கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jan 12, 2010

கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தவென ஒரு இலவச திசைகாட்டி (Compass) மென்பொருள்


கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்தவென  ஏராளமான பயனுள்ள  மென்பொருட்கள் இணையத்தில் குவிந்து காணப்படுகின்றன. அத்தகைய ஒரு மென்பொருள் பற்றிய பதிவுதான் இது.

Compass 4.1 எனப்படும் இந்த மென்பொருளானது கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்த கூடிய வகையில் அமைக்கப்படுள்ள ஒரு திசைகாட்டி ஆகும்.

இந்த மென்பொருளானது நமது அமைவிடத்தின் ஆள்கூறுகளை(Location Coordinates)  கொண்டு வானியலில் கதிரவன்(Sun) மற்றும் நிலவின்(Moon)  வானியல்  (Astronomy) அமைவிடங்களை எமக்கு தருகின்றது. அத்துடன் சர்வதேச நியம நேரத்தினை அடிப்படையாக கொண்டு (GMT)  அந்த நாடுகளின் நேரங்களில் கதிரவனினதும் சந்திரனினதும் உதயமாகும் நேரம்(Rise) , மத்திய கோட்டினை கட்டைக்கும் நேரம் (Transit) மற்றும் மறையும் நேரம் (Set) என்பவற்றினையும் எமக்கு தருகின்றது. அத்துடன் பல்வேறுபட்ட தகவல்களையும் பெற்றுகொள்ள கூடிய விதத்தில் இந்த மென்பொருளானது வடிவமைக்கப்படுள்ளது.

பெரும்பாலான Nokia, Samsung, Sony ericson,LG,RoverPC:M1,sagem.Qtek,Philips,pantech, lenovo, T-Mobile , Toshiba, i-mate,Sendo,sharp,Orange,O2,Mitac,Motorola,Huawei, போன்ற பல வகையான தொலைபேசிகளில் பயன்படுத்த முடியும்.

தரவிறக்க சுட்டி

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo