாளர்கள் 370 சொற்களை கடவுச்சொல்லாக (பாஸ்வேர்ட்) பயன்படுத்த தடை விதித்துள்ளது.

இந்த கடவுச் சொற்கள் எளிதாக யூகிக்க கூடியது என்றும், இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் யார் வேண்டுமானாலும் தனது பயன்பாட்டாளர்களின் கணக்கில் மூக்கை நுழைக்க முடியும் என்பதாலும் இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரை மேற்கோள் காட்டி டெலிகிராஃப் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

123456 என் எண் வரிசை, பாஸ்வர்ட் என்ற சொல் போன்றவை அதிக அளவில் பாஸ்வேர்டாக பயன்படுத்தப்படுகிறது என்பதால் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் போர்ஸ்ச், ஃபெர்ராரி போன்ற கார்களின் பெயர்கள், செல்சியா மற்றும் ஆர்சினால் போன்ற கால்பந்து அணிகளின் பெயர்களை பாஸ்வேர்டாக உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில அறிவியல் பெயர்களுக்கும் தடை விதிக்ப்பட்டுள்ளது. ஸ்டார் வார்சின் முதல் படமான டிஹெச்எக்ஸ்1138 போன்றவற்றுக்கும் தடை உள்ளது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், கடவுச் சொற்களை தேர்வு செய்பவர்கள் அதனை மற்றவர்கள் எளிதாக யூகிக்கக் கூடிய அளவில் தேர்வு செய்வதாக தெரியவந்துள்ளது.

எழுத்துக்கள், எண்கள், ஆச்சரியக் குறிகள் என எல்லாவற்றையும் கலந்து கடவுச் சொற்களை உருவாக்குமாறும், அடிக்கடை அவற்றை மாற்றிக் கொண்டே இருக்குமாறும், ஒரே கடவுச் சொல்லலை எல்லாவற்றுக்கும் பயன்படுத்தாதீர்கள் என்றும் நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo