கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jan 16, 2010

'எல்.இ.டி' தொழில்நுட்பம்

நாளுக்கு நாள் பெருகி வரும் தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு புதிய அம்சங்களை தந்து வருகிறது.

அந்த வகையில் மனிதனின் வாழ்க்கையில் ஒரு குடும்ப உறுப்பினரை போல் ஆகி விட்ட டி.வி தொழில்நுட்பத்தில் இப்போது அதி உயர்வகை தொழில்நுட்பமாக இருந்து வருவது எல்.சி.டி என்னும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய எல்.சி.டி டிவிக்கள் தான்.

டி.வி தொழில்நுட்பத்தை பொருத்தவரை முதலில் சாதாரண வகை டிவிக்கள் வந்தன, இவைகள் பெரும்பாலும் மிக அதிக கனத்துடன் கூடியதாக இருக்கும்,அடுத்ததாக 'பிளாட்'என்று சொல்லப்படுகின்ற டி.விக்கள் வந்தன,இந்தவகை டி.விக்கள் முன்பக்கம் தட்டையாக பார்ப்பதற்கு நல்ல வடிவமைப்புடன் இருக்கும்.அதற்கு அடுத்த படியாக 'ஸ்லிம்' என்று சொல்லப்படுகின்ற டி.விக்கள்.வந்தன.இந்த வகை டி.விக்கள் அதிக கனம் இல்லாமல் எடை குறைவாக இருக்கும்.

அதற்கு அடுத்தபடியாக "பிளாஸ்மா" என்று அழைக்கப்படுகின்ற தொழில்நுட்பத்தில் டிவி.க்கள் வந்தன, இந்த வகை டி.விக்கள் மிக அகன்ற திரையுடன் காட்சியளிக்கும், சாதாரண வகை டி.வியுடன் ஒப்பிடும் போது இதன் திரைக்காட்சிகள் அற்புதமாக இருக்கும்.பிளாஸ்மாவின் முன்னேற்றமாக இப்போது சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் தொழில்நுட்பம் தான் 'எல்.சி.டி'.

மிக எடை குறைவான, அகன்ற திரையுடன், அதிநுட்பமான புள்ளிகள் இல்லாத திரைக்காட்சிகளை கலர்புல்லாக காட்டக்கூடிய டி.வியாக இந்த வகை டிவிக்கள் சந்தையில் விற்பனையில் சக்கைபோடு போடுகின்றன, இந்த வகை டிவிக்கள் சந்தையில் அறிமுகமான பொது அதிக விலையில் விற்கப்பட்டது.

ஆனால் பல்வேறு நிறுவனங்களும் இதில் போட்டி போட்டதால் இதன் விலை படிப்படியாக குறைந்து கிடைக்கின்றன.இந்த தொழில்நுட்பம் அறிமுகமானபோது பிளாஸ்மா வகை டிவிக்கள் விற்பனை குறைந்தது,மேலும் பிளாஸ்மாவுடன் ஒப்பிடும்போது எல்.சி.டி தொழில்நுட்பம் உயர்ந்ததாக உள்ளது.

ஆனால் இப்போது எல்.சி.டி தொழில்நுட்பத்தையும் தூக்கி சாப்பிடும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிவிட்டது, அதுதான் 'எல்.இ.டி'தொழில்நுட்பத்தை உள்ளடைக்கிய எல்.இ.டி டிவி. இனி சந்தையில் இந்த வகை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் டி.விக்கள் தான் போட்டியில் களமிறங்கும்.

இந்த வகை டி.விக்களில் அகன்ற திரை, படங்களை மிகத்துல்லியமாக காட்டும்(high resulation picture engine, இன்டர்நெட் டி.வி,யு.எஸ்.பி போர்ட்,Wireless LAN Adaptor Support ,100/200Hz என்ற வேகத்தில் செல்லக்கூடிய திரைக்காட்சிகள் போன்ற புதிய தொழில்நுட்ப வசதிகள் உண்மையிலேயே நம் வாழ்க்கையை இன்னும் பரவசப்படுத்துவதாக அமையும் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்தியாவை பொறுத்தவரை "சாம்சங்" நிறுவனம் தான் முதல்முறையாக இந்த வகை டி.விக்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் விலை மட்டும் மிக மிக அதிகமாக உள்ளது.

இது அறிமுகப்படலம் என்பதால் விலை அதிகமாக உள்ளது, போட்டி நிலவும் போது விலையும் தானாக குறைந்து விடும். அதுவரை பொறுத்திருப்போமே?

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo