கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jan 8, 2010

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் : ஜேர்மனிய விஞ்ஞானிகள்


"செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும்'' என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. `அல்ஷ் கெய்மெர்ஷ்' என்ற மறதி நோயினால் உலகில் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். மூளையில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழப்பதால் இந்த நோய் உருவாகிறது.

இந்த நோயை ஜெர்மனியை சேர்ந்த `ஆலியோஸ்' என்ற விஞ்ஞானி கடந்த 1906-ம் ஆண்டு கண்டு பிடித்தார். அன்று முதல் இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது தான் இந்த நோயை குணப்படுத்த புதிய யுக்தி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து செல்போன் பேசுவதன் மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம் என ஆய்வு மூலம் தெளிவு படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டனர். இவர்கள் 96 எலிகளுக்கு நாள் ஒன்றுக்கு இருமுறை செல்போன்கள் மூலம் எலக்ட்ரோ மேக்னடிக் அலை கற்றைகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாய்ச்சினர்.

இதன் மூலம் அல்ஷ்கெய் மெர்ஷ் நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் நினைவாற்றல் அதிகரித்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் செல்போனில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் அலைக்கற்றைகள் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

தினமலர்

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo